இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1

Go down

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1 Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 3:43 pm

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

தமிழாக்கம் செய்தவருடைய சிறு விளக்கம்:

வேத-ஆன்மீக நெறிகளிலுள்ள உட்பொருளுணர்ந்து, அந்நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் யாவை என இக்கட்டுரை விளக்குகிறது. பக்குவப் படுத்தப்பட்ட நற்பண்புகளை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதையும், இக்கட்டுரையில் காணலாம்.

பிரதான மூல ஆங்கில கட்டுரையிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டதோடு, படிப்போர்களுக்கு இன்னும் நன்கு புரிந்து கொள்ள, சில விவரங்களைக் கூறி, இன்னும் சிறப்பாக்க, பண்டைக் காலத்து மேற்கோள்களையும், நல்லுதாரணங்களையும், இலக்கிய நயம் வாய்ந்த உயர்ந்த தமிழ், சமஸ்கிருத நூல்களிலிருந்து எடுத்துக்காட்டாக, வேண்டிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பகவத் கீதை, மகாகவி காளிதாஸ காவியங்கள், ஆங்கில மேற்கோள்கள், போன்றவைகளீல் இருந்தும், அரேபிய நாட்டு மிகப் பழைய பாமாலைகளின் எழுத்துப் பெயர்ப்புத் தொகுப்பிலிருந்து தமிழாக்கமும், (transliteration & translation), ஏனைய முது மொழிகளுடன், விளக்கமாக அளிப்பட் டுள்ளது. மேற்கோள்களும், தமிழாக்கம் செய்தவருடைய சொந்த கருத்துகளனைத்துக்களும் இந்த அடைப்புக்குறியில் (Bracket) காணலாம். [[[...........]]].

முகவுரை

நான் கிருஸ்தவனாகப் பிறந்தவன். 2001 ஜூன் மாதத்தில், என் பாரத சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். அப்போது, இந்தியாவிலுள்ள சிறுபான்மை இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தங்களை முன்நிறுத்திக் கொள்வதுடன், ஹிந்துக்களல்லாதவரைச் சினமூட்ட எவ்வித தூண்டுதலுமின்றியே, இவர்கள், ஹிந்து சமய தத்துவங்களின் மதிப்பைக் குறைத்து, வரம்புமீறி, எவ்வித கட்டுப்பாடின்றி, கெடு நோக்கினால் வேண்டுமென்றே தவறான வழியில் செய்கிற, பொறுப்பற்ற துஷ்பிரசாரமும் (Hindu bashing), என் மனதை மிகவும் நோகடித்தது. ஹிந்துக்களுக்கு இதனால் ஏற்படும் மனவலியைப் பற்றி கொஞ்சமும் இலட்சியம் செய்யாது இருப்பதும், என் மனதை இன்னும் கூடுதலாக பாதித்தது. இந்தியாவிலுள்ள சிறுபான்மையோரால், அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வரும் பொருளற்ற உரைகளில், தங்களது இயக்கத்திலுள்ள, அல்லது சமயத்திலுள்ள கருத்துகளை மட்டுமே நேர்வழியில் மக்களுக்கு தெரியப் படுத்தாது, ஹிந்து சமயத்தையே சாடும் இவர்கள் செய்கை, ஹிந்து சமய நன்நெறியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் மிகக் கீழ்தரமான காழ்ப்புணர்ச்சியையும், மனப்பக்குவமில்லாமையும், அற்பத்தனத்தையும், மிக முக்கியமாக, ஹிந்து சமயத்தைப் பற்றி அறியாமையையுமே படமெடுத்துக் காட்டியது.

[[[இவைகள் யாவும், தங்களுடைய குறைபாடுகளை இட்டு நிரப்ப, நம்பிக்கை இழந்த நிலையில் தங்கள் குறிக்கோள்களை எவ்விதத்தாலும் அடைந்து விட, வெறிபிடித்துச் செய்யும் தந்திரங்களாகவே எனக்குத் தோன்றியது.

இவர்களுக்குள்ள குறைபாடுகளுடன்:

1. கேட்ட கேள்விகளுக்கு ஒப்புக்கொள்ளும் வகைகளில் பதிலளிக்காமல், பேச்சுவார்த்தை

என காலங்கடத்தி, கட்டியணைத்து, கைகுலுக்கி, செயலற்ற உரையாடலால்

எரிச்சலையும் கிளப்பிவிட்டு, ரொக்கத்தையும் நேரத்தையும் விரயம் செய்தல்,

இக்கருத்தை ’மதன்லால்’ எனும் உருது கவிஞர் ”தகாய் உல்” -- எண்ணத்தில்

எழுந்தவைகளை வாழ்க்கையில் காட்டுவது -- (imagination brought to life)(கஜல்) இல்

மிக அழகாகக் கூறுகிறார்:

உருது கவிதையை தமிழில் எழுத்தாக்கம், (Transliteration)

தில் ந மில் பாயே தோ, பிர், ஆங்க் பசாகர் சல் தோ |

பே ஸபப் ஹாத் மிலானே கி, ஜரூரத் க்யா ஹை ||

தமிழாக்கம்:

”நம் இருவர் மனதே கூடாமல் இருக்கும் போது, நீ உன் கண்ணை மூடிச் சென்றுவிடு,

அநாவசியமாக, கை குலுக்குவது என்பது தேவை தானா??”

உருது மொழியை ஹிந்தியில் கூட எழுதலாம்: இதோ:

दिल न मिल पायें तो, फिर, आंख बचा कर चल दो ।

बे सबब हाथ मिलाने कि, जरूरत क्या है ||

2. தங்கள் புனித நூல்களை மேற்கோளாகக் காட்டி, ஏமாற்றுதலையும், வன்முறையையும்

புனிதமாக்கி விடுவதல், அல்லது கேள்வி கேட்பதையே அனுமதிக்காது இருத்தல்,

3. ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல கருத்துக்கள் தங்கள் சமயத்தில் இல்லாததைக்

காட்டிக் கொள்ள விரும்பாது, இறுமாப்புடன் முரட்டுத்தனத்தையே வெளிப்படுத்துவது,

படாடோபத்தில் இணக்கம், பண்பில்லாத கயவர் போல பிறரைப்பற்றி லட்சியம்

செய்யாமல், எருது முட்டவருவது போல, அட்டகாசத்துடன், அகங்காரமாக

நடந்து கொள்வது, தனக்கு எல்லாவற்றிலும் உரிமை உண்டென திமிர்

நோக்கு, மேலும் தற்காதல் எனும் தனித் தன்மையுள்ள குணத்துடன் எதிலும்

ஈடுபடுவது (narcissistic personality traits) ஆகிய இவைகளின் சேர்க்கையாகக் கூட

இருக்கிறது!

சமயசார்பற்ற கொள்கையை ஆதரிப்போர் (secularists) என தங்களைக் கருதிக் கொள்பவர்களும், ஜனநாயகத்தைக் காக்க, உண்மையான தகவல்களை வெளியிடாமல், இத்தகைய secularists களுக்கு ஒத்தூதும் பந்நாட்டு மூலதனத்தில் மட்டுமே செயல்படும் ஊடகங்களும் (e.g., Ajtak, NDTV, CNN-IBN), வேண்டுமென்றே, கபடற்ற, எளிய இந்திய மக்கள் மூளையை சலவை செய்யும் உள்நோக்கத்துடன், தங்கள் மதம், எண்ணங்களுக்காகவே, உபயோகப்படும் காணொளி-தொ(ல்)லைக் காட்சிகளைப்பற்றி (இந்தியாவில் 95%-media) தனியாகச் சொல்ல, என்ன இருக்கிறது? இவர்கள் எல்லோருமே, ஆதாயம் கிடைக்கும் இடங்களுக்கே ”ஜே” போடும், அணுகுமுறை கொண்டவர்களாயிற்றே!]]]

உலக அரங்குகளிலும், இம்மாதிரியே அவ்வப்போது ஹிந்துக்களல்லாதோர் உரத்த குரலில் நடத்திவரும் ’’ஹிந்து நன்நெறிகளைப் பழிப்பதையே’’ தங்கள் கொள்கையாக நிலைப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டேன். இவைகளுக்கெல்லாம் கூடுதலாக, மேலை நாட்டு நாகரிக மோகத்தால், ###ஹிந்துவாகப் பிறந்தும், சமீபத்தில் மேலை நாடுகளில் புதிதாகக் குடியேறிய அனுபவமற்ற, கற்றுக்குட்டிகளின் போலி நடத்தையால், தங்கள் மேன்மை பொருந்திய ஹிந்து நாகரிகத்திலுள்ள நல்லவைகளில் எவ்வித தெளிவான அறிவு சற்றும் இல்லாது -- அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல், தங்கள் முதிற்சியற்ற தன்மையை மட்டுமே பலர் அறிய காட்சிப்பெருளாகக் காட்டிக் குழப்பி, பண்பாடற்ற முறையில் இவர்கள் உதிர்க்கும் அற்பத்தனமான சித்தாந்தங்களைக் கண்கூடாகக் கண்டேன். ஹிந்து சமய நாகரிகத்தின் தன்மையையும், அதில் உள்ளடங்கியவைகளை உணரும் திறனின்மையே இதற்கெல்லாம் மூல முழு காரணம். ஆதலால், கட்டுரை எனும் இச்சிறு வெளியீட்டால், மிக சிறப்பான வேத ஹிந்து நன்நெறிகளைப் பற்றி, எல்லோரும் அறிய எடுத்துரைக்க இருக்கிறேன்.

[[[###ஹிந்துவாகப் பிறந்தும், சமீபத்தில் மேலை நாடுகளில் புதிதாகக் குடியேறிய அனுபவமற்ற, கற்றுக்குட்டிகளின் போலி நடத்தை -- ’பிளக்கப்பட்ட பெரும் மரத்தின் நடுவில் வைத்திருந்த ஆப்பைக் (wedge) கழட்டி விட்டு, ஆப்பு இருந்த இடத்தில் வால் மாட்டிக்கொண்ட குரங்குகள் போல’, इतो भ्रष्ट:ततो भ्रष्ट:कीलोत्पाटिव वानर: (இதோப்ரஷ்ட: ததோப்ரஷ்ட: கீலோத்பாடீவ வானர:) -- எனும் செல்லுக்கிணங்க, வெளியில் தப்பி ஓடிவிட முடியாமலும், அதேசமயத்தில் வால் மாட்டிக்கொண்டதால், விளைந்த வேதனையைத் பொறுத்துக்கொள்ள இயலாது துடிக்கும் குரங்குகள் போல]]]

ஒரு ஒப்பீட்டுக்காகச் சொன்னால், ஹிந்து சமயம் எனும் சொல்லே, பிற்காலத்தில் இதற்கு வழங்கப்பட்டது. அதுவே இன்று இதன் பெயராகித் தங்கியும் போனது. ஹிந்து சமய தத்துவங்கள் (Hinduism) என்பது, மிகத் தொன்மையான வேதங்களைத் தழுவிய ஆன்மீக வழி என்றே இதன் சிறப்பியல்பாகக் கொள்ளவேண்டும். ஆகையால், ’ஹிந்து தத்துவங்கள்’ என்று சொல்லும்போது, அதை நான் வேத-ஹிந்து ஆன்மீக நெறி முறை எனவும், இன்னொரு வழியில் ’சனாதன தர்மம்’ எனவும், நான் அறிகிறேன். இதை முழுமையாகவோ அல்லது பகுதியாகப் பின்பற்றுவோர்களை, ’ஹிந்துக்கள்’ என்றே குறிப்பிட வேண்டுமெனவும் சொல்வேன். இதை இவ்வாறு சொல்வதில் எந்தக் குழப்பமும் எனக்கில்லை. உங்களுக்கும் இருக்க முடியாத் என நினைக்கிறேன். ஹிந்து சமய வழிகள் எனும் பெருங்குடையின் கீழ், மிகத் தெளிவாகத் தெரியக் கூடிய, தனித்தன்மைகளை யும், அதே நேரம் அநேக வேற்றுமைகளை வெளிப்படையாகக் காட்டுகிற, உட்பிரிவுகள் ஏராளமாக உள்ளன என்றாலும், இக்கட்டுரையை, பாரபட்சமில்லாமல், வேத-ஹிந்து நெறியைச் சார்ந்த அனைவருக்குமாக, அதாவது அனைத்து உட்பிரிவுகளுக்கும் ஏற்றதாகவே, எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

[[[ ‘ஹிந்து’ என்ற சொல் ஏன், எப்போதிலிருந்து உருவானது என இங்கேயே விளக்கிக் கொண்டிருந்தால், இதன் தொடர்ச்சியாக அநேக தலைப்புகளில் மிக விளக்கமாக கட்டுரைகளை நீண்டதாக எழுத வேண்டிவரும். (ஆரிய புனைக்கருத்து (Aryan Theory), சரஸ்வதி நதியின் உண்மைகள், வேதகால சம்ஸ்காரங்கள், சம்பிரதாயங்கள், கால்டுவெல்லின் இன-மொழி-சமய புனைசுருட்டு வாதம், இப்புனைசுருட்டு வாதங்களை, தமிழ் நாட்டில் சிக்கெனபற்றிக் கொண்டு, செம்மொழி பேசுவதாகவும், எழுதி, இலக்கியம் படைப்பதாகவும் ”எண்ணிக்” கொண்டிருக்கும் சில கழக முரண்பாடுகளின் தொகுப்பு, ஜெர்மனியின் மாக்ஸ் முல்லர், (Max Mueller) செய்த வேதகால ஹிந்து சமய ஆராய்ச்சித் தொகுப்புகள், ஆதாரங்கள் போன்றவை; இவைகளனைத்தையும் இங்கே கருத்து விளக்கம் அளிக்க, இது மேடையல்ல. இதைப்பற்றி பிரத்யேகமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்!]]].

ஹிந்து சமயத் தத்துவங்கள் (Hinduism), அல்லது வேதப் பண்பாடு, என்பது ஒரு ஆன்மீக வழி. உண்மையில் இதற்கிணையாக இவ்வுலகில் ஒன்றுமே இல்லை எனலாம். நானோ, மேலை நாட்டைச் சார்ந்த கிருஸ்தவனாக வளர்ந்தேன். கிருஸ்த்தவத்தில், புனிதமாகக் கருதப்படும் பைபிளை நன்கு அறிய வேண்டி, ஆவலுடன் அட்டைக்கு அட்டை, கூர்ந்து ஆராய்ந்தேன். இருப்பினும், என்னுடைய பல கேள்விகளுக்கும் கிறிஸ்துவ மதத்தில் பதில் இல்லை என்பதை என் 19 - ஆவது வயதிலேயே தெரிந்தும் கொண்டேன். ஆதலால், வேறு சமய தத்துவங்களைப் பற்றியும் கலாசாரங்களைப் பற்றியும், சொல்லாலும் செயலாலும் நேர்மையுடன் ஆழ்ந்து, என் கேள்விகளுக்கு தக்க பதில்கைளைத் தேடித்தெரிந்து கொள்ள ஆய்வில் ஈடுபட்டேன். அனைத்திற்கும் ஓர் முடிவாக, மற்ற மரபு வழிகளைக் காட்டிலும், வேதப் பண்பாடுகளே, வழிவழியாக வந்ததாகவும், அறிவாழம் மிக்கதாகவும், ஒப்புக்கொள்ளத் தக்கதாகவும், நான் தேடிக்கொண்டிருந்தவாறு, அதில் என் கேள்விகளுக்கு பதில்களையும் ஒருங்கே கண்டேன். மேலாக, வேதப்பண்பாடு ஒவ்வொரு கட்டத்திலும் தென்றுதொட்டு கடுஞ்சோதனைக்காட்பட்டு, முடிவில் வாழ்க்கை வழிக்கும், அறிவுக்கும் மனதுக்கும், என் மனவேட்கைக்கு அருமருந்தாக அமைந்து விட்டது.

வாழ்க்கைக்கு வேண்டிய ஆன்மீக குறிக்கோள்களை அடைய, இப்பண்பாடே, இந்நாட்களில், மற்ற பல பண்பாடுகளைக் காட்டிலும், தெளிவான நுண்ணறிவுத் திறன் வாய்ந்ததாக, எனக்கு மனதாரத் திருப்தியும் அளித்தது. இதனால், இத்தனை நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கான பதில்கள், வேத மரபைச் சார்ந்த ஹிந்து இலக்கியங்களான, பகவத்-கீதை, பாகவத புராணங்களின் மூலமாக எனக்கு ஏராளமாகக் கிட்டியது. இதற்குப் பின்னர் தான், எனக்கு, உலகிலுள்ள பல விஷயங்கள், ஏன் எதற்கு என அறிந்து கொண்டு, அவைகளில் ஏற்றுக்கொள்ள வேண்டியவைகளைப் பற்றியும், தவிர்க்க வேண்டியவைகளைப் பற்றியும் தெளிவு ஏற்பட்டது. ஹிந்து சமயம், எதையும் யாரிடமும் எப்போதும் திணிப்பதில்லை. ஏற்பதோ, தவிர்ப்பதோ தனி மனிதனின் சுதந்திரமாகும். ஆதலால், மேன்மேலும் ஆன்மீக அறிவியலில் முன்னேற்றமடைய, முறைப்படி, அருளார்ந்த ஸ்ரீ பக்தி வேதாந்தஸ்வாமி பிரபுபாதாவிடம் முறைப்படி தீட்சை பெற்று அவருடைய ஆன்மீக வழியில் சீடனாக ஆனேன். எனக்கு ”நந்தானந்த தாஸ” (Nandanandana dasa) ” எனும் பெயரும் அருளப்பட்டது. இதிலிருந்து, நானும் மற்ற சமயங்களைப் பற்றி ஆய்வு செய்தும், வேத-ஹிந்து தத்வார்த்தங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியையும் மேற்கொண்டேன்.

ஆமாம்!! ஹிந்து சமய வேதப் பண்பாடுகளிலும், அல்லது ஹிந்து தத்துவங்களிலும் மெச்சிக் கொள்ளத்தக்க விஷயங்கள் அப்படி என்னதான் உள்ளன? இக் கட்டுரைத் தொகுப்பில், ஹிந்து சமய தத்துவங்களின் தனிச்சிறப்பு, அச்சிறப்புகளில் வேறுபடுத்தி உணரக்கூடியவைகளை மிக எளிதான முறையில், ஆனால், மிக அடிப்படையான முக்கிய விவரங்களுடன் சுமார் 28 தலைப்புகளில், குறைந்தது ஐந்து அல்லது ஆறு பகுதிகளாக, தொகுத்துக் கொடுக்க உள்ளேன். இதில், வாழ்க்கையின் உள் நோக்கங்கள் என்னென்ன என்றும், அவைகளை அடைய வெவ்வேறு அணுகு முறைகள் யாவை எனவும் கூறி, தனித்தன்மையுள்ள வேத-ஹிந்து ஆன்மீக அடையாளங்களையும், திறந்த மனம் படைத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவற்றைப் பற்றிக் கூறும் போது, ஹிந்து சமய வேத வழியே மிகச் சிறந்தது எனக் கூறி, என் தீர்ப்பை உங்கள் மீது திணிப்பதிலும், யாரையும் நிர்ப்பந்தப் படுத்தி கோரிக்கை விடுவதிலும், எனக்குக் கொஞ்சமும் நாட்டமில்லை. இனி என் வாதங்களை ஏற்பதோ, ஏற்க மறுப்பதோ உங்கள் விருப்பம். ஆனால், மேம்பாடுடைய வேதநெறிகளைப் பின்பற்றினால், எளிதில் அடையக்கூடிய நன்மைகள் என்னென்ன என மாத்திரம் கூறி, அவைகளில் சிலவற்றைத் தொகுத்து கீழே கொடுத்திருக்கிறேன். (No compulsion at any time on anyone)

ஹிந்து சமயத்தின் சிறப்புக்கான நோக்கு நிலை:

அடிப்படையில், ஹிந்து சமயம் எனும் பெயரே, அண்மைக்காலத்தில் அதற்கிட்ட பெயர் என முன்பே கூறியிருக்கிறேன். அப்பெயர் ஹிந்து சம்பிராதாயத்திற்குத் தொடர்புடையது; இது வாழ்க்கைக்கு வேண்டிய ஆன்மீக வேத நெறி வழிகளையே குறிக்கிறது. முந்நாட்களில், எவரெவர் வேத ஒழுங்கு முறைகளில் உள்ள நன்நெறிகளை பின்பற்றினார்களோ, அவர்கள் எங்கிருந்தாலும், யாராயிருந்தாலும், எந்த இன-மொழி-சமயங்களைச் சேர்ந்தவராலும், அவர்கள் எல்லோரையுமே பாகுபாடின்றி, ’ஆரியர்’ என்றே அழைத்தனர். ’ஆரியர்’ எனும் சொல், ஒரு விளிச்சொல் (vocative case) இதற்கு ’நற்பண்பாளர்’, ’பெருந்தகைமை யுள்ளோர்’ ’குறைபாடற்ற உளப்பாங்கு கொண்டோர்’ எனும் பொருளுண்டு. அதாவது, எவர் தம் வாழ்க்கை வழிகளை, தூய்மையுடன் நடத்துகிறார்களோ அவர்களையே இது குறிக்கும். ‘ஆரியர்’ எனும் சொல், மிகச்சிறப்பான, குறைபாடற்ற, பின்பற்றத்தக்க வாழ்க்கைத் தரத்தை அனுசரிப்போர் என இதற்கான பொருளைக் கொள்ள வேண்டும். ஆகவே, ’ஆரியர்’ எனும் சொல் மரியாதைக்குத் தகுதியுள்ளோர் என்றொரு பொருளும் உண்டு. இப்பெயர் கொண்டவர்கள், சமஸ்கிருத மொழியிலும், மக்கள் இடையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, பொதுமொழியாக பேசுபவர்கள். இயற்கையாகவே, படிப்படியாக ஒரு சமூகம் மலர்ச்சியுறுதலில், இம்மாதிரியான ‘ஆரியர்’ என்பவர்கள், முன்னுள்ளதைக் காட்டிலும் இன்னும் அச்சமூகத்தை சிறப்புற தோற்றுவிக்கும் தகைமை யுடையோர் எனச் சொல்வர். ’ஆரியர்’ எனும் இச்சொல்லை மற்றொரு விதத்தில் பொருள் விளக்கமும் தரலாம். ”ஆர்ய” எனும் இச்சொல்லை, ”ஆர்” என்றும், ’’ய’’ எனவும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். ‘ஆர்’ என்றால், ’வெண்மை’; ’தெளிவானது’; ’களங்கமற்றது’; ’தூய்மையானது’ எனலாம். அடுத்ததாக, ‘ய’ என்றால், ’படைத்தோன்’; அல்லது ’கடவுள்’; அல்லது ’நம்மையாளும் இறைவன்’ என்பதாகும். ‘ய’ என்பதையே, ‘யாதவகுலத் தோன்றல் – ’’தேவகி-யசோதை’’ மைந்தன் -’கிருஷ்ணனையே’ குறிக்கும். எவரெவர் இறைவனைப் பற்றி, தூய்மையான உணர்வு நிலையையும், இறைவழியை அடைவதற்கு, மற்றோரை அவ்வுணர்வில் ஊக்குவித்து, தங்களுக்குத் தாங்களாகவே முதிர்ச்சியடையச் செய்விக்கிறார்களோ, அல்லது உருவாக்குகிறார்களோ, அவர்களே ‘ஆரியர்’ எனும் சொல்லுக்கு மிகப்பொருத்தமானவராக இருப்பர்.

[[[தானே பழுத்த பழம் தான் மிக்க சுவையுள்ளது, அதை செயற்கையில் பழுக்கச் செய்தால், அதை பிஞ்சில் பழுத்தது எனவே கூறுவர். நல்ல பழச்சுவையை செயற்கையில் கொண்டுவர இயலுமா?]]].

இவ்வாறுதான், ‘ஆரியர்’; ’வேத கலாச்சாரம்’, ’ஹிந்து சமய தத்துவங்கள்’ எனும் ஒருபொருட் பன்மொழிகளை (synonyms) நாம் புரிந்துகொள்ள வேண்டும். இச்சொல் எந்த நிலப்பகுதியையோ, அல்லது எந்த இனத்தைக் குறிப்பிடும் சொல்லல்ல. ‘ஆரிய’ வழி என்பது – எளிதான நேர்மையான வாழ்க்கையையும், உயர்வான சிந்தனையையும் கொண்டு, (simple living & high thinking), மாந்தர்களுக்குள் அமைதி, சமாதான சகவாழ்வு, எல்லோரும் இன்புற்று இருத்தல், எல்லோருக்கும் ஒரே நியாயம்’’ போன்ற நற்பண்புகளை நடைமுறையில், ஆதரித்து ஒப்புதலளிக்கும் வழி யெனக் கொள்ளவேண்டும். இவ்வழியில் எல்லாமாந்தரும் நன்நெறிசார்ந்த வாழ்க்கையையும், தன்நலம் கருதாமல், பிறருக்கு சேவை செய்யும் மனப்பாங்கையும் கொண்டால், இஃதே இறைவனுக்கு ஆற்றும் நற்தொண்டு செய்ததாக ஆகுமென வாழ்பவராவர். ஆகவே, உலகில் எப்பகுதியில் வாழ்ந்தாலும், எவ்வினத்தைச் சேர்ந்தவரானாலும், இவ்வழிவாழ்வோரே, ‘ஆரியர்’ என்றும் வேத-வழி வாழ்வோர் என கொள்ளல் வேண்டும்

[[[ஆனால், ‘ஆரியர்’ என்பவர்களை ஒரு தனி மக்களினமாக, சிலரால் காரண காரியம் இல்லாமல், அநாவசியமாக எண்ணப்படுகிறது. மக்களைப் பிரித்துத் தங்களை முன்நிறுத்திக் கொள்வர்கள் தான் இதற்கெல்லாவற்றிற்கும் மூல காரணம். ”ஊர் இரண்டுபட்டால் தானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பது போல, மக்களைப் பிரித்து அதனால், தங்கள் வாழ்வுக்கு வழியேற்படுத்திக் கொள்ளும், ஈன ஜன்மங்களைப் பற்றி என்னவென்று சொல்வது? ‘ஆரியர்’ ’திராவிடர்’ சம்பந்தமாக, ’’சுப்பு’’ அவர்கள் எழுதிய ‘’திராவிட மாயை” எனும் மிகத் தெளிவாக, ஆதாரங்களுடன் படிப்படியாகக் கூறப்படும் புத்தகத்தில் 27ம் பக்கத்தில் உள்ள பத்திகளை இங்கு அப்படியே கொடுத்திருக்கிறேன். à

”””””இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எண்ணங்கள் மக்கள் மனதில் உருவாக்காத வரை தமிழர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த ** கால்டுவெல், வடவர், மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். இம்முயற்சியின் முதற்கட்டப்பணியாக ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார். அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாக ‘திராவிடம்’ என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. கால்டுவெல்லுக்கு முன் டி. நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என குறிப்பிட்டுள்ளார்.’திராவிடம்’ என்ற சொல்லாட்சி இல்லை. கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு, மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டது தான். இணக்கமாக, மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது””””.

à‘ஆரியர்’ எனும் சொல்லை, அதை ஒரு தனி ‘இனமாகவோ’, அல்லது ’மதவெறிகொண்ட சமயக் கோட்பாடுகளில் தீவிரமானவர்கள்’ என்றோ, அல்லது ’தனித்தன்மையுள்ள சமயமென்றோ’, பித்துபிடித்து கண்மூடித்தனமாக வெறி-வாதம் புரிவது, எவ்விதத்திலும் கூறுகெட்ட முட்டாள் தனமாகும். பிறித்தாள வந்த ஆங்கிலேய-கிருஸ்தவரும், ** அதே இனத்தைச் சார்ந்த ‘ராபர்ட் கால்டுவெல்’ எனும் கிருஸ்தவரும், தங்கள் கிருஸ்தவ சமயத்தைப் பரப்ப, முதன்முதலாகக் கூறியவற்றை சிக்கெனப் பற்றிக்கொண்டு, சுயநல திராவிட ’ரத்தத்தின் ரத்தங்கள்’ தங்கள் பிழைப்பதற்கு நடத்திக் கொண்ட அல்லது இன்றும் நடத்தித் திளைத்துக் கொண்டிருக்கும் நாடகமாகும். (இதைச் சேர்ந்த பல புனைக்கருத்து வாதங்கள் மிக ஆதாரமற்ற அபத்த பொய்க் கருத்துகள் என இன்று ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகக் கூறுகின்றன. ’சரஸ்வதி நதியைப்’ பற்றி வீண் வாதமும் இத்தகையது என இன்று இந்திய அரசாங்கமே, ஆழ்ந்த ஆய்வுக்குப்பிறகு ஆதாரத்துடன் நிரூபணமாகி, முறையாக ஏற்றுக் கொண்டுவிட்டது). இதையெல்லாம் கிளப்பிவிட்டு இந்தியரிடையே ஒரு கிட்டப் பர்வையை’(myopia) வேண்டுமென்றே உருவாக்கி, இந்தியரைச் சுரண்டும் நோக்கதோடு, பிரித்தாளும் தந்திரத்தை, ஆங்கிலேய-கிருஸ்தவர்கள் அன்று கையாண்டனர்.

இன்றோ, இவர்கள் பின்வந்தோர், தந்தைக்கு மிஞ்சிய தனையன்களாக இருக்கின்றனர்.

"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்?” என்பது குறித்து, மு.கருணாநிதியிடம், ஜூன் 21, 2010இல், விளக்கம் அளித்துள்ளதில், அதே ’ராபர்ட் கால்டுவெல்’லின் கூற்றையே, இத்தனைக்குப் பிறகும், மேற்கோள் காட்டுகிறார்!!

இவரைப்பற்றி என் சொந்த கருத்து:

கீழ்க்கூறியவை அவசியம் சொல்லப்பட வேண்டியதானது. இதில் எனக்குக் குழப்பமில்லை. ஏனெனில், இது ஒரு ஹிந்து ஆன்மீகத்தைப் பற்றிய தமிழ்க் கட்டுரை, தமிழ் நாட்டில் ஹிந்து நாஸ்திக வாதத்தை மட்டுமே பரப்புவதில் அதி தீவிரமாக இருப்பவரைப் பற்றி இங்கே குறிப்பபிட வேண்டியது அவசியம் என எனக்கு மனதில் பட்டது. இதனால் தான் இங்கு, இவைகளை ஒரு பத்தியாகச் சேர்க்க நேர்ந்தது.

• அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மட்டும் ’1330 அருங்குறட்களை’ எழுதிவிட்டு, ‘வீட்டுப்பால்’ எனும் ஒரு பகுதியை, வெறும் தலைப்பால் மட்டுமே எழுதி வைக்காமல், ஆனால், ’வீட்டை’ அடைய, ’வீட்டின்’ உட்பொருள் விளங்களை மிகத் தெளிவாக திருக்குறளெங்கும் முழங்கிய, வான் புகழ் கொண்ட ’எல்லா உலகத்திறே உரிய’ -- முதற்பாவலர், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெரு நாவலர், தெய்வப்பலவர் எனப் பெயர் பெற்ற -- ’’திருவள்ளுவர்’’ எழுதி வைத்த -- முப்பாநூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, தமிழ் மறை, பொது மறை -- ஆகிய சிறப்புப் பெயர்கள் கொண்ட கடவுளைப் பற்றிய ’திருக்குறட்கள்’ வேண்டாம்; ஆனால், தேவைப்படும்போது (கடவுளைப் பற்றிய எழுதி வைத்த குறட்களை நீக்கி வைத்து) மற்ற குறட்கள், கழகப் பிரசாரங்களுக்கு மட்டுமே வேண்டும் என சொல்பவர், இவர். மேலும் தன் தமிழ்ப்பற்றைக் காட்டிகொள்ள, முக்கியமாக, விண்ணை முட்டும்-தன்-புகழ்-பாட, திருவள்ளுவருக்கும் விண்ணை முட்டும் (வானளாவிய) சிலை வைக்க வேண்டும் என்பவர். குறளில் கூறியவைகள் போல, கலைஞர் தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகிறாரா என்பதைக் கேட்காமல் இருந்தால் தான், நமக்கு நல்லது. இல்லையேல் நடப்பதே! வேறு(அவர் போற்றும் திரைப்படப் பாணியில் சொன்னால்!!); தமிழறிஞர் திரு பழ. கருப்பையா அவர்களுக்கு நடந்தது ஞாபகம் இருக்கட்டும்!!

• நெற்றியிலிட்ட குங்குமப் பிரஸாதத்தை ரத்தக்கறை என ’நாஸ்திக’மாக ஏளனம் செய்து, அதே சமயம், ’ஆஸ்திகம்’ ஒன்றையே முழு மூச்சுடன் போதனை செய்யும் ’’சத்ய சாய் பாபா’’வைத் தன் வீட்டிற்கே வரவழைத்து, ஆங்கே எப்போதும் தன் மேனியை அலங்கரிக்கும் மஞ்சள் நிற சால்வையுடன், (இது மாத்திரம் குருட்டு நம்பிக்கையல்ல!), கலைஞர், தன் எதிரிலேயே, அதே ரத்தக்கறை குங்குமத்தைத் தன் நெற்றி நிறைய மிகப் பெரிதாக பொட்டு இட்டுக்கொண்டு, ஸ்ரீலக்ஷ்மீகரமாக அவர் மனைவி திருமதி, தயாளு அம்மாள், பக்தி சிரத்தியுடன், பெரியவருக்கு பாத பூசை செய்யும் போது மட்டும் அகமகிழ்ந்து ‘பாபா’வுடன் அளவளாவுதல். ஆனால், கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கையைப் பிரசாரம் செய்து, திருவள்ளுவரைத் திட்டித் தீர்த்தும், தமிழ் மொழியை ’’காட்டுமிராண்டி மொழி’’ என 40 ஆண்டுகளாகக்கூறி, ஆக, தமிழனையே ”காட்டுமிராண்டி” என கொடுஞ்சொல்லால் சாடிய, ஈ.வே.ரா. பெரியாருக்குப் புகழாரம் சூட்டும் நாஸ்தீகப் பகுத்தறிவாதி, ஈ.வே.ரா. வழியில், தான் வந்தவரெனப் பிரசாரமும் செய்து, அதிலும் பெருமையையும் கொள்பவர்.....

• ஆரிய-திராவிட-மொஹஞ்சதாரோ-ஹாரப்பா-சரஸ்வதி நதி ஆகியவைகளைப் பற்றிய, ஆய்வுகளின் முடிவுகளைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் கிடையாது, ஆம்! என்றுமே வராது! காரணம், ..... கழகக் காகித அட்டைகளால் ஆன அடித்தளம் என்னாவது?!

• வேண்டும்போது (தேர்தல் ஓட்டுக்காக) ஒத்தூத நாத்திக (ந+அஸ்தி) = (न+अस्ति) (அது இல்லை), இறையில்லை எனும் நாஸ்திக வாதம், கம்யூனிச, இஸ்லாமியக் கொள்கைகளில் ஈடுபாடென, குல்லாபோட்டுக் கொண்டு ’இஃப்தார்’ கஞ்சி குடிக்கும்போதும், அவ்வப்போது வேண்டுமென்றால் வெவ்வேறு மேல் சட்டை, குல்லாக்களை மாற்றிக்கொள்ளும் போது, இடி முழக்கத்துடன் அறிக்கைகள்.

• இதற்கெல்லாம் சிகரமாக, இப்படியாக, தமிழுக்கு அருந்தொண்டாற்றிய, இவருக்கு, புகழாரம் சூட்டக் காத்திருக்கும் திரைப்பட, தண்டவாளத்தின் மூலமும், தமிழுக்குத் தொண்டாற்றும் கவிஞர்கள் புடைசூழ ஊர்வலம் வேறு;

• இவருடைய இந்திய தேசப்பற்றைப் பற்றிக் கூறினால், ........அதிகம் கூற வேண்டாம் ..... ஆங்கிலேயன் இந்திய நாட்டைவிடோடிய போது, ஆங்கில ஆட்சியே வேண்டும், குறைந்தது ‘மதராஸ் மாகாணத்திலாவது” நீடிக்கவேண்டுமென ”போகாதே போகாதே எங்கணவா” என பிலாக்கணத்தைக் கூட்டிசைத்த அந்நாள் நீதிக் கட்சி, கூட்டத்தைத் தன் கழக பிறப்பிடமாகக் கொண்டவரல்லாவா?

• ராஜாஜியையும் காந்தியையும், நேருவையும், காமராஜரையும் அன்று இவர் திட்டியதை எழுத்தில் வடிப்பதற்கு கை மறுக்கிறது, இவர் அன்று இவர்களைத் திட்டியது போல வேறெவரும் அவ்வளவு அசிங்கமாக (’மோசமாக’ எனும் சொல் எனக்குச் சற்று குறைவாகப் பட்டது) எவரும் திட்டியதில்லை. ஆனால் இன்றோ ராஜாஜி – மூதறிஞராகிப் போனார், காந்தி – உத்தமரானார், ’நான்சென்ஸ்’ நேருவின் புத்தகத்தி லிருந்து மேற்கோள் காட்டுகிறார், ”காமராஜரோ – இன்று ’பெருந்தலைவராகிப்போனார்’. ஏனெனில், இப்படி தன்னை மாற்றிக் கொண்டால்தான் ...... இன்று நல்லது என முற்றிலும் உணர்ந்த தமிழ் ஞானி ........ ஆகையால் தான் ”நிலை மாறினால் குணம் மாறுவான்” எனத் தமிழ்க் கவிஞர் கண்ண தாசன் என தெரிந்து வைத்துக்கொண்டு தான் எழுதி வைத்தாரோ!.

• நிரந்தமாக அரசியல்வாதியாக இருப்பதற்கு ”என்றுமே, எந்த நிரந்தரக் கொள்கையும் தேவையில்லை” என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர், (திராவிட நாடு .... சுடுகாடு....மாநில சுய ஆட்சி ... என அடுக்கடுக்காக) இதற்காகவே ஒரு மற்றொரு தனி ’முனைவர்’ பட்டத்தை அடையத் தக்க, முனைவர்-கலைஞர் அவர்கள்.

• இனி நாட்டிலுள்ளோர், யாராவது தமிழ் முனைவர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டாலும், அவரை ஏற, இறங்கப் பார்த்து, ஏளனப் புன்னகையுடன், ”ஒருவேளை கழக முனைவரா (ஆற்றில் போகும் தண்ணீரை, ஐயா குடி, அம்மா குடி என்றவாறு), அல்லது உண்மையாகவே தமிழறிஞர்களிடமிருந்து முறைப்படி, சிரமப்பட்டு, கற்றறிந்து, தக்க தமிழ்ப் பேறறிஞர்களால், பரிசோதனைக்காட்படுத்தப்பட்டு, தமிழிலக்கியத்துக்கு உண்மையாகத் தொண்டு புரிந்த, தமிழறிஞரா?” எனும் அளவிற்குத் திருப்பி நோக்க வைத்த முனைவர்-கலைஞர்! (உண்மைத் தமிழ் முனைவர்களையும் இங்கு இழுத்ததற்கு, அனைவரும் என்னை மன்னிக்க, தாளும் தடை கூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்).

ஆகிய இவற்றைத் தன் பின்னணியில் கொண்ட ஒருவர், ’ராபர்ட் கால்டுவெல்’லின் கூற்றையே மீண்டும், மேற்கோள் காட்டிப் பேசினால், அது எதைக் காட்டுகிறது?

சமீபத்தில் கலைஞர் உதிர்த்த மற்றொரு, முத்து, ஆம்! மற்றொரு முத்துதான்!! ”வடமொழி வேதங்களில், 20-க்கும் மேற்பட்ட ‘தமிழ்ச் சொற்கள்’ இருப்பதால், வட மொழிக்கு முன்பே தமிழ் மொழி இருந்தது என்பதை அறியலாம்” - என்று கலைஞர் கூறுகிறார். இதற்கு ‘துக்ளக்’ வார இதழில் (14-ஜூலை-2010) ‘சோ” அவர்கள் அளித்த பதில், என்னை மிகவும் கவர்ந்தது. ”சோ” அவர்கள் சொல்லாமல் சொன்னதை, நான் பகிரங்கமாகவே, சொல்ல விரும்புகிறேன். ”எந்தெந்தச் சொற்கள், எந்தெந்த மொழியிலிருந்து எந்தெந்த மொழிகளுக்குச் சென்றுள்ளன – என்பது பற்றி முழுமையாக ஒரு கருத்துச் சொல்கிற அளவிற்கு எல்லா மொழிகளிலும் விவரம் அறிந்தவர் எனத் தன்னை, அவரால் கூட ஒப்புக்கொள்ள முடியாதே”! இதெல்லாம் ஒரு வாதத்திற்குத் தேவைதானா? இதைத்தான் ”வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” எனவும், ‘கவைக்குதவாத’ வாதங்கள் எனக் கற்றறிந்தோர் கூறுவர்.

பாவம்! இவரால் வேறென்ன செய்துவிட முடியும்! நான் மேற்கூறியவற்றைப் பற்றி, யோசித்துத் தீர்ப்பு கூற உங்களிடமே விட்டு விடுகிறேன்.

”பிற மொழி சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்றவாறு, நம் மனக் கதவுகள் எல்லா திசையெங்கும் எல்லா மொழிகளிலும் உள்ள நல்லவைகளைத் தேடிக் கற்றுக் கொள்ள திறந்தே கிடக்க வேண்டும். தமிழ் சிறக்க, தமிழ் மக்கள் இன்னும் சிறக்க இத்தொண்டை நாம் எல்லாரும் செய்தாக வேண்டும். தமிழர்கள் பட்டை கட்டிக்கொண்ட ‘குதிரை நோக்குள்ளவரல்ல’ என உலகோர் மதிக்க வேண்டும். உலகெல்லாம் சிறக்க, நம் தமிழிலிருந்து மற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று தமிழைப் பரப்ப வேண்டும்]]].

இனி, எடுத்துக்கொண்ட முக்கிய தலைப்பற்றி கவனிக்கலாம் – ‘’ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள்’’

--00—

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum