இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருக்கோவிலூர் உலகளந்த பெருமான்

Go down

திருக்கோவிலூர் உலகளந்த பெருமான் Empty திருக்கோவிலூர் உலகளந்த பெருமான்

Post by ஆனந்தபைரவர் Tue Sep 07, 2010 4:22 pm

ஆழ்வார்கள் முதன்முதலாகப் பாடிய திவ்யதேசம் எனும் பெருமைமிக்க தலம்.
பஞ்சகிருஷ்ண தலங்களுள் ஒன்றான இந்தத் தலம், திருவிக்ரம அவதார தலம் என்றும் போற்றப்படுகிறது.
மார்கண்டேயரின் தந்தையான மிருகண்டு முனிவர், பகவானின் வாமன அவதாரக் கோலத்தைக் காண விரும்பி இங்கு தவமியற்றினார்.
மூலவர் திருவிக்ரமன் ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை விண்ணை நோக்கித் தூக்கிய நிலையில், இடக்கையில் சக்கரம், வலக்கையில் சங்கு ஏந்தி, கிழக்கு நோக்கி அருள்கிறார். இவரை தேகனீசன் என்றும் அழைப்பர்.
கிருஷ்ண தீர்த்தம், தென் பெண்ணையாறு, சக்ர தீர்த்தம், ஆகியவை இங்கே தல தீர்த்தங்களாகத் துலங்குகின்றன.
மகாபலிச் சக்ரவர்த்தி, மிருசுண்டு முனிவர், நான்முகன், இந்திரன், காஸ்மயர், முதல் மூன்று ஆழ்வார் ஆகியோருக்கு இத்தல பெருமான் பிரத்யட்ச தரிசனம் தந்தவர்.
தாயார் புஷ்பவல்லி தாயார் என்றும், பூங்கோவில் நாச்சியார் என்றும் வணங்கப்படுகிறார்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் இத்தல பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கரும்பாலையின் மூன்று உருளைகள் கரும்பை பிழிவதுபோல், தீங்கரும்பான எம்பெருமானை நெருக்கு மூன்று ஆழ்வார்களும் அவருடைய கல்யாண குணங்களாகிய ரசத்தைப் பிழிந்தனர் என நிகமாந்த மகாதேசிகன் வர்ணிக்கிறார்.
விந்திய மலையில் வாசம் செய்யும் துர்க்காம்பிகை, தன் சகோதரனுடன் வசிக்க ஆசைப்பட்டு இத்தலத்தில் சந்நிதி கொண்டுள்ளது எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத அற்புதம்.
தேசிகர் இத்தல பெருமானைக் குறித்து இயற்றிய தேகளீச ஸ்துதி மிகவும் பிரபலமானது.
நடு நாட்டு திருப்பதிகளில் முதலாவதாகவும், விண்ணுலகிற்கும் பாதாள உலகிற்கும் நடுவேயும் விளங்குவதால் நடு நாட்டான் எனவும் அழைக்கப்படுகிறார்.
மிருகண்டு முனிவருக்கு பெருமான் சாளக்ராம திருமேனியாக தரிசனம் அளித்த இடம் இத்தலத்தின் முன்புறத்திலேயே ஆதி சந்நிதி என வணங்கப்படுகிறது.
கிருஷ்ணாரண்யத்தில் நான் எப்போதும் சஞ்சரித்தபடி இருப்பேன் என திருமாலால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட தலம்.
பரசுராமர் இத்தலத்தில் தவமியற்றியதாக புராணங்களிலும், அகத்தியர் தவமியற்றியதாக தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவ மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் இத்தலத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர்.
இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை வதைத்த பாதாளகேது எனும் அரக்கனை அழிக்க திருமால் குதத்வராஜன் எனும் மன்னனை விண்ணுலகிலிருந்து குதிரையில் ஏற்றி அனுப்பியதாக பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீவன்கள் அறிய வேண்டிய திருமந்திரம், துவயம், சரமசிலோகம் போன்றவற்றை மூன்று பிரபந்தங்களாக முதல் மூன்று ஆழ்வார்கள் இத்தலத்தில் வெளியிட்டதால் இத்தலம் ஜீவாத்தமாக்கள் கடைத்தேற வித்திட்ட தலம் என போற்றப்படுகிறது.
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து இத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum