இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

3 posters

Go down

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் Empty ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Post by ஹரி ஓம் Sat Feb 19, 2011 1:24 pm



ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் Attukal+Pongala+2
திருவனந்தபுரம்:

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோயிலில் உலகப்புகழ்பெற்ற பொங்கல் திருவிழா தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது . கேரளாவில் சபரிமலைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கோவில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் சுமார் 30 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைப்பர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் பெண்கள் அதிகமாக கூடும் ஒரு இடமாக ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது...

கடந்த ஆண்டு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவில் 20 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கிழக்கோட்டை தம்பானூர், பாளையம், ரயில்வே ஸ்டேஷன், ஜங்ஷன், கரமனை, பாபனங்கோடு உள்பட சுமார் 25 கிமீ சுற்றளவுக்கு பொங்கலை இடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் வைக்கும் முன்பு நேற்றே அம்மனை தரிசிக்க காத்திருக்கும் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொங்கலை ஓட்டி கிழக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பானை விற்பனை நடந்து வருகிறது. பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக நெய்யாற்றின்கரை, களியாக்கவிளை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் ஸ்ரீவேலி எனப்படும் பூஜையில் உற்சவர் பகவதி அம்மன் வலம்வந்தார்.


தல வரலாறு :

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் 24903267

மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி. கண்ணகியின் கணவன் கோவலன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் ஆணையால் கொல்லப்பட்டான். கண்ணகி நீதி கேட்டதும், மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து உயிர்விட்டான். இருந்தும், அவள் மதுரையை எரித்தாள். பின்னர், சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரில் தங்கினாள். அங்கு சேரமன்னன் கண்ணகிக்கு கோயில் கட்டினான். கொடுங்கலூர் செல்லும் வழியில் ஆற்றுகாலிலுள்ள கிள்ளியாற்றின் கரையிலும் தங்கினாள். அங்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.

சிறப்பம்சம் :

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆதிசங்கரர் இத்தலத்தில் யந்திர பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு பின் வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் இத்தலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்ததாகவும் கூறுவர். இத்தலத்து அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்திய நிலையில் அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தீய குணங்களை அடக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. பொங்கல் விழாவில் கண்ணகி வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் பாடப்பெறுகிறது. சிற்பங்களிலும் கண்ணகியின் கதை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. நுழைவு வாயிலில் ÷க்ஷத்திர பாலகிகள் உள்ளனர். மூலஸ் தானத்தில் இரண்டு விக்ரகங்கள் உள்ளன. புராதனமான மூலவிக்ரகத்தின் மீது ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூலவிக்ரகத்தின் கீழ் அபிஷேக விக்ரகம் உள்ளது. இதைத்தான் பக்தர்கள் தரிசிக்க முடியும். கோயில் முழுவதும் செம்புத்தகடால் வேயப்பட்டுள்ளது. பிரகாரத்தில் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. கோபுரங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கண்ணகியுடன் இக்கோயிலுக்கு உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் 4
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் Empty Re: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Post by pasuthai Sun Sep 25, 2011 9:52 pm

nice

pasuthai

Posts : 1
Join date : 25/09/2011

Back to top Go down

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் Empty Re: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:30 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 30
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் Empty Re: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Post by ஹரி ஓம் Wed Mar 07, 2012 5:27 pm

திருவனந்தபுரம் : ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். உலகில் அதிகளவில் பெண்கள் கூடி வழிபடும் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சமார் 2.5 மில்லியன் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த திருவிழாவில் தெற்கு கேரளா மற்றும் தமிழக-கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் Empty Re: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum