Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?
3 posters
Page 1 of 1
இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?
இதிகாசம் என்ற வார்த்தையை நேரிடையாக தமிழில் மொழி பெயர்த்தால் நடந்த சரித்திரம் என்று சொல்ல வேண்டும்.
பொதுவாக இதிகாசங்கள் என்பது நமது இந்தியாவை பொறுத்த வரை இராமாயணம், மகாபாரதம் ஆகிய மாபெரும் காவியங்களை மட்டுமே குறிக்கும்.
இன்று ராமாயணம் நடந்ததா மகாபாரதம் நடந்திருக்க முடியுமா? என்ற வாத விவாதங்கள் சூடாகவே நடக்கிறது.
சேது சமுத்திர திட்டம், ஆதம் பாலம் என்ற இராமர் பாலத்தை இடித்து தான்
நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலை வந்த போதே இதிகாசங்களை பற்றிய சர்ச்சைகள்
அதிகரிக்க துவங்கிவிட்டது.
ராமாயணமும் மகாபாரதமும்
வரவலாற்று நிகழ்வுகளே என்று ஒரு சாராரும், நிகழ்வுகளும் அல்ல,
நிகழ்ச்சிகளும் அல்ல பார்ப்பனர்கள் கட்டி வைத்த கட்டுக்கதையே அவைகள் என
வேறொரு சாராரும், லாவணி பாட ஆரமித்து விட்டார்கள்.
இதில் எது சரி, எது தவறு என்ற விவாதம் இப்பொழுது நமக்கு தேவையில்லை.
ஆனால் இந்த இரண்டு காவியங்களுக்கு இணையான காவியங்கள் உலகத்தில் இன்று வரை
தோன்றவில்லை எனும் போது வரலாற்று சான்றுகளுக்காக மூக்கை உடைத்து கொள்வது,
சிலையின் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு உளியின் தரத்தை எடை போடுவதற்கு
ஒப்பாகும்.
இந்திய இலக்கியங்கள் எல்லாமே ஒரு வகையில் வேதங்களுக்கு விளக்கம் சொல்வதற்காகவோ அல்லது அவைகளை எதிர்ப்பதற்காகவோ உருவானவைகள் தான்.
இந்த இதிகாசங்களும் வேத இலக்கியம் பாமரனுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக எழுந்தவைகளே ஆகும்.
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தின் உயர்வை சாதாரணமாக எல்லோரும்
விளங்கி கொள்ள வேண்டும். என்பதற்காக உருவானவைகளே ராமாயணமும் மகாபாரதமும்
ஆகும்.
வால்மிகியால் எழுதப்பட்ட இராமாயணம், லட்சிய புருஷனான ராமனது உயர்ந்த சரீதத்தை சொல்லுகிறது.
ஒரு மனிதன் தன்னை விட உயர்ந்தவர்களிடத்தில் எப்படி பழக வேண்டும்.
சமமானவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்,
குறைந்தவர்களை எப்படி நடத்த வேண்டும்,
ஒரு நாட்டை ஆள்வது எப்படி, நல்லாட்சிக்கும், வல்லாட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன
ஒரு சமுதாயம் அமைதியாக வாழ என்ன செய்ய வேண்டும். எதை செய்ய கூடாது என்பன போன்ற புறம் சார்ந்த விஷயங்களையும்
அன்பு என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்ன, ஒழுக்கம் என்றால் என்ன என்பன
போன்ற அகம் சார்ந்த விஷயங்களையும் ராமாயணம் மிக விரிவாக பேசுகிறது.
இன்றைய பகுத்தறிவு வாதிகளால் அறிவு வளராத காலம் என்று சொல்லப்படும்
ஆதிகாலத்திலேயே இன்றைய வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டுமென வாழ்க்கை
சவால்களை இப்படி தான் சமாளிக்க வேண்டுமெனவும் ஒரு தனி மனிதன் சிந்தித்து
அற்புத படைப்பை உருவாக்கியிருக்கிறான் என்றால் அவன் புத்திசாலியா? அவனிடம்
குறை காணும் இவன் புத்திசாலியா? என்று நமக்கு கேட்க தோன்றுகிறது.
ராமாயணம் சம்பந்தமேயில்லாத இருவருக்கிடையில் நடைபெறும் போரை பற்றி
பேசுகிறது என்றால் மகாபாரகம் ரத்த சம்பந்தம் உள்ள பங்காளிகளின் போரை பற்றி
பேசுகிறது.
ராவணன் காமத்தின் வடிவம், துரியோதனன் பேராசையின் வடிவம்,
இப்படி நடந்து தான் தர்மத்தை காக்க வேண்டும் என்பது ராமனின் சித்தாந்தம்.
எப்படி நடந்தாவது தர்மத்தை காக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் தத்துவம்.
ராமாயணமும், மகாபாரதமும் பிராமணர்களின் சதிக் காவியங்கள் என வாதிடுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பிராமணர்களின் உயர்வை பற்றி பிராமணீயத்தின் சிறப்பபைப் பற்றி
பிரச்சாரப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் முக்கியமென்றால் இதிகாச
கதாநாயகர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருந்திருக்க வேண்டும்
ஆனால் ராமனே சத்ரியன், கிருஷ்ணனோ தாழ்ந்த ஜாதியென்று சொல்லப்படும் யாதவ குலத்தை சேர்ந்தவன்.
ஆனால் கெட்டவனாகவும், வில்லனாகவும் காட்டப்படும் ராவணன் சுத்தமான பிராமணன்.
இதை உணர்ந்தால் இதிகாசங்களின் மீது வெறுப்பு வராது இந்துக்களிடம் பிளவை
ஏற்படுத்தவே பிராமணர் பிராமணர் அல்லாதவர் என்ற கதைகள் விஞ்ஞான பூர்வமாக
சிருஷ்டித்து உலவவிடப் பட்டிருக்கிறது இதை உணர்ந்தால் பல உண்மைகளை அறியலாம்
soruce http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_09.html
மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
அமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்
Re: இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?
மனிக்கணும் முதலில் நாம் தமிழன்
Muthu Kathiresan- Posts : 1
Join date : 15/08/2014
Re: இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?
வாருங்கள் முத்து..Muthu Kathiresan wrote:மனிக்கணும் முதலில் நாம் தமிழன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum