இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking

வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

+3
tmm_raj_ramesh
ஹரி ஓம்
Dheeran
7 posters

Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dheeran Sat Mar 03, 2012 3:34 am

நமது இந்துமதத்தில் அன்பர்கள் ஆன்மிக உயர்வுபெறவும், நல்வாழ்வு வாழவும், அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து உயர்நிலை அடையவும் வழிகாட்டுதலாகவும் உற்ற துணையாகவும் இருப்பவை மறை நூல்கள் அவை பலவகைப்பட்டவையாகவும், பல்வேறு பெரியோர்களால் இயற்றப்பட்டவையாகவும் உள்ளன-இவற்றிற்கு மறைஎன்றோ, நீதிநூல்கள் என்றோ,திரு முறை என்றோ உங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் நாம் அதற்கு ஒரு பெயரை வைக்கப்போய் அதற்கும் நம்மை யாராவது ஆரிய(?) தமிழன் என்று திட்டுவார்கள் (நல்லதுதானே) . அனைத்து இந்துமத மறைகளுக்கும் அடிப்படையும் ஆதாரமுமாக இருப்பவை வேதங்கள்

நமது தமிழ்நாட்டிலும் தமிழில் அத்தகைய பல தமிழ் நூல்கள் ஆன்மிக சான்றோர்களால் இயற்றப்பட்டுள்ளன,அவை தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் போன்ற பல நூல்களாகும். இவ்வாசிரியர்கள் யாருமே வேதங்கள் பொய் என்றோ, அவை அமைந்துள்ள மொழியான சமஸ்கிருதம் கூடவே கூடாதென்றோ கூறவே இல்லை. ஆனால் தமிழை உயர்த்துவதாக கூறுபவர்கள் தமிழில் அறம்,பொருள்,இன்பம்,வீடு,(இவற்றில் வீடு நீங்கலாக மற்றவை பால் எனும் பெயரில் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளது,அறம் எது எனக் கூறுவதும் வேதம்தானே) எனும் பெயர்களில் வேதங்கள் இருப்பதாக கூறுகிறார் ஆனால் தமிழில் ஆன்மிக அமுதம்தந்த சான்றோர், அப்படிப்பட்ட வேதங்கள் இருப்பதாககக் கூறியதாகதத் தெரியவில்லை,மாறாக வேதத்தின் கருத்துக்களை தமிழில் தந்ததோடல்லாமல் தேவைப்படும் இடங்களில் வடமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உள்ளனர்
.
வடமொழியில் உள்ள வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை அது ஏதோ ஒரு இனக்குழுவால் உருவாக்கப்பட்டது அல்ல. ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் இறைவன் ஞானத்தை அருளவில்லை.பல்வேறு காலகட்டங்களால் பல்வேறு ஆன்மா ஞானிகளுக்கு இறைவனால் அருளப்பட்டதே வேதம். அதைதத் தொகுத்தவர் வியாசர் எனும் மீனவர். அதேபோன்று சமஸ்கிருதம் ஏதோ ஒரு இனத்தின் மொழி அல்ல அது அனைவருக்கும் பொது மொழி. சமஸ்கிருதத்தில் பல அற்புத நூல்களை பல தமிழறிஞர்கள் இயற்றி உள்ளனர்.

வடமொழியில் காவ்யாதர்சம் எழுதியவர் காஞ்சியைச் சார்ந்த தண்டி எனும் தமிழர்,அத்வைதம் கூறிய சங்கரரும், விஷிஷ்டத்வைதத்தை விளக்கிய இராமானுஜரும் தென்னகத்தைச் சார்ந்தவர்கள். தமிழர் வேறு சமஸ்கிருதம் வேறு என்பது பாதிரியார்கள் தோண்டிய பள்ளம்.
கூடுதல் தகவல்களுக்கு- www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/

ஆகவே ஆன்மிக நாட்டம்கொண்ட, ஆன்மிகத்தில் உயர்வடையவிரும்பும் தமிழர்கள் வடமொழியை கற்றுக்கொண்டால் நல்லதுதானே. சரி முழுமையாகக் கற்றுக்கொள்ள நேரமில்லை வாய்ப்பும் இல்லை என்றால் அம்மொழியில் உள்ள உன்னத கருத்துக்களைக்கொண்ட பாடல்களைப் பாடி ஆத்மானந்தம்பெறல் ஒன்றும் தகாத செயல் அல்லவே.

நாம் இங்கு தமிழ்பாடல்களையும் நூல்களையும் புறந்தள்ளிவிட்டு வடமொழியில் பேசித்திரியவேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லையே, நாம் கூறவிரும்புவது இன, மொழி,எல்லைகளைக்கடந்து, மானிடர் அனைவரும் பயன்பெறவேண்டும் எனும் உயரிய நோக்கில், இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த வெவ்வெறு மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட ஆன்மிக பெரியோர்கள் தமது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் வடமொழியில் நூல்களாக வைத்துள்ளனர் என்பதே.. அவற்றை வடமொழியின் வாயிலாகக் கற்காவிடினும் மொழிபெயர்த்துக்கற்றலில் தவறேதும் இல்லையே.

தம்பி அருன்ப்ரகாஷ் நமது "வடமொழியும் தென்மொழியும்" எனும் கட்டுரைக்கு கருத்திடும்போது, கோவில்களிலும்,வீடுகளில் சடங்குகளின்போதும் வடமொழிமட்டுமே பயன்படுத்தப்படும்போது ஏதும் புரிவதில்லை என்று கூறுகிரார், இதற்கு என்ன செய்யலாம்

1) புரிகிறதோ இல்லையோ அதன் சந்த நயம் நமது உள்ளுணர்வைக் கண்டிப்பாக உயர்த்தும்

2) தனிப்பட்டவகையில் செய்யும்பொழுது புரோகிதரிடம் சடங்குமுடிந்தவுடன் அம்மந்திரங்களுக்கான விளக்கங்களைக் கேளுங்கள்

3) விளக்கங்கள் கூறக்கூடாது எனும் நிலை இருக்குமாயின் விட்டுவிடுங்கள் அதனாலென்ன, கம்ப்யூட்டர் நிபுணர் எழுதும் புரோகிராம்கூட அனைவருக்கும் விளக்கப்படுவதில்லை எழுதப்படும் ப்ரோகிராம் புரியவில்லை என்பதற்காக நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?

4)கோவில்களில் வடமொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டால்,தமிழ்பாசுரங்களும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்துங்கள்

5) பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லோகங்களுக்காண பொருளை தெளிவுபடுத்தக்கூடிய நூல்களை வாங்கிப் படித்து பொருளறிந்துகொள்ளுங்கள்

நாம் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. நாம் வாழ்க்கையில் முன்னேற ஆங்கிலம், பிரெஞ்சு,அரபி போன்ற மொழிகளையெல்லாம் கற்கிறோம் சம்ஸ்கிருதமும் கற்கலாமே

இக்காலத்தில்மட்டும் அல்ல அக்காலத்திலும் தமிழகத்தில் கோவில்களில் வேதம் ஓதப்பட்டது என்பதை "இருக்கொடு" என மாணிக்கவாசகர்பெருமான் கூறியதை "இருக்கு" என்பதன் பொருள் மந்திரம் என்பதாகவும் அது ரிக் வேதம் அல்ல என்றும் ஏன் யஜுர்,சாம,அதர்வண வேதம் ஓதப்படவில்லை என்றும் அன்பர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.மந்திரம் என்பது தூய தமிழ்சொல் என்றும் ஒருபதிவில் கூறியுள்ளார் இருக்கு என்பதற்கு மந்திரம் எனும் பொருள் வரக் காரணமே ரிக் வேதம் தான் ஏனென்றால் அவ்வேதம் மந்திரங்களால் அமைக்கப்பட்டது தானே
அவ்வாறு இல்லை என்றால் வேறு எந்தவிதமான மந்திரங்கள் ஓதப்பட்டன? அவை எதில் உள்ளன?

வேதத்தை விட்ட அறமில்லை,வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தைவிட்டு,மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. திருமந்திரம்-51

இவர் ரிக் முதலான வேதத்தை குறிப்பிடவில்லை என்றால் வேறு வேதத்தின் பெயரையோ அல்லது வேறு நல்ல தமிழ் சொல்லியோ பயன்படுத்தி இருக்கலாமே, ஒருவேளை வேதம் என்பதும் தூய தமிழ் சொல்லாக இருக்கலாம்

மீண்டும் மீண்டும் நாம் கூறவிரும்புவது தமிழ் மறை நூல்களைப் படிக்கவேண்டும் பொருள் உணரவேண்டும் அதேபோல் வடமொழி நூல்களையும் (அவற்றின் மொழிபெயர்ப்புகளையேனும்) படிக்கவேண்டும்,அப்பொழுது ஒன்று மற்றொன்றின் விளக்கமாகஇருப்பது தெரியும் ,புரியாத உண்மைகள் புரியும்.

தமிழுக்கும் வடமொழிக்கும் பகைமூட்டுவோர் இரண்டுவகையினர் என்று நாம் கருதுகிறோம்

1) தான்பெரிது,தன் மொழிமட்டுமே பெரிது எனும் குறுகிய மனப்பான்மையினர்

2)குழப்பவாதத்தின்மூலம் பாரத தர்மத்தின் இரண்டு செழுமைமிக்க பரம்பரியங்களுக்கிடையே இல்லாத வேறுபாட்டைப்புகுத்தி பகை உணர்வை வளர்த்து இரண்டும் தொடர்பற்ற வேறு வேறு வழிகள் என பொய்கூறிப் பிரித்து பின் ஒவ்வொன்றாக விழுங்கமுயலும் குள்ளனரிக் கூட்டத்தினர்

ரிக் வேதத்தைதவிர மற்றவேதங்கள் ஏன் ஓதப்படவில்லை என்பதற்கு வேதங்கள் 4 வகை எனும் தலைப்பில்www.tamilhindu.net/t672-4 உள்ள பதிவைப்படித்தால் பதிலைக் காணலாம். எதை எங்கு பயன்படுத்தவேண்டுமோ அங்குதானே பயன்படுத்த முடியும்.

நன்றி

Last edited by Dheeran on Sat Mar 03, 2012 1:03 pm; edited 1 time in total (Reason for editing : மேம்படுத்த)
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by ஹரி ஓம் Tue Mar 06, 2012 5:56 pm

1) புரிகிறதோ இல்லையோ அதன் சந்த நயம் நமது உள்ளுணர்வைக் கண்டிப்பாக உயர்த்தும்

2) தனிப்பட்டவகையில் செய்யும்பொழுது புரோகிதரிடம் சடங்குமுடிந்தவுடன் அம்மந்திரங்களுக்கான விளக்கங்களைக் கேளுங்கள்

3) விளக்கங்கள் கூறக்கூடாது எனும் நிலை இருக்குமாயின் விட்டுவிடுங்கள் அதனாலென்ன, கம்ப்யூட்டர் நிபுணர் எழுதும் புரோகிராம்கூட அனைவருக்கும் விளக்கப்படுவதில்லை எழுதப்படும் ப்ரோகிராம் புரியவில்லை என்பதற்காக நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?

4)கோவில்களில் வடமொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டால்,தமிழ்பாசுரங்களும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்துங்கள்

5) பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லோகங்களுக்காண பொருளை தெளிவுபடுத்தக்கூடிய நூல்களை வாங்கிப் படித்து பொருளறிந்துகொள்ளுங்கள்

நல்ல பதில்கள்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by tmm_raj_ramesh Tue Mar 06, 2012 7:14 pm

உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு நன்றி,

1) புரிகிறதோ இல்லையோ அதன் சந்த நயம் நமது உள்ளுணர்வைக் கண்டிப்பாக உயர்த்தும்
புரியாமல் ​செய்யும் ​செயலால் என்ன பெரிய நன்மை விளைந்துவிடும்,

2) தனிப்பட்டவகையில் செய்யும்பொழுது புரோகிதரிடம் சடங்குமுடிந்தவுடன் அம்மந்திரங்களுக்கான விளக்கங்களைக் கேளுங்கள்
செயல் முடிந்த பின் விளக்கம் ​கேட்டு என்ன பயன், எத்தனை ​பேர் தயாராக உள்ளனர்

3) விளக்கங்கள் கூறக்கூடாது எனும் நிலை இருக்குமாயின் விட்டுவிடுங்கள் அதனாலென்ன, கம்ப்யூட்டர் நிபுணர் எழுதும் புரோகிராம்கூட அனைவருக்கும் விளக்கப்படுவதில்லை எழுதப்படும் ப்ரோகிராம் புரியவில்லை என்பதற்காக நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?

புரோக்கிராம்கள் புரிய வேண்டாம், ஆனால் நாம் பயன்படுத்தும் பொருள் நமக்கு தெரிந்த மொழியில் இல்லையென்றால் எப்படி பயன்படுத்த மு​டியும், கம்ப்யூட்டர் பிரைலி மொழியில் தெரிந்தால் பயன்படுத்த மு​டியுமா,

4)கோவில்களில் வடமொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டால்,தமிழ்பாசுரங்களும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்துங்கள்
யாரிடம், நடக்குமா? இதுவரை பெரும்பாலும் நடந்திருக்கிறதா?

5) பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லோகங்களுக்காண பொருளை தெளிவுபடுத்தக்கூடிய நூல்களை வாங்கிப் படித்து பொருளறிந்துகொள்ளுங்கள்
இது பொது அறிவு வளர்ச்சிக்கானது, அதனால் யார் வேண்டுமானாலும் ​டிக்ஷனரி வாங்கி பழகிக் கொள்ளலாம்,

நண்பரே,
தங்களின் கருத்தை எதிர்க்கவில்லை,
என் தாய் மொழியிலே என் இறைவனை வழிபட எனக்கு முழு உரினம உண்டு யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது, அதற்காக எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது,

மீண்டும் உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு நன்றி, தவறுகள் இருப்பின் அது சத்தியமாக இருப்பின் கண்டிப்பாக திருக்திக் கொள்கிறேன்,

நன்றி,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dheeran Wed Mar 07, 2012 11:36 pm

வணக்கம் திரு ராஜ்,ரமேஷ் அவர்களே,

வேதமும் தமிழும் ஆன்மிகமும் எனும் கட்டுரையை முழுமையாகப்படித்ததோடல்லாமல் அதற்கு மறுமொழியும் இட்டமைக்கு உங்களுக்கு எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனைவரும் அவரவர் தாய்மொழியில் வழிபடுவதுதான் நல்லது இயல்பானது, அதை யாராலும் தடுக்கமுடியாது,

இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ்மொழியில் வழிபடுவதைத் தடுக்கமுயல்வதோ அல்லது சம்ஸ்கிருதம்மட்டுமே இறைவழிபாட்டுக்கு உகந்த மொழி எனக் கூறுவதோ அல்ல.
இதை இந்த வரிசையில் உள்ள

வேதமும் தமிழும் ஆன்மிகமும் எனும் இக்கட்டுரையிலும்

வடமொழியும்,தென்மொழியும் எனும் கட்டுரையிலும்

கோயில்களும் வடமொழி வேதமும் எனும் கட்டுரைக்கான மறுமொழியிலும்
தெளிவுபடுத்தி உள்ளேன்.

நமது கட்டுரையின் நோக்கங்கள்

1) சமஸ்கிருதத்துக்கும் தமிழருக்கும் எக்காலத்தும் எவ்விதத்தொடர்பும் இருந்ததில்லை எனும் பொய்யை மறுப்பது

2) நமது ஆன்மிக வழிகாட்டிகளான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் திருமூலர், போன்ற தமிழ்ச் சான்றோர் சமஸ்கிருதத்தை புறக்கணித்தார்கள் என்பதுபோன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்த செய்யப்படும் முயற்சிகள் தவறானவை என நிறுவுவது

.
3) தமிழ், தமிழர், இந்துமதம், வேதங்கள், தமிழ்ச் சான்றோர், ஆன்மிகத் தமிழ் நூல்கள், சமஸ்கிருதம் ஆகியவற்றிற்கிடையே நல்லுறவு இருந்ததில்லை எனும் பொய்யை மறுப்பது.

4) சமஸ்கிருதம், தமிழுக்கும், தமிழருக்கும் எதிரி எனும் பொய்ப்பிரச்சாரத்தைத் தடுப்பது

5) சமஸ்கிருதம் அன்னிய இனத்தாரால் உருவாக்கப்பட்டது, வேதங்களும் சமஸ்கிருதத்தில் உள்ள பிற ஆன்மிக அறிவியல் நூல்களும் எங்கோ இருந்துவந்த அன்னியரால் உருவாக்கப்பட்டு நம்மீது திணிக்கப்பட்டது எனும் மாபெரும் பொய்யை மறுத்து சமஸ்கிருதம் அனைவருக்கும் பொதுவான மொழி என்பதையும் அம்மொழி ஏதேனும் ஒரு இனத்துக்குமட்டும் சொந்தமானது அல்ல. என்பதையும் அம்மொழியில் உள்ள பல சிறந்த நூல்கள் தமிழர்கள் உட்பட பல இனத்தாராலும் (ஒரு மொழி பேசுவோர் ஒரு இனம் என வைத்துக்கொண்டால்) இயற்றப்பட்டவை என்பதையும் சமஸ்கிருதமும் அதில் உள்ள நூல்களும் நம் அனைவருக்கும் சொந்தமானவை என்பதையும் தெளிவுபடுத்துவது.

6) தமிழ்மட்டுமே சிறந்தமொழி மற்றவை தாழ்ந்தவை என தமிழரிடையே நிகழ்த்தப்படும் பிரச்சாரம் தமிழரையும் தமிழையும் சிறப்பிக்கும் நோக்கம் கொண்டது அல்ல, மாறாக, இப்பிரச்சாரம் தமிழ் மக்களையும், ஏனைய பிறமொழிபேசும் ஹிந்துக்களையும் பிரிப்பதற்காகக், குறிவைத்து தீய உள்நோக்கத்துடன் நடத்தப்படும் பிரிவினைப் பிரச்சாரமாகும் என்பதை உணர்த்துவது.

இப்பொழுது உங்களுடைய கேள்விகளுக்கு வருவோம்

வேதமந்திரங்கள் சிரத்தையோடு ஓதப்படும் இடங்களில் அமர்ந்து கேளுங்கள் அவை நம் உள்ளுணர்வை உயர்த்துவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
.
மந்திரங்கள் ஓதப்பட்டபின் எவை ஓதப்பட்டதோ அவற்றின் பொருளை அறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனும் எண்ணத்தில் சடங்கு முடிந்தவுடன் கேளுங்கள் என்று கூறினேன் வேண்டுமென்றால் ஆரம்பதிலேயே பொருள் கூறச் சொல்லுங்கள், சொல்லத்தயாராக இல்லை என்றால் யாரிடமிருந்து எதை எப்படித் தெரிந்துகொள்வது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

உண்மையில், பலவற்றிற்கு அனைவராலும், அனைவருக்கும் விளக்கம் சொல்லமுடியாது, அவற்றை நாம் ஒரு குரு மூலமாக மட்டுமே அறியமுடியும்

சமஸ்கிருத வேதத்தோடு தமிழ்பாசுரங்களும் இன்று பல கோவில்களில் பாடப்படுகின்றன சில இடங்களில் அவ்வாறு பாடப்படவில்லை எனில் அக்குறையைப்போக்க சமூக அக்கறையுள்ள நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்

வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், பகவத்கீதை, யோகவஷிஷ்ட்டம், யோகசூத்திரங்கள் போன்ற ஏராளமான நூல்கள் அறிவுப் புதையல்களாக சம்ஸ்கிருதத்தில் உள்ளன அவற்றின் மொழிபெயர்ப்புகளைத் திருமந்திரம் திருமுறைகள், போன்ற தமிழ் நூல்களுடன் சேர்த்து படித்தால் சிறப்பானதொரு ஆன்மிக அனுபவம் பெறலாம்.

ஞானம் எங்கிருப்பினும் அதைத் தேடிச் சேர்த்துக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by tmm_raj_ramesh Thu Mar 08, 2012 1:09 pm

நன்றி,
நல்லதொரு விளக்கத்திற்கு நன்றி,
ஆனாலும், ஏற்க மறுக்கிறது மனம்,
சமக்கிருதமும் தமிழும் சிவனின் ஒரே உடுக்கையில் பிறந்தது என்றாலும் எனக்கு ​தெரிந்தது தமிழ் தான்,
தாய் மொழியில் கற்றல் மட்டுமே மிகச் சிறந்த பலனைத் தரும் என்று கேள்விபட்டுள்ளேன்,
அந்நிய மதத்தை பரப்புவர்கள் கூட தமிழ் ​மொழியை நாடும் போது நம் மதத்திற்கு ஏன் இந்த மொழிச் சோதனை,
உங்களுடைய நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலக்கல்வி கட்டுரையில் ஆங்கிலேயரின் விசமம் பற்றி ​தெரிந்து நொந்து கொண்டதை தவிற ​வேறொன்றும் செய்யத் ​தெரியவில்லை, அது நம் தாய்​ மொழிக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடன்,

சமக்கிருதமும் தமிழும் நம் ஆண்மீகத்திற்கு தேவையென்றால்,
இரண்டையும் அ​டிப்படை கல்வியில் இணைத்து விடுங்கள், ஆங்கிலம் பள்ளிகளில் ​போதிக்கப்படும் போது நம் ஆண்மீகத்திற்கு சம்பந்தப்பட்ட சமக்கிருதமும் இருந்துவிட்டு போகட்டும்,

என்னுடை கிராம தேவதைகளுக்கு சமக்கிருதம் தெரியாது தான், என்னுடைய பாட்டன் முப்பாட்டன் கண்ட அய்யனாருக்கும் கருப்பணசாமிக்கும் சமக்கிருதம் தெரயாது தான், அவர்களை நான் என் மொழியிலேயே வேண்டிக் கொள்கிறேன்,

ஒரே வேண்டுகோள்,
நாளைய சமுதாயம் சமக்கிருதத்திலிருந்து தான் தமிழ் மொழி தோன்றியது என்று எண்ண வைத்துவிடாதீர்கள்

மீண்டும் நன்றி,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by அருன்ப்ரகாஷ் Thu Mar 08, 2012 6:50 pm

Dheeran wrote:

தம்பி அருன்ப்ரகாஷ் நமது "வடமொழியும் தென்மொழியும்" எனும் கட்டுரைக்கு கருத்திடும்போது, கோவில்களிலும்,வீடுகளில் சடங்குகளின்போதும் வடமொழிமட்டுமே பயன்படுத்தப்படும்போது ஏதும் புரிவதில்லை என்று கூறுகிரார், இதற்கு என்ன செய்யலாம்

1) புரிகிறதோ இல்லையோ அதன் சந்த நயம் நமது உள்ளுணர்வைக் கண்டிப்பாக உயர்த்தும்

2) தனிப்பட்டவகையில் செய்யும்பொழுது புரோகிதரிடம் சடங்குமுடிந்தவுடன் அம்மந்திரங்களுக்கான விளக்கங்களைக் கேளுங்கள்

3) விளக்கங்கள் கூறக்கூடாது எனும் நிலை இருக்குமாயின் விட்டுவிடுங்கள் அதனாலென்ன, கம்ப்யூட்டர் நிபுணர் எழுதும் புரோகிராம்கூட அனைவருக்கும் விளக்கப்படுவதில்லை எழுதப்படும் ப்ரோகிராம் புரியவில்லை என்பதற்காக நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?

4)கோவில்களில் வடமொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டால்,தமிழ்பாசுரங்களும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்துங்கள்

5) பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லோகங்களுக்காண பொருளை தெளிவுபடுத்தக்கூடிய நூல்களை வாங்கிப் படித்து பொருளறிந்துகொள்ளுங்கள்

நாம் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. நாம் வாழ்க்கையில் முன்னேற ஆங்கிலம், பிரெஞ்சு,அரபி போன்ற மொழிகளையெல்லாம் கற்கிறோம் சம்ஸ்கிருதமும் கற்கலாமே

மீண்டும் மீண்டும் நாம் கூறவிரும்புவது தமிழ் மறை நூல்களைப் படிக்கவேண்டும் பொருள் உணரவேண்டும் அதேபோல் வடமொழி நூல்களையும் (அவற்றின் மொழிபெயர்ப்புகளையேனும்) படிக்கவேண்டும்,அப்பொழுது ஒன்று மற்றொன்றின் விளக்கமாகஇருப்பது தெரியும் ,புரியாத உண்மைகள் புரியும்.

தமிழுக்கும் வடமொழிக்கும் பகைமூட்டுவோர் இரண்டுவகையினர் என்று நாம் கருதுகிறோம்

1) தான்பெரிது,தன் மொழிமட்டுமே பெரிது எனும் குறுகிய மனப்பான்மையினர்

2)குழப்பவாதத்தின்மூலம் பாரத தர்மத்தின் இரண்டு செழுமைமிக்க பரம்பரியங்களுக்கிடையே இல்லாத வேறுபாட்டைப்புகுத்தி பகை உணர்வை வளர்த்து இரண்டும் தொடர்பற்ற வேறு வேறு வழிகள் என பொய்கூறிப் பிரித்து பின் ஒவ்வொன்றாக விழுங்கமுயலும் குள்ளனரிக் கூட்டத்தினர்

நன்றி

மிக்க நன்றி,

ஆரம்பத்தில் நீங்கள் வடமொழியைப் பிரபலப்படுத்துகிறீர்கள் எனும் எண்ணம் எனக்கு வந்தது, உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் படித்தபின் நீங்கள் ஒவ்வொன்றிற்கும் பதில் அளிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றைப் பார்த்து எனது எண்ணம் தவறு என உணர்ந்துகொண்டேன். எனக்கு தமிழ்மொழிமீது அதிகப்பற்று உண்டு என்றாலும் வடமொழிமீது இவ்வளவுதூரம் சிலர் வெறுப்பைக்கொட்டுவதை ஏற்கவும் எனது மனம் இடம்தரவில்லை. அந்த வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துவதும் இல்லாததை ஊதிப்பெரிதுபடுத்துவதும் யார் என்பதையும் தெரிந்துகொண்டேன். மேலும் நெட்டில் இதைப்பற்றி தேடி உங்கள் பார்வையின் நியாயத்தை அறிந்து கொண்டேன். இதைப்போன்றே ஹிந்திமொழி பற்றி மோசமாகப் பேசி எங்களைப்போன்ற இளைஞர்களை ஹிந்தி படிக்கவிடாமல் செய்ததால் வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது நாங்கள் படும்பாடு சொல்லிமாளாது. தமிழ்நாட்டுக்காரரைத்தவிர அனைவரும் ஹிந்தி பேசுகின்றனர். இனிமேலாவது இவர்கள் திருந்தவேண்டும், இளைஞர்கள் ஆன்மிக உலக அறிவு வளர்ச்சிபெற்று முன்னேற வழிவிடவேண்டும், எங்களைப்போன்றவர்களைக் கண்டதையும்கூறிக் குழப்பாமல் இருக்கவேண்டும். எனக்கு ஒரு தெளிவு ஏற்படுத்திய உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அருன்ப்ரகாஷ்

Posts : 4
Join date : 24/11/2011

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by tmm_raj_ramesh Thu Mar 08, 2012 9:22 pm

நண்பர் அருண்ப்ரகாஷ் அவர்களுக்கு

ஹிந்தி மொழியைப் போன்று சமக்கிருதத்தையும் ஒரு மொழியாக கற்க வேண்டுமெனில்
அதற்கான வாய்ப்புகள் உண்டு நாம் அதையும் கற்றுக் ​கொள்ளலாம், ஆனால் தீரன் ஐயா
கூறுவது அதுவன்று, கோவில்களில் இறைவனை ஆராதனை செய்ய சமக்கிருதம் இருப்பதில் தவறில்லை என்பது தான், நம்முடைய பரிகாரங்கள் வேண்டுதல்கள் போற்றிகள் நமக்கு புரியாமல் இருப்பது நல்லதுதானா?

சமக்கிருதத்தை கற்றுக் ​கொள்வோம், அதை புரிந்து கொள்வோம், எந்த மாற்று கருத்தும் கிடையாது, அது ஆங்கிலம் போன்று தமிழனுக்கு அந்நிய மொழிதான், அதற்குரிய மரியாதையை நாம் செய்வோம் அது எந்த ஒரு மொழிக்கும் நாம் செய்யும் தொண்டு, ஆனால், என் வீட்டு கடவுளுக்கு என்னுடைய மொழியில் தான் அனைத்தும்,

மம்மிக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்,
மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம், ஆனால் சுயவிலாசத்தை இழந்துவிட்டால் ,,,,
மற்றபடி தீரன் ​ஐயா சொல்வது அனைத்தும் போற்றக்கூடிதே,

நன்றி,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dheeran Sun Mar 11, 2012 12:29 am

வணக்கம் நண்பர்களே ,

இப்பதிவிக்கு மறுமொழிவழங்கியும், சந்தேகங்கள் கேட்டும் பதிவுகள் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது தேசம் பல்வேறு மொழிகளைக்கொண்ட தேசமாக இருப்பதாலும் உலக மக்கள் பல்வேறு மொழிகள் பேசுவதாலும் உயர்ந்த அறிவியல் உண்மைகளையும் ஆன்மிக ஞானக்கருத்துக்களையும் தொகுத்துவைக்க அனைவருக்கும் பொதுவானதாக உருவான மொழிதான் சமஸ்கிருதம் இது எந்த ஒரு ஜாதிக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனதுக்கோ சொந்தமானது அல்ல, என்பது பல அறிஞர்களின் கருத்து, நமது மதத்தின் அடிப்படைக்கோட்பாடுகளும் அதன் விளக்கங்களும் அம்மொழியில் இருப்பதால் நமது ஆன்மிக நிகழ்வுகளில் அதன்பங்கும் இருக்கும் பொழுது அத்தொடர்பு இடையறாது தொடர்ந்துவரும். அதே சமயம் தெய்வத் தமிழ் பாக்களையும் நமது இளைஞர்களுக்கு கற்பிக்கவேண்டியதும் நம் கடமை.

அம்மாவை, மம்மி என அழைக்கவேண்டாம் ஆனால் பெட்ரோலையும், டீசலையும் , ஜீப் ஐயும், மைக்ரோ பிராசசர் மற்றும் சி.பி.யு. வையும் அதேபெயரில் அழைப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் அது "ஒய் திஸ் கொலவெறி" என்று பேசுவது சரி என்று கூறுவதாக அர்த்தமாகாது. இந்த வேறுபாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

கருத்து வேறுபாடுகள் எத்தகையதானாலும் நம் அனைவரது நோக்கமும் நம் மக்களின், தேசத்தின் நல்வாழ்வுதான் என்பது இந்தக் கருத்துப் பரிமாற்றத்தின் வாயிலாக வெளியாகிறது. இந்து சமயத்தின் சிறப்பே கருத்து சுதந்திரமும், வேறுபாடுகளை மதித்து அனைவரும் ஒன்றுசேர்ந்து முன்னேற பாதை வகுத்திருப்பதும்தான். சேர்ந்து முன்னேறுவோம்.

அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்களுடன்
தீரன்

Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dhantaayuthapaani Thu Aug 30, 2012 7:21 pm

tmm_raj_ramesh wrote:நன்றி,
...............,

என்னுடை கிராம தேவதைகளுக்கு சமக்கிருதம் தெரியாது தான், என்னுடைய பாட்டன் முப்பாட்டன் கண்ட அய்யனாருக்கும் கருப்பணசாமிக்கும் சமக்கிருதம் தெரயாது தான், அவர்களை நான் என் மொழியிலேயே வேண்டிக் கொள்கிறேன்,
.................
வணக்கம் நண்பரே! திரு தீரன் அவர்களின் பதிவிற்கு உங்களது பதிலைப்படித்தேன், அதில் மேற்கண்ட குறிப்பையும் கண்டேன். இங்கு சுடலை மாடன் கொடையில்

”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…”

எனும் வரிகள் வருவதாகப்படித்தேன், இதைப்பற்றியும் சற்று ஆராய்ந்துபார்க்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by tmm_raj_ramesh Fri Aug 31, 2012 10:48 am

நன்றி. தெரிந்து தெளிதல் வேண்டும் என்று உணர்த்தியமைக்கு நன்றி.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by dhamodharan Sun Sep 16, 2012 11:44 am

அய்யா தீரன் அவர்களே !நீவிர் ஏன் தமிழில் கடவுளை வழிபடுவதை தவிர்க்க நினைக்கிறீர்கள். நான் / நாங்கள் விரும்புவது ஆரிய மொழியை அல்ல. பின்பற்ற நினைபவர்கள் வேண்டுமானால் பின்பற்றி கொள்ளுங்கள். தமிழர்களின் நெஞ்சில் தவறை வத்திட வேண்டாம் மறைமுகமாக!!!!!!!
ஆரிய ஓதுவார்களை தமிழில் ஓதச் செய்யுங்களேன். ஒரு ஓதுவாருக்காக அத்தனை தமிழரும் அந்த மொழியை பின்பற்ற சொல்வது உங்களுக்கே நியாயமா. உங்களின் எண்ணத்தை நாங்கள் நன்றாகவே அறிவோம்!

இந்து சமயத்தை காரணம் காட்டி வடமொழியை பரப்புபவர்களும் இருக்கின்றனரே!!!!!!

dhamodharan

Posts : 1
Join date : 16/09/2012

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dheeran Tue Sep 18, 2012 12:39 am

dhamodharan wrote:அய்யா தீரன் அவர்களே !நீவிர் ஏன் தமிழில் கடவுளை வழிபடுவதை தவிர்க்க நினைக்கிறீர்கள். நான் / நாங்கள் விரும்புவது ஆரிய மொழியை அல்ல. பின்பற்ற நினைபவர்கள் வேண்டுமானால் பின்பற்றி கொள்ளுங்கள். தமிழர்களின் நெஞ்சில் தவறை வத்திட வேண்டாம் மறைமுகமாக!!!!!!!
ஆரிய ஓதுவார்களை தமிழில் ஓதச் செய்யுங்களேன். ஒரு ஓதுவாருக்காக அத்தனை தமிழரும் அந்த மொழியை பின்பற்ற சொல்வது உங்களுக்கே நியாயமா. உங்களின் எண்ணத்தை நாங்கள் நன்றாகவே அறிவோம்!

இந்து சமயத்தை காரணம் காட்டி வடமொழியை பரப்புபவர்களும் இருக்கின்றனரே!!!!!!

திரு தாமோதரன் அவர்களுக்கு வணக்கம்,

  • நான் தமிழில் வழிபடவேண்டாம் எனக்கூறவில்லை. கண்மூடித்தனமாக சமஸ்கிருதத்தை வெறுப்பது தவறு என்பது எனது கருத்து

  • ஆரியமொழி என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை, விருப்பு வெறுப்புகள் மாறக்கூடியவை, நிலையானவை அல்ல என்பது பெரியோர் கருத்து

  • தமிழர்கள் நெஞ்சில் தவறுகள் பதிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.

  • தமிழின்பெயரால் அன்னியமதத்தைப் பரப்பமுயலுவோராலும், சுயநலவாத சமூகவிரோதிகளாலும் பாதிக்கப்படாமல்,, வரக்கூடிய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் என்பதுதான் எனது ஆசை.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by kingmartine Tue Sep 18, 2012 12:48 am

தீரன் தோழரே!
நான் சம்ஸ்கிருதம் பயில முயற்சி செய்ய உள்ளேன்; தங்களால் முடிந்த உதவிகளை செய்ய இயலுமா?
kingmartine
kingmartine

Posts : 18
Join date : 16/09/2012
Age : 32
Location : இந்தியா

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dheeran Sat Sep 29, 2012 9:43 pm

kingmartine wrote:தீரன் தோழரே!
நான் சம்ஸ்கிருதம் பயில முயற்சி செய்ய உள்ளேன்; தங்களால் முடிந்த உதவிகளை செய்ய இயலுமா?
வணக்கம் நண்பரே!
RASHTRIYA SANSKRIT SANSTHAN
மேலே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி...
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Dhantaayuthapaani Tue Dec 04, 2012 5:30 pm

tmm_raj_ramesh wrote:நன்றி. தெரிந்து தெளிதல் வேண்டும் என்று உணர்த்தியமைக்கு நன்றி.

வணக்கம், வாழ்த்துக்கள்

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

வேதமும், தமிழும்,ஆன்மிகமும் Empty Re: வேதமும், தமிழும்,ஆன்மிகமும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum