இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அறுப்பதும் ஈரமாவதும்

Go down

அறுப்பதும் ஈரமாவதும் Empty அறுப்பதும் ஈரமாவதும்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 4:22 pm

சித்தர் அறவியல் இரு வகையானது. ஒன்று, தன்னை உணர்வதற்கு உதவுவது. இரண்டு, அந்த தன் உணர்வின் விளைவாகப் பின் தொடர்வது. தன்னை உணரும்முயற்சியில் வலியுறுத்தப்படும் அறவியற் கூறுகள் இரண்டு. ஒன்று, தன்நலத்திலிருந்தும், ஆணவத்திலிருந்தும் ஒருவன் தன்னை விடுவித்துகொள்ளவேண்டும் என்பது. தன் தந்தை, தன் தாய் என்ற பற்றுதல் கூட இருக்ககூடாது என்கிறார் திருமூலர். எனது என்றும் நான் என்றும் இல்லாதிருக்கவேண்டும் என்று உரைக்கிறார் இடைக்கட்டு சித்தர். ஒரு ஸுபி சொல்கிறார்தன்னை உணர்தல் என்பது நான் எரிகிறேன், நான் எரிகிறேன், நான் எரிகிறேன்என்பதன்றி வேறன்று. தன்னை உணர்வதற்கு இரண்டாவது அரவியர்கூறுஆசைகளை அறுத்தல்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.
என்று அடித்து சொல்கிறார் திருமூலர். முக்தி அடைய வேண்டும் என்கிறஆசையை கூட விட்டு விட வேண்டும். அது வேண்டும் இது வேண்டும் என்கிறவேட்கையை விடாமல் வேதாந்தம் படித்து என்ன புண்ணியம் என்றும் அவர்கேட்கிறார். வேண்டும் வேண்டும் என்கிற வேட்கையை விட்டால், வேண்டப்பட்ட பொருள் தானாகவே வந்து அடையும் என்பது சிவவாக்கியர்அறிவுரை.தன்னை உணர்ந்தபின் சித்தன் சமூகத்தை விட்டு வெளியேறுவதில்லை. சமூகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து மக்களின் நலனில் அக்கறை கொண்டவனாகபணியாற்றுகிறான். இந்த அருள் நிலையில் அவனது அறச்செயல்கள்மற்றவர்களுடைய நல்வாழ்விற்கான வழிகாட்டிகளாக அமைகின்றன. அஷ்டபுஷ்பாஞ்சலி அல்லது எண்மலர் பூசை என்று ஒன்று உண்டு. இந்த பூசையில்பயன்படுத்த படும் பூக்கள்
இன்னா செய்யாமை
புலனடக்கம்
அருள்
பொறை
அறிவு
தவம்
வாய்மை
பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றும் உண்மை உணர்ச்சி
அறச்செயல்களை பூக்களாக கொண்டு செய்யும் இந்த பூசையை சித்தர்கள்பெரிதும் விரும்பினார்கள். இன்னா செய்யாமை என்ற அறச்செயல் தான் எல்ல செயல்களுக்கும்முதுகெலும்பு போன்றது. அதை பயில்வதன் மூலம் சமத்துவம் பெற முடியும்என்றும் சித்தர்கள் கருதினார்கள். ஈரம் உடையவர் காண்பார் இறைவன் திருவடி என்று திருமூலரின் அனுபாவக்கூற்று. மேலும் திருமூலர் சொல்கிறார்
யாவர்க்குமாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசு வுக்கொரு வாய் உரை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர் கின்னுரை தானே
தான் உண்பதற்கு முன் மற்றோர் உயிருக்கு ஒரு பிடி சோறு போட வேண்டும்என்னும் திருமூலரின் கருத்து இதை உணர்த்தும். அறுப்பதும் ஈரமாவதும் சித்த மார்கத்தில் பதினெட்டை கடந்திட மிகமுக்கியமான இரு நிலைகளாகும் என எல்லா சித்தர்களும் வலியுறுத்துகின்றனர்.
திருச்சிற்றம்பலம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum