Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தேனீக்கள் மூலம் அருள்வாக்கு தரும் அம்பிகை
2 posters
Page 1 of 1
தேனீக்கள் மூலம் அருள்வாக்கு தரும் அம்பிகை
ஒரு அம்மன் கோயிலுக்குள் செல்லும்போது நம்முடன் தேனிக்கூட்டம் வருவது போன்ற உணர்வு இருக்கும். இதே தேனிக்கூட்டத்தின் ரீங்காரம் நாம் திரும்பி வரும்போதும் நம் காதுகளில் ஒலித்தால் நமது வேண்டுதல் நிறைவேறிவிடும் என்பது அர்த்தமாகும். பத்தனம்திட்டை மலையாளப்புழா தேவி கோயிலில் இந்த அதிசயம் நடக்கிறது.
மலையாள தேசத்தின் உட்பகுதியில் 108க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னை பகவதி கோயில் கொண்டிருக்கிறாள். இவற்றில் பத்தனம்திட்டை மலையாளப்புழாவில் உள்ள பத்ரகாளி தேவி கோயிலும் ஒன்று.
இந்த கோயில் 2500 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. 2002ம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் செலவில் இங்கு "சதகோடி அர்ச்சனை மகா யக்ஞம்' நடந்தது. இரண்டு மாதம் தொடர்ந்து நடந்த இந்த யாகம் காரணமாக அன்னை மிகுந்த சக்திபெற்று அருள்பாலித்து வருகிறாள்.
அன்னையின் திருக்கோலம்: மூலஸ்தானத்தில் ஐந்தடி உயரத்தில் எட்டு கைகளோடு, பூத, பிரேதங்களோடு, அம்மை போன்ற பயங்கரமான வியாதிகளை சம்ஹாரம் செய்கின்ற தலையோட்டு மாலையை தன் கழுத்தில் அணிந்து பயங்கரமாக அம்பாள் காட்சி தருகிறாள். அவளுக்கு மூன்று கண்கள் உள்ளன. கார்மேகத்தின் நிறத்தில் இருக்கிறாள். தாரகாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் கோலத்திலும், வேதாளத்தின் கழுத்தில் ஓரு பாதத்தையும் வைத்திருக்கிறாள்.
பாயாச மகிமை: இங்கு பத்ரகாளிக்கு அங்கி சார்த்தப்படுவதில்லை. அலங்காரத்திற்காக பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மூன்று கண்கள் மட்டும் சார்த்தப்படுகிறது. இருபத்து நான்கரை லிட்டர் அரிசி கொண்டு செய்யப்படும் "சர்க்கரைத்துõணி' என்ற கடும் கட்டி பாயாசம் இங்கு வழங்கப்படும் நைவேத்தியம் ஆகும்.
அதிசய மரம்: கோயிலுக்குள் ஒரு சுயம்பு சிவனும், சிவனுக்கு குடை பிடித்தாற்போல் "கணிக்கொந்தை' என்ற மரமும் இருக்கிறது. இந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பூ மட்டும்தான் கீழே விழும். அது சுயம்பு சிவனின் சிரசில் விழுவது தினமும் நடந்துவரும் தெய்வீக அற்புதமாகும்.
தேனீயின் ரீங்காரம்: இந்த கோயிலில் சப்தமாத்ருக்கள் எனப்படும் தேனீக்கூட்டம் உள்ளது. நாம் கோயிலுக்குள் நுழையும்போது நம் அருகில் பறந்துவரும் தேனீ, வெளியே வரும்போதும் நம் கண்ணில் தென்பட்டால் தேவி நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். தேனீயின் ரீங்காரம் கேட்டால்கூட கோரிக்கை நிறைவேறி விடும் என்கிறார்கள். தேனீக்கள் மூலமாக தேவி தங்களுக்கு அருள்வாக்கு சொல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
திருவிழா: கார்த்திகை முதல் தேதி முதல் 45 நாட்கள் தேவிக்கு மிகவும் இஷ்டமான "பாட்டு' என்ற உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இருப்பிடம்: செங்கோட்டையிலிருந்து புனலுõர் வழியாக பத்தனம்திட்டை சென்று, அங்கிருந்து "கும்பழ' என்ற ஊருக்கு செல்லும் ரோட்டில் 9 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
இந்த கோயிலில் நுழையும்போது நம் அருகில் பறந்துவரும் தேனீ, வெளியே வரும்போதும் நம் கண்ணில் தென்பட்டால் தேவி நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்
நன்றி ikmahal.org

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum