Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!
சிவபெருமானைப்பற்றி ஞானசம்பந்தர் பாடியபோது முதன்முதலாக “தோடுடைய செவியன்” என்று பாடினார். செவியன் என்று சொன்னாலே போதும். தோடுடைய செவியன் என்று சொன்னால் அதிலே ஒரு நயம் இருக்கிறது. இந்தத் தேவாரம் எல்லார் காதிலேயும் விழுந்த தேவாரம்தான். அச்வதரன், கம்பளதரன் என்று இரண்டு கந்தர்வர்கள் இருந்தார்கள். இசை நுணுக்கத்திலே பெரியவர்கள். அவர்கள் பாடலைக் கேட்டு ரசிக்கிறவர்கள் யாரும் இல்லை. உயர்ந்த பாடலைக் கேட்பதற்கு தனி ஞானம் வேண்டும்.
இசையிலேயே மிகப்பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி”
வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் 5000 ஆண்டு. முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
திருமுருகாற்றுப்படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என்று வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”
என்று வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத்துளையிட்டு வாசித்தாராம். யார்? சுப்பிரமணிய சுவாமி.
தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே, அந்தக்குடும்பமே சங்கீதக் குடும்பம். சிவபெருமான் ஆடவல்லான்; பாடவல்லான். நாட்டியக் கலையிலும் நடராஜா. வீணை வாசிப்பார். அவருக்கு வித்யாபதி என்று பெயர். இந்த இரண்டு கந்தர்வர்களும் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சுவாமி ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். அவர்கள் வணங்கி, சுவாமி! எங்களுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்!” என்றனர். “என்ன?” என்று கேட்டார். “24 மணி நேரமும் நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். தேவரீர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கேட்டு எங்கள் பாட்டை ரசிக்க வேண்டும்” என்றார்கள்.
படைத்தல்,காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கின்றவர், அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு 24 மணி நேரமும் எப்படிப் பாட்டைக் கேட்பது? பரமன் வரம் கொடுத்தால் மாற்ற மாட்டார். என்ன பண்ணினார்? இரண்டு பேரையும் தோடாகப் பண்ணிக் காதிலே மாட்டிக் கொண்டாராம். பாடிக்கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் அல்லவா !
(செஞ்சொல் உரைக்கோவை – வாரியார் புத்தகத்தில் இருந்து)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum