Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தியானம் செய்வது எப்படி - ஸ்ரீகிருஷ்ணர்
4 posters
Page 1 of 1
தியானம் செய்வது எப்படி - ஸ்ரீகிருஷ்ணர்
இந்து மதத்தின் ஆணி வேராக இருப்பது தியானம்தான். வெளிப்பார்வைக்கு கோயில்களில் செய்யும் வழிபாட்டு முறை பிரதானமாக தெரிகிறது. ஆனால் இந்த தியான முறைதான் ஏராளமான மகான்களை, ரிஷிகளை, ஞானிகளை, சித்தர்களை உருவாக்கி தந்துள்ளது. கிறிஸ்தவ ஜெப முறையாலும் இஸ்லாமிய தொழுகை முறையாலும் இது போல் உருவாக்க முடியவில்லை. காரணம் மனதின் உள்ளே புகுந்து ஆராய்ந்து இறைவன் தன்னுள்ளே இருப்பதை உணர வைக்கும் ஒப்பற்ற முறை இதுதான்.. தியானம் செய்வதற்கு ஜாதி , மத பேதம் கிடையாது. தியானம் செய்பவரின் உடல் நிலைக்கும் மன நிலைக்கும் ஏறறவாறு பலவித சக்திகள், அனுபவங்கள் கிடைக்கின்றன.
சாதுக்கள் , சன்யாசிகள்தான் தியானம் செய்ய வேண்டுமென்பதில்லை. இல்லற வாசிகள் இனியமையான வாழ்க்கையைப் பெறுவதற்கும் தியானம் அவசியம். அதற்காக தியானம் சொல்லித் தருகிறேன் என்று பணம் பறிக்கும் கூட்டத்திடம் ஏமாந்து விடக் கூடாது.
ஒரு நண்பரின் குடும்பத்தில் அவருடைய மூத்த சகோதரர்கள் நல்லதொரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவரோ மிகக்குறைந்த சம்பளத்தில் சாதாரண கம்பெனியில் வேலை செய்தார். இவருக்கு அதிகாலை தியானம் செய்யும் வழக்கம் உண்டு. இவருக்கு வேறொரு கம்பெனியில் வேலை கிடைத்து அந்தக் கம்பெனியிலேயே எம்.டி பதவி வரை உயர்ந்து விட்டார். இன்று அவருடைய வருமானம் மாதம் 1.50 லட்சம் இருக்கும். இவருடைய சகோதரர்கள் இன்னும் பழைய நிலையிலேயேதான் இருக்கின்றனர். நான் செய்யும் தியானம்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்கிறார்.
தியானம் எப்படி செய்வது?
ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் வழிகாட்டுகிறார்.
மிக உயரமானதும் மிக தாழ்வானதும் இல்லாத சுத்தமான இடத்தில் வஸ்திரம், மான் தோல், தர்ப்பைபுல் போன்றவற்றை விரித்து அதன் மேல் அமர்ந்து, உடலையும், கழுத்தையும், தலையையும் நேராக வைத்துக்கொண்டு மூக்கின் நுனியைப் பார்த்துக்கொண்டு சித்தம் , இந்திரியங்களை அடக்கி என்னையே மனதில் நிறுத்தி உட்கார்நதிருக்க வேண்டும். அப்படி செய்பவனுக்கு பரமசாந்தி கிட்டும்.
அதிகமாக உண்பவனுக்கும், உண்ணாமலிருப்பவனுக்கும், அதிகமாக தூங்குகிறவனுக்கும், அதிகமாக விழித்திருப்பவனுக்கும் தியானம் சித்திக்காது. காற்றில்லாத இடத்தில் இருக்கும் தீபம் அசையாமல் இருப்பதைப்போல் அவன் சித்தம் இருக்கும். எப்பொழுது இவன் ஆத்ம சொரூபத்திலே நிலைத்தவனாய் அந்த தத்வஸ்வரூபத்திலிருந்தும் அசைவதில்லையோ அப்பொழுது அவனுக்கு யோகசித்தி உண்டாகிறது. எந்த ஆத்மலாபத்தை அடைந்து அதற்கு மேலான ஒன்றை நினைப்பதில்லையோ எதில் நிலைத்து நிற்கிறவனாய் மிகப்பெரிய துன்பத்தாலும் அசைக்கப்படுவதில்லையோ அதுவே யோகம். யோகத்திலிருக்கும் மனத்தோடு சகல பொருள்களிலும் சமமாய் பார்க்கிறவன், தன் ஆத்மாவை சகல உயிர்களிலும். சகல உயிர்களை தன்னிலும் இருப்பதை காண்கிறான். அவனுக்கு நான் காணப்படாமல் இருப்பதில்லை. எனக்கு அவன் காணப்படாமல் இருப்பதில்லை” என்கிறார்.
அர்ஜூனன் கேட்கிறான்.
கிருஷ்ணா . மனம் சஞ்சலமுடையது. மனதை அடக்குவது காற்றை அடக்குவது போல் அசாத்தியமானது என நினைக்கிறேன். அதற்கு கிருஷ்ணர் கூறுகிறார். மனம் அடக்கவதற்கு சிரமமானது. சஞ்சலமுள்ளது. இதில் சந்தேகமில்லை. ஆனால் பழக்கத்தாலும் வைராக்கியத்தாலும் அது அடக்கப்படும். மனம் அடங்காதவனுக்கு யோகம் அமையாது.
இப்பொழுது அர்ஜூனனுக்கு மற்றொரு சந்தேகம் வருகிறது.
கிருஷ்ணா . சிரத்தையுடன் கூடியவனாக இருந்தாலும் முயற்சி குறைவினால் தியான யோகத்திலிருந்து தவறியவன் என்ன கதியடைகிறான்.? அவன் கர்ம மார்க்கம், யோக மார்க்கம் இரண்டிலும் தவறி சிதறிய மேகம் போல் அழிந்து விடுவானா? என்கிறார்.
அதற்கு கிருஷ்ணர் ” அவ்வாறு தியானம் செய்ய முயற்சிப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் அழிவு உண்டாவதில்லை. நல்லதை செய்த எவனும் இழிவடையவே மாட்டான். அவன் புண்ணியம் செய்தவர்களுக்குரிய உலகத்தை அடைந்து நீடித்த ஆண்டுகள் வசித்து பரிசுத்தர்களும், செல்வந்தர்கள் குடும்பத்திலும் பிறக்கிறான். அல்லது ஞானிகள் குலத்தில் பிறக்கிறான். முற்பிறவியில் செய்த முயற்சியை விட அதிக முயற்சியை செய்கிறான். ஏனெனில் அவன் யோகத்தை விரும்பாவிட்டாலும் முற்பிறவியில் செய்த முயற்சியின் காரணமாக யோகமார்க்கத்தில் இழுக்கப்படுகிறான். பலபிறவிகள் எடுத்து பாவம் தேய்ந்து பரிசுத்தமுடையவனாக ஞான பரிபக்குவத்தை அடைந்து மேலான கதிஅடைகிறான் என்கிறார்.
எனவே தினசரி தியானம் செய்ய முயற்சிப்போம். குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுப்போம்.
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: தியானம் செய்வது எப்படி - ஸ்ரீகிருஷ்ணர்
@ "அதிகமாக உண்பவனுக்கும், உண்ணாமலிருப்பவனுக்கும், அதிகமாக தூங்குகிறவனுக்கும், அதிகமாக விழித்திருப்பவனுக்கும் தியானம் சித்திக்காது."
எம்மை பொருத்தமடில் இது தவறான எண்ணக்கூற்றாகும், தோழரே!!!
யாம் கூறியதில் பிழை ஏதும் இருப்பினும் , பின்பு மன்னிக்கவும்.
எம்மை பொருத்தமடில் இது தவறான எண்ணக்கூற்றாகும், தோழரே!!!
யாம் கூறியதில் பிழை ஏதும் இருப்பினும் , பின்பு மன்னிக்கவும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum