இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


365 தீபங்கள் ஏற்றி கொங்கணவருக்கு வழிபாடு!-ஆரூர் ஆர். சுப்பிரமணியன்

Go down

365 தீபங்கள் ஏற்றி கொங்கணவருக்கு வழிபாடு!-ஆரூர் ஆர். சுப்பிரமணியன் Empty 365 தீபங்கள் ஏற்றி கொங்கணவருக்கு வழிபாடு!-ஆரூர் ஆர். சுப்பிரமணியன்

Post by ஆனந்தபைரவர் Mon Jul 11, 2011 4:08 pm‘ஜீவாத்மாக்கள் அனைத்துக்கும் மூலாதாரத்தில் குடியிருக்கும் குண்டலினி சக்தியே வாழ்வளிக்கிறது. அதுவே உடலுக்கு வேண்டிய உயிர்ச்சக்தியையும் அக்னியையும் வழங்கி வாழ்வைச் செம்மைப்படுத்துகிறது. அந்த மூலாதார நாயகியே குண்டலினி எனும் வாலைப் பெண்’ என சக்தியை முன்னிலைப்படுத்தி, தான் இயற்றிய ‘வாலைக் கும்மி’ என்ற நூலில் வர்ணிக்கிறார் கொங்கணவச் சித்தர்.

‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என்ற கதை தெரியுமா என்று எவரிடமேனும் கேட்டால், ‘ஓ, தெரியுமே!’ என்று சிறு குழந்தைகள்கூடச் சொல்லுமளவுக்குப் பிரசித்தி பெற்றவர் கொங்கணவச் சித்தர். அந்தக் கொங்கணவச் சித்தர் - சிவனையே தன் ஜடாமுடிக்குள் அடைத்த கதையும், அதன் விளைவாக உருவான சித்தர் கோயில் பற்றியும் தெரியுமா?

ஒருமுறை சிவபெருமானை நினைந்து கடுந்தவம் மேற்கொண்டார் கொங்கணவ சித்தர். அவரின் தவத்துக்கு மனமிரங்கிய கயிலைநாதன் அவர்முன் தோன்றி, ‘கொங்கணவா! எதற்கு இந்தத் தவம்? நீ வேண்டுவதுதான் என்ன? தயங்காமல் கேள்‘ என்று அருள்பாலித்தார்.

கொங்கணவரும், ‘பரம்பொருளே! தங்கள் தரிசனத்தால் புனிதனான எனக்கு, ஒரேயொரு வரம் மட்டும் போதும். அது வேறொன்றும் இல்லை... தாங்கள், அப்படியே என் ஜடாமுடிக்குள் வந்து ஐக்கியமாகிவிட வேண்டும். இதுதான் என் ஆசை மற்றும் வரம்’ என்று பணிவுடன் வேண்டி நின்றார். பொதுவாகவே கொங்கணவச் சித்தர், சித்துக்கள் மூலம் தான் பெற்ற ஆற்றல்கள் அனைத்தையும் அவரின் ஜடாமுடியில்தான் அடக்கி வைத்துக்கொள்வார். வரத்தையும் அவ்விதமே கேட்டார்.

தன் பக்தர்கள் வேண்டும் வரங்களை என்றுதான் இறைவன் மறுத்திருக்கிறார்? அதனால், அன்றும் சிவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடன் தன் வடிவைக் குறுக்கிக்கொண்டு, கொங்கணவரின் ஜடாமுடியில் உட்புகுந்து தம்மை அடக்கிக் கொண்டார்.

ஈசன், பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார். இதனால், சகல உலகின் இயக்கமும் முடங்கிவிட்டது. தேவர்கள், மனிதர்கள், மற்ற உயிரினங்கள் என அனைவருமே திணறிப் போனார்கள். எதனால் இந்நிலை என்பதை அறிந்த தேவர்கள் தீர்வு காணவேண்டி, உடன் கொங்கணவச் சித்தரைச் சந்திக்க பூலோகத்துக்கு விரைந்தார்கள்.

அவர்களைப் பணிவுடன் வரவேற்ற கொங்கணவர், ‘தேவர்களே! தாங்கள் அனைவரும் இங்கு கூடி வந்திருப்பதன் நோக்கத்தை அறிவேன். என் வேண்டுதலுக்கிரங்கி சிவன் வந்து என்னுள் குடியேறியுள்ளதால், அவரை வெளியே கொண்டுவரும் சக்தி என்னிடம் இல்லை. ஆனால், இறைவன் வெளியே வெளிப்பட வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் உள்ளது’ எனக் கூறி நிறுத்தினார்.

உடன் தேவர்கள் அனைவரும், ‘அந்த உபாயத்தை முதலில் கூறுங்கள்’ என வேண்டினார்கள். கொங்கணவரும் கூற ஆரம்பித்தார்.

‘தேவர்களே! எதிரில் இருக்கும் இந்த புண்ணிய தீர்த்தத்தில் சப்தரிஷிகள் ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் சிவலிங்க அபிஷேக ஆராதனைகளைச் செய்து, 365 தீபங்களை என் முன்பாக ஏற்றி தீபாராதனை காட்டினால், உங்கள் எண்ணம் ஈடேறும்’ என்றார்.

கொங்கணவச் சித்தரின் உபாயத்தின்படி சப்தரிஷிகளும் அவ்விதமே சிவலிங்க அபிஷேக ஆராதனைகளைச் செய்து, 365 தீபங்களை ஏற்றி தீபாராதனை செய்த அடுத்த கணமே, சிவன், கொங்கணவச் சித்தரின் ஜடாமுடியிலிருந்து வெளிப்பட்டு, தேவர்களுக்குத் திருக்காட்சி தந்து அனைவரின் மனங்களையும் குளிரச் செய்தார்.

சிவன் பின்னர் கொங்கணவரிடம், ‘என்னை உன்னிடம் ஐக்கியப்படுத்திக்கொண்ட சிறப்பால், நீ எனக்கு அமைக்கப்போகும் திருக்கோயிலில் நான் வந்து குடியேறுவேன். என்னை வழிபட்ட பின், உனக்கும் முறைப்படி அபிஷேக ஆராதனைகளைச் செய்து 365 தீபங்களை ஏற்றி வழிபடுவோரின் சகல ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன்’ என நல்லாசி வழங்கி, தேவர்கள் புடைசூழ திருக்கயிலாயம் சென்றார்.

பின், கொங்கணவச் சித்தர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கொங்கணவர் வழிபாடு செய்த இந்த லிங்கம், ‘கொங்கணேசுவரர்’ என சித்தரின் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. கொங்கணவர் பிரதிஷ்டை செய்த கொங்கணேசுவரர் ஆலயம், தஞ்சாவூர் மேலவீதியில் - தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்திலிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே - அமைந்துள்ளது. தஞ்சை ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும், தஞ்சை புதுப் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய நகரப் பேருந்துகள் மேல ராஜவீதி வழியே செல்கின்றன. ஆட்டோக்களும் உண்டு.

தஞ்சாவூர் கொங்கணேசுவரர் ஆலயம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த (தமிழக அறநிலையத்துறையில் அடங்குவது) 88 திருக்கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோயிலின் எதிர்ப்பக்கம், கொங்கணவச் சித்தர் உருவாக்கிய திருக்குளம் ‘அய்யன்குளம்’ என்ற பெயரில் விளங்குகிறது.

மூன்றடுக்குடன் கூடிய ராஜகோபுரம் எழிலுடன் சிறிய அளவில் அமைந்துள்ளது. ஆலயத்துள் நுழைகிறோம். கணநாதனாகிய விநாயகரின் சந்நிதியில் நின்று தரிசிக்கிறோம். பின் அழகிய மண்டபத்தின் உள்ளே கருவறையில் நாயகராக அமர்ந்திருக்கும் கொங்கணே-சுவரரைத் தரிசிக்கிறோம். கொங்கணேசுவரருக்கு அருகில் தனியே கோயில் கொண்டுள்ள அன்னை ஞானாம்பாள் மற்றும் அன்னை அன்னபூரணி சந்நிதிக்கும் சென்று அன்னையரைத் தரிசிக்கிறோம். ஞானாம்பாள் நின்ற கோலத்திலும், ஸ்ரீஅன்னபூரணி அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.

அம்பிகையரின் தரிசனத்தை முடித்துக்கொண்டு பிராகாரச் சுற்றை ஆரம்பிக்கிறோம். பிராகாரச் சுற்று ஆரம்பிக்கும் இடத்தில், மேற்கு பார்த்து தனிச் சந்நிதியில் கொங்கணவச் சித்தர் அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகிறார். கொங்கணவச் சித்தரின் பக்கத்தில் சப்தரிஷிகளும் இடம் பெற்றுள்ளார்கள்.

பதவி இழந்தவர்கள், திருமணப்பேறு, மகப்பேறு வாய்க்காதவர்கள் மற்றும் செல்வம் வேண்டுவோர் கொங்கணவச் சித்தரிடம் கீழ்க்கண்டுள்ள பிரார்த்தனையை மேற்கொண்டால் அவை சித்திக்கும் என்பது, வழிபாடு செய்து பலன் கண்டவர்களின் நம்பிக்கை.

ஆலய தரிசனத்தை ஒரு சுற்று முடித்துவிட்டு, கொங்கணவச் சித்தர் சந்நிதிக்கு வந்து அவர் சந்நிதியில் இடம்பெற்றுள்ள சுமார் 4 அடி உயரம் கொண்ட 365 தீப அலங்கார அடுக்கிலும் எண்ணெயிட்டு நிரப்பி, அதில் திரிகள் இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அனைத்து தீபங்களும் ஒரே சமயத்தில் ஒளிர்விடும் நேரத்தில், ஆலய அர்ச்சகர் கொங்கணவச் சித்தருக்கான அபிஷேகங்களைச் செய்வித்து, புத்தாடை அணிவித்து, அர்ச்சனையும் முடித்து, முடிவில் தீபாராதனை செய்வார். இத்தனையும் 365 தீபங்களும் எரியும்போதே செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த தீப வழிபாட்டை மேற்கொள்பவர்கள், இதற்கான கட்டணத்தை முன்பாகவே ஆலய நிர்வாகிகளிடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவிர, சித்தருக்கான புத்தாடையை (உடுத்தும் இடுப்பு வஸ்திரம் காவி நிறம், மேல் வஸ்திரம் வெள்ளை நிறம்) பக்தர்களே கொண்டுசெல்லல் வேண்டும். தீபத்துக்கான எண்ணெய், திரி (திரி - பெங்களூரிலிருந்து தருவிக்கப்படுகிறது) இவற்றை ஆலயத்தாரே வழங்குகிறார்கள்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டேசுவரர் ஆகியோர் அகன்ற, பெரிய ஆலயச் சுற்றில் பரிவார தேவதைகளுடன் தனிச் சந்நிதி கொண்டு விளங்குகிறார்கள். இத்திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா, தொடர்ந்து பதினொரு நாட்களுக்கு வெகு விமரிசையாக நடக்கிறது.

புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையாரை தரிசனம் செய்யவரும் வெளியூர் அன்பர்கள், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அருகிலுள்ள கொங்கணேசுவரரையும் தரிசித்து அவருடைய அருளையும் பெறுவோம்.

ஆலயத் தொடர்புக்கு:
உதவி ஆணையர்,
அருள்மிகு கொங்கணேசுவரர் திருக்கோயில்,
மேல ராஜவீதி, தஞ்சாவூர்- 613 009.
தேவஸ்தான அலுவலக போன்: 04362 - 223384.
ஆரூர் ஆர். சுப்பிரமணியன்
படங்கள்: இரா. இரவிவர்மன்

நன்றி திரிசக்தி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum