இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே!

2 posters

Go down

திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Empty திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே!

Post by சாமி Mon Dec 03, 2012 1:26 pm

திருமால் வழிபாடு, அம்மை, மூத்த பிள்ளையார், திருமுருகன் வழிபாடு போலப் பண்டு நந்தமிழகத்துச் சிவவழிபாட்டில் அடங்கி நின்றதேயாம். அது பிற்காலத்து, ஆரிய மொழிச் சார்பும் ஆரிய வழக்குச் சார்பும் பெற்றதன் பின்னரே, வைணவம் எனச் சிவநெறியின் வேறுபட வழங்குவதாயிற்று. ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பெயர் விளக்கத்தினும், சில குறட்பாக்களின் உரைகளினும் பரிமேலழகர் குறிப்பாக உரைப்பன சில கொண்டு, இக்காலத்துச் சிலர் திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது திருமாலையே எனச் சாதிப்பர். அன்னோர் கூற்றும் விளக்குதற்கு உரியது.

அவர்தம் கூற்றுக்குச் சிறந்த ஆதாரமாகக் காட்டுவன:
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”

என்பதும்,
“தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”

என்பதும் ஆம்.

இக்குறட்பாக்கள் முறையே திருமாலின் லீலா விபூதி, நித்திய விபூதி என்பவற்றை உணர்த்தித் திருமாலின் முதன்மை தேற்றுவன் என்பர். நுண்ணுணர்வு உடையார்க்கு இரண்டு பாக்களிலும் இகழ்ச்சிக் குறிப்பு இருத்தல் விளங்கும்.

இவற்றுள் முன்னையது “மாயோன் மாவலியால் குறளாகக் கரந்து சென்று, மூவடி மண் இரந்து, பின் நெடியனாய் நீண்டு,தாவி அளந்த பரப்பு முழுவதும் மடியில்லாத அரசன் (தன் தாளாண்மையானே) ஒருங்கே எய்துவன்” என்கின்றது. இதனால் மாயோன்பால் கரந்து சேறலாகிய முறை செய்யாமையும், இரத்தலாகிய இளிவரவும் குறிப்பிக்கப்பட்டு, முயற்சியுடைய மன்னவன் தன் செல்வம் பெருக்கற்கு அவ்விரண்டையும் மேற்கொள்ள வேண்டுவதின்று என மடியின்மையின் பயன் உணர்த்தப்படுகின்றது.
இதனானே,
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”

என்னும் குறட்பாவால் குறிப்பிக்கப்படும் இறை இயல்பு அடியளந்தான் மேற்செல்லாமைப் பொருட்டு முறை செய்து என்னும் அடைபெய்து வைக்கப்பட்டது என்பது உய்த்துணரப்படும். திருமால் நெறியினர், மாயோன் செய்த வஞ்சனை பற்றியே அவற்கு முதன்மை கூறுவதை மரபாகக் கொள்வர். சிவபிரான் பசுக்கள் எனப்படும் உயிர்களைப் பாசத்தின் நீக்கிக் காக்கும் இயல்பு பற்றிப் பசுபதி எனப்படுதலின், திருவள்ளுவர் குறிப்பிக்கும் இறையியல்பு அவர்க்கே உரிய சிறப்பியல்பாய் முடிதல் காண்க. பதி=காக்கிறவன், பா=காத்தல், தி=வினை முதற்பொருண்மை உணர்த்தும் விகுதி)

இனி திருமாலின் நித்திய விபூதி உணர்த்துவது எனப்படும் மற்றையதும் பரமபதம் என்னும் தாமரைக்கண்ணான் உலகிற்பெறும் இன்பம் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோள்மேல் துயிலுதலாற் பிறக்கும் இன்பத்திற் சிறந்தது கொல்லோ? எனப்புணர்ச்சி மகிழுந் தலைவன் கூற்றாக வருதலின், அஃது அவன் மாயோன் உலகவின்பத்தைச் சிறப்பின்மை கூறிப் பொருட்படுத்தாது இகழும் இகழ்ச்சிக்குறிப்பினையே உடையதாதல் காண்க. இக்கருத்தே பற்றியன்றே கமலை வெள்ளியம்பலவாண முனிவர், முதுமொழிமேல் வைப்பில்,
“அரன்அடியார் அல்லார் அடைபதந் தானும்
இருநிலஇன் பத்திழிவாம் என்று-வருவதிது
தம்வீழ்வார் மென்றோட் டியிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”

என்பாராயினர்!

செம்புலச்செல்வர்கள் நிரதிசய வின்பமாகிய வீட்டின்பத்தைக் குறிக்கவரும் இடத்து, இக்குறட்பாவிற்போலச் சிற்றின்பத்தை அதனோடு உறழ்ந்து கூறாது, பொருவியே கூறுவர் என்பதை,
“உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே”

என்னும் திருச்சிற்றம்பலக் கோவையான் உணர்க.

இன்னும் திருக்குறளில், சிவபெருமானது இறைமையைக் குறிப்பான் உணர்த்தி வரும்
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”

என்பதினும்
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்”

என்பதினும் இகழ்ச்சிக் குறிப்புச் சிறிதும் இன்மை காண்க.

இவற்றுள் முன்னையது மார்க்கண்டேயனார் வரலாற்றைச் சுட்டி (மணக்குடவர் உரையைக் காண்க). தன்னைத் தவத்தோன் வழிபடுவோரை இறப்பு அச்சத்தின் நீக்கி உய்யக் கொள்ளும் இறைவனது பேராற்றலைக் குறிப்பிக்கின்றது; பின்னையது இறைவன், முன் தன்னை எண்ணாது இகழ்ந்த தேவர்கள் பின் சரண்புகுந்தபோது, அவர்கள்மாட்டுக் கண்ணோடி, நஞ்சுண்டு உய்வித்து அமுதீந்த வரலாற்றைச் சுட்டிக் குற்றமுடையோரையும் நெறிபடக் காப்பாற்றி அருளும் அவனது ஒப்பற்ற பேரருளைக் குறிக்கின்றது. இவை இரண்டும் இறைமைக் குணங்களாதல் காண்க.
(நன்றி: சித்தாந்த வித்தகர் க.வச்சிரவேல் முதலியார் எழுதிய “திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே” புத்தகம்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Empty Re: திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே!

Post by பத்மநாபன் Wed Dec 05, 2012 8:01 pm

அருமையான கட்டுரை நண்பரே!
நன்றி
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum