இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


போகர் ஏன் பாஷாணம் பயன்படுத்தினார் - ஒரு ஆய்வு-- சிவசத்தியடியான்

Go down

போகர் ஏன் பாஷாணம் பயன்படுத்தினார் - ஒரு ஆய்வு-- சிவசத்தியடியான்  Empty போகர் ஏன் பாஷாணம் பயன்படுத்தினார் - ஒரு ஆய்வு-- சிவசத்தியடியான்

Post by ஆனந்தபைரவர் Mon Feb 07, 2011 10:09 pm

எவ்வளவோ உலோகங்கள் மருந்து பொருள்கள் ரத்தினங்கள் கலவைகள் ரசாயனங்கள் இருப்பினும் அண்ணல் போகர் பாஷாணங்கள் கொண்டு முருகப் பெருமானின் திருவுருவத்தை செய்யக் காரணம் என்ன ? மக்கள் பயன் பெற என்பது நூறில் ஒரு பங்காக வைத்துக் கொள்ளலாம். ஆழமாய் யோசித்து பார்க்கும் போது அவர் அம்முடிவுக்கு வர தூண்டியது அல்லது காரணம் எது? காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எங்கு தொடங்குவது? யாரை கேட்பது ? எனது இந்தக் கேள்வி சிறு ஆராய்ச்சியாக மாறி, ஆசான் அகத்தியரின் அருள் கொண்டு அடியேன் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் உங்கள் பார்வைக்காக.

இந்த ஆய்வை பல பேர் செய்து பல கருத்துக்களை சொல்லி இருப்பர். அதைப்பற்றி நான் பேசவரவில்லை மற்றும் அவர்கள் கூறியது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. எனது ஆய்வை பற்றி மட்டுமே பேசுகிறேன்.

உங்கள் கருத்துக்கள், உடன்பாடுகள், எதிர்ப்புகள் என அனைத்தையும் பதிவு செய்யுங்கள்.

சித்தனாக விரும்புபவர்கள் சிவசத்தியை வணங்க வேண்டும். வணங்குதற்கு உருவ வழிபாடு, அருவ வழிபாடு , அருஉருவ வழிபாடு எனும் மூன்று வழிகள் சாலச் சிறந்தது. இதில் அருவமாகவும் உருவமாகவும் வழிபடும் அருஉருவ வழிபாடே நம்மை மேல்நோக்கி நகர்த்தும்.

அருவத்தை பற்றி குரு கொண்டு கற்கவும். உருவ வழிபாடு பற்றி சிலவற்றை பேச முயல்கிறேன்.

சிவலிங்க வழிபாடே சித்தனாக்கும் வழிபாடு. ஒருவர் வாழ்நாளில் நூற்றியெட்டு வகையான லிங்க வழிபாட்டை மேற்கொண்டால் அவர் ஒரு சிவயோகியாகி சித்தனாவர் என்பது திண்ணம். இதை மேற்கொள்ளும் போதே கன்மங்கள் நீங்கி அருவ வழிப்பாட்டிற்கான வழி திறந்து உருவத்துடன் அருவமும் சேர்ந்து சித்த பாதையில் நம்மை வழிநடத்தும்.

இதை அண்ணல் போகரும் மேற்கொண்டார். குருத் தொண்டு செய்து ஞானம் பெற்று சிவசத்தி வழிபாடு செய்து பெருஞ் சித்தராகி ஜ்யோதியாய் ஜொலிக்கிறார்.

நூற்றியெட்டு வகையான லிங்ககளை அவர் வழிப்பட்டாரா என்றால் ஆமாம் இல்லை என ரெண்டுமே சொல்லலாம். அவர் வழிப்பட்ட லிங்ககளின் கணக்கிற்கு அளவே இல்லை. அவர் நூற்றியெட்டையும் தாண்டி அப்பாலுக்கு அப்பாலான ஈசனை தரிசித்தவர், ஆதலால் இந்த நூற்றியெட்டை தொட்டதால் "ஆம்" என்றும் நூற்றியெட்டு இல்லை அதற்கும் மேல் என்பதால் "இல்லை" என்றும் பதில் கூற முடியும்.

அப்பேற்பட்ட உன்னதமான சிவலிங்க வழிபாட்டை ஒவ்வொரு ஜீவ ராசிகளும், தேவர்களும் , ரிஷிகளும் மேற்கொள்கிறார்கள� �. எவ்வாறு என்று தானே கேட்கீறீர்கள் ???

போகர் ஏன் பாஷாணம் பயன்படுத்தினார் - ஒரு ஆய்வு-- சிவசத்தியடியான்  Dsc00249சித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்

1. பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்
2. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்
3. சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்
4. ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்
5. சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்
6. ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்
7. வருணன் ஸ்படிக லிங்கம்
8. சித்தர்கள் மானச லிங்கம்
9. புதன் சங்கு லிங்கம்
10. கணேசர் கோதுமை லிங்கம்
11. கருடர் அன்ன லிங்கம்
12. அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்
13. காமதேவர் வெல்லத்திலான லிங்கம்
14. விபீஷணன் குப்பையிலிருக்கு� �் மண்ணிலான லிங்கம்
15. போகர் மரகத லிங்கம்
16. இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்
17. ராகு பெருங்காயத்திலான லிங்கம்
28. நாரதர் ஆகாச லிங்கம்
29. செவ்வாய் வெண்னையிலான லிங்கம்
30. நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்
31. பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்
32. ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்
33. டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்
34. மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்
35. பரசுராமர் சோளத்திலான லிங்கம்
36. பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்
37. பறவைகள் ஆகாச லிங்கம்
38. வாசுகி விஷ லிங்கம்
39. கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்
40. குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இவ்வாறு பலவகையான லிங்கங்களை வழிபடுவதால் சித்தம் தெளிந்த சித்தனாகலாம். மேலே கூறியது நூறில் ஒரு பாகமே. இது போல் ஏராளம் உண்டு . அனைத்தையும் இங்கு போட முடியாததால் முடிந்தவரை சொன்னேன்.

அண்ணல் போகர் மிகச் சிறந்த புவனேஸ்வரி உபாசகர். கலியுகம் நெருங்கும் போது அன்னையை துதித்து மக்களின் கவலைக்குரிய நிலைமையும் கலியின் தாகத்தையும் குறைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள அன்னை தோன்றி எந்த யுகத்திலும் அசுரரர்கள், அதர்மங்கள் என அனைத்தையும் அழிக்கும் வல்லமை உடையோன் ஆசான் சுப்பிரமணியர் தான். எனவே நீ கதிர்காமம் சென்று அவன் அருளை வேண்டி தவமிருப்பாயக என்று பணித்தார். அன்னையின கட்டளையை நிறைவேற்றுதல்

அன்னையின் உத்திரவை சிரமேற்கொண்டு போகரும் கதிர்காமத்தில் தவமிருந்து முருகப் பெருமானின் அருள் பெற்றார்.

அப்பொழுது முருகப் பெருமானிடம் கலியுகத்தில் மக்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை சொல்லி முருகப் பெருமான் தான் மக்களை காத்தருள வேண்டும் என்று கேட்க முருகரும் "எல்லாம் வல்ல பாஷாண சொரூபன் அருளுவான்" என்றுரைத்தார். போகரும், அய்யனே குருவே எமக்கு நீரே பாஷாணம் நீரே சொருபன். உம்மையன்றி வேறு ஒருவராலும் கலியிடமிருந்து மக்களை காக்க முடியாது என்று வேண்ட, முருகப் பெருமானும் இறைவன் படைத்த கலியின் குணமதுவாகும். கலியுடன் யாம் போர்புரிய வேண்டியது இல்லை. மக்களுக்குள்ளேயே போர்மூளும். எங்கும் எதிலும் அறியாமை தென்படும். மக்கள் ஞானத்தை தேட மாட்டார்கள் யோகத்தை விரும்ப மாட்டார்கள். சித்தர்களும் ரிஷிகளும் குகையிலும் அருவமாகத்தான் இருக்க நேரிடும். வழிக்காட்டினாலும� � புரிந்துகொள்ள இயலாமல் திண்டாடுவர். சரியான குரு கிடைக்காமலும் திண்டாடுவர். வினைகளை சேமித்து அதர்மத்தில் வீழ்வர்.

எனவே கலியை வெல்ல சிறந்த வழி பக்தி மார்க்கமே. எவனொருவன் தீராத தேடலும் இறைவன் மீது தெவிட்டாத பக்தியும் கொண்டுள்ளானோ அவனே சாயுச்சியம் எனும் உயர்ந்த இடத்தை அடைவான். இதுவே இறைவனின் திருவிளையாடல் என்றுரைத்தார். போகரும் சிரந்தாழ்த்தி வணங்கி அடியேன் தங்களின் மேல் உள்ள பக்தியில் கேட்கிறேன், தேவரீருடைய சொருபத்தை உருவமாக வடிவமைத்து மக்கள் வழிபட ஆவல் கொண்டுளேன். தேவரீர் மனமுவந்து அடியேன் செய்யும் உருவத்தில் நிலைத்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முருகப் பெருமானும் அதற்கு இணங்கி ஆசிர்வதித்து மறைந்தார்.

நடந்தவற்றை குரு காலங்கியின் சமாதியில் சென்று அண்ணல் உரைக்க காலாங்கியும் இந்த இறைப் பணியில் தம்மையும் சேர்த்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ள போகரின் சந்தோஷம் ரெட்டிப்பாக் பெருகியது.

குருவும் சீடரும் கஞ்சமலையில் அமர்ந்து முருகனின் வடிவத்தை பற்றி யோசித்தனர். தாம் வழிபடும் மரகத லிங்கம் போல் ஜொலிக்கும் மரகதத்திலான வடிவத்தில் செய்யலாம் என்று யோசித்த போது முருகப் பெருமான் சொன்ன பக்தியின் தத்துவம் போகருக்கு ஞாபகம் வந்தது. அதாவது "எல்லாம் வல்ல பாஷாண சொருபன் அருளுவான்" என்பதே ... இறைவன் மேல் முருகப் பெருமான் கொண்டுள்ள பக்தியின் ஆழமே அவ்வாக்கியம் பிறக்கக் காரணம்.



பக்தியில் உறைந்து போகர் உருவாக்கிய பாஷாணம்

எனவே முருகப் பெருமான் வழிபடும் பாஷாண லிங்கம் போல் தாமும் முருகப் பெருமானின் மேல் கொண்டுள்ள பக்தியில் பாஷாணத்திலேயே செய்யலாம் என்ற முடிவெடுத்தனர்.

பின்னர் எந்த உருவம் செய்யலாம் என்று யோசித்த போது கலியில் மக்கள் யோகம் செய்யாமலும், அப்படியே செய்தாலும் அது சித்திக்காமலும் அவதிப்படுவர் என்பதால் ஆண்டிக்கோலத்தில் அதாவது யோக கோலத்தில் தண்டுடன் நின்ற முருகப்பெருமானின� � உருவத்தை மனதில் நினைத்து அந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தனர்.

பின்னர் கஞ்ச மலையில் அதை பிரதிஷ்டை செய்ய எண்ணிய போது குரு காலங்கியார் பழனியில் நின்ற பெருமானை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூற அதுவே சரி என்று போகரும் ஆமோதித்தார்.

அதன் பின் கஞ்ச மலையில் நேர்த்தியாக பாஷாணங்களை கொண்டு செய்து பழனியில் பிரதிஷ்டை செய்த போது முருகப் பெருமானின் பிம்பம் சிலையில் தோன்ற வில்லை . காரணம் தெரியாமல் சிலையை நோக்க முருகப் பெருமான் அசரீரியாய் சிலையின் கை விரல் வளைந்துள்ளது எனச் சுட்டிக்காட்ட, அய்யனிடம் மன்னிப்பு கோரி, மறுபடி கஞ்ச மலையில் அதைச் சரிசெய்து பழனியில் பிரதிஷ்டை செய்ய முருகப் பெருமானும் பிம்பமாக அமர்ந்தார்.

போகர் இவ்வளவு சிரமேற்கொண்ட காரணம் மக்களின் மேல் உள்ள தீராத அன்பே.

பழனி கோவிலில் காலையில் தண்டாயுதபாணி பெருமானுக்கு ஆண்டிக்கோலம் அலங்காரம் செய்யப்படும் , மாலையில் ராஜ அலங்காரம் செய்யப்படும்.

காலையில் உள்ள யோக அலங்காரத்தை கண்டு முருகப் பெருமானின் மேல் தெவிட்டாத பக்தி கொண்டால் சிவலிங்கங்களை நாள் தோறும் வழிபடும் பாக்கியமும் கிடைத்து எல்லா யோகமும் சித்தித்து போகரின் அருளும் சேர்ந்து சாயுச்சிய கதவு திறக்கும் என்பது திண்ணம்.

ஆசான் அகத்தியரின் அருள் கொண்டு அடியேன் சேகரித்த ஆய்வு தகவல்கள் இதுவே. தகவல்கள் குறித்த புள்ளி விவரங்களை கூற இயலாது. ஆனால் விவரங்கள் அனைத்தும் உண்மையே.

================================================== ================================================== ==============

- சிவசத்தியடியான்

நன்றி கீதம் வலைத்தளம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum