Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
2 posters
Page 1 of 1
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குறுங்காலீஸ்வரர் கோவில்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது.
தொன்மை சிறப்புகள் பெற்ற இந்த கோவில் ராஜகோபுர திருப்பணி மன்னர்கள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, கல்காரத்துடன் தடைபட்டு நின்றிருந்தது. பழைய கல்காரத்தை அகற்றி, புதிய கல்காரம் உரிய அஸ்திவாரத்துடன் தமிழக அரசு அனுமதியுடன் புதிய ஏழுநிலை ராஜகோபுரமாக பஞ்சவர்ண சிற்ப வேலைகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை யாகசாலை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது.
காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மகாபூர்ணாஹூதி, பரிவார கலசங்கள் புறப்பாடு, சுவாமி விமானம், அம்மன் விமானம், ராஜகோபுர கலசங்கள் மூலலாயத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. காலை 9.50 மணிக்கு விருஷப லக்னத்தில் புதிய ஏழுநிலை ராஜகோபுரம் மற்றும் அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர் சுவாமி, பரிவார தேவதைகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கோவிலில் குவிந்த பக்தர்கள்
கும்பாபிஷேகத்தை காண்பதற்காக கோயம்பேடு, மதுரவாயல், செங்குன்றம், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலில் திரண்டனர். கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
கோபுர கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டபோது, கீழே நின்றிருந்த பக்தர்கள், `சிவாய நமஹ, ஓம் நமசிவாய' என்று பக்தி முழக்கங்கள் எழுப்பினர். புனித நீரின் ஒரு பகுதி மேலிருந்து பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. புனித நீரின் துளிகள் தங்கள் மீது படுவதற்காக பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னோக்கி சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிவப்பிரசாதம்
அதனைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் இறைவனை வழிபட்டனர். பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சிவ பிரசாதம் வழங்கப்பட்டது. பாயாசம், மோர், தண்ணீர் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழ் பண்பாடு மற்றும் அறநிலையங்கள் செயலர் மூ.ராஜாராம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.சந்திரகுமார், கூடுதல் ஆணையர்கள் ப.தனபால், ராஜமாணிக்கம், இணை ஆணையர் நா.திருமகள், கவிதா, பி.வாசுநாதன், உதவி ஆணையர்கள் சிவக்குமார், ரகுநாதன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் மற்றும் கோவில் தக்கார் த.காவேரி, செயல் அலுவலர் பழ.அ.கண்ணையா ஆகியோர் செய்திருந்தனர்.
Re: கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
நன்றி பகிர்வுக்கு
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum