இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சிவன் என்பர் யார்?

Go down

சிவன் என்பர் யார்? Empty சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:05 am

சிவன் என்பர் யார்? 275px-Shiva_Bijapur
சிவன் (Śiva, சிவ,) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெரும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தேற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவனையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.

இவரை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து மொகெஞ்சதாரோ நாகரீங்களில் இவரை வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது.[1]

இவர் நடனம், யோகம் என கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், உமையம்மையுடன் கையிலை மலையில் வசிப்பதாகவும் சைவர்களாலும், இந்துக்களாலும் நம்பப்படுகிறது. உமையம்மை தட்சனின் புதல்வி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்து சிவனை மணந்து, பின் தட்சனின் யாகத்தில் விழுந்து இறந்ததாகவும், பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்து சிவனை மணந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் பார்வதி தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற குழந்தைகளும் உள்ளனர். அத்துடன் சிவபெருமான் தட்சனை அழிக்க தோற்றுவித்த வீரபத்திரனும், திருமால் மோகினியாக அவதாரம் எடுத்த போது பிறந்த ஐயப்பனும் சிவ குழந்தைகளாக கருதப்படுகிறார்கள்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:09 am

சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்

இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.
இறையியல்
பிரிவுகள்
இலக்கியம்
தலங்கள்
சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாக வழிபட்ட சேயோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.[1] முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன.சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர். உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறது.

எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயாமல் வரம் தருவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். மேலும் சடாமுடியுடையதால் சடையாண்டி, சூலாயுதத்தினை வைத்திருப்பதால் திரிசூலன், மூன்றுகண்களை உடையதால் முக்கண்ணன் என தோற்றத்தினை வைத்தும் பல பெயர்களின் அழைக்கப்படுகிறார். அத்துடன் கையிலாய மலையில் வசிப்பதால் கயிலைவாசன் எனவும், சுடுகாட்டில் வசிப்பதால் சுடலையாண்டி எனவும் வசிப்பிடம் கொண்டும் பல பெயர்களின் அறியப்பெறுகிறார்.

அடைக்கலம் காத்தான் எனத் தொடங்கி யாழ்மூரிநாதன் வரை ஆயிரம் தமிழ்ப்பெயர்களும் சிவபெருமானுக்கு கூறப்படுகின்றன.மேலும் சிவபெருமானுடைய நூற்றியெட்டு பெயர்கள் சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி எனும் தொகுப்பாகவும், சிவபெருமானுடைய ஆயிரம் பெயர்களை கொண்டது சிவ சஹஸ்ரநாமம் எனும் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
இல்லறம்
ஆதிசக்தியும் அவதாரங்களும்

சிவபெருமான் அண்ட சராசரங்களை உண்டாக்குவதற்காக தன்னில் இடப்பக்கத்தினை சக்தியாக பிரித்தார். ஆதி மூலவரான சிவபெருமானிலிருந்து சக்தி பிரிந்ததால் ஆதி சக்தி எனப்பட்டார். சிவபெருமானைப் போல ஆடல் கலையில் வல்லவராகவும், சிவபெருமானுக்கு நிகரானவராகவும் ஆதி சக்தி உள்ளார்.
தாட்சாயிணி

சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சனின் புதல்வியாக பூமியில் பிறந்தார். இவர் தாட்சாயிணி என்றும் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். சிவபெருமான் மீது காதல் கொண்டு பிரஜாபதியின் விருப்பத்தினையும் மீறி சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையான பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றை கொய்து நான்கு தலைகளாக மாற்றிய சிவபெருமான் மீது பிரஜாபதி தட்சன் கோபம் கொண்டிருந்தார். எனவே சதி தேவியார் சிவபெருமானை திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் யாகக் குண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்க சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார்.
பார்வதி

சிவபெருமானை சதி தேவியாக அடைய இயலாத ஆதி சக்தி, மீண்டும் பூமியில் பர்வதராஜன் மைனாகுமாரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் பார்வதி தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார். பின் பார்வதி குழந்தையை காத்தருள வேண்டவே, சிவபெருமான் தனது பூத கணங்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆனையிட்டார். சிவ பூத கணங்களும் யானை தலையை கொண்டுவந்தன. சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் கணபதி என்றும் அறியப்படுகிறார்.

சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் முருகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை வாயு தேவன் சரவணப்பொய்கை நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார்
கங்கை

பர்வதராஜன் மற்றும் மைனாவதி தம்பதியினரின் மகளான கங்கை, சிவபெருமானிடம் என்றும் புனித தன்மை உடையவளாக திகழ வரம் பெற்றார். இதனால் தேவலோகத்தினை புனிதம் செய்ய இந்திரன் அழைப்பால் தேவலோக நதியாக மாறினாள். பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க கங்கை நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கி தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து கங்கையை பூமிக்கு வரும் பொழுது பிரவாகத்தினை தடுத்து காத்தருள வேண்டினார். பகிரதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கங்கையை சடாமுடியில் தாங்கி பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இதனால் சிவபெருமான் கங்காதரன் என்று பெயர்பெற்றார்.
மோகினி

மகிசாசுரனின் தங்கையான மகிசி பிரம்மாவை தவத்தினால் மகிழ்வித்து சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே தன் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கினாள். அவ்வரத்தினால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமை செய்துவந்தமையால் திருமால் மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் கூடி ஐயனார் என்ற மகனைப் பெற்றார். இவரே ஐய்யப்பன் என்றும் அறியப்படுகிறார்.

சிவபெருமானது ஐந்து குமாரர்களான பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆகியோர் பஞ்ச குமாரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:10 am

சிவனின் தோற்றம்

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்டது சிவன் இல்லை என்று சில ஆராய்ட்சியாளர்கள் கூறுகின்றனர்
பசுபதி முத்திரை

தொன்மையான மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டுபிடிக்கப்பெற்ற ஒரு முத்திரை, சிவ உருவத்தின் முன்னோடியாக கருதப்பெறுகிறது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அகழ்வாராய்ச்சி அறிஞரான சர் ஜான் மார்சல் மற்றும் பலர் இந்த முத்திரை சிவனது தோற்றத்தினைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்கள்.
ருத்ரன்

ருத்ரன் சிவபெருமானின் அம்சமாவார், புராணங்களில் இவரை பிரம்மா தோற்றுவித்ததாகவும், பிறந்ததிலிருந்து அழுது கொண்டிருந்தவரை சமாதானம் செய்ய பிரம்மா பல பெயர்களை இட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தில் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாக கருதப்பெறுகிறார்கள். வேதங்களில் ருத்ரன் மிக ரௌத்திரமாக கடவுளாகவும், அழிக்கும் தெய்வமாகும், உறுமும் புயலின் கடவுளாகவும் கூறப்பெறுகிறார்.

இந்து மதத்தின் பழமையான வேதத்தில் ஒன்றான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாக கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாக சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான ருத்ரர்களின் தகப்பனாகவும் அறியப்பெறுகிறார்.
வேதகால கடவுளுக்கான அடையாளங்கள்

அக்னி தேவன், வாயு தேவன், இந்திரன், பிரஜாபதி போன்ற வேதக் கடவுள்களுடன் சிவனுடைய சிறப்பு வேதத்தில் விளக்கப்பெற்றுள்ளது.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:13 am

இந்து மதத்தில் இறைவன் நிலை
அகிலாண்ட தோற்றமும் ஊழிக்காலமும்


சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவராகவும், ஊழிக்காலம் எனப்படும் பிரளயத்தில் அவர் மட்டுமே நிலைத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

பல கோடி கல்ப ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் மட்டுமே இருந்தார். அவர் தன்னுடைய ஒரு பாதியைச் சக்தி தேவியாகப் பிரித்தார். இருவரும் ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசங்களைத் தோற்றுவித்தனர். ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றுக்கு உரிய சிவபெருமான், படைத்தலுக்காகப் பிரம்மாவையும், காத்தலுக்காகத் திருமாலையும், அழித்தலுக்காக ருத்திரனையும் படைத்தார். அவர்களால் பதினான்கு உலகங்களைக் கொண்ட அகிலாண்டம் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு யுக முடிவிலும் வருகின்ற பிரளயம் போல் இல்லாமல் மகாபிரளயத்தில் அனைத்து அகிலாண்டங்களும் அழிகின்றன. அக்காலத்தில் சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடி ஆதிசக்தி, மும்மூர்த்திகள், பதினென்கணங்கள், மனிதர்கள் என அனைவருக்கும் முக்தியளித்து தன்னுள் இணைத்துக் கொள்கிறார். சிவபெருமானின் ஊழித்தாண்டவம் முடியும் பொழுது அவர் மட்டுமே நிலைத்திருப்பதாக இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.
சைவம்

முதன்மைக் கட்டுரை: சைவ சமயம்

சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.சிவ வழிபாடினை என்பது சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார். இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.
பஞ்சயதனா பூசை

ஆதி சங்கரரால் பொழிவு பெற்ற ஸ்மார்த்தம் சமயத்தில் சிவன் முதன்மைக் கடவுள்களில் ஒருவராக கருதப்பெறுகிறார். உமையம்மை, கணபதி, திருமால், சூரியன் போன்றார் பிற கடவுளாவர்.
திரிமூர்த்தி

திரி என்பது மூன்று என பொருள்தரும். திரிமூர்த்தி என்பது மூன்று பெரும் சக்திகளுடைய கடவுள்களை குறிப்பதாகும். இதனை மும்மூர்த்திகள் என்றும் கூறுவர்.

பிரம்மா - படைப்பின் கடவுள்
திருமால் - காக்கும் கடவுள்
ருத்ரன் (சிவ அம்சம்)- அழிக்கும் கடவுள்.

அடையாளங்கள் மற்றும் குணநலன்கள்
அடையாளங்கள்

சிவபெருமான் ஞானக்கண் என்று கூறப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், அவருடைய ஆயுதமாக திரிசூலம் உள்ளது. அதனுடன் இசைக்கருவியான உடுக்கை (டம்டம்) இணைந்துள்ளது. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.

தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்க சிவபெருமான் திகம்பர மூர்த்தியாக சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்பினர், அதன் தோலினையும் உரித்திக் கொண்டார். கொலையாயுதமான மழுவினை எய்தனர், அதனை தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக சிவபெருமான் இணைத்துக் கொண்டார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.

காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றை சிவபெருமான் ஆபரணங்களாக தரித்துக் கொண்டார். பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு)வாசுகி பாம்பினால் கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர் என்பனவெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாக கூறப்படுகிறது.
சிவனின் குணங்கள்

சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.

தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.
வழிபாடு

சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

சிவனின் ஐந்து தொழில்கள்

சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.

நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு:

ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலை குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:15 am

சிவனின் ஐந்து முகங்கள்

சத்யோ சோதம்
வாமதேவம்
அகோரம்
தற்புருடம்
ஈசானம் இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
ஐந்து வடிவங்களும், தொழில்களும், திசைகளும்
பெயர் தொழில் திசை வடிவம் நிறம்
சத்யோ ஜாதம் படைத்தல் மேற்கு நிலம் பால் நிறம்..
வாமதேவம் காத்தல் வடக்கு நீர் சிவப்பு நிறம்
அகோரம் அழித்தல் தெற்கு நெருப்பு அஞ்சன (கறுப்பு) நிறம்
தற்புருடம் மறைத்தல் கிழக்கு காற்று மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம் அருளல் வடகிழக்கு ஆகாயம் படிக நிறம்.

சிவனது தனித்துவ அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நீலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்

சிவ அவதாரங்கள்

சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், சிவபெருமான் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்மபுராணம் கூறுகிறது. அவையாவன, ஸ்வேதா, சுதாரா, மதனன், சுஹோத்திரன், கங்கணன், லோகாக்ஷி, ஜெய் கிஷ்ஹவ்யன், தாதிவாகன், ரிஷபன், பிருகு, உக்கிரன், அத்திரி, கவுதமன், வேதசீர்ஷன், கோகர்ணன், ஷிகந்தகன், ஜடமாலி, அட்டஹாசன், தாருகன், லங்காலி, மகாயாமன், முனி, ஷுலி, பிண்ட முனீச்வரன், ஸஹிஷ்ணு, ஸோமசர்மா, நகுலீஸ்வரன் என்பனவாகும்.

இவற்றில் நகுலீஸ்வரன் என்பவர் பாசுபத சைவத்தின் ஒரு பிரிவான நகுலீச பாசுபதத்தினை உருவாக்கியவர் ஆவார்.
சிவ வடிவங்கள்

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
மகேசுவரமூர்த்தங்கள்

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன, சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர், பிட்சாடனர், காமசம்ஹாரர், கால சம்ஹாரர், சலந்தராகரர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, கிராதகர், கங்காளர், சக்ரதானர்,கஜமுக அனுக்கிரக மூர்த்தி, சண்டேச அனுக்கிரகர், ஏகபாதமூர்த்தி, லிங்கோத்பவர், சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நீலகண்டர் என்பனவாகும்.
சிவஉருவத்திருமேனிகள்

மகேசுவரமூர்த்தங்களுடன் இணைந்து மேலும் பல சிவரூபங்கள் இணைந்து சிவஉருவத்திருமேனிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை மொத்தம் அறுபத்து நான்காகும். அவையாவன இலிங்க மூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, முகலிங்க மூர்த்தி, சதாசிவ மூர்த்தி, மகா சதாசிவ மூர்த்தி, உமாமகேஸ்வர மூர்த்தி, சுகாசன மூர்த்தி, உமேச மூர்த்தி, சோமாஸ்கந்த மூர்த்தி, சந்திரசேகர மூர்த்தி, இடபாரூட மூர்த்தி, இடபாந்திக மூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, புஜங்கத்ராச மூர்த்தி, சந்த்யான்ருத்த மூர்த்தி, சதாநிருத்த மூர்த்தி, சண்டதாண்டவ மூர்த்தி, கங்காதர மூர்த்தி,கங்காவிசர்ஜன மூர்த்தி , திரிபுராந்தக மூர்த்தி, கல்யாணசுந்தர மூர்த்தி, அர்த்தநாரீஸ்வர மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, ஜ்வாரபக்ன மூர்த்தி, சார்த்தூலஹர மூர்த்தி, பாசுபத மூர்த்தி, கங்காள மூர்த்தி, கேசவார்த்த மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, சரப மூர்த்தி, சடேச அனுக்ரஹ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, காமதகன மூர்த்தி, இலகுளேஸ்வர மூர்த்தி, பைரவ மூர்த்தி, ஆபத்தோத்தரண மூர்த்தி , வடுக மூர்த்தி, க்ஷேத்திரபால மூர்த்தி, வீரபத்ர மூர்த்தி, அகோர மூர்த்தி, தட்சயஞ்யஷத மூர்த்தி, கிராத மூர்த்தி, குரு மூர்த்தி, அசுவாருட மூர்த்தி, கஜாந்திக மூர்த்தி, சலந்தரவத மூர்த்தி, ஏகபாதத்ரி மூர்த்தி, திரிபாதத்ரி மூர்த்தி, ஏகபாத மூர்த்தி, கௌரிவரப்ரத மூர்த்தி,சக்கரதான மூர்த்தி, கௌரிலீலாசமன்வித மூர்த்தி, விசாபகரண மூர்த்தி, கருடன் அருகிருந்த மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி, கூர்ம சம்ஹார மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, வராக சம்ஹார மூர்த்தி, பிரார்த்தனா மூர்த்தி, இரத்த பிட்சா பிரதான மூர்த்தி, சிஷ்ய பாவ மூர்த்தி .
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:20 am

நடராசர்

நடனம் ஆடும் நடராச வடிவம்

நடனக் கலையின் கடவுளாக நடராசர் அறியப்படுகிறார். நடராசர் என்பது சிவன் தாண்டவம் ஆடுகின்ற கோலமாகும். இத்திருக்கோலத்தினை சபேசன் என்றும், கூத்தன் என்றும் அழைக்கின்றார்கள். சபேசன் என்றால் சபையில் ஆடுகின்ற ஈசன் என்றும், கூத்தன் என்றால் கூத்து என்ற கலையில் ஈடுபடுகிற ஈசன் என்றும் பொருள்படும். ஆங்கிலத்தில் "the Lord of the Dance" என்றும் சிவன் புகழப்படுகிறார்.
அர்த்தநாரீஸ்வரர்
11ம் நூற்றாண்டினைச் சார்ந்த சோழர் காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலை

.அர்த்தநாரீஸ்வரர்

சிவனும் சக்தியும் இணைந்த திருவுருவத்தினை அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் காட்சிதருகின்றனர். தன் இதயம் இருக்கும் இடப்புறத்தினை உமையம்மைக்கு பகிர்ந்துள்ளார் சிவன் என்றும் கூறுவர்.

தட்சிணாமூர்த்தி


பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வருக்கும் ஞானத்தினை போதிக்க சிவபெருமான் எடுத்த உருவமே தட்சிணாமூர்த்தியாகும். இந்த திருவுருவத்தில் பதின் பாலகராக சிவபெருமான் காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கும்.

திரிபுராந்தகர்


தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த திருவுருவத்திற்கு திரிபுராந்தகர் என்று பெயர்.

பிட்சாடனர்

அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாக சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.

வீரபத்திரர்


வீரபத்திரர் எம்பெருமான் சிவபெருமானின் மிகவும் உக்கிரமான ரூபமாகும்.சிவ பூசையில் தவறு செய்வோரையும் சிவ பூசைக்கு ஊறு விளைவிப்போரையும் தண்டிக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்.தக்கனின் மகள் தாட்சாயிணியாக அவதரித்த சக்தி பருவம் எய்தியவுடன் எம்பெருமான் மீது காதல் கொண்டு தவமியற்றி சிவபெருமானை தன் மணாளனாக்கிக் கொண்டார்.பிறப்பால் மன்னர் குலத்தை சேர்ந்த தக்கன் தன் மகள் யோகியர்களின் தலைவனான சிவபெருமானை மணம் செய்த்தை பொருத்துக் கொள்ள இயலவில்லை.சிவ பெருமானை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் யாகம் வளர்த்து சிவன் தவிர்த்து மற்ற கடவுளனைவர்க்கும் அழைப்பு விடுத்ததுடன் நில்லாமல் சிவனிற்கு அவிர் பாகம் தர மறுத்தான்.இதனால் சினமுற்ற சிவபெருமான் வீர பத்திரன் ரூபமெடுத்து தக்கனின் யாகத்தையும் தக்கனையும் அழித்தார்.
சிவ அம்சங்கள்

சிவபெருமானின் அவதாரங்கள், வடிவங்கள் இவற்றைத் தவிர்த்து சில இறைவன்கள் சிவ அம்சமாக கருதப்படுகிறார்கள். சைவ சமயம் அனைத்து கடவுள்களையும் சிவ அம்சம் என்கிறது. அதன் அடிப்படையில் ஆதிசக்தி, முருகன், விநாயகன், வீரபத்திரன், பைரவர், உருத்திரன் ஆகியோரை சிவ அம்சமாக விவரிக்கிறது. வைணவ சமயம் திருமால், பலராமர், ஆதிசேசன், அனுமார், ஜாம்பவான்ஆகியோரை சிவ அம்சமாக கூறுகிறது.

இறைவன், இறைவியர் மட்டுமல்லாத அஃறினையான பொருள்களும் சிவ அம்சம் நிறம்பியதாக நம்பப்படுகிறது. அவையாவன ருத்திராட்சம், குத்துவிளக்கின் மேற்பாகம், யோகக் கலையில் பிங்கலை என்பனவாகும்.
கடவுளுடனான உறவு

இந்து தொன்மவியல் கூறப்படுகின்ற கடவுள்களுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான உறவு நிலைப்பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
திருமால்

வைணவர்களின் முழுமுதற்கடவுளான திருமால் சிவபெருமானின் மனைவியான உமையம்மையின் அண்ணாக போற்றப்படுகிறார். இதனால் திருமால் சிவபெருமானின் குழந்தைகளான விநாயகருக்கும், முருகனுக்கும் மாமனாகவும் அறியப்படுகிறார்.

படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கும் திருமாலிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற கருத்துவேறுபாடு எழுந்த பொழுது, சிவபெருமான் லிங்கோத்தபவராக காட்சியளித்தார். அவருடைய அடியை காண திருமால் வராக அவதாரம் எடுத்துச் சென்றதாகவும், பிரம்மா முடியைக்காண அன்னமாக எடுத்துச் சென்றதாகவும் இருவரும் அதில் தோல்வியடைந்து சிவனையே முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொண்டதாகவும் இந்து நூல்கள் கூறுகி்ன்றன. இதனை விளக்கும் பொருட்டு லிங்கோத்பவர் திருமேனி சிவாலயங்களில் அமைக்கப்பெறுகிறது.

தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகவரம்பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என பயந்த தேவர்கள், திருமாலிடம் வேண்டினர். திருமாலும் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினை காண இயலாத சிவபெருமான் திருமாலின் மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய திருமாலுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மன்

இலிங்கோத்பவராக காட்சியளித்த சிவபெருமானின் முடி தேடி சென்ற பிரம்மா, சிவமுடியிலிருந்து கீழே விழுந்த தாழ்ம்பூவின் துணையோடு தான் சிவமுடியை கண்டதாக பொய்யுரைத்தார். இதனால் பிரம்மாவின் வழிபாடு எங்கும் இல்லாதபோக சாபம் கிடைத்தது.

பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான தட்சன் கடுந்தவம் இயற்றி உமையம்மையை மகளாக பெற்றார். தந்தைக்கு மறுக்கப்பட்ட பூசையால் சிவனை வெறுத்தார். உமையம்மையே தாட்சாயினியாக அவதாரம் எடுத்தது அறிந்திருந்தும், சிவபெருமானுக்கு மணம் செய்விக்க மறுத்தார். இருந்தும் மும்மூர்த்திகளும், தேவர்களும் வலியுறுத்தி சிவ தாட்சாயிணி திருமணத்தினை நடத்திவைத்தனர்.
ஆதிசக்தி

கல்ப கோடி ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் மட்டுமே இருந்தார். அவர் தன்னில் ஒரு பாதியை ஆதிசக்தியாக வெளிபடுத்தினார். இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை தோற்றுவித்தனர் என சைவ நூல்கள் கூறுகின்றன. சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி பூமியில் தட்சனின் மகள் தாட்சாயினியாக பிறந்து சிவபெருமானை மணந்தார். தட்சன் சிவபெருமானை வெறுத்தமையால், தன்னுடைய யாகத்திற்கு சிவபெருமானை அழையாமல் இருந்தார். இதை அறிந்த தாட்சாயினி தட்சனின் யாகத்தினை பூர்த்தியாகமல் செய்ய அதில் விழுந்து மறித்தார். பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்தார். கடுந்தவம் புரிந்து சிவபெருமானின் மனைவியானார். இத்தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற இருகுழந்தைகள் உள்ளனர்.
விநாயகன்

கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையை தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.
முருகன்

சூரன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றை கார்த்தைகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.

கயிலை வந்த பிரம்மனிடம் படைப்பின் மூலமான பிரணவத்தின் பொருள் கேட்ட முருகன், பிரம்மன் அதை அறியாததால் சிறையில் இட்டார். தேவர்கள் வேண்ட சிவபெருமான் பிரம்மனை விடுக்க முருகனிடம் கோரி, பிரணவத்தின் பொருளை தனக்கு உரைக்கும் படி கூறினார். சிவபெருமானுக்கு குருவாக இருந்து முருகன் உபதேசம் செய்தமையால் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
சிறுதெய்வங்கள்

இந்து சமயத்தில் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்பெறும் நாட்டார் தெய்வங்களில் பல தெய்வங்கள் சிவனுடைய அம்சமாக கருதப்படுகின்றன. மாசி பெரியசாமி, முனியப்பசாமி, தன்னாசியப்பன் என பல நாட்டார் தெய்வங்கள் சிவ வழிபாட்டிற்குள் வருகின்றன. சமணர்களின் மாசாத்தன் எனும் சிறு தெய்வம் சிவனின் மகனாக மாறியதாகவும் கருத்துண்டு [28] இந்த தெய்வங்கள் திருநீறு அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. இந்த தெய்வங்களின் பிரசாதமாக சைவ அடையாளமான திருநீர் வழங்கப்படுகிறது.
சிவ விழாக்கள்
மகா சிவராத்திரி


மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்நாளில் பா‌ர்‌வ‌தி தே‌வி, ‌சிவபெருமானை எ‌ண்‌ணி வ‌ழிப‌ட்டதாக சைவர்கள் நம்புகின்றார்கள்.
கார்த்திகை தீபம்

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
பிரதோசம்

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் தோன்றியது. இதனால் சகல உயிர்களும் மரணிக்குமென பயம்கொண்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். அவர் ஆலகால விஷத்தை அருந்தி உலகைக் காப்பாற்றினார். எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:20 am

சிவ விரதங்கள்

சிவபெருமானுக்காக சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.

சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:23 am

பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன்
கலிங்கத்துப்பரணி


இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமையமர்ந் துயர்மலை இருந்தனனாக (கலி. 38)

இமயமலையில் பிறந்த மூங்கில் வில்லை வளைத்தவன், ஈரத்தினை உடைய சடையை உடையவனாகிய இறைவன், இறைவியோடு கயிலை மலையில் இருந்ததனன் என்று இப்பாடல் கூறுகிறது.
புறநானூறு

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே ... (புறம். 91)

அதியமானிடமிருந்து நெல்லிக்கனியை பெற்ற ஔவையார், சிவபெருமானைப் போல நிலைபெற அதியமானை வாழ்த்துகிறார்.
புறப்பொருள் வெண்பாமாலை

கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் கேட்கவாய்
பண்ணவனைப் பாடிப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலவிடற் றானையென்
கையொத்து நேர்கூப் புக. (புறப்பொருள் வெண்பாமாலை கடவுள் வாழ்த்து)

பொருள்: எள்ளினில் எண்ணெய் எவ்வாறு ஒன்றாக உள்ளதோ அதைப்போன்று, விடத்தால் நீலம் பொருந்திய கழுத்தினை உடையவனை, என் இரு கண்களும் காணவும், காதிரண்டும் அவன் புகழ் கேட்கவும், வாய் அவன் மீது பல பண்களை (பாடல்களை) பாடவும் சொல்லெடுக்க, என் இரு கரங்களும் எடுத்து நேர்த்தியாய் கூப்பும்.
தேவாரம்

பன்னிரு திருமுறைகள் கொண்ட தேவாரம் பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். முதல் திருமுறை (சம்பந்தர் அருளியது)
இரண்டாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
மூன்றாம் திருமுறை (சம்பந்தர் அருளியது)
நான்காம் திருமுறை (அப்பர் அருளியது)
ஐந்தாம் திருமுறை (அப்பர் அருளியது)
ஆறாம் திருமுறை (அப்பர் அருளியது)
ஏழாம் திருமுறை (சுந்தரர் அருளியது)
எட்டாம் திருமுறை (திருவாசகம், மாணிக்கவாசகர் அருளியது)
ஒன்பதாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
பத்தாம் திருமுறை (திருமூலர் அருளிய திருமந்திரம்)
பதினொன்றாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
பன்னிரண்டாம் திருமுறை (சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)

ஒன்பதாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்[30]:

திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த் தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராயர்

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் பன்னிருவராவர்[30]:

திருவாலவாயுடையார்
காரைக்காலம்மையார்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
சேரமான் பெருமான் நாயனார்
நக்கீரர்
கல்லாடதேவ நாயனார்
கபிலதேவ நாயனார்
பரணதேவ நாயனார்
இளம்பெருமான் அடிகள்
அதிரா அடிகள்
பட்டினத்து அடிகள்
நம்பியாண்டார் நம்பி

இதனை அருளியோர் பின்வருமாறு:

திருஞானசம்பந்தர் (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகள்)
திருநாவுக்கரசர் அல்லது அப்பர் (நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறைகள்)
சுந்தரர் அல்லது சுந்தரமூர்த்தி நாயனார் (ஏழாம் திருமுறை)
வாதவூரடிகள் (மாணிக்கவாசகர்) (திருவாசகம், எட்டாம் திருமுறை)
திருமூலர் (திருமந்திரம், பத்தாம் திருமுறை)
சேக்கிழார் (பெரியபுராணம், பன்னிரண்டாம் திருமுறை)
அதிரா அடிகள்
இளம்பெருமான் அடிகள்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
கண்டராதித்தர்
கபிலதேவ நாயனார்
கருவூர்த் தேவர்
கல்லாடதேவ நாயனார்
காரைக்காலம்மையார்
சேதிராயர்
சேந்தனார்
சேரமான் பெருமான் நாயனார்
திருமாளிகைத் தேவர்
திருவாலவாயுடையார்
திருவாலியமுதனார்
நக்கீரர்
நம்பியாண்டார் நம்பி
பட்டினத்து அடிகள்
பரணதேவ நாயனார்
புருடோத்தம நம்பி
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
வேணாட்டடிகள்

புகழ் பெற்ற சிவத்தலங்கள்

சிவபெருமானை மூலவராக கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாக கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா என பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் முப்பீட ஸ்தலங்கள், பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச மன்ற தலங்கள், பஞ்ச பீட தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், பஞ்ச ஆசன ஸ்தலங்கள், பஞ்ச குரோச ஸ்தலங்கள், பஞ்ச லிங்க ஸ்தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள்,சப்த கைலாய தலங்கள், அட்டவீரட்டான தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள், நவ சமுத்திர ஸ்தலங்கள், தச வீராட்டன தலங்கள் எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள், ஆதி கைலாய தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல், தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல், தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல், தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தலங்களில் உமையம்மை, பிரம்மா, திருமால், இந்திரன், சப்தகன்னியர்கள், நவகிரகங்கள், தேவலோக மங்கைகள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் என பலர் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். வழிபட்டவர்களின் வேண்டுதல்களால் சிலதலங்கள் வழிபட்டோரின் சிறப்புதலமாகவும் அறியப்படுகின்றன.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:24 am

சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.
எண். தமிழ் வடமொழி
1. அடியார்க்கு நல்லான் பக்தவத்சலன்
2. அம்மையப்பன் சாம்பசிவன்
3. உடையான் ஈஸ்வரன்
4. உலகுடையான் ஜகதீஸ்வரன்
5. ஒருமாவன் ஏகாம்பரன்
6. கேடிலி அட்சயன்
7. சொக்கன் சுந்தரன்
8. தாயுமானவன் மாத்ருபூதம்
9. தான்தோன்றி சுயம்பு
10. தூக்கிய திருவடியன் குஞ்சிதபாதன்
11. தென்முகநம்பி, ஆலமர்செல்வன் தட்சிணாமூர்த்தி
12. புற்றிடங்கொண்டான் வன்மீகநாதன்
13. நடவரசன் நடராஜன்
14. பெருந்தேவன் மகாதேவன்
15. பெருவுடையான் பிருகதீஸ்வரர்
16. மாதொருபாகன் அர்த்தநாரி
17. மணவழகன் கலியாணசுந்தரர்
18. வழித்துணையான் மார்க்கசகாயன்
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:25 am

அஷ்டோத்திர சத நாமாவளி என்பது இந்துக் கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். இப்பெயர்களை கூறி பூசை செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

சில அஷ்டோத்திர சத நாமாவளிகளின் பட்டியல் கீழே,.

சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி
வீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி
கருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி
பைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி
குரு அஷ்டோத்திர சத நாமாவளி
சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி
கணேச அஷ்டோத்திர சத நாமாவளி
லலிதா அஷ்டோத்திர சத நாமாவளி
அம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி
ராகவேந்த்ர அஷ்டோத்திர சத நாமாவளி
ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி
கருட அஷ்டோத்திர சத நாமாவளி
அனந்தபத்மநாப அஷ்டோத்திர சத நாமாவளி
சீதாதேவி அஷ்டோத்திர சத நாமாவளி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:27 am

சிவனிடம் உபதேசம் பெற்றவர்களெனக் கருதப்படும் குருநாதர்கள் எட்டுப்பேராவர்.திருமூலரின் திருமந்திரத்தில் கூறியபடி -


"நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோடு எண் மரும் ஆகும்".

இதில் என்னோடு என்பது திருமூலரைக் குறிப்பதுவாகும்.

நந்திகள் நால்வர்

சனகர்
சனந்தனர்
சனாதனர்
சனற்குமாரர்


நந்தி தேவர்
சிவயோக மாமுனி
பதஞ்சலி
வியாக்கிராமர்
திருமூலர்
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:29 am

அட்ட மூர்த்தங்கள்

நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார். [1] அதனால் அவர் அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள். அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
தீ - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - சிதம்பரம்
சூரியன் - திருச்சிராப்பள்ளி
சந்திரன் - மதுரை
ஆன்மா - திருப்பெருந்துறை

பஞ்சபூத சிவத்தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)
நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி
தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.

தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
திருவாரூர்-அசபா தாண்டவம்.
மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம். அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)

தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

சப்த(ஏழு) விடங்க சிவத்தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.
வரிசை ஊரின் பெயர் மூலவர் தாண்டவம்
1 திருவாரூர் வீதிவிடங்கர் அசபா நடனம்
2 திருநள்ளாறு நகரவிடங்கர் உன்மத்த நடனம்
3 திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம் சுந்தரவிடங்கர் வீசி நடனம்
4 திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல் ஆதிவிடங்கர் குக்குட நடனம்
5 திருக்கோளிலி என்கிற திருக்குவளை அவனிவிடங்கர் பிருங்க நடனம்
6 திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்
7 திருமறைக்காடு என்கிற வேதாரண்யம் புவனி விடங்கர் கம்சபாத நடனம்
அட்டவீரட்டானக் கோயில்

சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை

திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
திருவதிகை - திரிபுரம் எரித்தது
திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது
வழுவூர் - யானையை உரித்தது
திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது
திருக்குறுக்கை - காமனை எரித்தது.
திருக்கடவூர் - எமனை உதைத்தது.

பஞ்ச கேதரங்கள்

பஞ்ச கேதார்
Kedarnath Temple.jpg
கேதார்நாத்
Tungnath temple.jpgRudranath temple.jpg
துங்கநாத் • ருத்ரநாத்
Madhyamaheswar.jpgKalpehswar.jpg
மத்மஹேஷ்வர் • கபிலேஷ்வர்
இப்பெட்டியை: பார் • உரை • தொகு

இமயமலைச் சாரலில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் முதலிய இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் சிவபெருமானை கேதரநாதன் என்றும் அழைக்கின்றார்கள்.

இடம் - சிவனின் பாகம்

கேதார்நாத் - உடல்
துங்கநாத் - புஜம்
ருத்ரநாத் - முகம்
மத்மஹேஷ்வர் - தொப்புள்
கபிலேஷ்வர் - தலைமுடி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:30 am

சிவன் என்பர் யார்? 250px-Kedarnath_Temple

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது

சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்=

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம்.

சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by ராகவா Thu Sep 12, 2013 1:32 am

ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும்

உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு.
உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
பஞ்ச பூத தலங்களின் சிறப்புக்கள்
பஞ்சபூத லிங்கங்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், தமிழகத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.
திருக்கச்சியேகம்பம் எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை:

காமாட்சியம்மன் கோயில்
ஏகாம்பரநாதர் கோயில்
வரதராஜபெருமாள் கோயில்
கைலாசநாதர் கோயில்
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

காஞ்சிபுரத்தைப் பாடியோர்கள் / நெருங்கிய தொடர்புடையவர்கள்: நாயன்மார்கள்:

அப்பர், சுந்தரர் , சம்பந்தர், மாணிக்கவாசகர், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

ஆழ்வார்கள்:

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார்,

அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியர், இராமனுஜர்

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களிலும் பரிபாடல், மணிமேகலைக் காப்பியத்திலும் உள்ளது.
இப்பகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி.
சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பைப் பெற்றது இந்நகரம்.
இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.

திருவானைக்கா, திருச்சி

திருவானைக்கா என்ற பெரிய சிவன் கோவில் நகரம் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது, இதனை. திருஆனைக்கா, திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்றும் அழைப்பர். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது.

திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம் - நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம் என வழங்கப்படுகிறது.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இது பாடல் பெற்ற தலம் ஆகும்

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்: உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒருவர் யானையாகவும், மற்றொருவர் சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையுள் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி, சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

மற்றொரு சன்னிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனான்.

காணக்கிடைக்காத பல அரிய சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளன: :மூன்று கால் முனிவர் சிலை.

ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற தத்துவத்தையும் விளக்குகிறது.
நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.

பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர். இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற தலமாகும்.

ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்.

சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.

சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள்.
"இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

”ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” --- பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதாகும்.

சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை ‘வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள்.

மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.

அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்’ (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார்.

இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளினார் இந்த இரண்டு முருகனின் தரிசனமும் மிகவும் விசேஷம்.

பிரம்ம லிங்கம், யோக நந்தி, பாதாள லிங்கம், கிளி கோபுரம், அருணகிரி யோகேசர் ஆகியவை முக்கியமாக தரிசனம் செய்ய வேண்டியவையாகும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர்.

திருக்காளத்தி

இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

திருக்காளத்தி-காளஹஸ்தீஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்குகிறது.

இக்கோவில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.

கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

இக்கோவிலில் ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

சீ-சிலந்தி;

காளத்தி என்பது காளம்-பாம்பு;
அத்தி-யானை
சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது.
இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.

இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இத்தலம் கண்ணப்பர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.

இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களிலும், பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும், 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது.

500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவில் இராசகோபுரம், 2010 ஆம் ஆண்டு, மே மாதம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அதே இடத்தில் இராசகோபுரம் எழுப்ப ஆந்திர அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது.[8]

சிதம்பரம்

சிதம்பரம் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர். இது ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது.

திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயம்(இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்) மட்டுமல்லாது, வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாளாகப், புண்டரீகவல்லித் தாயாருடன் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கிறார்.

ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடைய இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும்.

மூலவர் சிலை இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதால் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளது.

பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பரம் ஆலயத்தில் பூசித்து வரப்படுகிறது.

இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.

இங்கு, நடராசர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.

சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்குமளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை.

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.

சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணமாக வழங்குகின்றனர்.

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றிப் பாடப்பெற்றுள்ளது.

சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் ஆலயப்பணிகள் பல புரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சிவன் என்பர் யார்? Empty Re: சிவன் என்பர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum