Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஆண்டாளுக்கு வயது 5018
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஆண்டாளுக்கு வயது 5018
ஆடிதோறும் பூரநட்சத்திரம் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், ஆண்டாள் அவதரித்தபின் தான் அந்நாளுக்கு தனிச்சிறப்பு உண்டானது. அவள் பூமிப்பிராட்டியின் அம்சம். கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய், தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல, "பாசம்', "ஆசை' என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்றி, பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் அவதரித்தாள்.
பிறந்த வருடம்: ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும், பூரநட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5115 நடக்கிறது.
இவ்வகையில், ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5018 வது பிறந்த நாள். தான் பூஜித்து வந்த வடபத்ரசாயி (ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர்) குழந்தையை எடுத்துச் சென்றார். அவளுக்கு "கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி அவர் அருள்புரிந்தார். "கோதை' என்றால் "நல்வாக்கு அருள்பவள்' எனப்பொருள். ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது. அவரையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரை கண்ணன் வசித்த ஆயர்பாடியாக கற்பனை செய்து, அங்குள்ள பெண்களை கோபியராகச் சித்தரித்து, அனைவருமாக இணைந்து பாவை நோன்பு நோற்பதாக முப்பது பாடல்கள் எழுதினாள். அதுவே திருப்பாவை என்னும் இனிய நூல் ஆயிற்று. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலை கண்ணனின் தந்தை நந்தகோபன் வசித்த மாளிகையாகக் கருதினாள்.
வாரணம் ஆயிரம்: கண்ணன் குறித்து தான் கண்ட கனவினை, நாச்சியார் திருமொழி என்னும் நூலில் ஆண்டாள் அழகாக விவரிக்கிறாள். "வாரணமாயிரம்' என்ற பாசுரத்தில்,""ஆயிரம் யானைகள் சூழ வலம் வருகின்றன. பூரண தீர்த்தம் கொண்ட பொற்குடங்களும், மாவிலைத் தோரணங்களுமாக எங்கும் மங்கல காட்சி! மங்கல தீர்த்தக் குடங்களை நாலாபுறங்களிலும் ஏந்திக் கொண்டு வருகிறார்கள். மணமகளுக்குரிய புதுபட்டாடையையும், மாலையும் சூட்டப்படுகிறது. மத்தளம் முழங்குகிறது. திருச்சங்கு முழங்கப் பெறுகிறது.
முத்துக்களாலான பந்தலின் கீழ் மதுசூதனனாகிய திருமால், அவளது கைத்தலம் (உள்ளங்கை) பற்றினார்,'' என குறிப்பிடுகிறாள். அதிகாலைப் பொழுதினில் கண்ட கனவல்லவா? சீக்கிரமே பலித்து விட்டது. ஆம்! கனவில் கண்டது போல், ஆண்டாள் கண்ணனை மணம் செய்து அவனையே ஆளத்துவங்கி விட்டாள். அதனால் "ஆண்டாள்' என பெயர் பெற்றாள்.
ஆண்டாள் கிளி: ஆண்டாள் என்றதும் அவளது கொண்டையும், கிளியும் ஞாபகத்துக்கு வந்து விடும். உற்சவர் ஆண்டாளுக்கு தினமும் மரவள்ளிக்கிழங்கு இலை, மாதுளம் பூக்கள், குச்சிகள் கொண்டு செய்யப்படும் கிளி சாத்தப்படுகிறது. ஆண்டாள் ஏந்திய கிளியை நம் இல்லத்தில் வைத்து பூஜித்தால் தடைபடும் திருமணம் விரைவில் நடக்கும். மகப்பேறு வேண்டுவோர் நன்மக்கள் வாய்க்கப் பெறுவர். கிளிக்குச் "சுகம்' என்றொரு பெயருண்டு. வாழ்வில் எல்லாவிதமான சுகங்களையும் பெற விரும்புவோர் ஆண்டாள் சூடிய கிளியினை வழிபட சுகமாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
மங்களாசாசனக் கோயில்கள்: ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பெற்ற) 108 கோயில்கள், திவ்யதேசங்கள் என்று அழைக்கப்பெறும்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாளால் பாடப்பட்ட திவ்யதேசங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், திருப்பதி, திருமாலிருஞ்சோலை (மதுரை கள்ளழகர்கோவில்), திருக்கண்ணபுரம், திருக்குடந்தை (கும்பகோணம்), திருஆய்ப்பாடி, வடமதுரை (மதுரா), துவாரகை ஆகியவை ஆகும். இத்திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களை ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் போற்றிப் பாடியிருக்கிறாள்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 90 கி.மீ.,
போன்: 04563 - 260 254.
-தினமலர்
Similar topics
» 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!
» விஞ்ஞானி கார்ல் சகன் வியந்த ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!
» விஞ்ஞானி கார்ல் சகன் வியந்த ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum