இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by சாமி Sat Jun 23, 2012 12:46 am

மாமன்னன் இராசராச சோழன் இல்லை என்றால் சைவக்களஞ்சியமாம் பன்னிருதிருமுறை உருவாகி இருக்கவே வாய்ப்பில்லை. எனவே,தமிழர்கள் இராசராச சோழனைப் போற்றக் கடமைப்பட்டவர்கள் எனலாம். இப்படி ஓர் எண்ணம் அவனுக்குத் தோன்றியதும் ஒரு வரலாறே.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் தனது பெரியப்பா உறவின் முறையிலான மதுராந்தகச் சோழனைச் சில ஆண்டுகள் அரசுக்கட்டிலில் அமர்த்தி இராசராச சோழன் அரசாங்கக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காலையில் இவன் திருமுறைகளைக் கண்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இராசராச சோழன் அவையில் இருந்த அரசவையில் சிலர் வந்து அழகான தமிழ்ப்பாடல்கள் சிலவற்றைப் பாடினர். இவை யாவை? பாடியவர்கள் யார்? பாடிய பாடல்கள் மொத்தம் இவ்வளவுதானா? என்ற கேள்விகளைக் கேட்டபோது இவை சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்கள், இவை மொத்தம் எத்தனை என்று தெரியாது என்றும் இவனிடம் கூறிய போது இவையனைத்தும் கண்டெடுக்க வேண்டும் என்று உரியவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டான்.

எவரிடமும் சரியான விவரம் கிடைக்காத நிலையில் திருவருள் இருந்தால்தான் இவையனைத்தும் கிடைக்கும் என்று அன்பர்களால் தெரிவிக்கப்பட்டான். எனவே திருவருள் மிக்க ஒருவரை இவன் தேடிக் கொண்டிருந்தான். அந்நிலையில் ஓர் அதிசயச் செய்தி இவன் காதுக்கு எட்டியது.

அதாவது திருநாரையூர் என்ற ஓர் ஊரில் நம்பியாண்டார் நம்பி என்ற ஓரு சிறுவன் அவ்வூர்ப் பிள்ளையார்க்கு அமுது படைக்க அதனை அக்கல் பிள்ளையார் உண்ணுகிறார் என்ற அதிசயச் செய்திதான் அது.

உடனே இச்சிறுவன் திருவருள் மிக்கவனாய் இருக்கிறான், ஒருவேளை இவன் மூலம் மூவர் அருளிய மொத்தப்பாடல்களையும் கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணம் இராசராச சோழனுக்குத் தோன்றியது.

இச்சிறுவனை சோதித்து அறியவேண்டும் என்று எண்ணி பெரும்படையல் பொருட்களை திருநாரையூரில் குவித்து அக்கல் பிள்ளையாரை அமுது செய்விக்க என்று சிறுவனை வேண்டினான். அப்படையல்கள் எல்லாம் கணநேரத்தில் காணாமல் போகவும், இவன் திருவருள் பெற்ற சிறுவனே என்று உணர்ந்து தனது ஏக்கத்தைக் கூறி அதன்படி மூவர் தேவாரம் முழுவதையும் கண்டுபிடித்துத் தரவேண்டினான்.

நம்பியாண்டார் நம்பி என்ற அச்சிறுவன் அரசன் முன்னிலையிலேயே பிள்ளையாரிடம் சென்று மனமுருக வேண்டிட பிள்ளையார் அவனுக்கு உணர்த்தியதாக இந்தச் செய்தியைக் கூறினான். அதாவது மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதே.

இராசராசன், நம்பிகளை அழைத்துக் கொண்டு தில்லைத் தீட்சிதர்களை அந்த இருட்டறையில் இருந்து எடுத்துத் தர பணித்தான். அவர்கள் அந்த இருட்டறையில் மூவர் தேவார ஏடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டு அந்த மூவரும் (திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர்) வந்தால் அறையைத் திறந்து எடுத்துத் தருவதாகக் கூறினர். (திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் முக்தியடைந்து விட்டனர்; இப்போது வரமுடியாது என்ற காரணத்தினால் அவ்வாறு தீட்சிதர்கள் சொன்னனர்.)

(தொடரும்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by சாமி Wed Jun 27, 2012 6:35 pm

இராசராசன் மனம் சோராது மூவர் செப்புத் திருமேனிகளைச் செய்து எடுத்து வந்து, ‘மூவர் வந்தனர்; தேவார ஏடுகள் தருக’ என்றான். அவை செப்புத் திருமேனி ஆயிற்றே என்று தில்லைத் தீட்சிதர்களால் மறுக்க இயலவில்லை. காரணம் அவர்கள் நாடோறும் வணங்கும் நடராசரும் செப்புத் திருமேனியாதலால், அது உண்மையானால் மூவர் செப்புத்திருமேனியும் உண்மைதானே என்று இராசராசன் உணர்த்த வேறுவழியில்லாமல் இருட்டறையைத் திறந்து கட்டி வைத்திருந்த மூவர் தேவார ஏடுகளைக் காட்டினர்.

ஆனால் அவை செல்லரித்துப் பெரும்பான்மை தூளாகக் கிடந்தன. மனம் சோராமல் செல்லரித்தது போக எஞ்சியதை எடுத்துப் பாதுகாத்து அவைகளைச் செல்லரிக்காவண்ணம் செப்பேடுகளில் எழுதி வைத்தான். அவற்றை நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு திருமுறைகளாக தொகுக்கச் செய்தான். அவர் அவற்றைக் கொண்டு 7 திருமுறைகளைத் தொகுத்தார். இதன் பின்னர் ஏனைய 4 திருமுறைகளையும் இராசராச சோழன் வேண்ட அவன் வேண்டுகோளுக்கு இணங்கியே நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.

இப்பதினோரு திருமுறைகளையும் மீண்டும் செல்லரிக்காதவண்ணம் இராசராசன் செப்பேடுகளில் ஏற்றி தில்லையில் வைக்காமல் திருவாரூரில் கொண்டு வைத்தான்.

ஓலைச்சுவடிகளாக கிடைத்தவற்றில் செல்லரித்தது போக கிடைத்தவையே தொகுக்கப்பட்டுள்ளன. மூவர்கள் பாடியவற்றிற்கும் கிடைத்தவற்றிற்கும் உள்ள வேறுபாடு நினைக்கத் தக்கது.

மூவர் பாடிய பதிகங்களும் கிடைத்தவையும்
சம்பந்தர் பாடியது 16,000 பதிகங்கள் கிடைத்தவை 384
அப்பர் பாடியது 49,000 பதிகங்கள் கிடைத்தவை 307
சுந்தரர் பாடியது 38,000 பதிகங்கள் கிடைத்தவை 100


இராசராசனுக்கு ஏறத்தாழ 200 ஆண்டுகட்குப் பின் வந்த இரண்டாம் குலோத்துங்கன் என்ற அநபாயன் காலத்தில் சேக்கிழார் எழுதிய ‘பெரியபுராணம்’ 12 வது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum