இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கிறிஸ்தவ பயங்கர வாதம் - ஒரு சர்வ தேச நிஜம்

2 posters

Go down

கிறிஸ்தவ பயங்கர வாதம் - ஒரு சர்வ தேச நிஜம்   Empty கிறிஸ்தவ பயங்கர வாதம் - ஒரு சர்வ தேச நிஜம்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 9:45 pm

மலர்மன்னன்


தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கூடக் கிறிஸ்தவம் மிகக் கொடுமையான வன்முறையின் மூலமாகத்தான் நிறுவப்பட்டது. அவ்வளவு ஏன், கர்நாடகத்தின் மேற்குக் கடலோரமும், கோவா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட

கொங்கணத்திலும் சவேரியார் என்று அழைக்கப்படும் சேவியர் சித்திர வதை செய்துதான் உயர் ஜாதி ஹிந்துக்களைக் கூட கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்தார்.

ஆகையால் உன் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று ஏசு நாதர் சொன்னதாகச் சொல்லப் படுவதை மத மாற்றப் பணியில் காலங் காலமாகத் தீவிரம் காட்டிவரும் கிறிஸ்தவ போதகர்கள் கண்டுகொள்வதில்லை. மத மாற்றத்திற்காக அவர்கள் பால் மாவு, இலவச கோதுமை., பள்ளிக் கூடம், மருத்துவ மனை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அற்புத சுகமளிக்கும் ஜபக் கூட்டம் என்றெல்லாம்தான் கை வசம் உத்திகளை வைத்திருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். எறி குண்டுகள், நவீன ரகத் துப்பாக்கிகள் சகிதம் பயங்கர வாதம் என்கிற ஆயுதத்தையும் அவர்கள் தயாராகவே வைத்துக் கொண்டிருக்கிறர்கள்.

ஹிந்துஸ்தானத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் சமுதாயத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு தலை மறைவு வன்முறை இயக்கமான நக்சலைட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வருகின்றன. "விடுதலை இறையியல்' என்று பெயர் சொல்லிக் கொண்டு இவை பயங்கர வாதத்தை நியாயப் படுத்துகின்றன. இவற்றுக்கெல்லாம் குறிப்பாக அமெரிக்காவிலிருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளும் நிறவனங்களும் டாலர்களை மூட்டை மூட்டையாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன.

தொடக்கத்தில் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே தீவிர பயங்கர வாதத்தில் ஈடுபட்டு பல வன்முறைக் குழுக்களுக்கு உதவி செய்து ஊக்குவித்து வந்த கிறிஸ்தவ அமைப்புகள், சிறுகச் சிறுகத் தமது எல்லையை விஸ்தரித்து வருகின்றன. குறிப்பாக வனவாசிகள் மிகுந்துள்ள ஜார்க் கண்ட், சட்டீஸ்கர் போன்ற சிறு மாநிலங்களில் நக்சல் இயக்கத்துடன் கூடிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்ட அவை, ஒரிஸ்ஸாவின் வனவாசிகள் மிகுந்த மாவட்டங்களிலும் பயங்கர வாதத்தின் மூலமாகத் தமது மேலாதிக்கத்தை வேரூன்றி வருகின்றன. தொண்ணூறுகளின் இறுதியில் குஜராத்தில் டாங் என்ற வனவாசி மாவட்டத்திலும் வன்முறையின் துனையோடுதான் அவை மத மாற்றத்தை மேற்கொண்டன.

ஒரிஸ்ஸாவில் வனவாசிகளிடையே கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யும் பணிக்குத் தடைக்கல்லாக இருப்பவர்களை வன்முறை மூலமாகத்தான் கிறிஸ்தவ பிரசார அமைப்புகள் அகற்றி வருகின்றன. சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி மீது பல முறை குறி வைத்துத் தாக்கியதற்குக் காரணம் அவர் வனவாசிகள் ஆசை காட்டப் பட்டுக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யப்படுவதற்குப் பெரும் தடங்கலாக இருந்தார் என்பதுதான். இறுதியில் அந்த எண்பது வயதுக்கும் மேலான முதிய துறவியைக் கொடூரமாகக் கொலை செய்து தங்கள் விருப்பத்தைக் கிறிஸ்தவ அமைப்புகள் நிறைவு செய்துகொண்டன.

துறவி லட்சுமணானந்தர் என்ன நிலப் பிரபுவா? அல்லது பெரும் தொழிலதிபரா? அவர் ஏழை எளிய வனவாசிகளைச் சுரண்டி வாழ்ந்து வந்தவரா? அவர் என்ன மார்க்சியத்திற்கு எதிராகக் கொடி பிடித்தாரா? அவரை மாவோயிஸ்டு பயங்கர வாதிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவரோடு சேர்ந்து மேலும் நால்வரும் கொல்லப் பட்டனர். கன ரகத் துப்பாக்கியால் அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாக ஒரு செய்தி கூறியது. இல்லை எறிகுண்டு வீசித் தாக்கப் பட்டனர் என்று இன்னொரு செய்தி சொல்லிற்று.

லட்சுமணானந்தரின் பணி மாவோயிஸ்டுகளுக்குப் பாதகமானதாக இருக்கவில்லை. ஆனால் நிச்சயமாக கிறிஸ்தவ மத மாற்றிகளுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் சிரமப் பட்டு, செலவுகள் பல செய்து கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிய வன வாசிகளையெல்லாம் அவர் அன்பு வார்த்தைகள் சொல்லியே தாய் மதம் திரும்பச் செய்து வந்தார். வனவாசிகளை மதம் மாறாமல் தடுத்து அவர்களின் பாரம்பரிய கலாசாரத்திற்கு அழிவு வராமல் பாதுகாப்பு செய்வதிலும் அவர் முன்னின்றார். அதனால் அவரைத் தனது விரோதியாகப் பாவித்துப் படுகொலை செய்தது கிறிஸ்தவ பயங்கர வாதம். பயங்கர வாதக் குழுக்கள் பலவற்றுக்கும் பொருளும் பணமும் கொடுத்து உதவி, அவற்றைத் தனது கூலிப் படைகளாகப் பயன்படுத்திக் கொள்வதில் கிறிஸ்தவ பயங்கர வாதம் வெற்றி பெற்று வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாகத்தான் இந்த பயங்கர வாதக் குழுக்கள் செயல் பட்டு வருகின்றன. சமுதாயத்தின் அடித் தளத்தில் உள்ளவர்களின் விமோசனத்திற்காகப் பணியாற்றுவதுதான் ஏசு நாதரின் கட்டளை என்று அவர் மீது பழி சுமத்தி அதற்கு "விடுதலை இறையியல்' என்கிற சித்தாந்தத்தையும் அவை பரப்பி வருகின்றன. தமிழ் நாட்டிலும் பயங்கர வாதக் குழுக்களுடன் தொடர்புள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மலிந்து வருகின்றன. தேனி போன்ற கானகப் பகுதிகளிலும் தர்மபுரி மாவட்டத்திலும் பதுங்கும் நக்சலைட் இளைஞர்களுக்குப் பக்க பலமாகப் பின்னணியில் இருப்பது இவைதானென்றும் தமிழ் நாட்டில் ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் வசதியாக அரசியல் செய்வதற்கும் அவைதான் துணை நிற்பதாகவும் தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இலங்கையிலிருந்து வந்த ஒரு பாஸ்டரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் செய்தி கசி ந்தது.

வட கிழக்கு மநிலங்களில் துப்பாக்கி முனையில்தான் வன வாசிகளின் மத மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வேட்டுச் சத்தங்கள் துணையுடன்தான் அங்கு பிரிவினை கோஷம் எழுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது கிறிஸ்தவ அமைப்புகள்.

இன்று உலகம் முழுவதுமே கிறிஸ்தவ பயங்கர வாதம் முகமதிய பயங்கர வாதத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பரவி வருகிறது. அதன் வேகத்தைக் கண்டு நிதான புத்தியுள்ள கிறிஸ்தவர்களே கவலை தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கனடாவைச் சேர்ந்த டாட் பென்ட்லி என்கிற கிறிஸ்தவ மதப் பிரசாரகர் அமெரிக்காவிலும் கனடாவிலும் பலாத்காரமாக ஏசுவின் சாம்ராஜ்ஜியத்தை உலகம் முழுவதும் ஸ்தாபிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறார். கிறிஸ்தவம் தவிர வேறு எந்த மதமும் உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க விடலாகாது என்பது இவரது நற்செய்தி. போதாக் குறைக்கு ஓர் இணைய தளத்தையும் அமைத்துத் தனது வன்முறைக் கிறிஸ்தவத்தை அவர் பரப்பி வருகிறார். அவரை ஆதரிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "யோவேலின் ராணுவம்' என்று அவர் தனது அமைப்பிற்குப் பெயர் சூட்டியுள்ளார். யோவேல் என்பது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம் பெறும் ஒரு இறை நேசரின் பெயர்.

இஸ்ரேலின் மக்கள் சீர்கேடாக வாழ்வதாகக் குற்றம் சுமத்தி ஆணடவன் அவர்களை அழித்துத் தண்டிக்கப் போவதை ஒரு குறியீடு போல, வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து விளைந்த பயிர்களையெல்லாம் நாசம் செய்த தகவல் யோவேல் என்கிற பகுதியில் வரும். தம்மை ஏற்காதவர்களை அழிக்க ஆண்டவன் வரப் போவதை நினைவூட்டத்தான் தனது இயக்கத்திற்கு யோவேலின் ராணுவம் என்று பென்ட்லி பெயரிட்டிருக்கிறார்.

பிலிப்பைன்சிலும் கிறிஸ்தவ பயங்கர வாதமும் முகமதிய பயங்கர வாதமும் பலப் பரீட்சையில் இறங்கியிருப்பதாகத் தகவல் வருகிறது.

வயது முதிர்ந்த துறவி லட்சுமணானந்தரையும் அவரது ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண் துறவி உள்ளிட்ட நால்வர் கொல்லப் படுவதற்குக் காரணமாக் இருந்துவிட்டு, அதன் காரணமாக இயல்பாகப் பரவிய எதிர்த் தாக்குதலைத் திட்டமிட்ட தாக்குதல் என்று கிறிஸ்தவ அமைப்புகள் பிரசாரம் செய்கின்றன. இங்கு கல்விக் கூடங்களை நடத்தும் அவை, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகக் கூறி ஒருநாள் விடுமுறை அளித்துக் கண்டனம் தெரிவித்தன. அப்பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஹிந்துக்கள். கண்டன நடவடிக்கைகளில் சில பள்ளிகள் தம் மாணவர்களையும் ஈடுபடுத்தின. நாடு முழுவதுமே அவைகளால் இப்படி யொரு கண்டனத்தை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

கிறிஸ்தவ அமைப்புகளுக்கு இருக்கும் சர்வ தேசத் தொடர்புகளால் ஏதோ ஹிந்து அமைப்புகள்தாம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது போன்ற பெரும் மாயை தோற்றுவிக்கப்படுள்ளது. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பது மறைக்கப்பட்டு விட்டது.

வனவாசிகள் முரட்டுக் குழந்தைகள். கள்ளங் கபடம் இல்லாதவர்கள். எதிர்ப்பாயினும் ஆதரவாயினும் அதனை எப்படிச் சாதுரியமாக வெளிபடுத்த வேண்டும் என்பதை அறியாதவர்கள். அவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொண்டால் உயிரையே

கொடுப்பார்கள். மாறாக நடந்தால் உயிரை எடுக்கவும் செய்வார்கள். அவர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதில் பல ஆண்டுகளைக் கழித்தவன் என்பதால் இதனைக் கண் கூடாக அறிந்திருக்கிறேன்.

ஒரிஸ்ஸாவிலும் இதைத் தான் காண்கிறோம். கிறிஸ்தவர்கள் மீது, குறிப்பாகச் சில இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது என்றால் அங்கெல்லாம் அதற்குக் காரணமாக ஒரு முன் கதைச் சுருக்கம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மதம் சார்ந்த விஷமிகள் முன்பு ஏதோ வம்பு செய்திருக்கிறார்கள் என்றும் நேரம் பார்த்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்÷õதுமே ஹிந்துக்கள் மீதான தாக்குதல் பிற மதத்தவரால் நிகழ்த்தப் பட்ட பிறகுதான் இப்போதெல்லாம் ஹிந்துக்களும் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஹிந்துகள் தங்கள் மீதான தாக்குதலைச் சகித்துக் கொண்டு பொறுமையாகப் போய் விடுவதுதான் வழக்கமாக இருந்து வந்தது. இப்பொழுது அவர்கள் பொறுமையிழந்து பதிலடி கொடுக்கத் தொடங்கி விடவும் அது ஒரு எதிர்பாராத பரபரப்புக்குரிய பிரச்சினையென பூதாகாரமாகப் பிரசாரம் செய்யப் படுகிறது.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹிந்து இயக்கங்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. கலவரங்களுக்கு மூல காரணமான மத மாற்ற முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு கேட்பதற்கு மாறாக அதற்கு இடையூறாக இருக்கும் ஹிந்து அமைப்புகளான விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று கணவர் சகிதம் கட்சியில் உயர் பதவி வகிக்கும் பிருந்தா காரத் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்துகிறார்.

கிறிஸ்தவ அமைப்புகளுடன் வன்முறையில் முழு நம்பிக்கை உள்ள கம்யூனிஸ்ட்கள் ரகசிய உறவு வைத்திருப்பதை இவ்வாறாக அம்பலப் படுத்தியிருக்கிறார், பிருந்தா காரத்.

நியாயப்படி யார் யாரிடம் எடுத்துக் கூறி அறிவுறுத்த வேண்டுமோ அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, மத நல்லிணக்கம் பேணுமாறு ஹிந்துக்களுக்கு உபதேசம் செய்யப் படுகிறது. அவர்கள்தாம் மத வெறியர்கள் என்பதுபோல!

மத நல்லிணக்கம் நிலவ வேண்டுமானால் அதற்கு இருக்கிற மிக எளிதான ஒரேவழி மத மாற்ற முயற்சி கைவிடப் படுவதுதான். அதற்குத் தானாக மனம் வருவதில்லையாதலால் சட்டத்தின் மூலமாக மத மாற்ற நடவடிக்கையைத் தடை செய்தாக வேண்டும். இது இல்லாதவரை சமுதாயத்தில் மத அடிப்படையிலான பூசல்களைத் தவிர்ப்பது இயலாத காரியமாகவே இருக்கும்.

சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்குத் தடை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் போதெல்லாம் கிறிஸ்தவ, முகமதிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்ப்புக் கிளம்புவதைப் பார்க்கிறோம். இதிலிருந்தே மத மாற்றம் செய்வதே அவர்களின் தலையாய பணியாக இருந்து வருவதும் அதன் விளைவாகத்தான் சமுதாயத்தில் சச்சரவுகள் தலை தூக்கி மக்களிடையே ஒற்றுமை சீர் குலைகிறது என்பதும் நிரூபணமாகின்றன.

malarmannan@yrgcare.org
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கிறிஸ்தவ பயங்கர வாதம் - ஒரு சர்வ தேச நிஜம்   Empty Re: கிறிஸ்தவ பயங்கர வாதம் - ஒரு சர்வ தேச நிஜம்

Post by ராகவா Sun Dec 15, 2013 6:35 am

Crying or Very sad Crying or Very sad Crying or Very sad Crying or Very sad  முடியல....
எத்தனை எத்துனை கொடுமைகள் ஹிந்துக்களே பீளிஸ் இந்த கட்டுரைக்களை தவறாமல் படிங்கள்..
நாம் தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது இன்னும் பலவீணம் அடைகிறோம்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum