இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


குடும்பங்களை அழிக்கும் சாபங்கள்

3 posters

Go down

best குடும்பங்களை அழிக்கும் சாபங்கள்

Post by sriramanandaguruji Sat Aug 13, 2011 8:51 am

குடும்பங்களை அழிக்கும் சாபங்கள் Tamilnadu+mental+list
ந்த
கால முனிவர்களில் பலர் சாபம் கொடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்
படைபலம் மிகுந்த அரசர்களே முனிவர்களின் சாபத்திற்கு அஞ்சி நடுங்கி
இருக்கிறார்கள்

சாபம் என்பது என்ன? அதற்கு ஏன் அவ்வளவு தூரம் பயப்பட வேண்டும்? என்று நமக்கு தோன்றும்


இந்த கேள்வியை பெரியவர்களிடம் கேட்டால் நல்லவர்களை பக்திமான்களை தவத்தில்
உயர்ந்தவர்களை கோபம் அடையும் படி செய்தால் அவர்கள் கோபம் கொண்டு
சொல்லுகின்ற வார்த்தைகள் அப்படியே பலித்து விடும் அது தான் சாபம் என்று
விளக்கம் தருகிறார்கள்


இந்த விளக்கம் சரியானது போல் தோன்றினாலும் முழுமையானதாக ஏற்று கொள்ள முடியவில்லை


அதற்கு காரணம் பக்திமான்களும் தவ சிரேஷ்டர்களும் மனதை அடக்கியவர்கள் மனம் அடங்கினால் காம குரோத எண்ணங்கள் தானாக அடங்கி விடும்

நிலமை அப்படி இருக்க இவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் அவர்களை எப்படி ஆன்மிகத்தில் உயர்ந்தவர்களாக கருத இயலும்?


அதனால் பெரியவர்கள் சொல்லும் விளக்கப்படி கோபம் கொள்ள செய்தால் சாபம் கிடைக்கும் என்பது தவறான கருத்தாகும்


உண்மையில் சாபம் என்பதற்கும் கோபம் என்பதற்கும் தொடர்பே இல்லை


நாம் சாதரணமாக பேசுகின்ற போது நமது வார்த்தைகள் தொண்டையில் இருந்து
வெளிப்படுவது போல் தோன்றினாலும் அது முற்றிலுமாக அங்கே இருந்து வருவது
இல்லை


அடிவயிறு மார்பு மற்றும் தொண்டையில் இருந்து கிளம்புகின்ற உத்வேகம் தான்
வார்த்தைகளாக வெளிவருகிறது ஒரு வார்த்தை எதிலிருந்து கிளம்புகிறதோ அதை
பொருத்து அந்த வார்த்தைக்கு வலிமை வந்தமைகிறது


உதாரணமாக அன்றாட நடப்புகளை
பேசுகின்ற போது நமது மனம் நாலாவிதமான சிந்தனைகளுக்கு ஆட்பட்டு கிடக்கிறது
அதனால் வாய் ஒன்றை பேசினாலும் மனது மற்றொன்றில் இருக்கிறது இந்த பேச்சில்
ஆழமிருக்காது அவ்வளவாக அர்த்தமும் இருக்காது இதனால் எந்த பயனும் இருக்காது

நாம் ஆசை வசப்படும் போது எதையாவது ஒன்றை எதிர்பார்த்து பேசும்போது அந்த வார்த்தைகள் மார்பிலிருந்து கிளம்புகிறது


இதில் தடுமாற்றம் இருந்தாலும் குறிக்கோளை அடைகின்ற உறுதி இருக்கும்
இத்தகைய உறுதி மிக்க வார்த்தைகள் எப்போதெல்லாம் நம்மிடமிருந்து
புறப்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் எதிர் நோக்கும் காரியங்கள் ஓரளவு
வெற்றியாகவே முடியும்


ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒரு சமயத்தில் தான் அடிவயிற்றில் இருந்து அதாவது நாபியில் இருந்து வார்த்தைகள் புறப்படுகின்றன


அதிகமான சந்தோசமோ சோகமோ அல்லது இவைகளை போன்ற உணர்ச்சி பொங்கும் சூழலில் தான் இங்கே இருந்து சொற்கள் பிறக்கின்றன


அப்படி பிறக்கின்ற சொற்கள்
மந்திரமாகவே ஆகி விடுகிறது அந்த சொல் எதை நோக்கி பிரயோகம் செய்யப்படுகிறதோ
அங்கே அது நிச்சயமாக பலித்து விடுகிறது அல்லது செயலாக நடந்து விடுகிறது

இப்படி நாபிலிருந்து புறப்படுகின்ற வார்த்தை தான் அமங்கலமாக இருந்தால்
சாபம் என்றோ மங்களமாக இருந்தால் வரம் என்றோ அழைக்கப்படுகிறது


எனவே முனிவரின் வார்த்தைகள் சாபமாக வரமாக இருப்பதற்கு இது தான் மூலக்காரணமாக இருக்கிறது


இப்படி நாபியிலிருந்து சாதாரண மனிதர்களுக்கு அடிக்கடி சொற்கள் பிறக்காது
முறைப்படி மூச்சி பயிற்சி செய்தவர்களுக்கே இது அவ்வபோது சாத்தியமாகும்


அதனால் தான் எதிரியின் ஆயுதபடைக்கே அஞ்சாத அரசர்கள் முனிவர்களின்
சாபங்களுக்கு பயந்தனர் முனிவர்களும் அர்த்தம் இல்லாமல் சுயநலத்திற்காக
யாரை வேண்டுமானாலும் சபிப்பது இல்லை


இது முனிவர்கள் மகான்கள்
சம்பந்தப் பட்ட விஷயம் நாம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில்
எதிர்கொள்ளும் சாபங்களை பற்றி சற்று சிந்திப்போம்
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் யாருமே சந்தோசமாக வாழ்ந்தது இல்லை


ந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் வயதுக்கு வரும்வரை சாதரணமாக தான்
இருப்பார்கள் அதன் பிறகு மனநிலை பாதிப்படைந்தவர் போல் சில காலம்
இருப்பார்கள்


சிலர் தற்கொலை செய்து கொள்வார்கள் திருமணம் முடித்து கொடுத்தால் கூட கணவனோடு வாழ மாட்டார்கள் அல்லது அமங்கலியாகி விடுவார்கள்


கணவனோடு நல்லவிதமாக வாழ்ந்தால் குழந்தை இருக்காது இப்படி எதாவது ஒரு குறை அந்த குடும்ப பெண்களுக்கு தொடர்ச்சியாக இருந்து வந்தது


இதற்கு காரணம் என்ன என்று பெரியவர்களை கேட்டால் அந்த குடும்பத்தை ஒரு பெண் சாபம் வாட்டிவதைப்பதாக சொல்கிறார்கள்


அவர்களின் முன்னோரில் ஒருவர்
காட்டு வழியாக வந்த ஒரு பெண்ணின் நகைக்கு ஆசைப்பட்டு அவளை கொன்று கருவேல
முள்ளிற்குள் வைத்து கதற கதற எரித்து விட்டாறாம்

திருமண வயதுடைய பெண்ணை கொலை செய்ததினால் அந்த பெண்ணின் பாவமும் சாபமும் இன்றும் தொடர்கிறது என்கிறார்கள்


இப்படி எத்தனையோ குடும்பங்களை நாம் காண முடிகிறது நல்ல வசதியோடு
வாழ்வார்கள் அரண்மனை வாசிகளை போல அதிகாரம் செலுத்துவார்கள் ஆனால் ஐம்பது
வயதை தொடுவதற்குள் எதோ ஒரு விதத்தில் மரணம் அடைந்து விடுவார்கள் இது
தொடர்ச்சியாகவும் சில குடும்பங்களில் நடந்தும் வருகிறது


இன்னும் சில குடும்பத்திலோ விசித்திரமான பல சம்பவங்கள் காரண காரியம்
இல்லாமலே நடை பெரும் இவைகளை எல்லாம் சாபங்களால் வந்த வினை என்றும்
சொல்கிறார்கள்


முனிவர்கள் சாபம் கொடுக்கலாம் அதை போலவே சாதாரண மனிதர்களும் சாபம் கொடுக்க முடியுமா?


முனிவர்களை போலவே சாதாரண மனிதர்களும் நாபியிலிருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தினால் தானே அது சாபமாகும்?


வெந்ததை தின்று வேளை வந்தால் சாகும் சாதாரண மனிதனுக்கு கூட நாபியிலிருந்து வார்த்தைகள் வருமா? என்று சிலர் நினைக்க கூடும்


நமது இந்து மத ஞானிகள் யோக பயிற்சி செய்து பெறுகின்ற சித்துக்களை உண்மையான பக்தியின் மூலமும் பெறலாம் என்கிறார்கள்

அதாவது யோகாப்பியாசம் என்பது வெற்றி அடையும் போது மனதை குவிய செய்து
விடுகிறது அதன் மூலம் சித்துக்கள் வந்தமைகிறது அதே போலவே உணர்வுகள் மிக
கூர்மையாகி குவியும் போது மனதும் ஒரு நிலைப்பட்டு விடுகிறது


அதாவது பக்தி காதலாகி கசிந்துருகி கண்ணில் நீர் மல்க நிற்கும் போது மனம் குவிந்து சித்துக்கள் கைவந்து விடுகிறது


இதே போல தான் ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில்
அல்லது அதர்ம வழியில் தாக்கப் படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு
ஆட்படுகிறான்


அந்த நேரம் அவன் மனது கடந்த காலம் எதிர்காலம் ஆகிய இருகாலங்களையும் மறந்து நிகழ்காலத்திலேயே நிலைத்து விடுகிறது


சுற்று புற சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்ட அதர்மத்தை மட்டுமே
நினைத்து நினைத்து மனம் உருகி ஒரு நிலைப் பட்டுவிடுகிறது அப்போது
அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம்
போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது எதிரியை மட்டும் அல்ல எதிரின்
வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்த்தை சத்திமிகுந்த சாபமாகி
விடுகிறது


இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளை சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது

பாட்டன் முப்பாட்டன் செய்த பாவத்திற்கு ஒன்றுமே அறியாத வாரிசுகள்
கஷ்டங்களை அனுபவிக்கலாமா? இது சாத்தியாமா? அவர்கள் பெற்ற சாபம் நம்மை
எப்படி தொடரும்? என்று சிலர் கேட்கலாம்


முன்னோர்களால் பெற்ற சாபம் ஒரு தனிமனிதனை வாட்டுகிறது என்றால் அவனவன்
ஜாதகப் படிதான் நல்லது கெட்டது நடக்கிறது என்று சொல்வது எப்படி பொருந்தும்
என்றும் சிலர் கேட்கலாம்


எனது பாட்டனார் ஒரு சாபத்தை பெற்றார் என்றால் அதன் தாக்கம் அவர் மனதிலும்
ஆத்மாவிலும் பரிபூரணமாக ஆக்ரமித்து இருக்கும் அது மரபு தொடர் வழியாக என்
தகப்பனாருக்கும் எனக்கும் என்மகனுக்கும் கூட சொந்தமாக வந்தமையும்


இந்த வேளையில் என் ஜாதகமோ என் மகனின் ஜாதகமோ வலுவாக இருந்தால் தாக்கம்
குறைவாக இருக்கும் வலுவற்று இருந்தால் அதன் தாக்குதல் அதிகப்படியாகவே
இருக்கும்


இன்னொரு விஷயம் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது
அவனது பூர்வகர்மா அவனது முன்னோர்களின் கர்மா என்பதை பொறுத்தே அமைகிறது


அவனது நிகழ்கால சொந்த கர்மா
நல்ல முறையில் அமைந்தால் கஷ்டங்களில் இருந்து சுலபமாக விடுபட வழிவந்தமயும்
அல்லது அத்தகைய பூர்வ கர்மாவின் தாக்குதலை கிரகங்கள் இறக்கம் இல்லாமல்
தருவதை குறைத்து கொள்ளவும் வழி கிடைக்கும்

பொதுவாக நமது சித்தர்கள் இத்தகைய சாபங்க்களில் இருந்து விடுப்பட பல தான
தர்மங்களையும் பூஜா விதிகளையும் சொல்லியிருந்தாலும் சில ரகசிய வழிகளையும்
சொல்லியிருக்கிறார்கள்


உதாரணமாக மூன்று தலை முறைக்கு முன்னால் இருந்து தாக்குகின்ற சாபத்தை நீக்க குருவரிகற்றாளை,வனபிரம்மி,முப்பிரண்டை,

வெண்ணாவல்
ஆகிய மூலிகைகளை மந்திர வழியில் பயன் படுத்தும் விதத்தை புலிப்பாணி
சித்தர்,கோரக்கர் போன்ற மகா சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்

இதன் வழியில் செய்தால் நிச்சயம் ஓரளவாது சாபக் கொடுமையிலிருந்து குடும்பங்கள் மீண்டு வரலாம்


இந்த மூலிகைகளை சிலருக்கு முறைப்படி செய்து கொடுத்திருக்கிறேன் அவர்கள்
அதை பயன்படுத்தி மிக நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து
விடுப்பட்டு இருக்கிறார்கள்


சாபத்தை மூலிகைகள் எப்படி நீக்கும் என்ற சந்தேகம் சிலருக்கு வருவது இயற்கை


சாபம் என்பது வலுவான எண்ணங்களின் கூட்டு வடிவமாகும் இது பிரபஞ்ச ஆகர்சன சக்தி மூலம்தான் குறிப்பிட்ட மனிதனை வந்தடைகிறது


ப்படி வருகின்ற எண்ண அலைகளை வலுவோடு தாக்காமலும் மாற்று வழியில் அனுப்பி
வைக்கவும் மூலிகையில் உள்ள சில அபூர்வ சக்திகள் துணை செய்கின்றன


அந்த சக்திகளே சாபத்திலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது.

soruce http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_13.html
குடும்பங்களை அழிக்கும் சாபங்கள் Leaf%20Icon அமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்


குடும்பங்களை அழிக்கும் சாபங்கள் Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

best Re: குடும்பங்களை அழிக்கும் சாபங்கள்

Post by Venkatesh A.S Sat Aug 13, 2011 9:50 pm

அய்யா, எனக்கு இதில் நன்றாக நம்பிக்கை உள்ளது காரணம் நானும் எனது குடும்பமுமே. எங்கள் அன்னையார் சொல்வது போல எங்கள் தகப்பனார் மற்றும் அவரது தகப்பனார் / உடன்பிறந்தோர் 60/70 வருடங்களுக்கு முன்னர் பிறருக்கு( குறிப்பாக பெண்ணுக்கு) நிறைய சிரமங்கள் ஆணவத்தால் கொடுத்ததினால் நாங்கள் இன்றளவும் பிறரால் (தேவையற்ற/ புரியாத) சிரமங்கள் பட்டு கொண்டிருக்கிறோம. கடவுள் அருளால் மிகப்பெரிய துன்பங்களையும் தாண்டி வந்துள்ளோம். ஆனால் இன்னும் எவ்வளவு காலம் இப்படியே போகும் என்று தெரியவில்லை. எங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் எங்களுக்கு (நானும் எனது சகோதரர்களும்) கிடைக்கவில்லை- கடந்த 20 வருடங்களாக. என்னுடன் படித்தவர்கள் பலபேர் இன்று கோடீஸ்வரர்கள். ஆனால் நாங்களோ இன்னமும் வாடகை வீட்டில் சிரமங்களோடு. சில சமயங்களில் உலகம் குருட்டாம் போக்கில் போவது போல நினைப்பேன். நீதி என்பது எல்லோருக்கும் வேலை செய்யாது என தோன்றும். எல்லாவற்றையும் மீறி ஒரே ஆறுதல் எம்பெருமான் ஒரு நாள் எங்களை எல்லாவற்றுலும் இருந்து காப்பார் என்பதே.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

best Re: குடும்பங்களை அழிக்கும் சாபங்கள்

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:10 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

best Re: குடும்பங்களை அழிக்கும் சாபங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum