இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்

Go down

ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்  Empty ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்

Post by knesaraajan Tue Feb 21, 2012 4:14 pm

ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்
ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்:(இந்த ஸ்தோத்திரமும் ஒரு பழைய நோட்டில் இருந்தது)

இதைப்படிப்பதால் சத்துரு பயம் நீங்கும். நித்தியம் மூன்று முறையோ அல்லது ஒரு முறை மூன்று மாதமோ தொடர்ந்து ஒருவன் படித்தானேயானால், ஒரு நொடியில் சத்ருக்களை ஜெயித்து மிகுந்த ஐஸ்வர்யத்தை அடைவான். க்ஷயம்,அபஸ்மாரம், மயக்கம், குஷ்டம் முதலிய ரோகங்கள் நீங்கும். ஜெயில் வாஸமும் நீங்கும். ஸ்ரீராமனுடைய பரிபூரண அநுக்ரஹமும் உண்டாகும்.ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரத்தடியில் இந்த கவசத்தைப் படித்தால் நிலைபெற்ற ஐஸ்வர்யத்தை அடைவான்.....அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஹனுமத்(ஆஞ்ஜநேய) கவசம்

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய | ஸ்ரீராமசந்த்ரருஷி: | காயத்ரீச்சந்த: | ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா | மாருதாத்மஜ இதி பீஜம் | அஞ்ஜனாஸூனுரிதி ச'க்தி: | ஸ்ரீராமதூத இதி கீலகம் | மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||
ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: | ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: || 1
ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: | லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் || 2
ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: | பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் || 3
நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்'வர: | கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: || 4
நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்'வர: | பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: || 5
புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: | நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்'வர: || 6
வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்'வே மஹாபுஜ: | ஸீதா சோ'கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் || 7
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே' நிரந்தரம் | நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: || 8
குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி'வப்ரிய: | ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: || 9
ஜங்கே பாது கபிச்'ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: | அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: || 10
அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா | ஸர்வாங்காநி மஹா சூ'ர: பாது ரோமாணி சாத்மவான் || 11
ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: | ஸ ஏவ புருஷச்'ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி || 12
த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: | ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்'ரியம் ஆப்னுயாத் || 13
அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி | க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் || 14
அச்'வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் | அசலாம் ச்'ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் || 15
ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் | ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் || 16
ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா | அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் || 17
ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் | அஹோராத்ரம் படேத்யஸ்து சு'சி: ப்ரயதமானஸ: || 18
முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: | பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச'ய: || 19
யோ வாரந்நிதி மல்ப பல்வலமிவோல்லங்க்ய ப்ரதாபான்வித: வைதேஹீ கன சோ'க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்'வர மஹாதர்பாபஹாரீரணே ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: || 20
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
ஆஞ்சநேய கவசத்தின் அர்த்தம் :
கிழக்கு திக்கில் என்னை ஸ்ரீ ஹனுமான் ரக்ஷிக்கட்டும். தெற்குத்திக்கில் வாயுபுத்திரன் என்னை ரக்ஷிக்கட்டும். மேற்கு திக்கில் ராக்ஷசர்களை நாசம் செய்யும் ஸ்ரீ ஹனுமான் என்னை ரக்ஷிக்கட்டும். வடக்கு திக்கில் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமார் என்னை ரக்ஷிக்கட்டும். (1)
ஸ்ரீ கேஸரியானவர் என்னை ஆகாயத்தில் ரக்ஷிக்கட்டும். ஸ்ரீ விஷ்ணு பக்தியுள்ள ஹனுமார் என்னைக் கீழ்பாகத்தில் ரக்ஷிக்கட்டும். லங்கையை எரித்தவர் ஸர்வ ஆபத்துக்களிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்க வேண்டும். (2)
சுக்ரீவ மந்திரியானவர் என்னைத் தலையில் ரக்ஷிக்கட்டும். வாயுபுத்ரர் எனது நெற்றியில் ரக்ஷிக்கட்டும். மகாவீரன் எனது புருவங்களின் நடுவில் ரக்ஷிக்கட்டும். (3)
எனது கண்களை சாயாக்ராஹீ என்னும் பூதத்தைக் கொன்றவர் ரக்ஷிக்கட்டும்.வானரங்களுக்குத் தலைவர் எனது கன்னங்களை ரக்ஷிக்கவேண்டும். ஸ்ரீ ராம தூதன் எனது காதுகளின் கீழ்பாகங்களை ரக்ஷிக்கட்டும். (4)
ஸ்ரீ அஞ்சனா புத்ரர் எனது மூக்கில் ரக்ஷிக்கட்டும். வானரர்களுக்கு அதிபர் எனது முகத்தைக் காக்கட்டும். அஸுரசத்ரு எனது கழுத்தை ரக்ஷிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்பட்டவர் எனது தோள்களை ரக்ஷிக்க வேண்டும். (5)
மஹா தேஜஸ்வி எனது புஜங்களை ரக்ஷிக்கட்டும். கால்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது கால்களை ரக்ஷிக்கட்டும். நகங்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது நகங்களை ரக்ஷிக்கட்டும். வானரங்களுக்குத் தலைவர் எனது வயிற்றை ரக்ஷிக்க வேண்டும். (6)
ஸ்ரீ ராமாங்குளீயத்தை எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்க வேண்டும். பெரும் கைகளை உடையவர் எனது இரு பக்கங்களையும் ரக்ஷிக்கட்டும். ஸீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். (7)
லங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின்பாகத்தை ரக்ஷிக்கட்டும். ஸ்ரீ ராமச்சந்திரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். வாயுபுத்ரன் எனது இடுப்பை ரக்ஷிக்கட்டும். (8)
சிறந்த புத்திமான் எனது குஹ்யதேசத்தை ரக்ஷிக்கட்டும். சிவபக்தரான ஹனுமார் எனது துடையின் சந்திகளை ரக்ஷிக்கட்டும். எனது துடைகளையும் முழங்கால்களையும் லங்கையின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்க வேண்டும். (9)
வானரர்களுள் சிறந்தவர் எனது ஆடு சதைகளைக் காக்க வேண்டும். மிகுந்த பலம் வாய்ந்தவர் எனது கணைக்கால்களைக் காக்க வேண்டும். சூரியனுக்கு ஒப்பானவரும், ஔஷத பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான ஹனுமார் எனதுகால்களை ரக்ஷிக்கட்டும். (10)
அளவு கடந்த பலம் நிரம்பியவர் எனது அங்கங்களையும், கால் விரல்களையும் எப்பொழுதும் காக்க வேண்டும். மஹாசூரன் என்னுடைய எல்லா அங்கங்களையும், மனதை அடக்கியவர் எனது ரோமங்களையும் காக்க வேண்டும். (11)
படித்த எந்த அறிவாளி ஹனுமானின் கவசத்தைத் தரிப்பனோ அவனே மனிதர்களுக்குள் சிறந்தவன். போகங்களையும் மோக்ஷத்தையும் அடைவான்.(12)
மூன்று மாத காலம் நித்தியம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு மனிதன் படிப்பானேயாகில், அவன் எல்லா சத்துருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து ஐஸ்வர்யத்தை அடைவான். (13)
நடுநிசியில் இந்த ஹனுமத் கவசத்தை ஏழு தடவை படித்தால் க்ஷயம்,அபஸ்மாரம்(வலிப்பு), குஷ்டம் முதலிய ரோகங்கள், தாபத்ரயங்கள் யாவும் நீங்கும். (14)
ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தினடியில் இருந்துகொண்டு இதை எவன் ஒருவன் படிப்பானோ அவன் அழிவற்ற ஐஸ்வர்யத்தை அடைவான். யுத்தத்தில் ஜெயத்தையும் அடைவான். (15)
ஸ்ரீ ராம ரக்ஷையுடன் கூடிய ஹனுமத் கவசத்தை எவனொருவன் கையில் தரித்துக்கொள்வானோ அவனுக்கு வியாதிகள் யாவும் நீங்கும். எல்லா காரிய சித்தியும் ஏற்படும். (16)
ஹனுமத் கவசத்தைப் படிக்காமல் ராம ரக்ஷையைப் படிப்பது வீணாகும். (17)
எல்லா துக்கங்களும் நீங்கும். எங்கும் விஜயத்தை அடைவான். ஆசாரமாய்ப் பரிசுத்தமான மனதுடன் ஒரு தினம் இரவு பகல் முழுவதும் திரும்பத் திரும்ப இந்த கவசத்தைப் படித்தானேயாகில் ஜெயில் வாசம் நிச்சயம் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. மஹா பாபங்கள், உபபாதகங்கள், யாவும் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. (18-19)
மிகுந்த பிரதாபம் வாய்ந்த எந்த ஹனுமார் சமுத்திரத்தை சின்ன குட்டையைப்போல் தாண்டி ஸ்ரீ ஸீதாதேவியின் மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீ வைகுண்டநாதரான ஸ்ரீ ராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷய குமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜெயிக்கப்பட்ட ராக்ஷஸனான ராவணனுடைய மிகுந்த கர்வத்தைப் போக்கினாரோ,அப்படிப்பட்ட வாயுகுமாரனும், வானர ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ ஹனுமான் எப்பொழுதும் நம்மை ரக்ஷிக்கட்டும். (20)
ஸ்ரீ ராமரால் செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் முற்றிற்று.

knesaraajan

Posts : 42
Join date : 20/02/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum