இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!

3 posters

Go down

ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Empty ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!

Post by sriramanandaguruji Sat Mar 19, 2011 8:20 am

ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Httpujiladevi.blogspot.com






ந்திரங்களின் இமயம் காயத்திரி என்று சொல்வார்கள்

அப்படிப்பட்ட காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள்


ஆனால் சிலர் இந்த மந்திரத்தை எல்லோரும் சொல்லக்கூடாது பிராமணர்கள்
மட்டும்தான் சொல்லலாம் ஏனென்றால் சாஸ்திரங்கள் சொல்லுகின்றபடி அவர்கள்தான்
த்விஜன் என்கிறார்கள்



சாஸ்திரங்கள் த்விஜர் என்று சிலரை குறிப்பிடுகிறது. த்விஜன் என்றால் இரண்டாவது முறை பிறந்தவன் என்பது பொருளாகும்.






ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Httpujiladevi.blogspot.com+%25281%2529



ஒரு மனிதன் வாழும் போதே இரண்டு முறை எப்படி பிறக்க முடியும்?



இரண்டாவது பிறப்பு என்பது உடல் சார்ந்த பிறப்பை அல்ல. மனம் சார்ந்த பிறப்பாகும்.



நேற்று வரை கொடியவனாக குரூரம் மனம் படைத்தவனாக வாழ்ந்தவன் இன்று திடீர்
என வள்ளலார் போல மகாத்மா காந்தி போல மாறிவிட்டான் என்றால் என்ன அர்த்தம்?



அவனுக்குள் இருந்த கொடுர மனப்பான்மை செத்துவிட்டதாக தானே அர்த்தம்.

இப்படி எண்ணங்களாலும் மனதாலும் புதிதாக பிறந்தவனே த்விஜன் ஆவான்.





இப்படிப்பட்ட த்விஜன் யாரும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.




ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Httpujiladevi.blogspot.com+%25284%2529



பிராமணர்கள் உபநயன சடங்கை இரண்டாவது பிறப்பு என நம்புகிறார்கள்.



இதனால் தாங்கள் மட்டுமே த்விஜர்கள் என்கிறார்கள்.



உபநயன சடங்கு மட்டுமே ஒருவனை இரு பிறப்பாளனாக ஆக்க முடியும் என்றால்
விஸ்வகர்மாக்களும் ஆரிய வைஸ்சிய செட்டிமார்களும் உபநயனம் செய்கிறார்கள்.



அவர்களும் காயத்ரி மந்திரத்தை ஓத பிராமணர்கள் சம்மதிப்பார்களா?



அப்படி அவர்கள் சம்மதித்தால் காயத்ரி மந்திரத்தை பூணூல் போட்டவர்கள் மட்டுமே ஓத வேண்டும் என்பவதை ஏற்றுக் கொள்ளலாம்.




ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Httpujiladevi.blogspot.com+%25283%2529



பூணூல் என்பது புறக்கருவியே தவிற அகக்கருவியல்ல மந்திரங்கள் எல்லாமே அகச் சம்மந்தப் பட்டதாகும்

எனவே அகமுகமான விஷயங்களுக்கு ஒரு புறக்கருவியை மட்டும் தகுதியாக்க மாட்டார்கள் நமது முன்னோர்கள்





இன்னொரு முக்கியமான விஷயம் காயத்ரி மந்திரத்தை உருவாக்கிய விஸ்வமித்திரர் பிறப்பால் பிராமணர் அல்ல.



சுத்தமான சத்திரியர் ஆவார். ஒரு சத்திரியர் உருவாக்கிய ஒரு மந்திரத்தை
பிராமணர்கள் உரிமை கொண்டாடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.



பிராமணத்தன்மை இருப்பவனாக மந்திரத்தை ஜெபிப்பவன் கட்டாயம் இருக்க வேண்டும்

பிராமணத்தன்மை என்பது பிறப்பால் வருவது அல்ல


வாழ்விலும் வாக்கிலும் உண்மை நேர்மை அன்பு கருணை போன்றவற்றை வழுவாது கொண்டவன் என்பதாகும்


விஸ்வாமித்திரரும் தன்னிடமுள்ள சத்திரியத் தன்மையான மறக்குணத்தை விட்டப் பின்னேதான் காயத்திரி மந்திரத்தைக் கண்டறிந்தார்





எனவே பிறப்பால் பிராமணனாக உள்ளவன் மட்டும் தான் காயத்ரி ஜெபிக்க வேண்டும் என்பது முரணான கருத்தாகும்.



மனம் திருந்திய எவனும் த்விஜனாகவே கருதப்படுவார்கள்.



த்விஜன் தான் காயத்ரி ஜபிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.



ஆகவே மனம் திருந்திய யாரும் காயத்ரி சொல்வது சாஸ்திர விரோதம் ஆகாது.



இனி அடுத்த விஷயத்திற்கு வருவோம்.



ஆண்கள் மட்டும் தான் கொடுமைகாரர்களாக இருந்து மனம் திருந்துவார்கள் என்பது கிடையாது.



அடங்காபிடாரிகளான பெண்கள் பலாயிரம் பேர் இருக்கிறார்கள்.



இவர்களில் ஒரு சிலரேனும் மனம் திருந்தும் போது த்விஜனாக மாறிவிடுகிறார்கள்.



எனவே பெண்களும் காயத்ரியை ஜெபிப்பதில் தடையிருக்கவே முடியாது.



கல்வி எல்லோருக்கும் பொது என்பது போல மந்திரங்களும் எல்லா ஜாதியினருக்கும் பொதுவானது தான்.









ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/03/blog-post_19.html





ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Sri+ramananda+guruj+3


sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 64

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Empty Re: ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!

Post by ஆனந்தபைரவர் Tue Mar 22, 2011 10:19 pm

ஸ்ரீ குருஜி அவர்களுக்கு
வணக்க்கம்
துவிஞ்சர் என்பது த்விஜர் என்று இருக்க வேண்டும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Empty Re: ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!

Post by ராகவா Sun Jun 08, 2014 7:38 pm

நன்றி...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு! Empty Re: ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum