இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சூரிய நமஸ்காரம்

Go down

சூரிய நமஸ்காரம்  Empty சூரிய நமஸ்காரம்

Post by ஆனந்தபைரவர் Fri Aug 27, 2010 11:35 pm

சூரிய நமஸ்காரம்  Surya-namaskar-part-one-om-mritraya-namah-randhir-rawatlal

சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு...

சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இது காட்டுகிறது. கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல்.

சூரியக் குளியலால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மேலை நாட்டு நவீன மருத்துவ ஆய்வு நிரூபித்துள்ளது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.

ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

ஓம் மித்ராய நமஹ சிறந்த நண்பன்

ஓம் ரவயே நமஹ போற்றுதலுக்குரியவன்

ஓம் சூர்யாய நமஹ ஊக்கம் அளிப்பவன்

ஓம் பானவே நமஹ அழகூட்டுபவன்

ஓம் ககாய நமஹ உணர்வுகளுக்கு வலிமை

தருபவன்

ஓம் பூஷ்ணே நமஹ புத்துணர்ச்சி தருபவன்

ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ ஆற்றல் அளிப்பவன்

ஓம் மரீசயே நமஹ நோய்களை அழிப்பவன்

ஓம் ஆதித்யாய நமஹ கவர்ந்திழுப்பவன்

ஓம் சவித்ரே நமஹ சிருஷ்டிப்பவன்

ஓம் அர்க்காய நமஹ வணக்கத்திற்கு உரியவன்

ஓம் பாஸ்கராய நமஹ ஒளிமிகுந்து

பிரகாசிப்பவன்.

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum