Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கவலைகள் களைவாள் காஞ்சி கருக்கினிலமர்ந்தாள்!
Page 1 of 1

வி.எஸ். ஸ்ரீநிவாஸன்
இவ்வுலகில் மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகளும் பிறந் தவுடனே எழுப்பும் முதல் சப்தம் "அம்மா' என்பதே. தாய்க்குதான் எவ்வளவு சக்தி! "சக்தி' என்றாலே அன்னை தேவியைத்தான் குறிக்கும். "மாத்ரு தேவோ பவ' என்று சிலாகிக்கப்பட்டதும் எதனால்? வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு. "தவறு செய்யாத பிள்ளைகள் இல்லாமல் போனதில்லை. ஆனால் தவறை மன்னிக்காத தாய் எங்குமே கிடையாது!' இந்தத் தாய் வழி பாடு இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுதும் பரவியது என்பதற்கு சக்தி பீடங்களுள் முக்கியமான ஒட்டியாணா, ஜலந் தரம், காமரூபம் ஆகிய மூன்றுமே வெளிநாடு செல்லும் எல்லை களில் காணப்படுவதே சான்று. சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் சக்தியே அன்னை காளி என்கிறது தந்திர சாஸ்திரம். தேவியே இல்லாமல் பல்லவர் நிறுவிய கோவில் களில்கூட லிங்க பீடம் கௌரி பட்டை எனப்படும் தேவி அம்சமே. வைணவத் தில் ராசக்ரீடையும், நேபாள ரதி லீலாவும், வட இந்திய ராதா- கிருஷ்ண தத்துவமும் சக்தி அன்னைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக ஏற்பட்டவைதான்.
அன்னை பராசக்தியின் அங்க ஸ்பரிசம் ஏற்பட்ட இடங்கள் எல்லாம் தேவி பீடங்களா யின. அதில் தொண்டை மண்டல காஞ்சி மாநகரம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. காமகோடி பீட காமாட்சி தவிர காஞ்சியில் பல அன்னை ஆலயங்கள் மிளிர்கின்றன. அவற்றில் ஒன்று தசமகா வித்யாவில் புகழப்பட்ட காளியின் கோவிலான கருக்கினிலமர்ந்தாள் ஆலயம். ஆதியில் பனங்காடாயிருந்த இப்பிரதேசத்தில் பனங்கருக்கினில் இருக்கை கொண்டதால் "கருக்கினிலமர்ந்தாள்' என்ற நாமம் ஏற்றாள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் செல்லும் தெற்குச் சாலையில், வேகவதி நதி குறுக்கிடும் முன்பே வலப்புறம் திரும்பி சுமார் இரண்டு பர்லாங் நடந்தால் இத்தேவியின் ஆலயத்தை அடையலாம். இப்புராதனத் தளி அதிட்டானத்திலிருந்து விமானம் வரை கருங்கல்லால் நிறுவப்பெற்று, மேலே வீணாதர கலைமகள், வராகி, துர்க்கா, சிம்மவாகினி, லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரின் சுதை பிம்பங்கள் அழகூட்ட, கூண்டு வடிவ விமானம் முக் கலசங்களுடன் முடிகிறது. சுற்றுச் சுவர் முழுதும் யாளி வரிசை, இடையே பூத கணங்களின் நகைச்சுவை, நாட்டியம் அணியாய்த் திகழ, ஆங்காங்கு உப தேவதைகளுக்கு மகர தோரணம் இழைக்கப்பட்ட கோஷ்டங்கள் குடையப்பட்டு, ஒரு சிறு தேர்போல அற்புதமாய் விளங்குகிறது.
கி.பி. 1012-ல் சோழ மன்னனாய் அரியணையில் அமர்ந்த முதலாம் இராசேந்திரன், முதல் இருபது ஆண்டுகள் வடநாடு மட்டுமின்றி, ஈழம், கடாரம், மலேயா, சுமத்ரா போன்ற நாடுகளை வென்று வாகை சூடி, வாமனர் இரண்டே அடிகளில் மண், விண் இரண்டையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடமின்றித் தவித்ததுபோல, மேலும் வெற்றி கொள்ள மண் இன்றி அமர்ந்து விட்டான். இராசேந்திரன் தன் பிற்பகுதியான இருபது ஆண்டுகளை இறைப் பணியிலேயே கழித்து, இறுதியில் காஞ்சி மாளிகையில் விச்ராந்தியாய் தங்கி அருகிலுள்ள பிரம்ம தேசத்தில்தான் உயிர் நீத்தான். அவன் காஞ்சியில் தங்கிய காலத்தில் பணியேற்ற பல கோவில்களுள் இதுவும் ஒன்று. "ஜயங்கொண்ட சோழ மண்டல எயிற் கோட்டப் பகுதியில் நின்று அருளிய கருக்கமர்ந்த பட்டாரியர்' என்று இம்மன்னன் கல்வெட்டு கி.பி. 1025-ல் பொறிக்கப்பட்டு, ஆலயத்திற்குப் பொன் வழங்கிய செய்தியையும் வெளிப்படுத்துவதிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்கியது புலப்படுகிறது.
இக்கோவிலில் ஆகமங்களில் இல்லாத நூதனங் களும் ஆச்சரியப்படும் வகையில் நிறைந்துள்ளன- மலிந்துள்ளன. தட்சிணாமூர்த்திக்கு குடை, கிரீடம், சாமரம் உள்ளன. அடுத்த அதிசயம் நுழைவாயில் வினாயகர். யானைமுகன் எனும் இத்தெய்வம் யானையாகவே நின்றுள்ளது மகா விசித்திரமாயுள் ளது. இரண்டாவது கோஷ்ட மகர தோரணத்தில் எட்டு கைகளும் பின்னிப் படர்ந்த சடையும் நிர்வாண நிலையுடன் கூடிய பைரவர் கபாலிக இலக்கணங்களைக் காட்டி நிற்கிறார்.
"வடக்கு வாயில் செல்வி' என்ற பெயருக்கேற்ப அன்னை காளி வடக்கு நோக்கிய கருவறையில், விபக்தாவும் மங்களாவும் துவாரபாலகிகளாய் காவல் புரிய, சுமார் ஐந்தடி உயர ஆகிருதி கொண்டு எண்தோள் ஆயுதங்களேந்தி, சிங்க ஊர்தியில், ஓங்கிய வலது கையால் மகிஷனை மர்த்தனம் செய்யும் மகிஷாசுரமர்த்தினியாய் விளங்குகிறாள்.
இத்தேவிக்கு சக்கரம் என்ற யந்திரம் கிடையாது. ஆனால் அதற்குப் பதில் தேவியின் புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரமுள்ளது. துர்க்கை அரக்கனை வதம் செய்தது புரட்டாசி மாதம், செவ்வாய்க் கிழமை, அட்டமி, நவமி காலம். அதையே ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
நன்றி நக்கீரன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!
» காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!-1
» பால் பிரண்டனும் காஞ்சி சுவாமிகளும்
» காஞ்சி மகா பெரியவரின் அருள் மொழிகள்
» காஞ்சி மகானின் தெய்வத்தின் குரல் மின்னூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum