இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கோயில்களும் வடமொழி வேதமும்

2 posters

Go down

கோயில்களும் வடமொழி வேதமும் Empty கோயில்களும் வடமொழி வேதமும்

Post by சாமி Sat Feb 25, 2012 7:15 am

வடமொழி வேதங்களான இரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களில் எந்த இடத்திலும் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது என்பதை புகழ்பெற்ற தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்பட பல வேத விற்பன்னர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர் சில கீழே காண்க:
The Vedic Aryans Possessed No Temples and used no Images. The Dravidian culture promoted image worship and insisted puja in place of yogna..
- RELIGION AND SOCIETY III – Dr.RADHAKRISHNAN
உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர். வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும் ஆகம வழிபாட்டு நெறியைக் கண்டிக்கிறது.
- தமிழர் வரலாறு – பி.டி.சீனிவாச ஐயங்கார்.
ஆகம நெறி, வைதிக நெறிக்கு (சமஸ்கிருத வேத காலத்துக்கு) முற்பட்ட பழமை வாய்ந்தது இன்று ஆகம நெறி வைதிகக் கலப்புக்கு உட்பட்டிருப்பினும் இது தனித்ததோர் நெறியேயாம். சமஸ்கிருதத்தில் பூஜா எனப்படும் சொல் தமிழ் மொழியிலிருந்து வந்ததே. இதன் மூலம் – பூ-மலர்-என்பதேயாம். பூவால் செய்யப்படுவது பூசெய் – பூசெய் என்பதே பூஜா, பூஜை என வழங்கப்படுகிறது.
- HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE – S.K.CHATTERJEE
பிற்காலத்தில் வைதிகர்களும் ஆகம நெறிக்கு உரியதான படிம வழிபாடு அதாவது விக்கிரக் வழிபாடு என்பதை மேற்கொண்டபோது அது கூடாது என்று மறுத்து எழுந்ததே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்கள் என்பதும் கோயில்களுக்கும் வடமொழி வேதத்திற்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக அறைந்து கூறுவதாகும்.
பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தமிழ்ப்பாடல்கள் பெற்றவை தாமே ஒழிய இன்றுவரை வடமொழிப்பாடல் பெற்ற தலம் என்று ஒன்றுகூட இல்லாததும் இதை நிறுவும்.
(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கோயில்களும் வடமொழி வேதமும் Empty Re: கோயில்களும் வடமொழி வேதமும்

Post by Dheeran Sat Feb 25, 2012 11:49 pm

திரு சாமி அவர்களுக்கு வணக்கம்,

தமிழ்மொழி பற்றியும், அதன் தொன்மைச்சிறப்பு மற்றும் ஆன்மிகவளம் பற்றியும் தாங்கள் எழுதத் தொடங்கியிருப்பது பாராட்டப்படவேண்டிய முயற்சி, வாழ்த்துக்கள்.

ஐயா, தங்களுடைய கருத்துக்களில் சில ஐயங்கள் தோன்றுவதால் எனது பார்வையை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன் இதை ஒரு கலந்துரையாடலாக முன்வைக்க விரும்புகிறேன்.

தங்களுடைய மந்திரம் பற்றிய செய்தியில் தமிழ் மந்திரங்களுக்குள்ள ஆற்றலைக் குறிப்பிட்டுள்ளீர்கள்! நல்லது, அதே சமயம் தற்பொழுது, அதேபோல் நாம் அம்மந்திரங்களைப் பயன்படுத்தினால் அதேபலன் கிட்டாது என்பதையும் அதற்குக்காரணம் நாம் அதை "வெறும் வார்த்தைகளாகமட்டுமே உச்சரிக்கிறோம்" என்பதையும் விளக்கிஉள்ளீர்கள். ஆகவே எந்தமொழியானாலும் அது தமிழோ, வடமொழியோ வெறும் வார்த்தைகளுக்குள்ள ஆற்றலைவிட அதை உச்சரிப்பவரின் ஆன்மீகநிலை முக்கியமானது என்பது உறுதியாகிறது. எனவே ஆற்றல்மிக்கது வடமொழியா, தென்மொழியா எனும்சிக்கல் இங்கு எழுவதே இல்லை.

"கோவிலும் வடமொழி வேதமும்" எனும் கட்டுரையில் வேதம் ஆகமநெறியைக் கண்டிப்பதாகக் கூறியுள்ளீர்கள் நீங்கள் திருமூலரையும் அவர்தம் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்பவர் என்பது தங்களது "சிரித்தே எரித்தான் சிவபெருமான்" எனும் கட்டுரைமூலம் உணர்ந்துகொண்டேன் நல்லது.

வேதமோடாகமம் மெய்யாம்;இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம்
'பேதமது' என்பர்;பெரியோர்க்கு அபேதமே. 2397

என்று திருமூலரும் வேதத்துக்கும் ஆகமத்துக்கும் வேறுபாடு இல்லை என்று கூறுகிறார்,
மேலும் அக்கட்டுரையில் ஆரிய இனம், திராவிடஇனம்,ஆரியசமாஜம்,பிரம்மசமாஜம், ஆகியவற்றைப்பற்றிய குறிப்புகளும் பொறுத்தமற்றவகையில் எடுத்தாளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

கட்டுரையின் நோக்கம், தமிழ்மொழியை உயர்த்திக்கூறி வடமொழியைத்தாழ்த்துவதைப்போல்சென்று குழப்பத்தை ஏற்படுத்தி சநாதனதர்மத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்க்கவிரும்பும் முயற்சியாகப்படுகிறது. ஆகவே தங்களைப்போன்ற நன்னெறியாளர்கள் இவற்றை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்று கோருகிறேன்.

தமிழ்மொழி எப்படி நம்முடையதோ அதேபோன்றதுதான் சமஸ்கிருதமும். ஒருசிலர்மட்டுமே அதற்கு உரிமைகொண்டாடுகிறார்கள் என்பதாக வைத்துக்கொண்டாலும்கூட அம்மொழியைத் தாழ்த்துவது, நாம் நமது குழந்தையின் மீதான நமது உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டுப் பிறகு அக்குழந்தையை வசைபாடுவதற்கொப்பானதாகும் என்பது எனது கருத்து
நன்றி.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum