Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தேரோட்டம் நடக்கும் ஒரே ஐயப்பன் கோயில்
2 posters
Page 1 of 1
தேரோட்டம் நடக்கும் ஒரே ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில்களில் தேரோட்டம் நடக்கும் ஒரே கோயில் அச்சன்கோவில் ஐயப்பன் கோயில் தான். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்ற நான்கு ஆசிரம நிலைகளும் நாம் பரகதியை அடைவதற்கு, நான்கு படியுடன் சேர்ந்த ஓர் ஏணிக்கு சமம் என்று ஆன்மிக பெரியோர்கள் கூறுவர். மனிதன் தன் வாழ்வின் மூன்றாவது நிலையாகிய வானப்பிரஸ்த நிலையை அடையும்போது, தன் மனைவியை தன்னோடு வனத்திற்கு அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்றும், வனத்தில் தவ வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் புராண நுõல்கள் கூறுகின்றன.
அந்த முறையில் நமக்கு வழிகாட்ட பகவான் ஐயப்பன் வானப்பிரஸ்த நிலையில் பூர்ணாபுஷ்கலை என்ற இரு தேவியரோடு அச்சன்கோவிலில் வனராஜாவாக காட்சி தருகிறார்.
சுவாமி அமைப்பு
ஆதிகாலத்தில் அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. கர்ப்பகிரகத்தில் இருக்கும் ஐயப்பன் நெற்றியில் திருமண் இட்டு, வலக்கையில் அமுதம் ஏந்தி, அமர்ந்த நிலையில் யோகப்பட்டை அணிந்து, ஒரு யோகிக்குரிய சகல அலங்காரங்களோடும், கம்பீரமாக வலப்பக்கம் வாளுடன் அருள்புரிகிறார். அவருக்கு இரு புறமும் பூர்ணாபுஷ்கால என்ற தேவியர் உள்ளனர். அவர்கள் இருவரும் ஐயப்பனுக்கு பூக்களை சொரிந்து சேவைசெய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர்.
சிறப்பம்சம்
சாஸ்தா கோயில்களில் தேரோட்டம் நடப்பது இங்கு மட்டுமே. இங்கு கணபதி, சப்தகன்னியர், நாகர், கருப்பன், நாகதேவதை, பேச்சியம்மன், யட்ஷியம்மன் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள விஷமுறிவு தீர்த்த கிணறின் தண்ணீரை பருகினால், விஷ ஜந்துக்கள் கடித்த விஷம் உடனே இறங்கிவிடும். நள்ளிரவு நேரமானாலும் விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் கோயில் திறக்கப்பட்டு தீர்த்தம் இங்கு வழங்கப்படும். அடர்ந்த வனத்தின் நடுவே கோயில் அமைந்துள்ளது. அருகில் நதி ஒன்று சலசலத்து ஓடுகிறது. இந்த ஐயப்பனைப்போல வானப்பிரஸ்தம் என்ற நிலையை கடைபிடித்தால் அவர்கள் பொலிவு பெறுவார்கள்.
திருவிழாக்கள்
மண்டல பூஜை காலத்தில் மார்கழி முதல் தேதியில் அரசு கருவூலத்திலிருந்து பகவானின் திருவாபரணம் யானைமேல் வைத்து கொண்டு வரப்படுகிறது. அன்றுமுதல் 11 நாட்கள் ஐயப்பன் திருவாபரண கோலத்தில் காட்சி தருவார். காவல் தெய்வமான கருப்பனுக்கும் இந்த காலகட்டத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். மார்கழி 9ம் தேதி தேரோட்டம் கோலாகலமாக நடக்கும். 10ம் தேதி ஆறாட்டுவிழா நடக்கும். தைமாதம் ரேவதி நட்சத்திரத்தில் மகா புஷ்பாஞ்சலி நடக்கும். இதற்காக தமிழகத்திலிருந்து இரண்டு லாரி பூ கொண்டு செல்லப்படுகிறது. வண்ண வண்ண மலர்க்குவியலுக்கு நடுவே பகவானையும், அம்பாள்களையும் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
செல்லும் வழி
தமிழக கேரள எல்லையில் செங்கோட்டையிலிருந்து 25 கி.மீ. துõரத்தில், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. செங்கோட்டையில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள், வேன்கள் செல்கின்றன.
கஞ்சா நைவேத்யம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே ஒரு சுவாமிக்கு மட்டும் கஞ்சாவை நைவேத்திய பொருளாக படைத்த காலம் உண்டு. ஐயப்பன் கோயிலின் முன்பு கருப்பசுவாமியும், கடுத்தசுவாமியும் பாதுகாவலர்களாக உள்ளனர். இவர்களில் கடுத்தசுவாமிக்கு கஞ்சா நைவேத்தியமாக படைக்கப்பட்டது. கதலிப்பழம், அவல், பொரி, தேங்காய், சர்க்கரை, முந்திரிப்பழம், கற்கண்டு ஆகியவற்றை தற்போது படைக்கிறார்கள்.
நன்றி ikmahal.org

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum