இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?

Go down

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Empty திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?

Post by சாமி on Wed May 30, 2012 6:28 pm

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் நால்வர் பெருமக்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திருவாரூரிலே நண்டு பிறக்கிறது; தேள் பிறக்கிறது; நண்டு போன்றவர்கள் பிறக்கிறார்கள்; தேள் போன்றவர்கள் பிறக்கிறார்கள்; திருவாரூரிலும் திருடன் உண்டு. அங்கே பிறந்த ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு எல்லாமா சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மை அடிமை என்று கூறிக் கொண்டார்? அப்படி நினைப்பது எவ்வளவு அறிவின்மை?

இங்கே திருவாரூர் என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.

யோகிகள் இடுப்பிற்குக் கீழாக உள்ள அடுப்பு போன்ற பகுதியில் நாகம் போல சுருண்டு கிடக்கும் குண்டலினியைத் தூண்டி விடுவார்கள். குண்டலினி சக்தியால் உந்தப்பட்டு ஆன்மாவானது 36 தத்துவங்களின் கட்டிலிருந்து விடுபட்டு சுழிமுனை நாடியில் ஒளியாக மேலேறும். குண்டலினி சக்தியால் தத்துவக் கட்டிலிருந்து மூலாதாரத்தில் ஆன்மா விடுபடுவது இருக்கிறதே இதுதான் ஆன்மாவிற்கு உண்மையான பிறப்பு. ஆனால் நாம் தாயின் யோனியிலிருந்து விடுபடுவதை மட்டுமே பிறப்பு என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூலாதார யோக அனுபவத்தை உள்ளடக்கித்தான் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதைப் போலவேதான் ‘திருவாரூர் பிறந்தாலே முக்தி’ என்பதும்.

யோக சாதனை செய்யும் அடியார்கள் நடுவில் ஒரு சங்கேத பாஷை உண்டு. இந்த சங்கேத பாஷைக்குப் பொருளைத் தொகுத்துக் கூறும் பாடல் உண்டு.
திருவளர் ஆரூர் மூலம் திருஆனைக் காவே நாபி
மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம் நீவிர்
இருவரும் கண்ட மன்றம் இதயமாம் திருக்கா ளத்தி
பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமே காசி


(திருவாரூர் – மூலாதாரம், திருவானைக்கா – சுவாதிட்டானம், அண்ணாமலை-மணிபூரம், தில்லை-அநாகதம், திருக்காளத்தி – விசுத்தி, காசி – ஆஞ்ஞை)
இந்தப்பாடலைப் பாடி நமக்கு உதவியவர் திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்
(திருமந்திரச் சிந்தனைகள் – மு.பெ.ச)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Empty Re: திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?

Post by Bagavathi on Wed Jun 06, 2012 2:20 am

பகிர்விற்கு நன்றி சாமி அய்யா

Bagavathi

Posts : 32
Join date : 17/04/2012

Back to top Go down

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Empty Re: திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?

Post by சேயோன் on Fri Jun 08, 2012 7:40 pm

சாமி wrote: (திருவாரூர் – மூலாதாரம், திருவானைக்கா – சுவாதிட்டானம், அண்ணாமலை-மணிபூரம், தில்லை-அநாகதம், திருக்காளத்தி – விசுத்தி, காசி – ஆஞ்ஞை)
நல்ல "உண்மை விளக்கம்" சாமி ! நன்றி !!

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Empty Re: திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum