இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், சிலாங்கூர், ரவாங், மலேசியா

Go down

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், சிலாங்கூர், ரவாங், மலேசியா Empty தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், சிலாங்கூர், ரவாங், மலேசியா

Post by ராகவன் Wed Apr 18, 2012 11:33 pm

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், சிலாங்கூர், ரவாங், மலேசியா Nritanews_7928540

ஆலய வரலாறு : மலேசியாவின் சிலாங்கூர் நகருக்கு அருகே உள்ள ரவாங் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்களால் கட்டப்பட்ட 150 ஆண்டு பழமையான கோயில், தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயமாகும். இக்கோயில் ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதால் பக்தர்கள் பெருமளவில் வராமல் இருந்தனர். இப்பகுதியில் உள்ள இந்து இளைஞர் அமைப்பினரால் நிதி திரட்டப்பட்டு, வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஆலய பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. சிறிது காலத்திற்கு பின் இக்கோயிலைச் சுற்றி தானாக வளர்ந்த பாம்பு புற்றுகளால் இக்கோயிலின் புகழ் தற்போது சுற்றுவட்டாரங்களில் பரவி வருகிறது. இக்கோயிலில் ஆடிபூரம், நாகபஞ்சமி, நவராத்திர போன்ற முக்கிய நாட்களில் பாம்புகளின் தரிசனத்தைக் காண பக்தர்கள் பெருமளவில் இக்கோயிலில் குவிந்து வருகின்றனர்.

வெகு நாட்களுக்குப் பிறகே இக்கோயிலில் கருமாரியம்மனின் அருள்பொங்கும் அழகிய விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்துகுமார சுவாமியால் இக்கோயில் கும்பாபிஷேக விழாவன்று 5 தலை நாகங்களை தலைமேல் கொண்ட கருமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருப்பு கிரானைட்டால் அமைந்த கருமாரியம்மன் சிலை மலேசியாவின் பெனாங் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. இக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள பாம்பு புற்றுகள், பக்தர்கள் பலரை பெருமளவில் ஈர்த்து வருகின்றன.

பிரார்த்தனை : ஆடி மாதங்களில் குழந்தை பேறு வேண்டி ஏராளமானோர் இக்‌கோயிலுக்கு வருகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் பலர், மடிப்பிச்சை ஏந்தி கோயிலுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். மேலும் பலர் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து, பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்கின்றனர். ஆடிப்பூர தினத்திற்கு பிறகு வரும் நாகபஞ்சமியன்று கோயிலில் குருக்கள் சிவஸ்ரீ கிருஷ்ண குருக்குள் பாம்புப் புற்றைச் சுற்றியுள்ள சந்தனத்தை சேகரிக்கிறார். இந்த சந்தனம், குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு வரும் தம்பதியருக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே இந்த பிரசாதத்திற்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் மற்றும் பிரசாதத்திற்கு கோயில் குருக்களிடம் முன்னரே பதிவு செய்து விடுகின்றனர். குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு வந்து பலன் பெற்று மகிழ்வுடன் திரும்புவோரை இக்கோயிலில் நாள்தோறும் காண முடிகிறது.

தல விருட்சம் : வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து காணப்படுவது இக்கோயிலின் கூடுதல் தனிச் சிறப்பாகும்.

ஆலய முகவரி : Devi Sri Karumariamman Temple,
Lot 981, Jln Kuala Garing, 48000 Rawang.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum