இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


Sri Rudram - ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம் with complete download option

Go down

Sri Rudram - ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம் with complete download option   Empty Sri Rudram - ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம் with complete download option

Post by ராகவா Tue Aug 19, 2014 9:55 pm

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன்பு சதுரகிரி பற்றி 
எழுதிய கட்டுரையில் , அமைதியாக ஸ்ரீருத்ரம் படியுங்கள் என்று 
கூறியிருந்தேன். நம் வாசகர் ஒருவர் , இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள், 
ருத்ரம் எப்படி வாசிப்பது, புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு 
இருந்தார். 

ஒரு நீண்ட தேடுதலுக்குப் பிறகு - இன்று 
அந்த பணி நிறைவேறுகிறது. கண்டிப்பாக நம் வாசர்களிடம் இதை சேர்க்கவேண்டும் 
என்று மனதில் இருந்த ஆசை பூர்த்தியாகிறது. 
[You must be registered and logged in to see this link.]பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , 
வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒரு 
குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தெரிந்து கொண்டு , செய்து கொண்டு 
இருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை , தமிழ் தெரிந்த , ஆன்மீக தேடல் இருக்கிற
ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் செல்வதை , ஒரு கடமையாகவே எடுத்து இதை 
செய்து முடித்தேன்... 

கலைஞர் முதல்வரா இருந்தப்போ , பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா 
எடுக்கிறப்போ , இல்லை ஜெயலலிதா முதல்வரா இருக்கிறப்போ - அவங்களோட 
தொண்டரடிப்பொடிகள் , தாங்க முடியாத அளவுக்கு முகஸ்துதி செய்யும்பொழுது - 
அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க.. ! கற்பனை செய்ய முடியுதா !
அப்படி புகழ்ந்து சொல்றவங்க எல்லாம் தலைவர்களோட குட் புக்ஸ் 
ல வந்துடறாங்க. நல்லா பேசத் தெரிஞ்சதுக்காகவே ஒவ்வொரு மேடையிலும் இவங்களை 
இதுக்குனே ஏத்தி விட்டுருவாங்க.. ! 

இதை எதுக்கு சொல்றேன்னா , அந்த மாதிரி சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய 
ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம். சிவன் அருள் பெறுவதின் மூலம் உங்கள் அத்தனை கர்ம
வினைகளும் அறுக்க கூடிய, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வல்ல - மகத்தான 
மந்திரம் இந்த ஸ்ரீ ருத்ரம்..


ஸ்ரீருத்ரம் கேட்டால் மட்டும் போதுமா , அதை பாராயணம் செய்ய முடிந்தால் 
எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியதுதான் , இந்த வரி வடிவ புத்தகம். 
இதில் , ஸ்ரீ ருத்ரம் தவிர , புருஷ சூக்தம் , வேத , சாந்தி மந்திரங்கள் 
ஆகியவையும் உள்ளன. 

என்னை பொறுத்தவரை , என்னை போல ஒரு ஆன்மீக தேடுதல் இருக்கும் அனைவருக்கும், 
இது ஒரு பெரிய பொக்கிஷம். ஆடியோவும், புத்தகமும் இருக்கும்பொழுது நல்ல 
முறையில் சாதகம் பண்ணினால் , விரைவில் முழு ருத்ரமும் பாராயணம் செய்ய 
இயலும். 

ஒரு இரண்டு மாதம் , சின்சியரா - ஒரு நாளைக்கு அஞ்சு வரி, ஆறு வரி மனனம் 
பண்ணினா , மொத்த ஸ்ரீருத்ரமும் உங்க மனசுல பதிந்து விடும். அதன் பிறகு, 
எந்த சிவ ஆலயம் சென்றாலும், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஜெபிக்க 
ஆரம்பியுங்கள்.. அந்த ஆலய சூழ்நிலையில் , உங்கள் உடம்பில் ஏற்படும் 
vibration துல்லியமாக உணர முடியும்..

சிவன் அருள் கிடைத்து அந்த கயிலை அல்லது அமர்நாத் செல்லக் கூடிய பாக்கியம்
கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. பனி படர்ந்த , அந்த சூழலில் , பொன் 
மயமாகும் வேளையில் , அல்லது தேவர்களும் இறங்கிவரும் அந்த ஏரிக்கரையில் 
அமர்ந்து, உணர்ச்சிகள் அற்று , ஆனந்தம் பெருக்கி கண்களில் நீர் மல்க - 
சிவன் உறையும் கயிலையை நீங்கள் மெய்மறந்து வணங்கும்போது - ஸ்ரீ ருத்ரமும் 
ஜெபிக்க முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.

அமாவாசையா பௌர்ணமியோ - நள்ளிரவில் சதுரகிரி மகாலிங்கம் சந்நிதி முன்பு 
நீங்கள் , அமர்ந்து இருக்கிறீர்கள் . உங்களுக்கு அந்த சூழ்நிலையில் 
ஸ்ரீருத்ரம் ஜெபிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

அண்ணாமலையில் அமைதி தவழும் ஒரு நன்னாளில் - கிரிவலம் வருகிறீர்கள். 
உங்களால் ஸ்ரீருத்ரம் ஜெபித்தவாறே வர முடிந்தால் - அது ஜென்ம ஜென்மமாக - 
நீங்கள் சேர்த்து வைத்த புண்ணியம் அல்லவா ? 
...................................
ஸ்ரீ ருத்ரத்தின் மகிமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சிவன் அருளை , பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யும். 

முதல் தடவை கேட்கும்போதே , உங்களுக்கு கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள். 
மிகத் தெளிவான உச்சரிப்புடன் , கூடிய இந்த ஆடியோ , எனக்கு கிடைத்தது கூட 
சிவன் அருளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது வாசகர்கள் அனைவரும்
தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்....

ஸ்ரீ ருத்ரம் - வரிவடிவம் பதிவிறக்கம் செய்ய

[You must be registered and logged in to see this link.] 

ஆடியோ பதிவிறக்கம் செய்ய : 

[You must be registered and logged in to see this link.] 

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் , உங்களால் இயன்றவரை , 
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது. 
யாரோ ஒருவரின், நீண்ட நாள் தேடுதலாக இருக்கலாம். நீங்களும் இந்த புண்ணிய 
காரியத்தில் கைகொடுங்கள்..!
சகலருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்...

நன்றி:மாலதி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum