Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சனாதன தர்மம் என்பது என்ன?
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
சனாதன தர்மம் என்பது என்ன?
Dheeran wrote:.
வணக்கம்
தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரத புண்ணியபூமியின் வாழ்க்கைமுறைக்கு இந்துசமயம் என்று பெயர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு தனி மதம் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட, தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறை ஆகும். இந்துமதம் எனும் பெயர் வெளினாட்டினரால் நமக்கு வைக்கப்பட்ட பெயர் வழக்கம்போல் அப்பெயரே நிலைத்துவிட்டது. நம்மவர்கள் அந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை தர்மம் என்றே அழைத்தனர்.
நம் முன்னோர்கள் அதை சனாதனதர்மம் என்று அழைத்தனர். அதன் பொருள், அது ஆதியந்தமில்லாதது மனிதனால் தோற்றுவிக்கப்படாத புராதான நெறி என்பதாகும்.
எப்படி இறைவனை, பரம்பொருளை ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடியாதோ அதேபோன்று அப்பரம்பொருளை உணரவும், அடையவும் உண்மையாகத் துணைநிற்கும் இந்த தர்மநெறியையும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது.
இதன் கடவுள் கோற்பாட்டை ஆராய்வதற்கு கீழ்காணும் பாடலை ஆதாரமாகக் கொள்ளலாம்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி, நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!- மணிவாசகர் திருவாசகம்
கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், அவர் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றார். பல்வேறு நாம ரூபங்களில் வெளிப்படும் ஓர் இறைவனை அதே பல்வேறு நாம ரூபங்களில் வழிபடுவது இயல்பானது சிறப்பானது.
சனாதனதர்மத்தில் வழிபடப்படும் திருக்கோலங்களின் அடிப்படையில் ஆறு சமயங்கள் நிறுவப்பட்டுள்ளன அவை
1) சைவம் – சிவன்
2) காணாபத்யம் – கணபதி
3) கௌமாரம் – முருகன்
4) சாக்தம் – சக்தி
5) வைணவம் – விஷ்ணு
6) சௌரம் – சூரியன்
ஆக இவற்றில் எந்த சமயத்தை எடுத்துக்கொண்டாலும் அது சனாதனதர்மம்தான், எப்படி நமது உடல் உறுப்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரே மனிதனாக உள்ளோமோ அதைப்போன்றதுதான் இதுவும்.
நமது குழந்தை, ஒளிந்துகொண்டு தலையைமட்டும் காட்டி விளையாடினால் நாம் அதன் பெயரைச்சொல்லி அழைப்போமா அல்லது தலையே வா என்று அழைப்போமா?
மேலும் வர்ணாசிரம நிலை இந்த 6 சமயங்களுக்கும் பொதுவானது, இதை இன்று மற்ற அனைத்துசமயங்களிலும் காணலாம். இங்கு வர்ணம் என்பது வேறு சாதி என்பது வேறு
சைவசமயத்திலும் 1)பிரமச்சரியம், 2)கிரகஸ்தம், 3)வானப்பிரஸ்தம், 4) சந்யாசம். ஆகிய நிலைகளைக் கடைபிடிதோர் இருந்தனர்.
வேறுபடும் சமயமெல்லாம் புகுந்துபார்க்கின்
விளங்குபரம்பொருளேநின் விளையாட்டல்லால்
மாறுபடுங்கருத்தில்லை முடிவின்மோன
வாரிதியினதித்திரள்டோல் வயங்கிற்றம்மா. – தாயுமானவர்
மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் கீழ் காணும் தொடர்புகளுக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
நன்றி
இந்துமதம்-ஓர்அறிமுகம்
ஜாதி மற்றும் வர்ணாசிரமம்
யார் ஆரியன்?
மிகவும் சிரத்தையோடு அனைவருக்கும்புரியும்படி பதிவிட்டுள்ளீர்கள் நன்றி.
துணிவுடன் ஆதாரபூர்வமாக தாங்கள் பதிப்பிற்கும் பதிவுகளுக்கு எங்களது நண்பர்கள் மத்தியில் ஒரு ரசிகார்கூட்டமே உள்ளது. தொடர்ந்து பதிவிடுங்கள் அவற்றைக்காண ஆவலாக உள்ளோம்
வாழ்த்துக்கள்..
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Re: சனாதன தர்மம் என்பது என்ன?
நண்பர் தண்டாயுதபாணி அவர்களுக்கு எனது நன்றிகள்.
உங்களைப்போன்றோர் தரும் ஆதரவே எனக்கு தூண்டுகோலாக உள்ளது. உங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களைப்போன்றோர் தரும் ஆதரவே எனக்கு தூண்டுகோலாக உள்ளது. உங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum