Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கற்க்குவேல் அய்யனார் கோவில் -பரமசிவம்
2 posters
Page 1 of 1
கற்க்குவேல் அய்யனார் கோவில் -பரமசிவம்
கண்களில் ஆவேசம் தெறிக்கிறது. கைகளில் போருக்கான ஆயுதங்கள் பளபளக்கின்றன. பொதுவாக சர்வ அலங்காரத்துடன் சாந்த சொரூபியாகக் காட்சி தரும் அய்யனார், அநீதியைக் கண்டதும் ஆக்ரோஷம் கொள்கிறார்.
அலங்காரப் பல்லக்கில் மின்னலாய் புறப் படும் அய்யனாரைக் கண்டு, அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி மேலீட்டில் தங்களை மறக்கின்றனர்.
நாற்புறமும் திமிறிக்கொண்டிருக்கும் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் வீரநடை போடுகிறார் அய்யனார்.
கோபம் கொண்டு விரட்டி வரும் அய்யனா ரைக் கண்ட கள்வர்கள், தாங்கள் களவாடிய பொருட்களோடு தறிகெட்டு ஓடுகிறார்கள். தலையில் இளநீர்க் காய்களைச் சுமந்தபடி ஓடுகிற கள்வர்களை அய்யனாரின் சக்தி மடக்குகிறது.
அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறும் கள்வர்கள், சிவந்து கிடக்கும் மண் தரையில் சரிந்து விழுகிறார்கள். எழ முடியாமல் தவிக்கும் கள்வர்களை மடக்கும் அய்யனார், அவர்களிடமிருந்த இளநீர்க் காய்களை வெட்டித் தள்ளுகிறார்.
தேங்காய்களுக்குள் இருக்கும் குங்குமம் கலந்த இளநீர், வெட்டுண்ட வேகத்தில் நாற்புறமும் சிதறிப் பரவுகிறது. அதன்பின் கோபம் தணிந்து சாந்த சொரூபியாக மாறும் அய்யனார் அவ்விடத்தை விட்டு அகலுவதுதான் தாமதம்- சுற்றிலும் விடைத்துக் கொண்டிருக்கும் பக்தர்களின் கூட்டம் அணை உடைந்த நீராய்ப் பாய்கிறது. குங்குமம் கலந்த இளநீர் தெறித்த தரைப்பகுதி மண்ணை கைப்பிடியளவு அள்ளுகிறார்கள். சில நிமிடங்களில் அந்த இடமே பள்ளமாகிப் போகிறது.
அள்ளிய பிடி மண்ணை கண்களில் ஒற்றிக்கொள்ளும் பக்தர்கள், அதைப் பக்திப் பெருக்குடன் பாதுகாப்பாய் வைத்துக் கொள்கிறார்கள்.
வரப்பிரசாதமாகக் கிடைக் கும் அந்த கைப்பிடி மண்ணை தங்கள் பூஜையறையில் வைத்துப் பூஜிக்கிறார் கள் பக்தர்கள். இதனால் தங்கள் குடும்பத்தி லுள்ள பல பிரச்சினைகள் மறைந்து, அமைதி யும் மகிழ்ச்சியும் நிலவுவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் பக்தர்கள்.
வியாபாரிகள் அந்த கைப்பிடி மண்ணை பயபக்தியுடன் தங்கள் கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்கிறார்கள். இதனால் வியாபாரம் செழிக்கிறதாம்.
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அந்த மண்ணைத் தூவுகிறார்கள். இதனால் விவசாயம் கொழிக்கிறதாம்.
இப்படி தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பவராக பிரசித்தி பெற்று விளங்குகிறார் கற்குவேல் அய்யனார்! அநீதியை ஆண்டவனே அழிக்கும் மேற்படி நிகழ்ச்சி "கள்ளர் வெட்டு நிகழ்ச்சி' என்னும் பெயரில் காலம்காலமாய் தொடர்ந்து நடந்து வருகிறது.
தர்மத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அநீதி ஆட்டம் போடும் போதெல்லாம், மக்களைக் காத்தருளும் பொருட்டு ஆண்ட வனே அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதைப் புராணங்கள் கூறுகின்றன. இந்த பூவுலகில் நடந்த அத்தகைய அதிசயங்களை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அதற்கு உதாரணங்கள் பல இருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் இந்த கள்ளர் வெட்டு நிகழ்ச்சி.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 13 கிலோமீட்டரில் உள்ளது காயாமொழி என்னும் ஊர். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் குதிரைமொழி என்னும் ஊர் உள்ளது. அங்கே மத்திய அரசால் பாதுகாக்கப் படும் சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதியில், சுமார் 152 ஏக்கர் பரப்பளவு நிலத்தைத் தனதாக்கிக் கொண்டு பூரணா, புஷ்கலா ஆகிய இரு தேவியரோடு கோவில் கொண்டுள்ளார் கற்குவேல் அய்யனார்.
சுற்றிலும் அரணாக வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மண் குன்றுகள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.
இந்த வனப்பகுதியில் அய்யனாரின் அருள் காட்டாற்று வெள்ளம்போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு அனைவரையும் செழிப்புடன் வாழ வைக்கிறது என்கிறார்கள் குதிரை மொழிவாசிகள்.
இயற்கை வளம் மிகுந்த இந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தில் தோன்றிய அய்யனார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன் என்றழைக்கப்பட்டு, தற்போது கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.
அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளை கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கமாகும். ஒருகட்டத்தில் கள்வர் களின் அக்கிரமங்கள் எல்லை கடந்துபோகவே- அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரைச் சரணடைந்து, "எங்களைக் காக்க வேண்டும் அய்யனே!' என்று கதறினார்களாம்.
எதற்கும் ஒரு எல்லையுண்டு. அளவு கடந்துபோன கள்வர்களின் அட்டூழியத்தை அழிக்க, தானே சென்று கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து தண்டனையும் கொடுத்தாராம் அய்யனார்.
"இனி ஒரு பொழுதும் இதுபோன்று ஈனச் செயல் புரிய மாட்டோம்' என்று அய்யனாரி டம் சத்தியம் செய்து சரணாகதி அடைந்தார்கள் கள்வர்கள். களவு போன பொருட்களை மீட்டு மக்களிடம் திரும்பக் கொடுத்தார் அய்யனார்.
கலியுகத்தில் அய்யனார் நிகழ்த்திய இந்த அற்புத நிகழ்ச்சியைத்தான் "கள்ளர் வெட்டு நிகழ்ச்சி' என்று நடத்தி வருகிறார்கள் இப்பகுதி மக்கள்.
மக்கள் தவறு செய்யாமல் நேர்மையுடன் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவும்; அவ்வாறு தவறு செய்பவர்களை இறைவன் நிச்சயம் தண்டிப்பான் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி உண்மையில் பாராட்டத்தக்க ஒன்றுதான்.
கார்த்திகை மாதம் ஆறு நாட்கள் நடைபெறும் அய்யனார் விழாவில், கடைசி நாளாக நடை பெறும் கள்ளர் வெட்டு வைபவத்தைக் காண நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந் தெல்லாம் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர். இந்த நாளை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.
"தாரணிநற் குதிரைமொழி சார்
தேரிக் குடியிருப்பில் தழைத்தோங்கும்
காரணிநற் சோலைவனக் கோவிலிலே
திருவருளின் காட்சி நல்கிப்
பூரணநற் பொற்கலையும் புடைசூழ
புவன உயிர் அனைத்தும் காக்கும்
காரணனே கற்குவேல் அய்யனே
எங்களையும் காப்பாய் போற்றி'
என்று அய்யனின் மண்ணுக்கு வரும் பக்தர்கள் உளமுருக வேண்டுகின்றனர்.
கற்குவேல் அய்யனார் வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவார்.
-----------------------------------------------------------------------------------------------------
நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்
» அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில்
» ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்
» அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில்
» ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum