இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 11:01 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத ஸப்ததஷோ அத்யாய:।

ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்அர்ஜுந உவாச।
யே ஷாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:।
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:॥ 17.1 ॥ஸ்ரீபகவாநுவாச।
த்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா।
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஷ்ருணு॥ 17.2 ॥ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஷ்ரத்தா பவதி பாரத।
ஷ்ரத்தாமயோ அயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:॥ 17.3 ॥யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா:।
ப்ரேதாந்பூதகணாம்ஷ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:॥ 17.4 ॥அஷாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:।
தம்பாஹம்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:॥ 17.5 ॥கர்ஷயந்த: ஷரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:।
மாம் சைவாந்த:ஷரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஷ்சயாந்॥ 17.6 ॥ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:।
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஷ்ருணு॥ 17.7 ॥ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:।
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:॥ 17.8 ॥கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:।
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஷோகாமயப்ரதா:॥ 17.9 ॥யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்।
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்॥ 17.10 ॥அபலாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே।
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:॥ 17.11 ॥அபிஸம்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்।
இஜ்யதே பரதஷ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்॥ 17.12 ॥விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்।
ஷ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே॥ 17.13 ॥தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஷௌசமார்ஜவம்।
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஷாரீரம் தப உச்யதே॥ 17.14 ॥அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்।
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே॥ 17.15 ॥மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:।
பாவஸம்ஷுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே॥ 17.16 ॥ஷ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:।
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே॥ 17.17 ॥ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்।
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்॥ 17.18 ॥மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:।
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 17.19 ॥தாதவ்யமிதி யத்தாநம் தீயதே அநுபகாரிணே।
தேஷே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்॥ 17.20 ॥யத்து ப்ரத்த்யுபகாரார்தம் பலமுத்திஷ்ய வா புந:।
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 17.21 ॥அதேஷகாலே யத்தாநமபாத்ரேப்யஷ்ச தீயதே।
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 17.22 ॥ஓம்தத்ஸதிதி நிர்தேஷோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:।
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஷ்ச யஜ்ஞாஷ்ச விஹிதா: புரா॥ 17.23 ॥தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:।
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்॥ 17.24 ॥ததித்யநபிஸம்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:।
தாநக்ரியாஷ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:॥ 17.25 ॥ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே।
ப்ரஷஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே॥ 17.26 ॥யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே।
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே॥ 17.27 ॥அஷ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்।
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேப்ய நோ இஹ॥ 17.28 ॥ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஷ்ரத்தாத்ரயவிபாகயோகோ நாம ஸப்ததஷோ அத்யாய:॥ 17 ॥ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம் நிறைவுற்றது.

அர்ஜூனன் : கிருஷ்ணா, சாஸ்திர நெறிகளுக்கு முரணாக மனக்கற்பனையுடன், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுபவன் எக்குணத்தைச் சேர்ந்தவன்? சத்வமா, ரஜஸா, தமஸா?

உடலுடைய ஆன்மாவுக்கு குணங்களுக்கேற்ப நம்பிக்கையும் மூவகைப்படுகிறது. அதுபற்றிக் கேட்பாயாக.

மனநிலைக்கேற்ப நம்பிக்கையும், அதன் விருத்தியும் அமைகின்றது. நம்பிக்கையே அவன்.

சத்வ குணத்தவர் தேவர்களையும், ரஜோ குணத்தவர் அசுரரையும், தமோ குணத்தவர் பேய்களையும், இறந்தவர்களையும் வணங்குகின்றனர்.

சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்படாத கடுந்தவங்களையும், விரதங்களையும், தற்பெருமையாலும், கர்வத்தாலும், காமத்துடன், பற்றுடன் செய்பவர்கள் ரஜோ குணத்தவராவர். அவர்கள் தமது உடலையும், உடலுள் வாழும் பரமான்வையும் துன்புறுத்துவதால் அசுரர் என்றறிவாயாக.

உணவும் குணங்களுக்கேற்ப மூவகைப்படும். யாகம், தவம், தானம் கூட அப்படியே. இவ்வேற்றுமைகளைக் கேள்.

சத்வ ஆகாரம் வாழ்நாளை நீட்டிக்கும். தூய்மை, பலம், சுகம், சுகாதாரம் மற்றும் திருப்தி தரும். மேலும் அவை இனிமையாகவும், ரஸமுள்ளதாகவும், சுவையுடையவாகவும் உள்ளன.

மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பான, காரமான, உலர்ந்த, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சேர்ந்தவை. இவை வலி, மனத்துன்பம் மற்றும் வியாதியைத் தரும்.

காலம் கடந்த, சுவையற்ற, பழைய வாசனையுள்ள, எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாலானது.

சாஸ்திர நெறிகளுக்கு ஏற்ப எப்பலனையும் பாராது செய்யப்படும் யாகம் சத்வ குணத்தாலானது.

மேல்கிரகம் செல்வதற்காகவும், இகவுலக லாபம் கருதியும் செய்யப்படும் யாக மதச்சடங்குகள் ரஜோ குணத்தாலானவை.

சாஸ்திர நெறிகளை ஏற்காது, பிரசாத வினியோகமின்றி, வேத மந்திர உச்சாடனமின்றி, புரோகித தட்சணை தரப்படாது, நம்பிக்கையின்றி செய்யப்படும் யாகம் தமோ குணத்தாலானது.

இறைவன், அந்தணர், குரு, தாய்தந்தை போன்ற பெரியோரை வணங்குதல், தூய்மை, எளிமை, பிரம்மச்சர்யம் ஆகியவை தேக தவம் ஆகும்.

உண்மையை நன்மை தரும்படியும், மனம் நோகாதபடியும் பேசுவது, வேதம் ஓதுதல் இவை வாக்குத்தவம் ஆகும்.

சாந்தம் எளிமை, கம்பீரம், சுய கட்டுப்பாடு, எண்ணத்தூய்மை இவை மனத்தின் தவமாகும்.

சுயநோக்கமின்றி, பரமபுருஷரின் திருப்திக்காகச் செய்யப்படும் இத்தவங்கள் சத்வ குணத்தாலானவை.

மதிப்பு, மரியாதை, வணக்கம் பெறுவதற்காக ஆடம்பரமாகச் செய்யப்படும் தவங்களும், விரதங்களும் ரஜோ குணத்தாலானவை. நிலையற்றவை.

மூடத்தனமாகத் தன்னைத் துன்புறுத்தியோ, பிறரைத் துன்புறுத்தவோ செய்யும் தவ விரதங்கள் தமோ குணத்தாலானவை.

தக்கநேரத்தில், தக்க இடத்தில், தக்க நபருக்கு எப்பலனும் பாராது, கடமை போல் செய்யப்படும் தானம் சத்வ குணத்தாலானது.

ஏதேனும் பலன் பார்த்தோ, பலனிச்சையுடனோ, விருப்பமின்றியோ கொடுக்கப்படும் தானம் ரஜோ குணத்தாலானது.

தகுதியற்ற இடத்தில், தகுதியற்ற நேரத்தில் தகுதியற்றவருக்கு மரியாதையின்றி, கவனமின்றி தரப்படும் தானம் தமோ குணத்திலானது.

ஓம், தத், ஸ‌த் எனும் மூன்று எழுத்து அமைப்புக்களும் படைப்பு முதற்கொண்டு இறைவனைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேத உச்சாடனத்தின் போதும், யக்ஞத்தின் போதும் பரம புருஷரின் திருப்திக்காக ஆன்மீகவாதிகளால் இவை உச்சரிக்கப்பட்டன.

ஓம் எனும் சப்தத்துடன், ஆன்மீகிகள் இறைவனை அடைவதற்காக யாக, தான, தவங்களை ஆரம்பிக்கின்றனர்.

தத் எனும் சப்தத்துடன், உலகச் செயல்களிலிருந்து விடுபடும் எண்ணத்துடன் யாக, தான, தவங்களைப் புரிய வேண்டும்.

ஸத் என்பது பக்தி யோகத்தின் இலக்கான பூரண உண்மையான இறைவனைக் குறிப்பதாகும். உண்மையில் யாகம், தானம், தவம் போன்ற செயல்கள் அனைத்தும் இறைவனைத் திருப்திப்படுத்த மட்டுமே செய்யப்படுகின்றன.

ப்ருதாவின் மைந்தா, இறைவன் மீது நம்பிக்கையின்றி செய்யப்படும் யாக, தான, தவச் செயல்கள் எவையும் நிரந்தரமானவையல்ல. அவை 'அஸத்' எனப்படும். மரணத்திற்குப் பின்னும் கூட அச்செயல்கள் உதவாது.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum