இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அணையாக மாறிய நெடுமால்!

Go down

அணையாக மாறிய நெடுமால்! Empty அணையாக மாறிய நெடுமால்!

Post by ராகவன் Fri Jul 30, 2010 4:08 pm

அணையாக மாறிய நெடுமால்! 9velmani1


நான்முகக் கடவுளான பிரம்மன், திருமாலைக் காண வேண்டி தவம் செய்கையில் ஓர் அசரீரி வாக்கு ஒலித்தது. ""தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரம் சென்று ஒரு அஸ்வமேத யாகம் செய். அந்த வேள்வியின் பலனாக திருமாலை தரிசிக்கும் பாக்கியம் பெறுவாய்'' என்றது அசரீரி. உடனே நான்முகனும் விஸ்வகர்மாவிடம், ""ஒரு யாக சாலையையும், மணி மாடங்கள் சூழ அழகானதோர் நகரத்தையும் தோற்றுவிப்பாயாகுக'' என்று பணித்தார்.

கலைமகளின் சினம்!

யாகம் ஆரம்பிப்பதற்கு முன் பிரம்மனிடம் பிரஹஸ்பதி, ""வேள்வியை நடத்த உங்களுடைய துணைவியார் கலைமகள் சரஸ்வதியும் உடன் இருக்க வேண்டும்'' என்றார். இதையடுத்து நதி தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த சரஸ்வதியை அழைத்து வரச் சொல்லி வசிஷ்ட முனிவரை அனுப்பினார் பிரம்மன். முன்னொரு காலத்தில், சரஸ்வதியின் பக்தர்களுக்கும், லஷ்மியின் பக்தர்களுக்கும் இடையே சொற்போர் நடந்தது. அப்போது "இருவரில் யார் சிறந்தவர்?' என்று பிரம்மனிடம் கேட்க, "லஷ்மியே சிறந்தவள்' என்றார் நான்முகன். அதில் வருத்தமுற்ற சரஸ்வதி, ""நான் நதிகளில் சிறந்தவள் என்றாவது ஒப்புக்கொள்ளுங்கள்'' என்றாள். ஆனாலும் பிரம்மன், ""நதிகளிலும் கங்கையே உயர்ந்தவள்'' என்று சொல்லிவிட, சொல்லொணா சினங்கொண்டு வெகுண்டெழுந்தாள் சரஸ்வதி. நதியிலேயே தங்கி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மனின் கட்டளைப்படி தன்னை அழைக்க வந்த வசிஷ்ட முனிவரிடம், ""நான் வர இயலாது. வேண்டுமானால் என் கணவர் நான் இருக்கும் இடத்திற்கு வந்து வேள்வியை நடத்தட்டும்'' என்று கோபத்தோடு கூறிவிட்டாள் சரஸ்வதி.

அசுரர்களின் சதி

இதனால் தேவி சரஸ்வதி இல்லாமலேயே, மற்ற முனிவர்களின் தேவியரைக் கொண்டு வேள்வியை ஆரம்பித்தார் நான்முகன். யாகத்தில் தேவர்களுக்கு முதல் மரியாதை கொடுப்பதைக் கண்டு சீற்றம் கொண்ட அசுரர்கள், வேள்வியைக் கலைக்க நினைத்தனர். அதற்காக சரஸ்வதியிடம் சென்றவர்கள், ""கலைமகளே! தீய முனிவர்களின் சதியால் உமது கணவர் உங்களைத் தவிர்த்து மற்றவர்களுடன் யாகம் செய்யத் தொடங்கிவிட்டார். இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல் தங்களிடம் வந்துள்ளோம். எந்த வகையிலாவது தாங்கள் இந்த வேள்வி நடைபெறாத வண்ணம் தடை செய்தீர்களானால் எங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்'' என்று முறையிட்டனர்.

இதைக் கேட்ட சரஸ்வதி, வேள்வியைத் தடை செய்யும் பொருட்டு "வேகவதி' என்னும் நதியாகப் பெருக்கெடுத்துக் காஞ்சியை வந்தடைந்தாள். அந்த நதியின் வேகத்தைப் பார்த்து அச்சமடைந்தவர்கள், நான்முகனைத் தஞ்சமடைந்தனர். ""இது அசுரர்களால் தூண்டப்பட்ட சரஸ்வதியின் செயல்தான்'' என உணர்ந்த பிரம்மன், ஸ்ரீமன் நாராயணனை வணங்கித் தொழுதார். உடனே எம்பெருமானும் அந்த நதியின் வெள்ளப் பெருக்கைத் தடை செய்யும் பொருட்டு அணையாகத் தானே படுத்துத் தடுத்தருளினார். மஹா விஷ்ணுவின் அந்த சயனத் திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதியும் பணிந்து, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அந்தர்வாஹினியாய்ச் சென்று கடலில் கலந்தாள்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அணையாக மாறிய நெடுமால்! Empty Re: அணையாக மாறிய நெடுமால்!

Post by ராகவன் Fri Jul 30, 2010 4:08 pm

சரஸ்வதி சமாதானம்

பிறகு வசிஷ்டர் போன்ற முனிவர்களெல்லாம், பிரம்மனது சொற்படி சரஸ்வதியை வணங்கினர். "இப்போதேனும் மனமுவந்து நான்முகனோடு சேர்ந்து வேள்வியை நிறைவேற்றி அருள வேண்டும்; எல்லா நதிகளிலும் சரஸ்வதி நதிக்கே மிக்க சிறப்பு உண்டென நான்முகனே ஒப்புக் கொண்டார்' என்று வேண்ட, கலைமகளும் மனமுவந்து நான்முகக் கடவுளோடு சேர்ந்தாள்.

பிரம்மனின் வேள்வியைக் காக்கும் பொருட்டு "வேகவதி' ஆற்றின் பிரவாகத்தின் குறுக்கே வலது கையைக் கீழே வைத்து அணையாக சயனித்துக் கொண்டிருக்கும் இப்பெருமாள் "புஜங்க சயனன்' என்று வட மொழியிலும், "திருவணைப் பள்ளி கொண்ட பெருமாள்' என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். இப்பெருமாளுக்கு "வேகாúஸது' என்றும் பெயர் ஏற்பட்டது. பிறகு வெஃகா என்று மருவி இந்த úக்ஷத்திரம் "திருவெஃகா' என்று இன்று அழைக்கப்படுகிறது.

ஆழ்வார்களின் மங்களாசாஸனம் பெற்ற நூற்றெட்டு திவ்ய தேசங்களில், காஞ்சி மாநகரத்தில் பதினெட்டு திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில் திருவெஃகாவும் ஒன்று.



தமிழின் பின் சென்ற தலைவன்

ஒருநாள் திருமழிசை ஆழ்வார் நெற்றியில் திருமண் சாத்திக்கொள்ள முனைந்தபோது, வைத்த இடத்தில் திருமண் காணப்படாமல் வருத்தமுற்றார். அன்று அவர் கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி அருளியபடி, திருவெஃகாவை அடுத்த பொய்கைக் குளத்தில் திருமண்ணைக் கண்டெடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார். அதன் கரையில் எழுந்தருளியுள்ள "திருவணைப் பள்ளி கொண்ட பெருமாளை' சேவித்தார். இந்த ஆழ்வாரை குருவாகக் கொண்டு "கணிகண்ணன்' என்ற செந்நாப் புலவரும் அப்பெருமாளையே சேவித்து வந்தார்.

ஒருமுறை தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பல்லவ அரசனின் மனைவி, திருமழிசை ஆழ்வாரின் அருளால், முதுமை நீங்கி இளமையடையும் ஆசையால், கணி கண்ணனைப் பாடப் பணித்தாள். அவரோ, "திருவணைப் பள்ளி கொண்ட பெருமாளைத் தவிர வேறொருவரையும் பாட மாட்டேன்' என்று மறுக்க, பல்லவ அரசன், அவரைக் காஞ்சியை விட்டே வெளியேறும்படி கட்டளையிட்டார். இதனைத் தன் குருவான திருமழிசை ஆழ்வாரிடம் கணிகண்ணன் தெரிவிக்க, இருவரும் பெருமாளையும் தம்முடனேயே வந்து விடும்படி விண்ணப்பித்தனர். பெருமாளும் தன் பைந்நாகப் பாயை (பாம்பணையை) சுருட்டிக் கொண்டு அவர்கள் பின்னே சென்றுவிட்டார். நகரம் இருளடைந்தது. மூவருமே காஞ்சிக்கு அருகிலுள்ள பாலாற்றங்கரையில் அன்று இரவு தங்கினர். அவர்கள் தங்கிய அந்த இடம் "ஓர் இரவு இருக்கை' என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி, "ஓரிக்கை' என ஆயிற்று. பல்லவ அரசனும் தன் தவறை உணர்ந்து, திருமழிசை ஆழ்வாரையும், கணிகண்ணனையும் மீண்டும் காஞ்சிக்கே அழைத்து வந்தார். பெருமாளும் மனமிறங்கி மீண்டும் திருவெஃகாவுக்கு வந்து பைந்நாகப் பாயைக் கிடத்தி சயனித்தார். அதனால் இப்பெருமாள், "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று தமிழிலும், "யதோக்தகாரி' என்று வடமொழியிலும் திருநாமம் பெற்றார்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அணையாக மாறிய நெடுமால்! Empty Re: அணையாக மாறிய நெடுமால்!

Post by ராகவன் Fri Jul 30, 2010 4:08 pm

சங்க இலக்கியத்தில்...

இந்த úக்ஷத்திரத்தின் தாயார் பெயர் ஸ்ரீகோமளவல்லி நாச்சியார். தீர்த்தம், பொய்கை புஷ்கரணி. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பொய்கை ஆழ்வார், பொய்கை புஷ்கரணியில், பொற்றாமரை மலரில், ஐப்பசி மாத திருவோணத்தில் அவதரித்தார். பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்த திவ்ய தேசம் இது. இந்தக் கோவிலின் தல விருட்சம் மகிழ மரம்.

சங்க இலக்கிய பத்துப் பாட்டினுள் ஒன்றான பெரும்பானாற்றுப் படையில் "திருவெஃகா' என்னும் இந்தத் திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இயற்றிய பெரும் பானாற்றுப் படைப்பாடலில், அரசன் தொண்டைமானிளந்திரையனிடம் பரிசு பெற்றுத் திரும்பி வரும் யாழ்ப்பாணன் ஒருவன், தன் எதிரே வரும் மற்றொரு பாணனுக்கு வழி கூறி, "இந்த திருவெஃகா என்னும் சோலை சூழ்ந்த நல்லிடத்தில் இளைப்பாறி, பாம்பனையில் பள்ளி கொண்டிருக்கும் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை வழிபட்டுச் செல்வாயாக' என்று கூறுவதாகக் காணப்படுகிறது.

"விஷ்ணுகாஞ்சி' என்றழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரம், ரங்கசாமிக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோவிலில், ஐப்பசி மாதம் பொய்கையாழ்வார் அவதார உற்சவம் பத்து நாட்களும், பங்குனி மாத ரேவதி நட்சத்திர தீர்த்தவாரி பிரம்மோற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. புதியதாக திருத்தேர் நிர்மாணம் செய்யும் முயற்சியில், பக்த கோடிகள் மும்முரமாக ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அணையாக மாறிய நெடுமால்! Empty Re: அணையாக மாறிய நெடுமால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum