இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மூலாதார கணபதி

4 posters

Go down

மூலாதார கணபதி Empty மூலாதார கணபதி

Post by Arun Iyer Wed Nov 16, 2011 11:54 am

ஸர்வவிக்ன விவர்ஜிதம் மூலாதாரம் லம்போதரம்
ஸர்வஸித்திப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்

மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லுமுன் கல்வியில் தேர்ச்சி பெற தினமும் விநாயகரை வணங்கிவிட்டுச் செல்வார்கள். எந்த நற்செயல்களும் பிள்ளையார் பூஜை செய்தவுடனேயே ஆரம்பிக்கும். அதுபோல யோக, ஞான, பக்தி, முக்திகளுக்கு ஜீவர்களின் முதுகெலும்பின் நுனியிலுள்ள சுழுமுனை வாசியைத் திறக்க மஞ்சள்நிற நான்கிதழ்த் தாமரையில் அமர்ந்துள்ள மூலாதார கணபதியை நாடுவார்கள்.

பிருத்வியாம் தத்துவத்தின் ‘லம்’ என்னும் பூமிதத்துவத்தை தன் உதரத்தில் கொண்டதால் லம்போதரன் என்றும், அஞ்ஞானத் தடைகளை நீக்கி சுழுமுனை வாசியைத் திறந்து ஞானசாதகர்களுக்கு வழி ஏற்படுத்துவதால் மூலாதார கணபதியை விக்னேஸ்வரராகவும் வழிபடுகிறோம்.

இறை தத்துவத்தை உணர்த்தி ஞான வழியைக் காட்டவே வேதங்களும் புராணங்களும் உள்ளன. பெரியவர்கள் பல படியாக இறை தத்துவங்களை காவியம், ஓவியம், சிற்பம், சங்கீதம் ஆகியவை மூலம் உணர்த்தி மக்கள் வாழ்வை மேன்மையடையச் செய்கிறார்கள். இந்த மூலாதார கணபதியும் இறை தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் காட்சியளிக்கிறார்.

மாயையால் ஜீவசக்தி சுருண்டு பாம்பு போல் தூலமான பிருத்வி ரூபமாயுள்ள மூலாதார வாசலில் படுத்துள்ளது. இதைத் தட்டி எழுப்பினால் குண்டலினி சக்தியாகி முதுகெலும்பின் நடுப்பாதையான சுழுமுனையில் மேலேறும். மூலாதாரத்திலிருந்து சுவாதிஷ்டான நீர் தத்துவத்தை அடைந்து பின் மணிபூரக அக்னியில் நுழைந்து பின் அநாஹத வாயுவிலும், பின் அதி சூட்சுமமான விசுத்தியாம் ஆகாயத்தில் கலந்து, அதனினும் சூட்சுமமான ஆக்ஞா ஞான சக்கரத்தில் கலந்து முடிவில் ஸர்வாதாரமான பிரமரந்திரத்தை அடைந்து ஜீவப்ரம்ம ஐக்கியம் ஏற்படுகிறது. இதையே முக்தி என்பர்.

உயிர்ச்சக்தி மேல்நோக்கி ஒவ்வோர் ஆதாரத்தையும் கடந்து முடிவில் சதாசிவத்துடன் ஒன்றாகி சிவசக்தியாகிறது என குண்டலினி யோகம் விவரிக்கிறது.

ஜீவனுக்கு சம்சார பந்தமயமான சர்வ துக்கங்களும் நிவர்த்தியாகி, சர்வ சுதந்திரமான பரமப்ராப்தி ஏற்படுவதை முக்தி அல்லது மோக்ஷம் என்பர்.

இறை தத்துவத்தையறிந்த இறை நிலையை அடையத் தகுதியுடைய ஞானிகளுக்கும், பக்குவமடைந்த பக்தர்களுக்கும், யோகிகளுக்கும், ஆத்ம சாதகர்களுக்கும், சித்த புருஷர்களுக்கும், தபஸ்விகளுக்கும் மூலாதாரங்களையும், அதன் சக்திகளையும் அறியச் செய்து ஜீவப்ரம்ம ஐக்கியத்திற்கு வழிவிட மூலாதார கணபதி அருள்கிறார்.

அதி சூட்சுமத்திலிருந்து படிப்படியாகக் கீழிறங்கி தூலமயமான தேகத்தை அடைந்து அதையே தானென்று உணர்ந்து அல்லல்படும் ஜீவன், தூலத்திலிருந்து படிப்படியாக தன்னுள் தானே இறையருளால் பிரவேசித்துத் தன்னைத் தானே உள்ளபடி அறிவதே ஆத்ம சாக்ஷாத்காரம் எனப்படும்.

மஞ்சள் நிற நான்கிதழ்த் தாமரையில் மூலாதார கணபதி வீற்றிருக்கிறார். மஞ்சள் நிறம் அறிவையும், மங்கலத்தையும் பிருத்வி தத்துவத்தையும் விளக்கும் நிறமாகும். நான்கு வேத இதழ்களில் பேரறிவுத் திருவுருவமாக விநாயகர் நிலைத்துள்ளார் என்பதையும் குறிக்கும்.

விநாயகரின் தந்தங்களின் நடுவே பாம்பு பார்த்துக் கொண்டுள்ள சிறு வட்டமே மூலாதாரக் கதவாயும், கணபதியின் மகுடத்தின் மேலைந்து ஆதாரங்களும், ஸஹஸ்ராரமும் காட்டப் பட்டுள்ளன.

இடுப்புப் பட்டை எலும்புகள் விநாயகரின் பெரிய காதுகளாகக் காட்டப்படுவது, பட்டை எலும்புகள் பக்கபலமாக இருப்பது போல், நல்ல விஷயங்களை நிறையக் கேட்பதே ஞானத்திற்குக் காரணமான பக்கபலமாகிறது. ஞானத்திற்குக் காரணம் சிரவணம் என்னும் சத் விஷயங்களை நிறையக் கேட்பது அல்லவா?

வலப்புற பிருஷ்டபாக வளைந்த எலும்பு, சுருண்டு படுத்துள்ள ஜீவ சக்தியான சர்ப்பமாகவும், அதன் தலை மூலாதார வாசலை நோக்கியிருப் பதையும் காணலாம். ஜீவப்ரம்ம ஐக்கியத்தை நினைவுபடுத்த சின் முத்திரையை விநாயகர் தன் வலக்கையால் காட்டியும், பாம்பின் வாலைத் தொட்டு ஜீவ சக்தியைத் தூண்டும் வண்ணமாகவும் தோற்றமளிக்கிறார்.

இடப்பக்க வளைந்த எலும்பு தந்தமாகவும், அதனருகே கணபதியின் சுருட்டிய துதிக்கை காம்ய கர்மங்களைக் களைந்து இறைத் தியானம் செய்ய அறிவுணர்த்துகிறது. கருவிகள் ஒடுங்கும் கருத் தினை அறிவிக்கும். விநாயகரின் இடக்கரத்திலுள்ள ஞானகமலம் ஞானயோக சாதனையைத் தெரிவிக் கிறது. மேலுள்ள இடக் கரத்திலுள்ள பாசக்கயிறு ஜீவர்களை அவர்களின் கர்மங்களுக்கேற்ப கட்டவும், அவர்கள் பக்குவமானதும் பந்தக் கட்டிலிருந்து விடுவிக்கவும் உள்ளது. லோகப் பற்றான விக்னத்தை உண்டு பண்ணுகிறவரும் இவரே. பற்றைவிட விக்னங்களை விலக்குபவரும் இவரே.

நாலிதழ் மஞ்சள் நிற பத்மத்தின் கீழே நடுவில் உள்ளது ‘லம்’ என்ற வடமொழி எழுத்து. பிரணவத்திற்கு ஓம் என்பது போல பூமிதத்துவ மந்திரம் ‘லம்’ எனப்படும். இவ்வரிய விநாயகரின் ஓவியத்தின் எல்லா வளைவுகளும் லம் என்ற வடிவிலும் பக்கவாட்டில் பார்த்தால் ஓம் என்றும் காணப்படும். விநாயகருக்கு லம்போதரன் என்ற பெயரும் உண்டு.

நடுமுதுகுத் தண்டிலிருந்து தொடை எலும்புகள் வரை ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளன. அதனையே மூலாதார கணபதி வடிவிலும் குண்டலினி தத்துவத்தை விளக்கக் காட்டப்பட்டுள்ளது.

உடலில் ஆதாரமானதும், பலமானதும் எலும்புகள். அதுபோல் மூலாதார கணபதி எங்கும் எதிலும் ஸர்வாதாரமாய் உள்ள இறை வடிவமே என்று விவரிக்கவே எலும்பின் வடிவத்தில் கணபதி சித்திரிக்கப்பட்டுள்ளார்.

அகங்கார மமகாராதிகளை அடக்கி அறநெறிப் பாதையில் ஜீவர்களை அழைத்துச் செல்லவே மேல் வலக்கரத்திலுள்ள அங்குசத்தை கணபதி ஏந்தியுள் ளார். நம் முதுகெலும்பின் இருபுறங்களிலுமுள்ள சூரிய, சந்திர நாடிகள் அல்லது இடை, பிங்கலை நாடிகள் மூலமாகத்தான் தேகமெங்கும் சரீர, மனோ இயக்கங்கள் வெளி விவகாரங்களுக்காக நடை பெறுகின்றன. ஆனால் தன்னையறியவும், இறைவனையடையவும் தெய்விக சக்திகளைப் பெற்று லோகக்ஷேமத்தை ஏற்படுத்தவும் முதுகெலும்பின் நடுவே சுழிமுனை நாடி நன்கு வேலை செய்ய வேண்டும். அந் நாடியில் பிராணசக்தி நுழைந்து விட்டால் இறைநிலை அடைவது உறுதிப்படும். அச்சுழுமுனை வாசியை பக்குவமடைந் தோருக்குத் திறந்து விடுபவரே நம் மூலாதார கணபதி.

மகத்தான யோக சாத்திரங் களை உள்ளடக்கிய துதியில் உள்ள அமைப்பில் மூலாதார கணபதி இச்சித்திரத்தில் தரிசனமளிக்கிறார்.

ஔவையார் இயற்றிய விநாய கர் அகவல் என்னும் மாயாப்பிறவி மயக்கம் அறுத்து சொற்பதங் கடந்த துரிய மெய்ஞானத்தைக் காட்டுபவர். கருவிகளொடுக்கும் கருத் தினையறிவித்து, இருவினை தன்னை அறுத்திருள் கடிபவர். ஆறாதாரத் தங்குச நிலையும், பேராநிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத் தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக் குண்டலியதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலாலெழுப்பும் கருத்தறிவிக்கிறார்.

அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டுகிறார். அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து தத்துவநிலையைத் தந்தெமையாண்ட வித்தக விநாயகன் விரை கழல் சரணடைவோம்.------
Arun Iyer
Arun Iyer

Posts : 24
Join date : 10/11/2011
Age : 39
Location : Chennai

Back to top Go down

மூலாதார கணபதி Empty Re: மூலாதார கணபதி

Post by Venkatesh A.S Thu Nov 17, 2011 3:27 pm

மிக்க நன்றி, பகிர்வுக்கு நன்றி.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

மூலாதார கணபதி Empty Re: மூலாதார கணபதி

Post by ஆனந்தபைரவர் Fri Nov 18, 2011 2:58 pm

வணக்கம்
நல்லபதிவு . பயன் பெற்றேன். பாராட்டுக்கள்
என்றும் மாறாஅன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

மூலாதார கணபதி Empty Re: மூலாதார கணபதி

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மூலாதார கணபதி Empty Re: மூலாதார கணபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum