Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சங்கரர் கண்டெடுத்த சங்கரர்
Page 1 of 1
சங்கரர் கண்டெடுத்த சங்கரர்
"மாமுனிவோர் பலர் வாழும் பொன்னாடு' நமது பாரத தேசம். இறைவனின் அவதாரங்களும், அந்தக் கடவுளின் பிரதிநிதிகளான அருளாளர்களும் இம்மண்ணில் தோன்றிய வண்ணம் உள்ளனர். மகான்கள் மூலம் இப்பாரத புண்ணிய பூமியில் தர்மத்தை நிலைநாட்டியும், மக்களை நல்வழிப்படுத்தியும், திருக்கோயில்களில் குடிகொண்டும் அருளாட்சி புரிந்து வருகிறான் ஆண்டவன். அவ்வாறு வந்த மாமுனிவர் வரிசைகளில் போற்றப்படும் ஒருவர்தான் "ஏரண்டர்' என்பவர்.
இவர், காகபுஜண்டரின் சீடர். அத்ரிமுனிவர் அனுசூயா தம்பதிகளின் புத்திரர். தன் வாழ்நாளில் செயற்கரிய செயல்களைச் செய்தவர். ஒரு காலத்தில் காவிரியாறு திருவலஞ்சுழி திருத்தலத்தை அடைந்தபோது, அங்கே ஆதிசேடன் வெளிவந்த பாதாளத்தில் இறங்கிவிட்டது. மன்னவரும், மக்களும் திகைத்து நிற்க, ஏரண்ட முனிவர் அப்பிலத்துள் புகுந்து காவிரியை வெளிப்படுத்தினார். ஆதியில் கொட்டையூர் என்னும் திருத்தலத்தில் "ஆமணுக்கு' என்று சொல்லப்படும் கொட்டைச் செடியின் கீழ் தவம் இருந்தவர் இம்மாமுனிவர். அதனால்தான் ஏரண்ட முனிவர் என்று அழைக்கப்பட்டார். (ஏரண்டம் என்று கொட்டைச் செடியைக் குறிப்பிடுவர்)
இம்மாமுனிவர் சிவனருளை வேண்டித் தவம் செய்வதற்கு ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுப்பதற்குப் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தபோதுதான் ஒரு இடத்தில் சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் கூடிய ஒரு மலையையும், அதனையொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அங்கேயே கடுந்தவத்தை மேற்கொண்டார். அந்தத் தவச் சீலருக்கு சிவபெருமான் காட்சியளித்து அவரின் வேண்டுகோளுக்கு இணங்க சுயம்பு மூர்த்தியாக அவ்விடத்தில் குடி கொண்டார். அந்த இடமே முற்காலத்தில், "சிம்ம புரம்' என்று அழைக்கப்பட்டு, தற்பொழுது ஆவணியாபுரம் என்று கூறப்படுகிறது. இவ்விடம், திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்தில் உள்ள ஒரு பகுதி. "அவனியாபுரம்' "மருவி' ஆவணியாபுரம் ஆனதாகச் சொல்லப்படுகிறது.
ஏரண்ட முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, "சிம்மபுரீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் இறைவன் அமர்ந்த ஆலயம், காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகிப் போனது. பிற்காலத்தில் ஆதிசங்கர பகவத்பாதர் பாரத நாடு முழுவதும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இப்பகுதிக்கு வந்த தருணத்தில், அவருடைய கனவில் ஏரண்ட முனிவர் தோன்றி, தான் சிம்மபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்த விவரத்தை உணர்த்தினாராம். சங்கரரும் அந்த லிங்கத்தை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து மக்களுடைய வழிபாட்டிற்கு உறுதுணையாக இருந்ததாக செவி வழிச் செய்தி புழங்குகிறது. ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து பூஜித்த அந்த ஈசனுக்கு "அவனீஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டி, ஆலயம் எழுப்பி, மன்னர்களும் மக்களும் வழிபாட்டினைத் தொடர்ந்தனர். கால வெள்ளத்தில் இவ்வாலயம் மீண்டும் சிதிலமானது. தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. காலத்தின் கோலத்தால் தற்போது எஞ்சியுள்ளவை லிங்கமும், நந்தியும், விநாயகப் பெருமானும், ஆறுமுகனார் மற்றும் விஷ்ணு துர்கை சிலைகள் மட்டுமே.
தன் மாமனாகிய திருமாலின் சங்கையும் சக்கரத்தையும் ஏந்தி, இத்திருத்தலத்தில் அற்புதக் காட்சியளிக்கின்றார் ஆறுமுகப் பெருமான். "எந்தக் காலத்திலும் சிவனை விட்டு விலக மாட்டேன்' என்று சொல்லுவதுபோல் நந்தி யெம்பெருமான் அழகுறக் காட்சியளிக்கின்றார்.
இந்தக் கிராமத்துப் பொது மக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர், இந்த ஆலயத்தைச் சீர் செய்து மறுபடி வழிபாட்டை நிலை நாட்ட முனைப்பாக உள்ளனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆசிகளுடனும், பக்தர்களின் பேராதரவினாலும் ஓரளவு திருப்பணி வேலைகள் நடந்துள்ள போதிலும் இன்னமும் ரூ.25/- லட்சம் தேவைப்படுவதால் வேலைகள் முடங்கிவிட்டன. எனவே சிவநேயச் செல்வர்கள், இந்தப் பணி செவ்வனே நடைபெற உதவிட வேண்டும். சங்கரன் கண்டெடுத்த சங்கரர் ஆலயத்தின் திருப்பணியில் நம் பங்கும் இருக்க வேண்டும். குறிப்பாக இரண்டு சாரார்கள் உதவிட வேண்டும். ஒன்று சிம்ம ராசிக்காரர்களைச் சேர்ந்தவர்கள். (சிம்ம ராசிக்காரர்கள் இதை ஒரு பரிகார தலமாகக் கருதி இன்றும் வழிபாடு செய்ய வருகிறார்கள்). மற்றொன்று ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள். (ஒவ்வொரு கோத்ரத்தையும் முனிவர்களே உருவாக்கினார்கள்). அந்த வகையில் ஆத்ரேய úக்ஷத்திரத்திற்கு உரியவர் ஏரண்ட முனிவர். இக்கோயிலில் உள்ள சுயம்பு லிங்கம், அவருக்காகக் காட்சியளித்த பெருமை கொண்டதல்லவா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum