Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சித்தி வேண்டுவோர் வருக
Page 1 of 1
சித்தி வேண்டுவோர் வருக
மதுரையை அடுத்த சோழவந்தானிலிருந்து மேற்கே சுமார் இரண்டு கி.மீ. பயணித்தால், தென் கரை என்ற கிராமம் எதிர்வரும். வைகையாற்றின் தென் கரையில் அமைந்துள்ள இவ்வூரின் நடு நாயகமாகத் திகழ்கிறது ஒரு சிவன் கோயில். மூலவர் மூலநாதர். பாண லிங்கமாக அமர்ந்து அருள்கின்றார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி; தீர்த்தம் ஸ்வர்ண புஷ்கரணி. தல மரம் வில்வம். சுமார் 2.5 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்துள்ள கோயிலிது.
அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனிச் சந்நிதியில், அற்புதமான புன்னகையுடன் தெற்கு முகமாய் நின்று அருள்பாலிக்கிறாள்.
கோயில் மிகப் புராதனமாகத் தெரிகிறது. மூலவர், திருமூலரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இதனாலேயே இவர், "மூலநாதர்' என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு வில்வராண்யேஸ்வரர், ஆதி சிதம்பரேஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு. "திருமூலர்' பெரும் சித்த புருஷர்.அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உடைய ஆலயம் என்பதால், சித்திகளைப் பெற விரும்புவோர் இங்கு வந்து வேண்டுகின்றனர். "சித்தர் வழிபாட்டில்' ஈடுபாடு உடையவர்களும் இங்கு அருள் பெற வருகின்றனர்.
கி.பி. 13ம் நூற்றாண்டிலும், அதற்குப் பிறகு நாயக்க மன்னர்கள் காலத்திலும் திருப்பணிகள் பல நடந்துள்ளன.
"வீர பாண்டிய மன்னருக்கு இருந்த தொழு நோய் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடியதால் தீர்ந்தது. இதனால் மனம் மகிழ்ந்த இம்மன்னன், இக்கோயிலை விரிவுப்படுத்திக் கட்டினான்' என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன. இவ்வூருக்கு பராக்கிரம பாண்டியபுரம் என்று பெயர் வழங்கியதையும் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
கோயிலில் ஆறுகாலப் பூஜைகள் நடக்கின்றன. உபயதாரர்களால் முக்கிய விழாக்கள் கோலாகலமாய் நடைபெறுகின்றன.
கோயிலின் உள்ளே தென்னை மரங்களும், இலவம் பஞ்சு மரங்களும் உயர வளர்ந்து வளத்தைச் சொல்வது மட்டுமின்றி, இவற்றிலிருந்து கிடைக்கும் தேங்காய்களும், பஞ்சும் இக்கோயிலைப் பொருளாதார ரீதியில் அடியோடு வீழ்ந்துவிடாமல் காக்கின்றன. இக்கோயிலுக்கு சுமார் 75 ஏக்கர் நிலங்கள் சொந்தமாய் இருந்தும், 25 ஏக்கர் நிலத்தில் இருந்து மட்டும் ஓரளவுக்கு வருவாய் கிடைக்கின்றது. மற்றபடி பக்தர்கள் வரவாலும், அவர்கள் தரும் காணிக்கையாலுமே கோயில் நித்தியப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்தலம் திருமணத் தடைகளை நீக்கும் கோயிலாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாயும் விளங்குகிறது. மழலை வரம் வேண்டி இங்கு வருபவர்கள் ஏராளம். அச்செல்வம் அமைந்த பிறகு அம்பாளுக்குத் தொட்டில் கட்டி மகிழ்கிறார்கள்.
இக்கோயிலுக்கு 2007 மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அறநிலைத் துறையினரால் ஆலயம் பராமரிக்கப்படுகிறது.
பிராகாரத்தில் மூன்று விநாயகர்கள் உள்ள விநாயகர் சபை ஒன்று உள்ளது. மதுரையைப் போல் இங்கும் அதிகார நந்தி, தன் மனைவி சுயசாம்பிகையுடன் காணப்படுகிறார்.
இக்கோயிலில் உள்ள குளம், பாசி படர்ந்து சீரழிய ஆரம்பித்துள்ளது. படிகள் ஆங்காங்கே விலகத் தொடங்கி உள்ளன.
எண்ணற்ற பிரார்த்தனைகளை இப்பெருமான் நிறைவேற்றி வைக்கிறார். விவசாய அபிவிருத்தி, தொழில் வளம், குடும்ப நிம்மதி போன்ற கோரிக்கைகளை முன் வைத்துப் பக்தர்கள் வருகிறார்கள்.
ஆலயத்தின் வாயிலில் இன்னொரு விசேஷம்... இங்குள்ள இளவட்டக் கல், இவ்வூர் இளைஞர்களின் பலத்தைச் சோதிக்க வகை செய்கிறது. ஒரு சுய பரிசோதனைக்காகவாவது இத்தலத்துக்கு இளவட்டங்கள் வரலாம். இளவட்டக் கல் தூக்கி, திருமணத்துக்கு இறையருளை வேண்டலாம்.
பக்தர்களுக்கு அருள் பாலிக்க இந்தப் பரமனை நாடி வாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum