இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அனலைதீவு பெரியபுலம் அருள்மிகு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார் கோயில்

Go down

அனலைதீவு பெரியபுலம் அருள்மிகு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார் கோயில் Empty அனலைதீவு பெரியபுலம் அருள்மிகு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார் கோயில்

Post by ராகவா Sat Sep 28, 2013 2:48 pm

அனலைதீவு பெரியபுலம் அருள்மிகு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார் கோயில் Pil-300x225
அனலைதீவின் பூர்விகம் தொடர்பிலான கருத்தாடல்களுக்கு அப்பால் ஈழ வரலாற்றின் சோழ மன்னர் ஆட்சிக்காலமே எம்மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை விரிவுபடுத்தின எனலாம். அந்த வகையில் காராளும் பூமியில் நன்செய் தரையிலும் கலம் கொண்டு பயிர் செய்தும் ஆழிமாக் கடலிலும் கலம் கொண்டு திரவியம் தேடியே வாழ்ந்து வந்தனர். நூறு விழுக்காடு சைவசமயிகளான அவர்களின் வாழ்வினை சமய அனுட்டானங்களே ஆற்றுப்படுத்தும் நன்னெறி ஆகும்.
இயற்கையை வழிபாடு இயற்றினர் அதுவே புலியேத்தி நாகேஸ்வரம் எனும் தான்தோன்றி ஈச்சரம் ஆகும். பெண்மையை போற்றியே மூன்று அம்மன் ஆலயங்களான இராஜேஸ்வரி, மனோன்மணி, கௌரி அம்பாள் என்பன தான்தோன்றியாய் எழுந்தருளியது. பின்னர் பண்பட்ட தமிழர் வாழ்வின் வீரத் தெய்வமாம், தமிழ் கடவுள் முருகவேள் அவரின் சக்தியான வேல் வைத்து ஆலயம் அமைத்தனர். இதுவே அனலையின் மக்கள் ஆவாகனம் செய்த முதல் ஆலயம் அதுவே ஊடு முருகன் கோவிலாகும்.
இந்நிலையில் தமிழ் நாட்டிலிருந்து நெடுந்தீவு மற்றும் அனலைதீவில் குடியமர்த்திய தனிநாயக முதலியார் மற்றும் அவர் சகோதரர் கனகராய முதலியார் தலைமையில் வந்த குடிமக்கள் தொகுதியில் அந்தணரும் அடங்குவர். அவர்கள் தம்முடன் கொண்டுவந்த இறை விக்கிரங்களில் இரு விநாயகர் சிலைகளில் ஒன்றை நெடுந்தீவிலும் மற்றயதை அனலைதீவிலும் ஆவாகனம் செய்வித்தனர்.
அவ்வாலயங்களே நெடுந்தீவு நெழுவினிப் பிள்ளையார் மற்றும் அனலைதீவு பெரியபுலம் பிள்ளையார் ஆலயங்களாகும். இவ்விரு தீவுகளை பரிபாலனம் செய்துவந்த உடையார் வமிசத்தினரே அவ்விரு ஆலயங்களையும் நிருவகித்தனர். தற்போது பொதுக்கோயிலாக விளங்கும் அதேவேளை பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புனரமைப்புகள் இடம்பெறுகின்றது.
இந்து சமயத்தின் முதன்மைக் கடவுளராக ஏற்கப்பட்ட விநாயகருகே ஊரின் முதல் பொங்கல் குளிர்த்தி இடம் பெறும் மார்கழி மாதத்து பெருங்கதையின் இறுதியில் இன்றும் இடம்பெறுகின்றது. அவ்வாறே வருடாந்த மகோற்சவமும் சித்திரை வருடப்பிறப்பை தேர்த்திருவிழாவாக கொண்டு இடம்பெறுகின்றது. அவ்வாறே நைமித்திய கிரியைகளை சிவஸ்ரீ பால வைத்திய நாதக்குருக்கள் பரம்பரையினர் செய்து வருகின்றனர்.
இந்நடைமுறையே நெடுந்தீவிலும் கைக்கொள்ளப்படுகின்றது. ஆலயத்தின் பிராமண குடும்பமாக சிவத்திரு சின்னையர் வழித்தோன்றல்களே நித்திய பூசை செய்து வந்தனர். ஆலயத்தில் இடம்பெறும் ஆவணிச் சதுர்த்தி மிகவும் விசேடமாகும் அன்று பஞ்ச முக விநாயகர் திருமஞ்சத்தில் எழுந்தருள்வார். இவைதவிர அனைத்து விசேட உற்சவங்களும் மாத சதுர்த்தி என்பன சிறப்பாக இடம்பெறுகின்றது. நித்திய பூஜைகளை தற்போது ஸ்ரீநந்தன சர்மா அவர்கள் செய்துவருகின்றார்.
லக்ஷ்மி, சுப்ரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர் போன்ற பரிவாரத் தெய்வங்களுடன் வீற்றிருக்கும் விநாயகருக்கு ஒரு முத்தள இராஜகோபுரம் அமையவேண்டும் என்பது மெய்யன்பர்களின் வேண்டுதல் ஆகும்.
ஐயனாரின் காலத்தால் முந்திய தேரே இவ்வாலயத்தின் பயன்பாட்டில் உள்ளது. இது சுமார் இரு சதாப்த பழைமை வாய்ந்தது எனவே அதுவும் பதிலீடு செய்யப்படவேண்டும். அனலை ஐயனாரின் வருகைக்கு முந்திய பிள்ளையாரை முதலில் வணங்கிவிட்டே குருவானவர் ஐயனின் பெருந்திருவிழாவினை நடாத்துவார். அவ்விதமே ஐயனாரின் திருக்கல்யாண உற்சவமும் இவ்வாலயத்தில் இருந்தே ஆரம்பிக்கும் மரபு காணப்படுகின்றது.
இவ்வாறாக அருள் மகிமை மற்றும் வரலாற்று பெருமைகளைக் கொண்ட இவ்வாலயத்தில் இவ்வருடமும் ஆவணிச் சதுர்த்தி சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை 09-09-2013 விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது. இந்நாளில் எம்பெருமானுக்கான ஆலய புனருத்தான கைங்கரியங்களுக்கான உதவிகளை செய்ய உறுதி பூணுவோமாக!..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum