Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கோவில்களில் சாமி வந்து
4 posters
Page 1 of 1
கோவில்களில் சாமி வந்து
நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன், பல கோவில்களில் சாமி வந்து பலர் ஆடுவதை பார்த்திருக்கிறேன். இது உண்மைதானா என்பதை பற்றி தெரிய அசை படுகிறேன். இது பற்றி நீங்கள் தெரிந்த விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Last edited by parthiban_k on Fri Mar 15, 2013 9:52 pm; edited 3 times in total
parthiban_k- Posts : 9
Join date : 05/07/2011
Age : 35
Location : Kanyakumari
Re: கோவில்களில் சாமி வந்து
கோவில்களிலும் பிற இடங்களிலும் சாமிவந்து ஆடுபவர்களை பலவிதமாகப் பிரிக்கலாம். நவீன அறிவியல்பூர்வமாகப் பார்த்தால் அந்த இடங்களில் நிலவும் வாசனை, கடவுள் உருவங்கள் மற்றும் உசுப்பேற்றிவிடும் இசை ஆகிய சூழ்நிலை காரணமாக உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் கிளர்ச்சியின் காரணமாக சாமியடி விழுந்து புரள்பவர்கள் உண்டு. சிலர் திட்டமிட்டு துல்லியமானதொரு நாடகத்தை அரங்கேற்றும் ஏமற்றுக்காரர்களாகவும் இருக்கலாம். சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வரக்கூடிய குழுவினர், மந்திரப் பிரயோகங்கள் மூலம் குழுவைச் சேர்ந்தவர்கள்மீது கிராம தேவதைகளை எழுந்தருளவைப்பதன் மூலமும் சாமியாடல் நிகழ்த்தப்படுகிறது. உயர்ந்த ஆன்மிக நிலையை அடைந்தவர்கள் சிலசமயம் அருள்வந்து ஆடுவது உண்டு. அது எங்கும் நிறைந்த பரபிரம்மம், தனது ஒரு குறிப்பிட்ட தன்மையை ஆன்மிகநிலையில் உயர்ந்த பெரியோர்கள்மூலம் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களாகும். ஆகவே அருள்வந்து ஆடுபவர்கள் அனைவரையும் ஒரே தரத்தில் வைப்பது இயலாத ஒன்றாகும்.
நமது நாட்டில் வழிபாட்டுத் தளங்களிலும் தனிப்பட்ட இடங்களிலும் சாமியாடி குறி சொல்லும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பண்டைய தமிழகத்தில் வேலன் வெறியாடல் மற்றும் குறவைக் கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அவை போர்களின் முடிவுகள் பற்றி கணிக்கவும் சிலசமயம் சமய சடங்காகவும் நடத்தப்பட்டன.
ஒருவர் தனது சாதாரண நிலையிலிருந்து மாறி சாமியாடும்போது அதை எடுத்த எடுப்பிலேயே மோசடி என்றோ, ஆன்மிகத்துக்கு மாறுபட்டது என்றோ அல்லது உயர்ந்த ஆன்மிக நிலையின்வெளிப்பாடு என்றோ முடிவு செய்திட முடியாது. இவ்வுலகில் நமது அறிவுக்கு எட்டாத எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆன்மிக பயிற்சிகள் மூலம் ஒரளவு தெளிவும் ஆன்மிக வளர்ச்சியும் அனுபவமும் பெற்ற நிலையில் இவற்றை ஆராய ஒருவர் முற்படுவதே சரியானதாக இருக்கும். யோகப்பயிற்சிகள், சத்குருவின் வழிகாட்டுதல் ஆகியன உங்களுக்கு இதில் உதவிசெய்யும்.
இந்த சாமியாடல்பற்றி மேலும் ஆராய்ந்து அறிந்துகொள்ள முயற்சிக்கும் முன்பு ஆராயவிரும்பும் நமது நோக்கம் என்ன? நமது எதிர்பார்ப்பு, தேவை என்ன? எந்த வகையில் நாம் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப் பட்டுள்ளோம்? என்பனவற்றைப்பற்றிய தெளிவு நமக்கு அவசியம் இருக்கவேண்டும். ஏனென்றால் பல நிகழ்வுகளைத் திறந்த மனதோடு அணுகும்போதுதான் அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகளை உணரமுடியும்.

நல்ல உண்மையான விளக்கம். எதையுமே மேல்வாரியாக புரிந்து கொள்ள முடியாது. இருந்தாலும் இந்த சாமி வந்து ஆடுவது, பலி கொடுப்பது, சர்வ மங்கள அன்னையை காளி வடிவாக பார்த்து வுக்கிரம் கொள்வது என்பதெல்லாம் "தமோ குணம்" கொண்டவர்களுக்கு சரியாக வரும்.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: கோவில்களில் சாமி வந்து
நல்ல விளக்கம் தீரன்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: கோவில்களில் சாமி வந்து
நன்றி தீரன்.
ஆன்மிகம் என்பது கடல் அதில் நான் கரையில் தான் நின்று பார்க்கிறேன் இன்னும் கடலின் அலை கூட என் கால்களில் படவில்லை. கோவில்களில் சாமி ஆடுவதை கிறித்தவர்கள் கேலி செய்யப்படுவதை பல கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். எனவே அதன் உண்மை நிலையை விளக்குவதற்கு ஆசைபடுகிறேன். மேலும் எதேனும் விளக்கம் தெரிந்தால் வெளிடவும்.
- ஜெய்ஹிந்த்!

Last edited by parthiban_k on Mon Nov 28, 2011 4:47 pm; edited 2 times in total
parthiban_k- Posts : 9
Join date : 05/07/2011
Age : 35
Location : Kanyakumari
Re: கோவில்களில் சாமி வந்து
விரைவில் உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.. நன்றிparthiban_k wrote:நன்றி தீரன்.
ஆன்மிகம் என்பது கடல் அதில் நான் கரையில் தான் நின்று பார்க்கிறேன். கோவில்களில் சாமி ஆடுவது கிறித்தவர்கள் கேலி செய்யப்படுவதை பல பார்த்திருக்கிறேன். எனவே அதன் உண்மை நிலையை விளக்குவதற்கு ஆசைபடுகிறேன். மேலும் எதேனும் விளக்கம் தெரிந்தால் வெளிடவும்.
- ஜெய்ஹிந்த்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: கோவில்களில் சாமி வந்து
நல்லது திரு பார்த்திபன் அவர்களே,parthiban_k wrote:நன்றி தீரன்.
ஆன்மிகம் என்பது கடல் அதில் நான் கரையில் தான் நின்று பார்க்கிறேன் இன்னும் கடலின் அலை கூட என் கால்களில் படவில்லை. கோவில்களில் சாமி ஆடுவதை கிறித்தவர்கள் கேலி செய்யப்படுவதை பல கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். எனவே அதன் உண்மை நிலையை விளக்குவதற்கு ஆசைபடுகிறேன். மேலும் எதேனும் விளக்கம் தெரிந்தால் வெளிடவும்.
- ஜெய்ஹிந்த்!
ஹிந்துமதமானது இயற்கையால் தோன்றி,இயற்கையாய் நிலைத்து, இயற்கையோடிசைந்து விளங்கும் தன்மையுடன், உயிர்கள் அனைத்தும் அவை என்னிலையில் இருந்தாலும் தன்னிலையிலிருந்து உயர்வடையச் செய்யும் அற்புதமான மதமாகும். ஆகவே வழிபடும் விதங்கள் எதையும் நம் மதம் தடை செய்வதில்லை. எத்தகைய வழிபாடானாலும் அதனதன் தன்மைகளையும் வேறுபாடுகளையும் மட்டும் நமது ஆன்மிக பெரியோர்கள் நமக்கு சொல்லிவிட்டு நமது தன்மைக்கு தக்கதொரு நிலையை கைக்கொண்டு முன்னேற வழிவகை செய்துள்ளனர். ஆகவே பிற மதத்தினரின் கேலி பேச்சுக்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. நாமும் பிற ஹிந்து சகோதரர்களும் நமது மதத்தையும் அதன் வழிமுறைகளையும் குறைத்துமதிப்பிடாமல் இருக்கவேண்டும். கிறுத்துவமதத்திற்கு தாய் நமது சனாதன தர்மம்தான் எனும் ஒரு கருத்தும் நிலவுகிறது.
எதையும் சந்தேகம் கொள்ளும் புனித தாமஸின்(சந்தேக தாமஸ்) குழப்பங்களைப் போக்கவும்,குரு சிஷ்ய உறவின் மகத்துவத்தை உணர்த்தவும், மேம்பட்ட ஆன்மிக அறிவுபெறவுமே, ஏசுகிறுஸ்துவால் அவர் பாரத புண்ணிய பூமிக்கு அனுப்பப்பட்டார் எனும் செய்தியும் உள்ளது. மேலும் நமது வலை தளத்தில் உள்ள ஏன் ஹிந்துவாக வாழவேண்டும்? எனும் கட்டுரையும் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆகவே அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தர்மம் நிலைக்கவும்,தாய்நாடு சிறக்கவும் உங்களால் இயன்றதை செய்திடுங்கள், ஆன்மீகப் பாதையில் தொடர்ந்து முன்னேற ஆன்மிக பெரியோர்களைக் கண்டு யோகமும்,பிராணாயாமமும் பழகி உயர்வடைய வாழ்த்துகிறேன்.

» கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் யாவை?
» கனவில் வந்து காணிக்கை கேட்பாள்
» நேரில் வந்து நிவேதனம் ஏற்ற நாயகன்
» சேர்மன் சாமி
» மந்திரமூர்த்தி -கிராமத்து சாமி
» கனவில் வந்து காணிக்கை கேட்பாள்
» நேரில் வந்து நிவேதனம் ஏற்ற நாயகன்
» சேர்மன் சாமி
» மந்திரமூர்த்தி -கிராமத்து சாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum