Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
வாசக அனுபவம்
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
வாசக அனுபவம்
அவஸ்தைப்பட்டேன் அழகர்கோவிலில்!
எனக்குப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், என் அண்ணன் கம்பெனியில் வேலை கிடைத்தது. அவ்வப்போது வெளியூர் செல்லும் வேலை அது. பணி முடிந்ததும், அந்தந்த ஊர் கோயில்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைவேன். 1962-ம் வருடம் மதுரையில் இருந்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மாரியம்மன் தெப்பக்குளம் பார்த்து மகிழ்ந்தேன். அழகர்மலையைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்குள்ள நூபுர கங்கை, பழமுதிர்சோலை முருகனைத் தரிசிக்கத் தனியாகச் சென்றேன். நான் போகும்போது மாலை 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதுள்ள வசதிகள் அப்போது இல்லை.
இளவயது தைரியத்தில் நான் தனியாக மலை ஏற ஆரம்பித்தேன். எப்படிப் போக வேண்டும் என்று வழியும் தெரியாது. ஓரிருவர் மட்டும்தான் மலை ஏறிக்கொண்டிருந்தனர். அவர்களும் வேகமாக ஏறிப் போய்விட்டதால், தனித்து விடப்பட்டேன். அதனால், வழி தவறி வேறு பாதைக்கு வந்துவிட்டேன். அக்கம்பக்கம் யாருமில்லை. மழை வேறு கொட்ட ஆரம்பித்துவிட்டது. எதிரே வழி தெரியவில்லை. இருட்டாக இருந்தது.
‘முருகப் பெருமானே! இதென்ன சோதனை. ஏதாவது தப்பு செய்துவிட்டேனா?’ என்று என்னையே நான் கேள்வி கேட்டுக் கொண்டேன். மலை ஏறும்போது கற்பூரம் ஏற்றாதது நினைவுக்கு வந்தது. அப்போது மரத்தடியில் ஒரு விளக்கு மாடம் தெரிந்தது. அங்கு முருகன், விநாயகர் இணைந்த படம் மாட்டப்பட்டு இருந்தது.
‘பிள்ளையாரப்பா, முருகா... நீங்கள்தான் எனக்குத் துணையாக வர வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டு கற்பூரம் ஏற்றி வணங்கினேன். பிறகு, அப்படியே உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு எல்லா கடவுளையும் வேண்டினேன். சிறிது நேரம் கழித்து ‘சாமியோவ்’ என்று குரல் கேட்டுக் கண்களைத் திறந்தேன். எதிரே வேடுவர் அவர் மனைவியோடு நின்று கொண்டிருந்தார். ‘ஏன் சாமி இந்த வழி வந்தீங்க? நரி, பாம்பு, காட்டுநாய் இந்த வழியில் வரும். கோயிலுக்குப் போக நினைத்து தப்பான வழியில் வந்துவிட்டீங்க... வாங்க சரியான வழிகாட்டுகிறோம்’ என்றனர்.
என்னால் பேசக்கூட முடியவில்லை. ‘தண்ணீர் வேண்டும்’ என்று சைகையிலே காண்பித்தேன் (அப்போதெல்லாம் தண்ணீர் பாட்டில் கிடையாது). ‘கொஞ்சம் இருங்க சாமி’ என்று எதிரே இருந்த புதர் பகுதியை நோக்கிச் சென்றவர்கள், திரும்பி வரும்போது ஒரு குடுவையில் தண்ணீர் எடுத்து வந்தனர். நான் தண்ணீர் அருந்தியபின், ‘வாங்க சாமி, சரியான வழி காட்டுகிறோம்’ என்று சொல்லி ஒரு கிலோ மீட்டர் வரை என்னுடன் நடந்து, நூபுர கங்கை அருகில் கொண்டுவந்து விட்டு, ‘இனிமே தனியா வராதீங்க’ என்று கூறிவிட்டுச் சென்றனர்.
நான் அவர்களிடம் பணம் கொடுத்தேன். ‘எங்களுக்கு வேண்டாம். உள்ளதே போதும்’ என்றனர். அவர்களிடம் நன்றிகூடச் சொல்லாமல் ஒரு பத்து அடியெடுத்து வைத்த நான், நன்றி சொல்லத் திரும்பினேன். அவர்களைக் காணவில்லை. அப்போது இரண்டு பாம்புகள் அவசர அவசரமாக ஒரு புதருக்குள் சென்று மறைந்தன. இந்தக் காட்சியைக் கண்டு நான் மெய்சிலிர்த்தேன்.
அதன்பின் மழை நின்று வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. ‘முருகனே, பிள்ளையாரப்பா... என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ என்று மனதார வேண்டிக்கொண்டு பத்திரமாக ஊர் திரும்பினேன். ‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. அன்று நான் அதை அனுபவித்தேன். அதன்பின், ஒருமுறை என் நண்பர்களுடன் அழகர்மலைக்குச் சென்று நான் வழிதவறி சென்ற இடத்தைப் பார்த்து அதிர்ந்தேன். வழி தெரியாமல் இன்னும் ஐந்து அடி சென்று இருந்தால், கீழே கிடுகிடு பாதாளம். அன்று நிகழ்ந்த அந்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.
- மாடபூஜி ராஜகோபால் சந்தானம், சென்னை-37.
சிவன் கோயில் புளியோதரை!
கடந்த மாதம் நான் புதுக்கோட்டை போயிருந்தேன். அப்போது நான், என் தங்கை மற்றும் பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இளையாற்றங்குடி கோயிலுக்குப் போய், மதியம் திரும்பிவிடலாம் என்று நினைத்தோம். காலை 7 மணிக்கே கிளம்பினோம். இளையாற்றங்குடி என்ற கிராமம் காரைக்குடி பக்கமாக இருக்கிறது. அங்கு காமகோடி பீட ஆச்சார்யாரின் அதிஷ்டானமும், வேதபாடசாலையும் உள்ளது. அழகான பழமைவாய்ந்த கோயில்களும், திருக்குளமும் சிறப்பாக இருக்கும்.
புதுக்கோட்டையிலிருந்து இளையாற்றங்குடிக்கு நேராகப் போகும் பஸ் ஏழு மணிக்கு என்று சொன்னதால் நாங்கள் காபி மட்டும் அருந்திவிட்டுக் கிளம்பினோம். பஸ் ஸ்டாண்ட் போனால் அந்தக் குறிப்பிட்ட பஸ் கிளம்பிப் போய்விட்டது என்று அங்கிருந்தவர்கள் கூறினர். ‘கீழச்செவல்பட்டி என்ற ஊருக்குப் போய்விட்டால் அங்கிருந்து இளையாற்றங்குடி போகலாம்’ என்றனர். சரி என்று கீழச்செவல்பட்டி சென்றோம். போகும்போதே எனக்கு நல்ல பசி. என்னுடன் வந்த பக்கத்து வீட்டுப் பெண், ‘அங்கு வேதபாடசாலை நடத்துபவர் தெரிந்தவர்தான். நாம் போனதும் சாப்பிட ஏதாவது கொடுப்பார்’ என்றாள்.
கீழச்செவல்பட்டி பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்த பின் பஸ் ஒருவழியாக வந்தது. இளையாற்றங்குடியை அடைந்ததும் என்னால் பசி தாங்க முடியவில்லை. நேராக வேதபாடசாலைச் சென்றோம். எங்களுக்குச் சோதனை மேல் சோதனையாக சமையல் செய்யும் அம்மாள் ஊருக்குப் போயிருப்பதாகவும், அதனால் சாப்பாடு எதுவும் தயாராக இல்லை என்றும் சொன்னார்கள்.
நாங்கள் கிளம்பிய நேரத்தை நொந்து கொண்டு, அருகில் இருந்த சிவன் கோயிலுக்கு தரிசனம் செய்ய கிளம்பினோம். சிவன் கோயிலினுள் நுழைவதற்கு முன் சிறிய விநாயகர் கோயில் இருந்தது. அங்கு போனதும் எனக்கு பசியினால் மயக்கமே வந்துவிட்டது. ‘பிள்ளையாரே! எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பா; இல்லைன்னா பசி தெரியாம என்னைக் காப்பாற்று’ என்று உருக்கமாக வேண்டிக் கொண்டேன்.
சிவன் கோயிலின் உள்ளே அர்ச்சகரைத் தவிர, வேறு யாரும் இல்லை. சிவனைத் தரிசித்துக் கிளம்பும்போது அர்ச்சகர் ஒரு தட்டு நிறைய புளியோதரை எடுத்து வந்து எங்களிடம் கொடுத்து ‘சாப்பிடுங்கள்’ என்றவர், ‘இதோ குழாயில் நல்ல தண்ணீர்தான் வருகிறது. குடிக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘சிவன் கோயிலில் மதியவேளையில் புளியோதரையா?’ என்று நான் திகைத்துப் போய்விட்டேன். புளியோதரை நான்குபேர் சாப்பிடும் அளவு இருந்தது. விநாயகர் சந்நிதியில் கண்ணீருடன் ஆகாரம் கேட்டதும் தன் தந்தை (சிவன்) சந்நிதியில் அருள்புரிந்து விட்டார் என்று மெய்சிலிர்த்து, அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை மனமார உண்டு எங்களுடைய பசியை ஆற்றிக் கொண்டோம். இது எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம்.
- ஆர். ராதா, சென்னை-33.
மாயமாக மறைந்த ஜோடி!
பழநியில் பாலபிஷேகக் குழப்பம் பற்றி வாசகர் ஒருவர் முன்பே எழுதியிருந்தார். இதுபோன்ற அனுபவம் எங்கள் குடும்பத்துக்கும் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.
எங்கள் பெண்குழந்தைக்கு முடி இறக்குவதற்காகக் கணவரோடு பழநி சென்றிருந்தேன். முடி இறக்கும் இடத்தில் ‘கட்டணம் இல்லை - இலவசம்’ என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், முடி எடுத்த நபர் அசடு வழியவே, பத்து ரூபாய் கொடுத்தோம். அதற்கு அவர், ‘ஐம்பது ரூபாய் தர வேண்டும்’ என்று விவாதம் செய்தார். எனக்குக் கோபம் வந்து, ‘உனக்குத் தருவதை உண்டியலில் போட்டுவிடுகிறேன்’ என்று கூறி அங்கிருந்த உண்டியலில் போட்டுவிட்டு, குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டு தரிசனத்துக்காக வரிசையில் நின்றோம்.
அப்போது ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ‘விரைவாக தரிசனம் செய்யலாம். வாங்க’ என்று எங்களை நச்சரித்துக் கொண்டே இருந்தனர். சரி என்று நாங்களும் அவர்களுடன் செல்ல சம்மதித்தோம். உடனே, நாங்கள் கையில் வைத்திருந்த பையை வாங்கியவர்கள் சட்டென்று மாயமாக மறைந்துவிட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், அருகிலிருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோம். கடைசி வரை எங்கள் பை கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் அந்தப் பையில்தான் வைத்திருந்தோம். என்ன செய்வதென்றே தெரியாமல் அழுதே விட்டேன்.
அப்போது எங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அருகில் வந்து, எங்களுக்கு ஆறுதல் கூறி, உணவு வாங்கிக் கொடுத்து, நாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார். எங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை இப்போது நினைத்தாலும் ‘பகீர்’ என்கிறது.
- ஆர். மல்லிகா, பல்லடம்.

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» முதல் அனுபவம்
» இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்
» சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
» இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்
» சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum