Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் பேரூர்
2 posters
Page 1 of 1
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் பேரூர்
உ
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
திருப்பேரூர்த் தலபுராணத்தின்
மெய்யன்பர்களே*
பேராற்றல் மிக்க பட்டீசுவரசுவாமி திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருப்பேரூர் திருத்தலத்தின் வரலாற்றை அறிய துடிக்கும் அன்பர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டி* வழித்துணைவன். இதன்முன் இந்நூல் நான்கு பதிப்புகள் வெளிவந்து விட்டன என்பதே இந்நூலின் பெருமைக்கு கட்டியம் கூறும்.
மேலும் இப்பதிப்பில் கடந்தகாலப் பதிப்புகளில் இல்லாத பயனுள்ள புதுச்செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.
வாழ்த்துரை வழங்கிய பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நன்முறையில் அச்சிட்டுக் கொடுத்த முருகன் அச்சகத்தாருக்கு நன்றி.
அன்பர்கள் இந்நூலைப் படித்துத் திருவருள் பெறுமாறு வேண்டுகிறோம்.
“பேரூர் உறைவாய் பட்டிபெருமான் பிறவா நெறியானே
பாரூர்பலரும் பரவப்படுவாய் பாசூர் அம்மானே”
-சுந்தரர்
பட்டீசர் பதமலர் வாழ்க*
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்
பேரூர், கோவை - 641010.
தொலைபேசி எண் 2607991
உ
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்,
பேரூராதினம், பேரூர், கோவை-10.
வாழ்த்துரை
தமிழகத்தில் கொங்கில் அளிக்காஞ்சிவாய்ப் பேரூர் எனச் சிறப்பித்துக் கூறும் மேலைச் சிதம்பரமாகிய இத்தலம், தொன்மைச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், கோயிற் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றது. பழங்கற்சின்னமும், முதுமக்கள் தாழியும், உரோமானியக் காசும் இப்பகுதியில் மிகுதியாய்க் கிடைப்பது தொன்மைக்குச் சான்றாகும்.
பேரூர் மூவேந்தர்களோடு தொடர்புடையது. சங்கப் புலவர் பரணர் என்பவர் சேர மன்னன் செங்குட்டுவனை,
’தீம்புனலாயம் ஆடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே’
என்று பதிற்றுப்பத்தில் வாழ்த்தியுள்ளார். சேரமான் பெருமாள் நாயனா’ உருவம் தனியாகப் பட்டிப் பெருமாள் திருக்கோயில் வடபுற உட்பிரகாரத்தில் உள்ளது. கோதை நனியாண்டதொரு கொங்கு வளநாடு’ என்று கச்சியப்பர் கூறுவர். இதனால் சேரருக்கும் பேரூருக்கும் உள்ள தொடர்புப தெரிய வருகின்றது.
‘சோழன் பூர்வ பட்டயம்’ என்ற செப்பேடு பேரூர்க் கோயிலை கரிகாலன் கட்டியதாகக் கூறுகிறது. பேரூரில் உள்ள காஞ்சி யாற்றுத் துறைக்குக் கரிகாற் சோழன் துறை என்று பெயர். கரிகாற் சோழன், விக்கிரம சோழன், வீர ராசேந்திரன், கோனேரின்மை கொண்டான் முதலிய கொங்குச் சோழர் கல்வெட்டுக்கள் இங்கு மிகுதியாக உள்ளன. இதனால் சோழர் தொடர்பு புலனாகிறது.
’காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத்
திருமாலுக்கு அமர்ந்துறையக்
குன்றமன்னதோர் கோயிலாக்கியும்’ என்று
நெடுஞ்சடையன் பராந்தகனைப் பற்றிச் செப்பேடு பேசுகிறது. அம்மன் கோயிலில் வடபுறச் சுவரில் இரட்டை கயற் சின்னத்தை இன்றும் காணலாம். கொங்கு பாண்டியரில் புகழ் பெற்ற வீர பாண்டியன் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பாண்டிய தொடர்புக்கு இவை சான்றுகளாகும்.
இத்தகு சிறப்புக்கள் பல பொருந்திய பேரூர் சிற்ப வளத்தால் உலகப் பெருமை பெற்றது. அது போலவே இலக்கியப் பெருமை யும் உலகறிந்த வொன்று. ’பாமலி புலவர் போற்றும் பட்டி நாயகனார்’என்ற கூற்றிற் கேற்ப புலவர் பெருமக்கள் பலர் பல இலக்கியங்களை யாத்துள்ளனர். பேரூரைப் பற்றிய நூல்களில் தலையாயது கஞ்சியப்ப முனிவர் பாடிய பேரூர் புராணமாகும். தத்துவங்களை அடியாகக் கொண்டே நூலை யாத்துள்ளனர். 36 படலங்கள் நூலில் உள்ளன. நடராசப் பெருமான் கோயில் மண்டபத்தில் 36 தூண்கள் உள்ளன. இவையெல்லாம் தத்துவத்- தோடு தொடர்புடையன.
’கங்கையும் பணிவெண்டிங்களும் ’ எனத் தொடங்கும் விநாயகர் வாழ்த்தில் 36 சொற்கள் உள்ளன.
கற்பனை, இலக்கியச்சுவை, தத்துவக்கருத்து முதலியன நூல் முழுதும் விரவிக் கிடக்கின்றன. காவலர் வழிபாடு படலத்தில் சிவமூர்த்திகள் 24 குறிக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு மூர்த்தங் களையும் வழிபடுவதால் வரும் பயனும் கூறப்பட்டுள்ளது.
நிருத்தப் படலத்தில் நடராசப் பெருமான் தத்துவ அமைப்புச் சிறப்பாக விளக்கப்படுகின்றது. பள்ளுப் படலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு சுருக்கமாகவும், பேரூர் பற்றிய செய்தி விரிவாகவும் பாடப் பெற்றுள்ளது. மருதவரைப் படலத்தில் புசனை செய்யும் முறை கூறப்படுகின்றது. இத்தகைய செய்திகள் பலவற்றைக் கொண்ட ’பேரூர்ப் புராணம்’ செய்யுள்களாக அமைந்துள்ளதால் புலவர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்குவ தில்லை. ஆதலால் உரை நடையாக முழுவதையும் சைவத்திரு கோவை கிழார் அவர்கள் வரலாற்றுச் செய்திகளைப் பிற்பகுதியாகச் சேர்த்துள்ளார். முன்பே இருமுறை இந்நூல் வெளி வந்துள்ளது. தற்போது ஐந்தாம் முறையாக வெளி வருகின்றது. இவ்வெளியீட்டில் முன்பு சேர்க்கப் பெறாத சிற்றிலக்கியங்கள் பற்றிய குறிப்புக்கள் சில சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரை நடைநூல் வெளி வருவதற்குக் காரணமான ஆன்பட்டியுடையான திருவருளை வழுத்தி, பண்பும், தொண்டார்வமும் மிக்க செயல் அலுவலர் திரு.பி.ஆர்.ராஜ;மோகன், எம்.ஏ.எம்.பில்., அவர்கட்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பர்கள் இந்நூலை வாங்கிப் பயின்று தௌpந்த சிந்தையராய் திருவருள் பெற்றுய்வார்களாக.
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்
பேரூர்
த ல ச் சி ற ப் பு
இந்த ஆலயம் தொன்மையும் பழமையும் வாய்ந்தது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் சுயம்பு மூர்த்தி. இவ்வாலயத்திலுள்ள கனகசபையில் கோமுனி பட்டிமுனி இருவர்க்காக ஆடிய பாதத்- தோடு விளங்கும் நடராஜர் வடிவம் மிக மிக அழகானது* இக் கனக சபையில் சிறபக்கலையின் அழகு சிரிக்கின்றது* சைவ சயமச் சார்புள்ள இறை வடிவங்களின் எழில்மிகு வேலைப்பாடு சிந்தை கவர்கின்றது* விமானம்-அங்கே வடிக்கப்பட்ட தாமரை மலர்- கல்லாலான சங்கிலிகள்-நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன* சிறு தூண்களிலும் புராணக்கதைகளைக் காட்டும் வண்ணம் அன்றைய சிற்பிகளின் உளிகள் விளையாடியிருக்கின்றன*
புராதனமான இக்கோயிலின் கற்பக்கிருஹத்தைக் கரிகால் சோழன் அமைத்ததாய்க் கூறுவர். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் இவ்வாலயத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் ஒரு பாண்டிய மன்னன் வைணவ ஆலயம் ஒன்றை இங்கு நிறுவியதாகத் தெரிகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இவ் வாலயம் வந்து பாடியதைத் தேவாரம் எடுத்துக் காட்டுகிறது. பதினொன்று முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்த கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபத்தையும் மகா மண்டபத்தை- யும் கட்டினர். பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஹொய்- சாலர்களும் விஜயநகர மன்னர்களும் இவ்வாலயத்துக்கு மானியங்கள் வழங்கியுள்ளார்கள். புகழ் வாய்ந்த கனகசபை மதுரை அளகாத்ரி நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு மொத்தம் ஆறு கோபுரங்கள் உள்ளன.
சரித்திர வரலாற்றின்படி பேரூர் ரோமானியர் காலத்திலேயே அந்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தது என்பதை அக்காலத்திய நாணயங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அறிகின்றோம். சில நூற்றாண்டுகட்கு முன்னர் வடிக்கப்பட்ட சிற்பங்கள், ஆயிரம் ஆண்டுகட்கு முன் இங்கு வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. “பேரூர்ப்புராணம்’’ என் னும் நூல் அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கச்சியப்ப மனிவரால் இயற்றப்பட்ட நயம் வாய்ந்த தலவரலாற்று நூலாகும்.
இங்கு வாழ்ந்து ஞானசமாதி பெற்ற துறவி சாந்திலிங்கனார் பெயரால் ஒரு மடம் நிறுவப்பட்டுள்ளது. இது தமிழ்க் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றது. இம்மாதிரியே கோவைக்கருகிலுள்ள சிரவணம்பட்டி கௌமார மடமும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இவ்விரு மடங்களும் சைவத்துக்கும் தமிழுக்கும் அருந்தொண்டு புரிந்து வருகின்றன.
இங்குள்ள தெப்பக்குளம் அழகியது. பதினாறு வளைவுகளை யுடையது. சிறியதும் பெரியதுமான இரதங்கள் அழகிய வேலைப் பாடுகள் அமையப் பெற்றுத் திகழ்கின்றன.
காஞ்சிமா நதி எனும் நொய்யல் நதி, அதன் இருமங்கும் தோன்றும் பச்சைப்பசேலென்ற தென்னந்தோப்புகள், “சோழன் துறை” எனும் அதன் துறை ஆகிய யாவும் நிரம்ப அழகு பெற்றவை “சோழன் துறை” செல்லும் வழியிலுள்ள பட்டிவிநாயகர் ஆலயம் சிறியதே எனினும், எழில் மிக்கது* இவ்வூரை வடக்கிலும் தெற்கிலும் பாதுகாத்து நிற்பவை வடகைலாசம் தென்கைலாசம் எனும் ஆலயங்கள் என்றும் அழிவற்ற இறவாப்பனையும், பிறப்பேயில்லாத பிறவாப்புளியும், பைத்தியத்தை நீக்கும் புண்ணிய தீர்த்தம் சுரக்கும் பிரம்மதீர்த்தக்கிணறும் இத்தலத்தின் புனிதத்தை இன்றும் எடுத்துக் கூறுபவை பிரம்மதீர்த்தம் செம்பைப் பொன்னாக்கும் ஆற்றில் பெற்றது* இதை இரசாயன நூல் அறிஞர் ஆய்தல் நன்று*
மார்ச்-ஏப்ரலில் வரும் பங்குனி உத்திரமும் டிசம்பர்-ஜனவரி- யில் வரும் “ஆருத்திரா தரிசனமும்” இங்கு கொண்டாடப் பெறும் மிக முக்கியமான விழாக்கள். ஆருத்திரா தரிசனம் தொடர்ந்து பத்துத் தினங்கள் கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள இரதங்கள் மொத்தம் ஐந்து. பங்குனி உத்திரத்தில் ஒன்பதாம் நாள் நடைபெறும் இந்திர விமானத் தெப்பத் திருவிழா கண்கொள்ளாக் காட்சி யாகும். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று நடைபெறும் திருவிளக்கு வழிபாடு நெஞ்சைப் புனிதமாக்கி உயிரில் ஒளியூட்டுவது*
இங்கு மாண்டோர்க்கு மறுபிறப்பில்லை என்பது நம்பிக்கை. இறந்தவர்களுக்கான சடங்குகள் இங்குள்ள காஞ்சிமா நதியின் ‘சோழன் துறையில்’ நடைபெறுவது கண்கூடு. இறந்தவர்கள் எலும்பு களை இந்நதியில் போட்ட மூன்று மண்டலங்களில் எலும்புகள் வெண்கற்களாக மாறி விடுகின்றன* உண்மையில் அந்த எலும்புக் குறியவர்களின் ஆத்மா சாந்தி பெற்றுவிட்டதன் அறிகுறியாகவே மக்கள் இதை நம்புகின்றார்கள், மேலும் இங்கு இறப்பவர்கள் தமது வலது காதை மேலே வைத்து உயிர் விடுகின்றார்கள் என்பதும் இப்பகுதியில் சாணத்தில் புழுக்கள் உண்டாகாமல் இருப்பதும் இத் தலத்தின் புனிதத்திற்கு எடுத்துக் காட்டு*
இங்குள்ள முருகப் பெருமான் தண்டாயுதபாணி என அழைக்கப்படுகிறார். இந்த சன்னதி 5 வருடங்களாக சுமார் 1½ லட்சம் பொருட் செலவில் கருங்கற் திருப்பணி செய்விக்கப்பட்டு கடந்த 12.07.1971 அன்று குடமுழுக்கும் செய்யப்பட்டது.
இக்கோயிலின் கலையழகு இந்திய மக்களின் உள்ளத்தையும் வெளிநாட்டவர் உள்ளத்தையும் ஒருங்கே கவர்கவது*
ஆலய நிர்வாகம் - நிதி நிலை
திருப்பேரூர்க் கோயிலுக்கு சர்வமான்யமாக மாவுத்தம்பதி, பேரூர் என்ற இரு கிராமங்கள் இருந்தன. இப்போது அரசினர் இவ்விரு கிராமங்களையும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு ஈட்டுத் தொகையாக ஆண்டொன்றுக்கு 1,0451.05 ரூபாய் கொடுத்து வருகிறார்கள். அன்பர்கள் செலுத்தும் காணிக்கைகள், பிற சொத்துக் களின் வருமானம் அர்ச்சனை ஆகியவற்றின் வழியாக கிடைக்கும் தொகையும் சேர்த்தால் ஆண்டொன்றுக்கு இத்திருக்கோயிலின் வருமானம் சுமார் இரண்டரை லட்ச ரூபாயாகும்.
இப்போதைய நிலங்கள்
நன்செய் நிலம் ஏக்கர் 95.00
புன்செய் நிலம் ஏக்கர் 9.00
தோப்பு ஏக்கர் 1.50
பூசை, திருமாலை, மேளம் முதலான பணிகள் செய்துவர 84 ஆலய ஊழியங்கள் இருக்கின்றன. இவைகட்கு மானியமாக விடப்பட்ட சுமார் 375 ஏக்கர் நன்செய் நிலங்கள் இருக்கின்றன. இவற்றை அனுபவித்துக் கொண்டு ஊழியர்கள் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இத்திருக்கோயிலில் பல மாநிலங்களில் இருந்தும் சேவார்த்தி கள் வந்து வழிபடுகின்றார்கள். குறிப்பாக வெளிமாநிலங்களில் கேரளம் குறிப்பிடத்தக்கது.
திருவிழாக்களும் அன்பர்கள் திருக்கூட்டமும்
1. சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பு.
2. ஆடிப்பதினெட்டு.
3. ஆடி அமாவாசை.
4. மார்கழித் திருவாதிரை.
5. தை அமாவாசை, தைப்பூசம்.
6. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா.
7. சுவாமி அம்மன் நாற்று நடவு உற்சவம்.
இவ்விழாக்களில் மக்கள் திருக்கூட்டம் மிகப்பெரிய அளவில் வந்து வணங்கிப் பயன்பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பு, ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை மார்கழி திருவாதிரை திருவிழாக்களுக்கு இங்கு வரும் மக்கள் தொகை (1,00,000) ஒரு லட்சத்திற்கு மேலும், மற்ற திருவிழாக்களுக்கு (50,000) ஐம்பதினாயிரத்திற்கும் மேலும் இருக்கும். இவ்வாறு வந்து செல்பவர்கட்கு போதுமான கீழ்க்காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1. ஆலய வெளிப்பிரகாரத்தில் ஆழ்கிணறு (BOREWELL) தோண்டி, ஆலயத்தில் நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்க செய்யப் பட்டுள்ளது.
2. குடிநீர் வசதிக்கு குளிர்சாதன இயந்திரம் (COOLING MACHINE) பொருத்தப்பட்டுள்ளது.
3. ஆலய முன்புறம் விநாயகர் மேடையில் உள்ள அருள்மிகு கேதாரிஸ்வரர் ஆலயத்திற்கு கோபுரம் அமைத்து திருப்பணி செய்து 9.6.1980 அன்று குடமுழுக்கு விழாவும் நடைபெற்றுள்ளது.
4. பிரசாத கடை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
இன்று நாடெங்கும் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் தமிழ் அர்ச்சனை இத்திருக்கோயில் 1953-ம் ஆண்டு முதலாகவே நடைபெற்று வருகிறது. காலை மாலை இருவேளைகளிலும் ஒலி பெருக்கி வாயிலாகத் தேவாரத்திருமுறைகளும் பாராயணமாகி வருகின்றன.
பழம் பெருமையாய், பார்புகழும் கலைச் சிறங்கம் கொண்டி ருக்கும் இத்திருக்கோயிலில், அதற்கேற்ற வருவாளின்றி அல்லலுறு கின்றது என்பது வேதனை தகும் செய்தியாகும்* இவ்வேதனை திரு பட்டீசுவரர் அருள் வேண்டி நிற்கும் அதே சமயத்தில் பக்த பெருமக்களும் மனமுவந்து காணிக்கை அளிக்க வேண்டுகிறோம்.
செயல் அலுவலர்
(பிற்சேர்க்கை)
திருப்பேரூர்ப் பிரபந்தச் செய்யுள் திரட்டு
திருப்பேரூர்க்குச் சிற்றிலக்கியங்கள் மிகுதியாக உண்டு. இரண்டு கோவை நூல்கள், இரண்டு கலம்பகங்கள் இரண்டு பிள்ளைத் தமிழ்கள் ஆகியன இத்தலத்திற்குச் சிறப்பாகும்.
திருப்பேரூர்க் கோவை (1) பழைய ஓலைச் சுவடியிலிருந்து கோவை கிழார் ஊ.ஆ. இராமச்சந்திர செட்டியார் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. ஆசிரியர் பெயர் அறியப்பெறவில்லை.
2. சிரவையாதீனம் - தவத்திரு கந்தசாமி
சுவாமிகளால் பாடப்பெற்றது. மற்றொரு கோவையாகும்.
477 பாடல்கள் உள்ளன.
குறிப்பறிதல்
நயக்கும் தகைத் திருப்பேரூர் அங்கிநயனம் விண்ணோர்
கயக்கும்படி ஒருவேட் காய்ந்தோர் வேள்வரக்
காட்டிடல் கோல்
மயக்கும் பிணிமுன் பிசைத்துப்பின் மாற்றருள் மாமருந்தாய்
வியக்கும் படியும் புரியுமின்னார்மை விழித்துணையே.
திருப்பேரூர்க் கலம்பகம் - 1. கவியரசு கு.நடேசக் கவுண்டரால் பாடப்பெற்றது முதற் கலம்பகம்.
2. சிரவை-தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் பாடப்பெற்றது மற்றொரு கலம்பகமாகும். 100 பாடல்கள் உள்ள அக்கலம்பத்தில், ஊர் என்ற துறையிலமைந்த பாடல் திருப்பேரூரின் மேன்மையைக் காட்டும் அது பின்வருமாறு -
திருவாரூர் காஞ்சி திருவானைக்கா அருணை
திருக்காளத்திவரை திருத்தில்லை பிரமபுரம்
மருவாரூர் சுட்ட திருவதிகை வெண்ணெய் மதுரை
வாதபுரம் பெருந்துரையும் பொருந்துறையுள்
வாய்ந்தோன்
கருவாரூர் போரொழித்தெய் துயிர்த்திரள் கட்கெல்லாம்
கதியளிக்க வதியுமியற் கவின் பேரூர் வினவிற்
பெறு பிறவாநெறி யருட் பிப்பிலவனப் பேரூரே
திருப்பேரூர் பச்சை நாயகியம்மையார் பிள்ளைத் தமிழ்
சிரவை-தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இயற்றப் பெற்றது. 1940ல் வெளியாயிற்று. சென்னைப் பல்கலைக் கழகப் புலவர் இடைநிலைக்குப் பாடமாக அமைந்த போது இரண்டாம் வெளியீடாக வந்தது.
நீராடற் பருவத்தில் பச்சை நாயகிக்கும் காஞ்சி நதிக்கும் சிலேடையாக அமைந்த பாடல் மிகச் சிறப்புடையது. அப்பாடல் இதோ-
மலையிடை யுதித்து மிகுபாசொளி பரப்பியவீர்
மாழை பணிலங் கடகம்வின்
மணிப்பணிகை கொண்டு பரமனாட வந்தன்பர்கண்
மலங்களைந்து யிரினங்கள்
நிலைபெற வளித்துற்ற சோகதாகங்களற
நீற்றி நன்செய்யுளணியாய்
நிறைபண்ணை யாளவர்க்கின் பதம்பொருள் கண்மிக
நித்த மீந்திடு திறத்தால்
உலையுமென பணி கொண்டு முத்தியின் பாக்குதலின்
ஒண்காஞ்சி யிந்தியாஞ்சீர்
ஒங்கலிற்கண் விருந்தாம் பெருங்காட்சி தனில்
உன்னையொப்பாய்க் கருணையார்
விலையில் பிறவாநெறித் தண்டுறைக் கண்டிரைதகாள்
வெள்ள நீரடியருளே
விச்சை நாயகர் வாஞ்சிபச்சை நாயகி காஞ்சி
வெள்ள நீராடியருளே.
பச்சை நாயகி மாலை - தவத்திரு கந்தசாமி அவர்களால் பாடப் பெற்றது. 102 பாடல்கள் கொண்டது. பிள்ளைத் தமிழோடு சேர்த்து 1940ல் வெளிவந்தது.
பித்தனென்றோதிய ஆரூரன் மீதிற் பிழையுளதோ
ஒத்தகுல்ப்பெண் மணம்போக்கிவே சையுதவ பெண்ணின்
கைத்தலம் பற்றுவித்து அங்கு அவள் ஊடல்களையுமொற்றாய்
நத்தமுற்றுற்றலைந்தாற் பேரைவாழ் பச்சைநாயகியே
திருப்பேரூர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு
சிரவை-தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் பாடப் பெற்ற பல நூற் தொகுப்பு 1941ல் வெளிவந்தது.
1. பட்டி விநாயகர் பதிகம்
2. பட்டீச்சுரர் பதிகம்
3. முருகக்கடவுள் திருப்புகழ்ப் பதிகம்
4. நடராசர் பதிகம்
5. நாராயணமூர்த்தி பதிகம்
6. பச்சை நாயகி துதி
7. அரசம்பல வாணர் பதிகம்
8. அகிலாண்நாயகி பதிகம்
9. பட்டிநாயகி மாலை
ஆகிய நூல்கள் இத்தொகுப்பில் உள்ளன.
அரசம்பல வாணர் பதிகத்திலொரு பாடல் -
சீரூருந் திருநாவலூராணி நயந்தோய்
செய்யுண் மணந்திசையடிகள் செய்யுண் மனந்திசைய
நாரூரும் அம்மை மரகதத்துடன் போய் நாற்று
நட்டவன் உட்போpன்பம் நட்டவனுhர் விரைவில்
காரூரும் மணிமாட மீதிலுலாக் காட்சி
கண்மடவார்கண் மனங் கொண்டருள மகிமைத்
தேரூரும் விதிநறும் புகை விணிசை
மேயச் சிதம்பரமென்றோங்கு மணித் திருப்பேரையூரே
திருப்பேரூர் தோத்திரப் பாமாலை - புரவிபாளையம் குறுநில மன்னர் கோப்பண் மன்றாடியார் மனைவியார் துளசியம்மாள் அவர்களால் பாடப்பெற்றது. 1966ல் வெளிவந்தது. புரவிபாளையம் மன்றாடியார் மரபினருக்கும் பேரூர்க் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
உ
பதிப்பாசிரியர் முன்னுரை
---் ் ---
(ஊ.மு. சுப்பிரமணிய முதலியார், B.A.கு.ஆ.ரு.
அவர்கள் எழுதியது)
திருப்பேரூர்ப் புராணத்தின் இரண்டாம் பதிப்பாகிய இதற்கு ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டுமென்று அந்த ஆலயத் தரும கர்த்தர்கள் என்னைப் பணித்தனர். இவ்வரிய நூலுக்கு முன்னுரை எழுதப் போதிய தகுதி என்னிடம் இல்லை என்பதுணர்ந்தேனாயினும் அறத்தலைவர்கள் பணித்த அப்பணியை மறுத்தற்கஞ்சிய அச்சத்தாலும் திருப்பேரூரிலே நல்லூழ் வசத்தாற் பன்னாட்டழகிப் பயின்றவைகளைக் கூறி மகிழ வேண்டுமென்ற ஆசையாலும் இதனை எழுதத் துணிந்தேன்.
திருப்பேரூர்ப் புராணப் பெயர் விளக்கம்
திரு-பேரூர்-புராணம் என்னும் மூன்று சொற்கள் சேர்ந்த திருப்பேரூர்ப் புராணம் என்னும் சொற்றொடர் இந்நூலுக்குப் பெயராயிற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மைநோக்கம், அதாவது அழகு என்று பொருள் கண்டார் பேராசிரியர், அதாவது யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருள் மேற்சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு, பேரூர் என்பது பெரிய ஊர் எனப் பொருள்
பெற்று உருவாலும் வளத்தாலும் பயனாலும் பெரிய ஊராகிய கார ணத்தால் அப்பேர்பெற்ற சிவத்தலத்திற்குக் காரணப் பெயராயிற்று புராணம் என்பது பழஞ்சரிதையாம். ஆகவே அழகிய பேரூர்த் தலத்தின் பழஞ்சரிதைகளின் தொகுதி என்பது திருப்பேரூர்ப் புராணம் என்ற பெயரின் பொருளாயிற்று.
பேரூர் என்னுந் தலம் என்னென்ன காரணங்களால் அப்பெயர் பெற்ற தென்பதையும், அது இவ்வுலக நிலையிலும் ஆன்ம நிலையாகிய அவ்வுலக நிலையிலும பயன்தரும் வகையிலே எவ்வாறு அழகுடைய தாகிக் கண்டவரால் விரும்பப் படுவதாயிற்று என்பதையும் விளக்கும் பொருட்டு உள்ள பற்பல பழஞ்சரிதைகளை இந்நூல் தன்னகத்துட் கொண்டு விளங்குகின்றதொன்றாம் என்ற உண்மை இப்பெயராலேயே தெரியக் கிடப்பதைக் காணலாம்.
வேகமாய், ஓடுகின்ற அல்லது பறக்கின்ற, அல்லது நீந்துகின்ற ஊர்திகளையும், நவீன வழிகளும் கண்கவரும் மின்சார விளக்குகளும் பல நிலை மாடங்களும் போக போக்கியங்களும் கொண்டு விளங்கும் தற்காலப் புது நகரங்களின் அழகையும், புதிய அனுபவங்களையும் கண்ணாரக் கண்டு எண்ணார நுகரும் இக்காலத்து மக்களுக்கு இப்பேரூரினைக் கண்டால் அழகாயிருக்குமா? இதன் பழங் கூறையுடைச் சிற்றில்களையும், இடிந்த பழங்கட்டடங்களையும், தார் பூசி மெருகிடப் பெறாத புழுதி நிறைந்த தெருக்களையும், படிகட்டப் பெறாத நீர் பெருகும் ஆறு குளங்களையும், இவற்றில் நாகரிக மனிதர்களால் அசுத்தப் படுத்தப்பட்ட கரைகளையும் மனிதன் கைபடாது தன் வளப்ப மேனிக்குத் தடையின்றி நாற்புறமும் மனம் போல் வளரும் காட்டுக் கொடி செடி மரங்களையும், கண்டால் இந்நாண்மக்களுக்கு அழகா யிராதுதான்* ஆனால் நாகரிக மென்ற பேராற் செய்யப்படும் கோரங்களையும் நீக்கி ஆண்டவனுடைய இயற்கையமைப்பு களையும் ஆடம்பரமற்ற அமைதியான சுத்த உண்மை வாழ்க்கைப் பொருள் களையும் அழகாகக் கணாணுதற்கு வேறு உண்மை கண்தான் வேண்டும். நமது புதிய நாட் பொய்கண்கள் பேரருளின் திருநிறைந்த அழகுகளைக் கண்டு களிக்கும்படி பழம் பண்பைப் பெற்றிடுக.
பேரூர் என்பது பெரிய ஊர் எனப் பொருள்படும் என மேலே கூறினோம். ஆனால் இந்நாளில் அது ஒரு சிற்றூராகக் காணப்படுவ தன்றிப் பெரிய ஊராக இல்லையே என்றால், அது சரியே. நாம் காணும் ஊர் இது. ஆனால் முற்கால சரிதங் காண்போர் காணும் உண்மை வேறு. பேரூரானது பண்டைக் காலத்தே ஒரு பெரிய சிறந்த நகரமாகத் தானிருந்தது. ஊர் என்பது நகரம். ஓரூரிலே குடிகள் மிக நெருங்கி இனிமேலும் குடியேற வசதியற்றுப் போனால் அவ்வூர்ப் புறத்தில் பக்கத்துப் புதிதாக வேறு ஒரு சிறு ஊர் ஒருவனைத் தலைமையாகக் கொண்டு கட்டுவித்துக் குடி புகுதல் இந்நாட்டு இயல்பு. இவ்வாறு பழம் நகரின் பக்கத்துப் புததிhக உண்டாகும் சிறு ஊர் புத்தூர் என்று அழைக்கப்பெறும். அதுபோலவே பழைய பெரிய ஊராயிருந்தமையால் பேரூர்என்று அழைக்கப்பெற்ற பேரூரின் பக்கத்திலே குடிநெருக்கம் முதலிய காரணங்களாலே கோவன் என்ற தலைவனால் புதிதாய் அமைக்கப் பெற்றது கோவன்புத்தூராம், இதுதான் இப்போது நாம் காணும் கோயமுத்தூர் என்ற பெரிய நகரம்.
“அயலிடை வேறடி நெருங்கக் குடிநெருங்கி யுளதவ்வூர்” என்ற முன்னோர் வாக்கும் காண்க. நான் செல்லச் செல்ல செல்வம் சகடக்கால் போல வரும் என்றபடி உண்மையிலே பெரிய பேரூராயிருந்தது. இப்போது நாம் காணும் சிற்றில் பலவுடைய சிற்றூராக வும் சிற்றூராய்ப் புத்தூராய் முளைத்த கோவன் புத்தூர் பேரூராகவும் பெரிய ஊர்) மாறிவிட்டமை காலத்தின் வலிமை. ஆதலின் முற்காலத்துப்பேரூர் இருந்த பெரிய நகரின் நிலையிலே வைத்து இப்புராணத்திலே கூறப்படும் நகரச் சிறப்பு முதலியவற்றை பொய்யென்று சிலர் ஆராயாது கூறுதல் தவறு என்பது வெளிப்படை.
இனிப் புராணம் என்பது பழஞ்சரிதங்களின் தொகுதி எனக் கண்டோம். இப்போது பொதுப்படவே புராணங்கள் என்றால் பொய்யாகிய கட்டுக்கதைகள் என்று சிலர் எள்ளி உரைக்கின்றனர் அன்னார் அவ்வாறு எல்லாவற்றையும் ஒருங்கே தள்ளிவிட முயலுதல்;; இயலாது. புராணங்களையும் ஒரே விதமாக பாராட்ட இயலாது. அன்றியும் ஒரு புராணத்திலுள்ள எல்லா வரலாறுகளையும் ஒன்றுபோல பாராட்டலும் தவறாகும். சில புராணங்களும் ஒரு புராணத்துடன் சில சரிதங்களும் உண்மைச் சரித்திர நிகழ்ச்சி பற்றி உரைக்கப்படும் வேறு நில உவமை முதலிய அணிகளின் முகத்தால் குறித்த ஒரு நற்பொருளை விளக்குதற் பொருட்டுக் கதைகளாய் உரைக்கப்படும், இன்னும் சில குறித்த ஒரு கற்பனையை விளக்கும் அர்த்தவாத வாக்கியங்களாகப் பொருள் செய்து கொள்ளுமாறு கதை உருவமாய் உரைக்கப்படும் மற்றும் சில தத்துவார்த்த வாக்கியங்களாய் உரைக்கப்படும். மேலும் பல, கவிநயம் பெறவும் பொரளின் மேன்மை தெரிவிக்கவும் இலக்கிய நயம் பற்றிப் புனைந் துரையாக உரைக்கப் பெறும், இவ்வாறே பற்பல உரைகள் உண்டு. இவற்றின் கருத்தும் போக்கும் தாமே அறிந்தும் அல்லது புராணங் களின் பொருள்கோளையும் உள்ளிடுகளையும் உணர்த்தும் அவற்றை நூல் நெறியிலேயும் ஆன்றோர் வழக்கிலேயும் கற்றும் கேட்டும் தெரிந்தும் பொருள் கொண்டும் பயனடைய அறியாதார் பலர் எல்லாந்தெரிந்தவர் போல அகங்கரித்து விண் வசை பேசி அபசாரத் திற்கும் அறிவுடையார்களின் ஏளனத்திற்குமாளாகின்றார்கள் அந்தோ* இவர்களின் மடமையும் ஆணவமும் பாலவலிமையும் இருந்தவாறென்ன கடவுள் இவர்களைப் பணிவிலும் நன்னெறி யிலும் செல்ல அருள்வாராக. மேலே குறித்த வகைகளில் வைத்து இப்புராண சரிதங்களில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம் -
சுந்தரமூர்த்திகள் இக்கொங்கு நாட்டுக்கு எழுந்தருளியதும் திருப்பேரூரை அடைந்து பாடியதும் பெரிய புராணத்தாலும் பிற சரித ஆதாரங்களாலும் வலியுறுத்தப்படுகின்றன. இச்சரித உண்மையை பள்ளுப்படலம், அழகிய திருச்சிற்றம்பலப் படலம் என்ற இவைகளிற் காண்கின்றோம். ஆனால் அச்சரித உண்மையுடன் இத்தலத்திலே நடைபெற்ற விசேட வரலாறுகளும் அவற்றில் காணலாம். அவ்வத்தலங்களில் கர்ண பரம்பரையாக வந்த வரலாறுகளைப் புராணங்களில் சேமித்து வைத்தல் நமது முன்னோர் கையாண்ட முறையாயிருந்தது. அழகிய திருச்சிற்றம்பலப் படலத்திற்கண்ட சரித உண்மைக்கு ஆதாரமாக அப்பெயர் கொண்ட கருங்கற் கட்டடமாகிய பழங்கோயில் ஒன்று மிகக்கிலமாய் இப்போது திருப்பணி செய்யப் பெறும் நிலையில் இன்றைக்கும் விளங்குவதனைக் காணலாம். அதிற் கிடைக்கும் கல்வெட்டு களையும் அவற்றிற்கிட்டிய பழஞ்சரித ஆதரவுகளையும் பற்றி என் நண்பர் திரு.ஊ.ஆ.இராமச்சந்திர செட்டியார் எழுதி, இதனோடு அனுபந்தமாகச் சேர்த்துள்ள சரித வரலாற்றில் விளங்கக் காண்க. இந்தக் கோயிலைத் திருப்பணியின் பொருட்டுப் பிரித்துப் பார்க்கும் போது அதன் கீழே உள்ள அடையாளங்களாக இதற்கு முன் பூர்வத்தில், இந்த இடத்தில் இது ஒரு செங்கற் கட்டடமாக இருந்ததென்றும் அதனையே பின்னிட்டு இப்போது நாம் காணும் கருங்கற் கட்டடமாகக் கட்டினரென்றும் ஊகிக்க இடமிருக்கிறது. சுமதி கதிபெறு படலம், அங்கிரன் கதிபெறும் படலம் என்பவை களிலே சுமதி என்ற பிராமணனும் அங்கிரன் என்ற வேடனும் கொலை களவு விபசாரம் முதலிய பாவங்களைச் செய்து திரிந்தனரேனும் இறுதியில் திருப்பேரூர் எல்லையில் இறக்க நேர்ந்து அவர்களுடம்பு தம்முட்பட்ட எல்லாவற்றையும் தூயதாக்கும் திரு நீற்று மேட்டிலும் காஞ்சி நதியிலும் தோய்ந்த வகையாலும் பிற வாற்றலும் நற்கதி பெற்றனர் என்ற வரலாறுகள் கேட்கப் பெறும் இவை போன்ற கதைகளையே நவீனர்கள் சுட்டி இகழ்ந்துரைக்கிறார்கள், ஆயின் இது தல விசேடத்தையும் தீர்த்த விசேட முதலியவற்றையும் விளக்க வந்த அர்த்தவாத சரித வாக்கியங்களாகப் பொருள் கொள்ளுதலில் யாதொரு இழுக்கு மின்றாம். ஆனால் இவற்றை உண்மை நிகழ்ச்சிகளாகவே கொள்வதற்கும் தடையில்லை அடைந்தவர்களது தீமைகளைப் போக்கி உடலையும் உயிரையும் தூயனவாக்கும் தன்மை பேரூர்த் தலத்துக்கு அதில் உள்ள காஞ்சி நதி முதலிய தீர்த்தங்களுக்கும் ஆங்கே எழுந்தருளிய பட்டி நாயகராகிய மூர்த்திக்கும் உண்டு என்பது இன்றைக்கும் பற்பல உதாரணங்களால் கண்கூடாகக் காணக் கிடக்கின்றது. அதைப் பற்றி மேலே சில விவரிப்பேன்.
பேரூர் சிறப்பும் சான்றுகளும்
பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் வழி பட்டு உய்தி பெற்றார்கள் என்று இப்புராணத்துள் கூறும் பிற படலங்களின் உண்மைகளையும் உள்ளுறையையும் ஐயப்பட எவ் வகை நியாயமுமில்லை. பற்பல தேவர் முனிவர் அரசர் முதலா யினோர் இத்தலத்தை யடைந்து வழிபட்டார்கள் என்பது இப்புராண சரிதத் தின் மூலமாக அன்றி வேறு அகச்சான்றுகளாலும் விளங்கும். இத்தலத்து மூர்த்தியின் பேராகிய பட்டி நாதர்-பட்டீசர்-என்ற பெயரே பசுவாகிய காமதேனு வினாற் பட்டியிட்டுப் பூசிக்கப்பெற்ற வரலாற்றைவிளக்கும். குழகன் குளப்புச் சுவடுற்ற படலத்திற் கூறிய அடை யாளங்களாகிய கன்றினது காற்குளம்பின் சுவடுகள் மூன்றும் சுவடு ஒன்றும் அடையாளமாக சுவாமி திருமேனியில் இன்றைக்கும் காண்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிடேக காலத்தில் இவற்றை அநேக அன்பர்கள் கண்டார்கள். இன்னும் தானே தோன்றி (சுயம்பு) முளைத்தெழுந்த இவ்விறைவன் திருமேனியில் அமைந்த ஐந்தலைப் பாம்பின் படம், பாம்புப் பூணூல், திருமுடியிற் சுற்றிய சடைக்கற்றை, அதைக் கரை போல அமைத்து நிற்ப தாகிய கங்கைக்கு ஏற்ற நீர் நிலை, பிரம விட்டணுக்கள் அன்னமும் பன்றியுமாகத் தேடிய அடையாளங்கள் என்பன வாகிய மெய் யடையாளங்களை அநேக ஆயிரம் மக்கள் நேரே கண்டு தொழுது களித்தார்கள், தென் கைலாயப் படலம், வட கைலாயப் படலம் என்பவற்றிற் கண்ட சரிதங்களுக்கு அவ்வப்பேரால் இப்போது நாம் காண்கின்ற தென் கைலாயம், வட கைலாயம், சக்கர தீர்த்தம், பிரம தீர்த்தம், முதலிய பழைய அடையாளங்களும் பெயர்களும் சாட்சி கூறுகின்றன. கரிகாற்சோழன் கொலைப் பழி தீர்த்தப் படல வரலாற்றுக்குச் சோழன் துறை என வழங்கும் நதித்துறை வெளிப்பட உணரச் சாட்சியாகும். சோழன் துறை என்பது காஞ்சி நதியின் துறைகளில் ஒன்று. இதில் தான் காயஸ்து மரபினர்களாகிய லாலாக்கள் மண்டபம் உள்ளது. காலவேசுவர சுவாமி உற்சவத்தில் தீர்த்தோத்சவமும் வசந்தக்காட்சியும் பிற விசேட காலங்களில் தீர்த்தமும் இந்தத் துறையில் தான் நடைபெறுகின்றன, குட்ட நோய்-பிரம கத்தி-முயலகனோய்-சித்தபிரமை, பைத்தியம் முதலிய பெருநோய்களைக் காஞ்சி நதியிலும் பிரம தீர்த்தத்திலும் குறித்தும், திரு நீற்று மேட்டு விபூதி பூசியும் சனங்கள் இன்றைக்கும் தீர்த்துக் கொள்ளக் காண்கின்றோமென்றால். குலசேகரன் குட்ட நோய் தீர்த்தப் படலம், முசுகுந்தன் முகம்பெறு படலம் திருநீற்றுமேட்டுப் படலம் முதலியவற்றின் வரலாறுகளில் ஐயப்படவும் கூடுமோ? இச்சரித வரலாறுகளைத் தமிழ் தேர்ந்தவர்க்கேயன்றி மற்றைச் சாமானியரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இப்புத்தகத்தில் வசனச் சுருக்கமாக எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. விபரங்கள் அங்கே படித்துத் தெரிந்து கொள்ள வைத்துப் படலப்பேர்களை மட்டும் மேலே குறித்தேன். பண்டைச் சரித வரலாறும் இதனுடன் தனியாகச் சேர்க்கப்பெற்றுள்ளதின் காரணம், இத்தல சரிதப் பெருமை களை யாவரும் மிகச் சுலபமாக அறிந்து கொள்ளுதற்கேயாம்.
இத்தலத்தின் வழிபாட்டினாலே உயிர்கள் இவ்வுலகிலே நன் மணம் நன்மக்கள் செல்வம் முதலிய விருப்பங்களை எல்லாம் கைவரப் பெறுவர் எனவும் மறுமையிலே தேவபோகங்களையும் அடைந்து அனுபவிப்பர் எனவும் இறுதியில் அழிவில்லாத நிலைத்த இன்பமாகிய முத்தியையும் பெற்று இறைவன் திருவடிக்கீழ் நீங்காது இருப்பர் எனவும் இப்புராணம் பற்பல சரித ஏத

covaipraveen- Posts : 2
Join date : 09/04/2011
Re: அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் பேரூர்
Sri Padmavasan again for the second time, in his home in chennai - in Dec 2009. I showed him my photo gallery and you could see the glee in his eyes and he started showing me more of his rare work. I mentioned about perur and he came out with his entire collection of Perur including a spectacular rendition of the Moolavar in color.
I was speechless by seeing the true color rendition - including the color and sheen of the copper vessel on top of the Linga.
covaipraveen- Posts : 2
Join date : 09/04/2011
Similar topics
» அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்
» அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
» அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல்
» மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், திருவாரூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum