Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஈழத்துச் சித்தர்கள்
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
ஈழத்துச் சித்தர்கள்
கடையிற் சுவாமிகள்
இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார்.1. வாழ்க்கை வரலாறு
இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும்.
2. இலங்கைக்கு வருதல்
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.
யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது.
3. முக்கிய வாழ்க்கைக் குறிப்புக்கள்
* இவருக்கென்றொரு அடியார் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் ஆசிகளையும் இவர் வழங்கிவந்தார்.
* சாதி பேதம் பாராட்டாமல் இவர் செய்த நடவடிக்கைகள் சில இவருக்கெதிரான சிலரையும் உருவாக்கியது.
* இவரது அன்பர்கள் மாமிச, மது விருந்தளித்தாலும் அவற்றையும் இவர் உட்கொண்டிருக்கிறார்.
* இவருடைய நடவடிக்கைகள் மனநோயாளரின் நடவடிக்கைகளை ஒத்திருந்தமையால் காவல் துறையினர் இவரைப்பிடித்து கொழும்பு மனநல மருத்துவமனக்கு அனுப்புமுகமாக சிறையில் அடைத்து வைத்திருந்தனர். (மறுநாள் திறந்து பார்த்தபோது இவர் சிறையில் இருக்கவில்லை என்றொரு கதை இருக்கிறது)
* இறுதிக் காலத்தில் இவர் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த நீராவியடியில் வெளியில் எங்கும் செல்லாது வாழ்ந்து வந்தார்.
சித்தானைக்குட்டி சுவாமிகள்
ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர்.
1. வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் என்றும் கூறுவர். தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார்.
குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேஸ்வரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார்.
2. சமாதி
காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிவயோக சுவாமி
(மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.
பிறப்பு மே 29 1872
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு 1964 (அகவை 92)
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
1. வாழ்க்கைக் குறிப்பு
அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.
2. கல்வி
கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.
3. அரசுப் பணி
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.
தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.
4. செல்லப்பா சுவாமிகளுடன் ஐக்கியமாதல்
1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "யாரடா நீ ?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.
யோகசுவாமிகள்
5. கொழும்புத்துறையில் ஆசிரமம்
குரு தீட்சை பெற்று கொழும்புத்துறைக்குச் சென்று, அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிறிது காலம் மோன சுகத்தில் திழைத்தார். செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.
6. சமாதி
மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.
7. நான்கு மகாவாக்கியங்கள்
செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். இவற்றை அவரது பக்தர்கள் மகா வாக்கியங்கள் எனப் பின்னாளில் வகைப்படுத்தினர். அவை பின்வருவன[1][2]:
1. எப்பவோ முடிந்த காரியம்
2. நாம் அறியோம்
3. ஒரு பொல்லாப்பும் இல்லை
4. முழுதும் உண்மை
சுவாமிகளின் கையெழுத்து
8. நற்சிந்தனை
யோகசுவாமிகள் தன்னை நாடி வந்த பக்தர்களின் மனக்குறையை நீக்கும் பொருட்டும் அவர்களுக்கு இறை சிந்தனையை ஊட்டும் பொருட்டும் தன்னிடம் சுரந்த ஞான பானத்தை கீர்த்தனங்களாகவும், கவிதைகளாகவும் அவரவர் பக்குவத்திற்குத் தக பாடியருளினார். இவற்றை அவரது அணுக்கத்தொண்டர்கள் தொகுத்து நற்சிந்தனை என்னும் திருநூலாக வெளியிட்டனர். நற்சிந்தனை என்னும் ஒரு தமிழ்ச் சொல்லை தமிழிற்கு அறிமுகப்படுத்தியவர் யோக சுவாமிகளே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[3]
9. அருள்மொழிகள்
சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகள்,சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி, சிறிகாந்தா என்பவர்களுக்கு அவ்வப்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் அருளிய தெள்ளிய உயர்ஞான ரசங் கொண்ட அமுத வாசகங்களை சந்த சுவாமிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "The Words of Our Master" என்னும் தலைப்பில் சிவதொண்டன் சபையினூடாக வெளியிட்டார். பின்னர் செல்லத்துரை சுவாமிகள் இதனை எங்கள் ஆசான் அருள்மொழிகள் எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டார்.
10. துறவுச் சீடர்கள்
யோகசுவாமிகள் இந்நிலவுலகில் உலவிய காலத்தில் ஆயிரக்கணக்கான பல்சமய, பல்மொழி அடியவர்கள் அவரது அணுக்கத் தொண்டர்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றி துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மூவரே.
1. மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் கைதடியில் தென்னோலைக் கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தவர்.
2. சந்த சுவாமி. இவர் இலங்கையின் கடைசி ஆங்கிலேய தேசாதிபதி சோல்பரி பிரபுவின் மகன். யோக சுவாமிகளைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்ப்பாணக் கோவில்களில் உலாவியவர்.
3. செல்லத்துரை சுவாமி, இவர் சுவாமிகளின் பணிப்பிற்கிணங்க சுமார் அரை நூற்றண்டு காலம் யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு சிவதொண்டன் நிலையங்களில் இருந்து பணியாற்றி 2006 ஆம் ஆண்டு சமாதியடைந்தார்[4].
“சாமி என்றிருக்கிறவர் தானும் மற்றவர்களை போலென்று எண்ணவேண்டும்” என்பதும் "நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்" என்பதும் சுவாமிகளின் வாக்குகள்
சிவாச் சித்தர்
சிவாச் சித்தர் இலங்கையின் மட்டக்களப்பின் தெற்கே உள்ள காரைதீவு எனும் கிராமத்தில் சமாதியடைந்த சித்தர்களுள் ஒருவராவார். எனினும் தமது பெயருக்கு ஏற்ப இவர் சித்துக்களை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவரல்லர். அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தினரான சுவாமிகள் மக்களால் சிவாச் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். கதிர்காம பாதயாத்திரை வந்த வழியில் காரைதீவில் தங்கிக் கொண்ட சுவாமிகள் அங்கேயே தனது அருளாசியை வழங்கி சமாதியும் அடைந்தவர் ஆனார்.
இவரது சமாதி ஆலயம் காரைதீவு பொதுமயானத்தை அண்மித்ததாய் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது.
பரமகுரு சுவாமிகள்
ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு [1] தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
1. வாழ்க்கைக் குறிப்பு
இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையிலிருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் வீதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூன்றாண்டு காலம் வாழ்ந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. கோவணமும் பச்சை நிறப்போர்வையும் அணிந்தவராக இவர் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு அடிக்கடிச் சென்று வந்த இவர் இந்தியாவின் கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் செய்துள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாமி நிரஞ்சனானந்தர் என்ற பெயரும் இவருக்கு இந்தியாவிலேயே இடப்பட்டது.
குழந்தைவேற் சுவாமிகளுக்கு அறிவுரை தருவதற்காக கடையிற் சுவாமிகள் இவரை கீரிமலைக்கு வரப்பண்ணியதாக கூறுவர். குழந்தைவேற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகளுக்கும் கடையிற் சுவாமிகளுக்கும் பணிவிடை செய்துவந்துள்ளார்.
மருதனார்மடம் பகுதியிலுள்ள பனங்காட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். அக்காலங்களில் பாசிப்பயற்றினை அவித்துக் கஞ்சியாகக் குடித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
பரமகுரு சுவாமிகளின் பெயரால் காங்கேசன்துறையிலும் கீரிமலையிலும் மடங்கள் கட்டப்பட்டன. சேணிய தெருவில் இருந்த சின்னத்தம்பி என்பவரே இவ்விரு மடங்களையும் கட்டுவித்தவராவார்.
பரமகுரு சுவாமிகளின் சமாதி விழா 1904ம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்றது.
இவரது சமாதி அமைக்கும் பணிகளை சேர். அருணாசலம் முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.
பெரியானைக்குட்டி சுவாமிகள்
ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர்.வாழ்க்கைக் குறிப்பு
இவர் கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர்.
இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர்.
2. சீடர்கள்
இவரின் சீடர்களில் சித்தானைக்குட்டி சுவாமிகளும் மொட்டைச்சி அம்மையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். மொட்டைச்சி அம்மையார் திருக்கேதீஸ்வரத்தில் கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தார்.
3. சமாதி
பெரியானைக்குட்டி சுவாமிகள் 1911 இல் சமாதியடைந்தார். இவருடைய சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இவரது சமாதியுடன் ஒரு பிள்ளையார் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.
4. உசாத்துணை
* இந்துக்கலைக் களஞ்சியம் (பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு)

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள்
» சித்தர்கள் யார்?
» மன்னரைத் திருத்திய சித்தர்கள்
» பாம்பு உடம்பிற்குள் வாழும் சித்தர்கள்
» சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
» சித்தர்கள் யார்?
» மன்னரைத் திருத்திய சித்தர்கள்
» பாம்பு உடம்பிற்குள் வாழும் சித்தர்கள்
» சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum