இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு-2

2 posters

Go down

 பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு-2 Empty பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு-2

Post by ஆனந்தபைரவர் Mon Sep 13, 2010 10:39 pm

சென்னை செல்ல கட்டளை




சுவாமிகள் துறவு பூண்டபின் மீண்டும் தலயாத்திரை மேற்கொண்டார். பல தலங்கள் சென்று முருகனின் எழிலுருவை வழிபட்டு ஈடில்லா மகிழ்ச்சி கொண்டார். சுவாமிகள் விக்ரக வழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்தியவர்கள். முதல் மண்டலமாகிய குமரகுருதாசர் பாடலில் அறுபடை வீட்டு அலல்கலில் திருச்செந்திலைப் பாடும் பொழுது.

"மெய்யான திருமேனி இலக உருவம் கொண்டு
மெய்யருள் பெருக்கியருளும்
எண்ணம் உணராத புன் மதத்தர் உருவிலை என்பர்
யாகங்கள் உனை விடுவதுண்டோ?
இஞ்சிவளை மந்திரமலி செந்திலில் அமர்ந்தஎழில்
எந்தையே கந்த சிவமே."

திருவுருவ வழிபாட்டில் ஊன்றி நிற்போர் இப்புவியில் அழியாத மேனி எழிலோடு குகசாயுச்சிய நிலைபெறுவர். அருவ வழிபாடு புரிவோர்க்கு அந்நிலை கிட்டாது எனத் தியானாநு பூதி நூலில் தண்டபாணி சுவாமிகளும் உரைத்தனர். அருவ வழிபாட்டில் ஊன்றியதால் தாயுமானவர் மேனி எரியூட்டப்பட்டு சிதைவுற்றது. உருவ வழிபாட்டில் ஊன்றியதால் அருணகிரிநாதர் உடல் சிதைவுற்ற போதிலும் கிளி உருவில் கந்தர் அநுபூதி பாடினாரென அந்நூலில் வண்ணச் சரபனார் கூறியுள்ளமை காண்க. இக்கூற்றால் உருவ வரிபாட்டின் மேன்மை உணரப்படும். அருவ வழிபாட்டில் ஈடுபட்ட கரணியத்தால் வள்ளலார் மறைவும் பலவாறு உலகில் பழித்துப் பேசப்பட்டமையையும் உய்த்துணர்ந்து கொள்க.

"தேட்டிலே மிகுந்த சென்னை சேர்" என்று கந்தவேள் கட்டளையிட சுவாமிகள் உள்ளம் கலங்கினார். சுவாமிகளின் உள்ளக் கலக்கம் குருத்துவத்தில் கூறப்பட்டவாறு -

தேட்டில் மிகுந்த சென்னையிலே
தெற்குச் சாமியை யார் மதிப்பார்?
வீட்டில் வைத்தே உணவூட்ட
விரும்பும் அடியார் உள்ளாரோ?
நாட்டில் எனக்கு உனையன்றி
நம்பத் தக்கார் யாருண்டு?
ஓட்டும் சிவித்தேர் ஊர்வோனே
உள்ளத் துயரை ஓட்டாயோ?

எனச் சுவாமிகள் மதுரையில் தொடர் வண்டியில் ஏறியதும் அமுது கண்ணிர் சொரிந்தார். அடியார் கலக்கத்தை ஆறுமுகன் பொறுப்பானா? சென்னை வைத்தியநாத முதலி தெருவில் 41ஆம் எண் இல்லத்தில் வாழ்ந்து வந்த மூதாட்டி (குமாரானந்தம் அம்மை) கனவில் சுவாமிகள் தோன்றி "எனக்கு அன்னமிடுக" என்று உரைப்பது போல் முருகனருள் செய்தது விந்தையிலும் விந்தை! மறுநாள் சென்னையில் சுவாமிகள் அதே வீட்டின் வாயிலில் திகைத்து நிற்க அம்மையார் விரைந்து வந்து சுவாமிகளை வணங்கி உபசரித்தார்கள். பின்னர் சுவாமிகள் அம் மூதாட்டிக்குத் தீக்கை நல்கி "குமாரானந்தம்" எனப் பெயர் சூட்டினார்.
சீவகாருண்யத்தின் சிகரம்




சுவாமிகள் ஓர் முறை திருநெல்வேலிச் சிக்க நரசையன் சிற்றூரில் நயினார்ப் பிள்ளை என்பார் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றோர் சுவாமிகளை சந்தித்து வணங்கி அருளாசி பெற்றனர் என்ற விவரம் வையாபுரிப் பிள்ளை நூலில் காண்க. அவ்வமயம் ஒரு பகலில் வெக்கை தாங்காது வெளிவந்த மூட்டைப் பூச்சியைச் சுவாமிகள் இலாவகமாகச் கையில் எடுத்து அங்குள்ள சிறுவன் கரத்தில் தந்து "வெளியே விட்டுவிட்டு வா" என்றார். அறியாமை கொண்ட அச்சிறுவனோ அம்மூட்டைப் பூச்சியைத் தரையில் எறிந்து காலால் தேய்த்துக் கொன்றொழித்தான். இக்காட்சியை கண்ணுற்ற சுவாமிகள் உளம் வருத்தி "அடடேவோய் கொலை செய்தனையே" என உளம் வருந்தினார். பின்னர் வீட்டில் உள்ளோர் யாவரும் சுவாமிகளை "தேவரீர் உணவுண்ண வருக" என அழைத்த பொழுது "இவ்வீட்டில் இழவு நேர்ந்து விட்டது. இன்று உண்ண மாட்டேன் நாளை கூடும்" என்று கூறிவிட்டார். சுவாமிகள் மூட்டைப் பூச்சிபால் கொண்ட பேரன்பு கண்டு யாவரும் வியப்படைந்தனர். சுவாமிகள் உள்ளூர் சிவ சுப்பிரமணிய சதகத்தில் "எவ்வுயிரும் அறிவென்றிராது அவ்வுயிர்க்கெலாம் எமனாய் இருந்த துட்டன்" என்று பாடியிருப்பதோடு அக் கொள்கையைத் தமது வாழ்விலும் கடைப்பிடித்தார்கள். 1906 ஆம் ஆண்டில் சுவாமிகள் 21வது(கட்டுரை) "ஜுவயாதனையைக் குறித்த வியாசம்" எனும் செய்யுள் உரையுடன் கூடிய நூல் சீவகாருண்ய ஒழுக்கத்தை நிலைநாட்ட வெளியிடப்பட்டது. இந்நூல் 400 படிகள் (முதற்பதிப்பு)விருத்தாசலம் தியாகராசக் கவிராயர் குமாரர் வி.கலியாணசுந்தரம் பிள்ளையவர்கள் பி.ஏ., இயற்றிய உரையுடன் திருவனந்தபுரம் த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் சென்னை பண்டித மித்ர அச்சுக் கூடத்தில் 1906ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதன் விலை 12 அணாவாகும்.

சுவாமிகள் இந்நூலில் புலால் உணவால் விளையும் நோய்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

இறைச்சி

நோய்
1.
ஆட்டிறைச்சி வாதரோகம், அலச ரோகம்
2.
மானிறைச்சி பித்தம், நயன காசம்.
3.
பன்றியிறைச்சி கடிரணம், கபரோகம்.
4.
கோழியிறைச்சி பித்தம், தேகம் மெலிதல்
5.
வான்கோழி இறைச்சி கரப்பான் சிலேத்தும ரோகம்
6.
வாத்து இறைச்சி அரிகிரந்திரணம், கோழை, உருசிகேடு
7.
கோழி முட்டை வாதபயித்தியம்
8.
புறா இறைச்சி சருமச் சொரி, பொரி, கரப்பான்
9.
இறால் மீன் வாயு
10.
கெண்டை மீன் குன்ம பேதம்
11.
குறவை மீன் அரோசிரோகம்
12.
கச்சற் கருவாடு கப பித்தம்
13.
உளுவை மீன் கரப்பான்
14.
சேற் கெண்டை மீன் குடல் வாதம்
15.
கௌ¨ற்று மீன் சிலேத்துமம்
16.
மடவை மீன் வாதரோகம்
17.
திரிகை மீன்(திருக்கைவால்) வாத சம்பந்தமான நோய்கள்
18.
கடல் நண்டு வாதகோபம், கடுவன், சருமச்சொரி
19.
வயல் நண்டு உஷ்ணம், பித்த கோபம்.
20.
நத்தை மந்தம்

இவ்வாறு சுவாமிகள் புலாலுண்பதால் விளையும் நோய்களில் பட்டியல் போட்டுக் காண்பித்து "குதர்க்கி" எனும் சீடன் மனம் மாறிப் புலால் உண்ணுதலை நீத்து சீவகாருண்ய நெறிக்குத் திரும்புவதாக இந்நூலின் முதற்பாகமாக "குருசீட சம்வாதம்" என்று அமைத்துள்ளார். நூலின் இரண்டாம் பகுதி "மூடர்வாத தும்சம்" என்பதாகும். இப்பகுதியில் சாஸ்திரமூடன், கற்றமூடன், ஆனந்தமூடன், வம்பாராய்ச்சி மூடன், கல்லா மூடன், தர்க்க மூடன், குதர்க்கமூடன், பிரமாதமூடன், இழிபலிமூடன், விதிவாதமூடன் ஆகியோரின் வாதங்களை முறியடித்து வித்யாரண்யரெனும் நாமதேயம் கொண்ட குரு சீவகாருண்ய ஒழுக்கத்தின் சிறப்பை நிலைநாட்டுவது கற்றார்க்குச் கழிபேருவகை அளிப்பதாகும்.

சுவாமிகள் இந்நூலில் காட்டும் பிரமாண நூல்களாவன:

1. சுருதி வாக்கியம்

2. நிரால்ம்போநிஷத்து

3. மண்டலப் பிராம்மணோப நிஷத்து

4. சாண்டிலியோப நிஷத்து

5. சைவ சித்தாந்த நூல்கள் (பரமேசுவரப்ரோக்தமாகிய ஆகமாந்த சாஸ்திரம்) சிவஞானசித்தியார்.

6. சிவதருமோத்ரம் (உபாகமம்)

7. தேவிகாலோத்தரம் (உபாகமம்)

8. கௌளம்,யாமளம் முதலிய ஆகம நூல்கள் (மாநுட சித்தர் நூல்கள்)

9. மநுஸ்மிருதி

10. பரசாஸ்மிருதி

11. இலிங்கபுராணம்

12. சைவபுராணம் (ஞான சங்கீதை)

13. பத்ம புராணம் (சிவகீதை)

14. கருட புராணம்

15. கந்த புராணம்

16. காஞ்சிப்புராணம்

17. திருவிளையாடற் புராணம்

18. சூத சங்கீதை

19. காசி கண்டம்

20. வியாசபாரதம் (வடமொழி)

21. பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணம், கண்ணப்ப நாயனார் புராணம், சாக்கிய நாயணார் புராணம், அதிபத்த நாயனார் புராணம், சிறுத்தொண்ட நாயனார் புராணம்.

22. அரிச்சந்திர புராணம்

23. திருக்குறள் (திருவள்ளுவப்பயன்)

24. கொன்றை வேந்தன்

25. பிங்கலந்தை

26. சேந்தன் திவாகரம்

27. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்

28. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

29. பட்டினத்தடிகள் பாடல்

30. தாயுமானவ சுவாமிகள் பாடல்

31. சித்தாந்தப் பிரகாசிகை

32. பஞ்சாதிகார விளக்கம்.

33. ஜீவக சிந்தாமணி

இவ்வாறு புராணேதிகாசாதி சாத்திர தோத்திர நூல்களோடும் திருக்குறள் கொன்றை வேந்தன் போன்ற நீதிநூல் துணை கொண்டும் சுவாமிகள் தாம் கொண்ட சீவகாருண்ய ஒழுக்கத்தை அன்றே வச்சிர தாணுவாய் நிலை நாட்டி விட்டார்கள்.
தில்லையும் விளைந்த தொல்லையும்




சுவாமிகள் மீண்டும் நிட்டை கூடி நிமலன் அருள்பெற சிதம்பர சேத்திரத்தை அடைந்தார். சிதம்பரத்தை அடுத்த பின்னத்தூரைச் சுவாமிகள் தேர்ந்தெடுத்தார்கள். மணிவாசகப்பெருமாள் சிவனருளால் ஊமைப் பெண்ணைப் பேச வைத்த தலம் என்பதால் ஆயின் செவ்வேட் பரமன் விந்தையை யாரறிவார்? செத்துப் பிறந்த இராமனையும் கண்ணணையும் வழிபடும் மால் (மயக்கம்) அடியார்களின் மமதை (ஆணவம்) பின்னப்பட சுவாமிகள் சைவசமய சரபமாய் வெற்றிவாகை சூட விதி சுவாமிகளை அங்கே அழைத்ததுபோலும்? அவ்வூர்ச் சிவநேயர் வ.இரத்தினசாமிப் பிள்ளை மூலம் அங்குள்ள வைணவர் குறும்பை அவர்கள் வெளியிட்டுள்ள சிவ தூடனை அறிக்கைகளையெல்லாம் சுவாமிகள் கண்டு கொதித்தெழுந்தார். சுவாமிகள் ஆலோசனைப் படி இவ்விரு சமயத்தாரும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாமென உடன்படிக்கை பிரகடணத்தை இரத்தினசாமிப் பிள்ளை வெளியிட்டார். "________ ரூபாய் முத்திரைக் காகிதம்________ம்______ம் செய்து கொண்ட உடன்படிக்கை "சைவர்கள் தங்கள் அவயங்களின் பஸ்மங் கொண்டு தரித்து வருகிற == இவ்விதப்புண்டரம் வேதத்தில் உண்டென்பதை அந்த வேத வாயிலாகச் சைவருள் ஒருவனாகிய நான் ஒப்புவிக்கத் தவறினால் அவ்விதப் புண்டரத்தை நானும் இவ்வாதத்திற்கு ஏற்படும் சபையில் வாதிக்க நிற்பவர்களும் மறுபடியும் அணியாமல் இழந்து விடக் கடவோமாக. வைணவர் வணங்குத் தெய்வத்திற்குப் பதினான்கு வித்தையிற் சேர்ந்த வேதம் முதலிய நூல்களில் பஸ்மதாரணம் உண்டென்று காட்டும் படிச் செய்வேனாக, சிவம், பிரம்ம விஷ்ணு ருத்ரர்களின் மேம்பட்ட "சதுர்த்தம்" அதாவது நான்காவது தெய்வமென்று வேதத்திற் பல வாக்கியங்கள் எடுத்துக் காட்டி அந்தச் சிவத்திற்கும் பரஸ்துவம் ஸ்தாபிக்கும்படி செய்வோனாக.

வைணவர்கள் தங்கள் அவயங்களில் வெள்ளை மண்ணும் மஞ்சட் பொடியுங் கொண்டு தரித்து வருகிற U இவ்விதப் புண்டரம் வேதத்தில் உண்டு என்பதை அந்த வேதவாயிலாக வைணவருள் ஒருவனாகிய நான் ஒப்புவிக்கத் தவறினால் அவ்விதப் புண்டரத்தை நானும் இவ்வாதத்திற் கேற்படும் சபையில் வாதிக்க நிற்பவர்களும் மறுபடியும் அணியாமல் இழந்துவிடக் கடவோமாக. சைவர்கள் வணங்கும் சிவனுக்கு மேற்படி வேதம் முதலிய வித்தைகளில் இங்கு காட்டிய ஊர்த்துவ புண்டர தாரணம் உண்டென்று காட்டும்படிச் செய்வேனாக. விஷ்ணு, பிரம்ம விஷ்ணு, ருத்ரர்களின் மேம்பட்ட "சதுர்த்தம்" அதாவது நான்காவது தெய்வமென்று வேதத்திற்கு பல வாக்கியங்களெடுத்துக் காட்டி விஷ்ணுவுக்கும் பரத்துவம் ஸ்தாபிக்கும்படி செய்வேனாக.இவ்வித ஏற்பாட்டில் யார் தவறினாலும் நிபந்தனை. இவ்விஷய வாதத்திற்குச் சிதம்பர ஷேத்திரத்திலாவது சென்னையிலாவது நிகழும் குரோதிளூதைமீ..உ கூட்டப்படும் சபைக்கு இருதிறத்துக்கு முரிய வடமொழி தென்மொழி வித்துவான்களை ஆஜர் செய்து கொள்ள எவ்வித காரணத்தால் யார் தவறினாலும் அவர் ஆஜரான வித்வான்களில் அக்கிராசனாதிபதியாயிருக்கு மொருவர் தீர்மானப்படி நடக்க வேண்டும். நடவாவிடின்,அங்ஙனமே நம்மில் அநுகூலதீர்மானம் பெற்றவர்க்குத் அவ்விதத் தீர்மானம் பெறாதவர் நூறுரூபாய் உடனே செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

30.12.1904 சைவருள் ஒருவனாகிய..................வைணவருள் ஒருவனாகிய..................

பின்னத்தூர் விசுவாவசு À புரட்டாசி மீ11உ பி.வ.இரத்தினசாமிப் பிள்ளை.

இதனைப் படித்துப் பார்த்த வைணவர் வாதிட அஞ்சி எங்களுக்கு விருப்பமில்லையென்று வாளாயிருந்து விட்டனர். பின்னர் வைணவர்கள் மீண்டும் சைவர் ஒருவர் வெளியிட்ட "சிவ பரத்துவப் பிரபல சாஸ்திர பிரகடனம்" என்ற பத்திரிகைக்கு மறுப்பு தெரிவிக்கும் முகத்தான் சிவ தூடனையும் ஆபாசம் நிறைந்ததுமான மறுப்புநூல் ஒன்றை அச்சுக்கூடப் பெயரின்றி வாயீர்வான் என வெளியிட்டனர்.


வாயீர்வாள் என வெளியிட்ட நூலுக்கு மறுப்பாக சுவாமிகள் "சைவசமயசரபம்" என்ற நூலை 95 அத்தியாயங்களாக இயற்றிட, அதனைத் திருவனந்தபுரம் N.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தன் பதிப்புரையுடன் 1908 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூலுக்கு முன்னதாகவே சுவாமிகள் மாலிய மறுப்பாக நாலாயிரப் பிரபந்த விசாரம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சுவாமிகள் இந்நூலில் சிவ பரத்துவம் நிறுவ அநேக ஸ்மிருதி புராணேதிகாச பிராமாணர்களைக் காட்டியிருப்பîதாடு பத்து ஆங்கில நூல்களையும் காட்டியிருப்பது அவரது பரந்து விரிந்த அறிவுக் கூர்மையை நமக்குக் காட்டுகிறது அன்றோ!

சுவாமிகள் மேற்கோள் காட்டும் ஆங்கில ஏடுகளாவன:
1. இண்டியன் ரிவியூ பத்திரிகை, 2. இந்து பத்திரிக்கை, 3. லிபரெல் பத்திரிக்கை, 4. தென்னார்க்காடு கெசட்டியர், 5. இந்தியாவின் இராஜாங்கச் கெசட்டியர், 6. மதச்சீர்திருத்தம், 7. பூர்வீக இந்தியா - ரோமேஷ் சந்தர்தத், 8. இராசஸ்தானம் - கர்ணல் ஜேம்ஸ்டாட், 9. பாரதமுகவுரை - எஃப் மாக்ஸ் முல்லர், 10. சுவாமிவிவேகானந்தர் - புத்தக முகவுரை

சுவாமிகள் இந்நூலில் எடுத்தாண்ட தமிழேடுகளாவன:
1. விவேகபானு, 2.பிரம்ம வித்யா, 3. செந்தமிழ் (மதுரை), 4. உபந்நியாசமெனும் துண்டுப்பத்திரிக்கை.

இந்நூல் முன்னுரையில் சுவாமிகளின் முழக்கம்:
வைணவம் இழிகுலத்தவரானுங் காமோற்சவப்பிரியர்களாலும் இனிது கொண்டாடப்படுவதாமென்பதையும், வைணவருள் இழிகுலத்தினர் உயர் குலத்தின ரெனவுளர் என்பதையும் சைவம் மாறா நீர்த்தென்பதையும், இராம இராச்சியம் சைவமாகவே இருந்ததென்பதையும் இந்நூலின் ஈற்றில் சேர்க்கப்பட்ட ரோமேஷ் சந்தர் தத் என்பாரது பூர்வீக இந்தியா எனும் புத்தகமும் லிபரலெனும் பத்திரிகையும், இந்தியாவின் இராசங்கத்துச் கெசட்டியரும் கர்ணல் ஜேம்ஸ்டாட் என்பாரது இராசஸ்தானம் எனும் புத்தகமும் தீர்மான வாயிலாகவும் அபிப்ராய வாயிலாகவும் விளக்குதலானே உயர் குலத்தவரும் உயர்நெறிவிருப்பரும் வைணவத்திற் புகாதிருக்குங் கடன்மையரேயாவர் பிற ஆங்கிலமொழி வாயிலாகவும் சைவத்தின் மேம்பாடு உணரக் கிடக்கின்றது. இந்நூல் 20ம் அத்தியாயம் சிவனையும் விண்டுவையும் சமப்படுத்துதலைக் கண்டித்து அத்தகையாருக்கு நரகமே கிட்டுமென எச்சரிக்கை விடுக்கிறது. சுவாமிகள் இயமானனையும், வேலைக்காரனையும் எப்படிச் சமமாக நினைக்க முடியும் என்று வினாவுகிறார். சுவாமிகள் "அரியுஞ்சிவனுமொன்று" எனும் பழமொழியை மறுத்து "அறியுஞ்சிவனுமொன்று" என்று புதுமொழி பகர்தல் இந்நூலில் உள்ள புதுமைகளில் ஒன்று. அதனைப்புரிந்து கொள்ளல் நன்று.
நீதிமன்றத்திலும் நின்றார் வென்றார்




இந்நிலையில் இராமாநுச ரெட்டியார் எனும் வைணவர் சீவநிந்தை செய்து வெளியிட்ட ஆபாசப் பத்திரிகையைச் கண்ணுற்ற ஆசிரியர் 1908ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் தென்னார்க்காடு ஜில்லா மாஜிஸ்திரேட் கனம் நாப் முன்னிலையில் மேற்படியார்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். சைவசமய சரபம் வெளியிட்டமைக்காக திருவனந்தபுரம் ந.சுப்பிரமணிய பிள்ளை மீதும் சுவாமிகள் மீதும் இராமநுசதாசர் எனும் வைணவர் வழக்குத் தொடுத்தார். சுவாமிகள், வழக்கின் பொருட்டு கூடலூர், மஞ்சகுப்பம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சோமாசிபாளையம், திருவெண்ணெய் நல்லூர், சிதம்பரம், திட்டக்குடி, விக்ரவாண்டி, புளியங்குடி ஆகிய ஊர்களில் உள்ள அறமன்றங்களுக்கெல்லாம் செல்ல நேர்ந்தது. சைவ சமயத்தின் பெருமையைக் காக்கும் பொருட்டு ஏழாண்டுகள் சுவாமிகள் ஓயாது போராடி இறுதியில் வெற்றியும் பெற்றார். வாய்மையே வெல்லும் என்பதைத் தன் வரலாற்றிலும் நிலை நாட்டி விட்டார்.
சந்தமுனிக்குக் குருபூசை கண்டார்




சுவாமிகள் "அருணகிரிநாதர்" பால் அளவற்ற காதல் கொண்டு அவரையே தம் வழிபடு குருவாக எண்ணித் தம் பாடல் ஈற்றில் எல்லாம் அருணகிரிநாதரை "மண்ணும் வானமும் மெச்சப் பாடினோன்" என்றும் "ஓசைமுனி" என்றும் "சந்தமுனி" என்றும் "தீஞ்சொல் அருணகிரி", "தௌ்ளறிஞர்" என்றும் ஏற்றியுரைத்து மகிழ்ந்ததோடு தமது ஏக தெய்வ வழிபாட்டுக்கு முன்னோடியாகவும் அருணை முனிவரையே கொண்டார். மேலும் சுவாமிகள் இளமையிற் கூடாவொழுக்கம் பூண்டொழுகினார் என்பதையும் மறுத்து முன்வினையால் அவர் தொழுநோய் பெற்றாரென்றும், அவர் சிற்றின்பத்தை மிகுதியாகத் திருப்புகழில் பாடியிருப்பது வண்ணப்பாவின் இலக்கண மரபு என்றும் சென்னையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்கள். அஃது அன்பர்களால் குறிப்பெடுக்கப்பட்டு சிறுநூலாகவும் "ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம்" என வெளியிடப்பட்டது. தம் கனவில் இறைவன் அறிவுறுத்தியபடி அருணகிரிநாதர் குரு பூசையை உத்தராயணத்து ஆறாவது பௌர்ணமிதோறும் நடாத்தச் சுவாமிகள் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். சுவாமிகள் திருஅல்லிக்கேணி திருவட்டீசுவரன் ஆலயத்திற்குத் தம் செலவில் அருணகிரிநாதர் உற்சவர் விக்ரகமும் தந்து அருளியுள்ளமையால் அருணகிரிநாதர் பால் சுவாமிகள் கொண்ட பக்தி அளவிடற்கரியது.
மகாதேஜோ மண்டலம் நிறுவினார்




சுவாமிகள் சேய்ப்பரமன் (பாலமுருகன்) ஒருவனையே வணங்கும் ஏக தெய்வ வழிபாட்டுக் கொள்கை உடையவர்கள். பல தெய்வ வணக்கத்தைக் கடுமையாகச் சாடிப் பாடியுள்ளார்கள்.

"நோய்வந்த காலத்திற் பேய்களைக் கும்பிட்டு
நோன்மையை மறந்த துஷ்டன்" என்றெல்லாம்

மேலும் திருப்பாவில் சுவாமிகள்

"இதயாம்பரத்தில் தியானம் ஒரு மூர்த்தி பாவனையிலேயே கூடுமதனாற் பல மூர்த்தி வழிபாடு பந்தமாம்" என்று பகர்ந்துள்ளமை காண்க. அளவிலாத் தேஜோ மண்டல இறைவன் ஒருவனையே ஆசாரத்தோடும் அன்போடும் வழிபடூ உம் அடியார் அனைவரும் எத்தேசத்தாராய் எக்குலத்தாராய் இருப்பினும் அவர் மகாதேஜோ மண்டலத்தார் ஆவாராகலின் யாமவரை இப்பெயர் தரித்து நிற்கும் கடன்மைக்கு உட்படுத்தியுள்ளோம் (திருப்பா - கடவுள் வணக்கம். முன் உரை). மேலும் சுவாமிகள் எழுதிய வில் சாசனத்திலும் தனக்குப்பின் "மயூரவாகன சேவன விழா" க்களை நடத்தவும் தம் நூல்களை வெளியிடவும் அம் மகாதேஜோ மண்டலத்தார்க்கே உரிமை அளித்துள்ளார்.
கால்முறிவா? சூல்முறிவா?




1923ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 27ஆம் நாள் பகல் சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டி ஒன்று மோதியது. சுவாமிகளின் இடது கணைக்கால் மீது வண்டிச்சக்கரம் ஏறி நின்றதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவ்வமயம் சுவாமிகட்கு எல்லா உதவிகளையும் திருவல்லிக்கேணி சோதிடர் சுப்பிரமணிய தாசரும், அவரது மனைவி பாப்பாத்தி அம்மாளும் செய்தனர். சுவாமிகள் உப்பு நீத்து உண்டவர் என்பதால் கால் எலும்பு கூடுதல் அரிதென ஆங்கில மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுவாமிகள் அமைதியாகத் தம்மைப் பார்க்க வந்தோரிடம் எல்லாம் "சண்முக கவசம்" ஓதுக என கட்டளை இட்டார்கள். மூவரே அவ்வாறு சண்முகக் கவசம் ஓதத் தொடங்கினர். மூவருள்ளும் சுப்பிரமணிய தாசர் எனும் சின்னசாமிப் பிள்ளைக்கு அருட்காட்சி கிட்டியது. சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் இதனைப் பதிவு செய்கின்றார்கள்.
"அசோக சால வாசம்" எனும் தலைப்பின் கீழ் -

"மூவரே சண்முகக் கவசம் சொலும்
நாவராயினர் தத்தம் இன்னணியம்
மூவருள்ளும் முன்னாம் அல்லிக் கேணியான்
மாவுரம் கொடு நீடு வழங்கினான்
காலாறும் சொல் எழுங்கடியின் முரி
காலிரண்டு படாதிரு கட்டு வேல்
மேலின் மாட்டியொர் வேலின் நிறுத்த அக்
காலை நன் கெதிர் கண்டனேனே அவன்."

இவ்வாறு சண்முக கவச பாராயணத்தை சின்னசாமி சோதிடர் நிகழ்த்தும் போதெல்லாம் சுவாமிகளின் முறிந்த காலும் அதை இருவேல்கள் தாங்கி நிறுத்திப் பொருத்தும் காட்சியையும் கண்டு அட்சோதிடர் பேருவகை அடைந்தார். கலியுகத்தில் இவ்வாறு நிகழ்ந்த அற்புதமானது கந்தன் கருணைக்கோர் நந்தா விளக்காய் நானிலத்தில் ஒளி பாய்ச்சுகிறது.
இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)




சுவாமிகள் சிகிச்சைக்காகப் பொது மருத்துவமனையில் தங்கியிருந்த 11வது நாள் இரவு ஆசிரியர் படுக்கையிலிருந்தபடியே ஓர் அற்புத காட்சி கண்டார். குமாரபகவானின் வாகனமாகிய இரு மயில்கள் மேற்கு திசையிலிருந்து நடனமாடிக் கொண்டு வருகின்றன. வலப்பக்கம் வந்த பெரியமயிலுடன் இடப்பக்கம் வந்த ஒப்பற்ற அழகிய மயில் சிறியது. நடனமாடி வந்தபோது அவற்றின் கால்கள் தரையில் பதிய வில்லை. அவற்றின் நிறம் பொன்னிறம் மிகுந்த ஒப்பற்ற பச்சை நிறமாகும். இக்காட்சியைக் கண்டு சுவாமிகள் மனம் மகிழ்ந்து, இரு கரங்கூப்பித் தொழுதார். தன் படுக்கையில் தன் பக்கத்தில் சேய்ப்பரமன் கால் நீட்டித் துயிலும் நுட்பம் அறிந்தவுடன் அக்காட்சியும் மறைந்தது. அப்பொழுது வானிலிருந்து "இன்னும் பதினைந்து நாட்களுக்குள் புண்ஆறிவிடும். அது வரையில் மருத்துவமனை விட்டுச் செல்லல் வேண்டா" எனும் ஒலியும் கேட்டது. சுவாமிகள் முருகனின் கருணையைப் பெற்ற இந்நிகழ்ச்சியானது உலகுக்கு அவன் பெருமையை உணர்த்தியîதாடு சுவாமிகளின் பெருமையையும் உலகறியச் செய்தது சுவாமிகள் மகிழ்ந்து இந்நிகழ்ச்சியை

"முன் காலை உதைத்தவன் கால் முளையாய் நின்றாய்
பின் காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என் காலை இனிது அளித்தாய் இனி எஞ்ஞான்றும்
நின் காலை எனக்குஅளி என்றான் அந்நீத்தோன்"

அசோக சால வாசத்தில் பதிவு செய்துள்ளார்கள். சுவாமிகள் மறையும் வரை சென்னை நம்புலையர் தெரு சகந்நாத முதலியார் இல்லத்தில் இம் மயூர சேவன விழாவைத் தாமே முன்னின்று நடத்தினார்கள். சுவாமிகள் மறைவுக்குப்பின் திருவான்மியூர் சமாதிக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இம் மயூர வாகன சேவன விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. சுவாமிகள் இவ்விழாவை எப்படிக் கொண்டாட வேண்டுமெனத் தாம் இறுதியாக உரைத்த "செவியறிவுறூஉ"ல் குறிப்பிட்டது பின்வருமாறு.
இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)

மார்கழி மாதத்துப் பூர்வ பட்சம் பிரதமை தோறும் ஏற்படக் கூடிய இச் சேவனத்தில் விமானத்தின் மிசை விக்கிரகம் இருத்தி வெளியே தூக்கிச் செல்லல் இல்லை. செய்யொணாதது என்பதே எனது துணிபாம். எழிலுடை இரண்டு கோழிக் கொடிகளுக்கும் வேல்களுக்கும் வச்சிராயுதத்துக்கும் புட்ப மாலைகள் சார்த்தப் பட்டுச் சந்தன தூப தீப உபசாரங்களோடும் நல்ல வாத்தியா தோத்திரங்களோடும் இனிது அலங்கரிக்கப்பட்ட வீதியில் அவை உலாவி இருப்பிடம் அடையத்தக்கன. சிறந்த ஆயுதம், குடை முதலியன கூடச் செல்லலாம். மற்றும் சிறப்புகள் பல புரியலாம். இருப்பிடத்தே மயூர வாகனப் பரமன் படத்தைப் பூந்தொடையல்களால் அலங்கரித்து விடியுங்காணும் சண்முக சகச்சிர நாமார்ச்சனை புரிதலோடு அசோக சால வாசமும் படித்தல் வேண்டும்.

அருட்பெருங் கடலின் மகிமைகளைக் குறிப்பாக எடுத்து விளம்பும் இது படியாமே இத்திருவிழா நடைபெறுவதில்லையாம். அடுத்த தினம் அடியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னமும் பயசு கலந்த மதுர பானமும் குறைவிலாது நல்கி உபசரித்தல் புரியத்தக்கது. பண வருவாய் அதிகம் ஏற்படின் பகர்ந்தது போந்த பரம காரியங்கள் ஏற்புடைமையில் பல திலைகள் புரிதலும் ஏற்புடைத்தே. ஞான பூஜையை அனுசரித்து நடப்பதே இப்பரம காரியங்கள் என எண்ணுக. செவியறிவுறூஉ....
குகசாயுச்சிய நிலை பெறுதல்




சுவாமிகள் தனது சீடருள் ஒருவராகிய பு.சின்னசாமி சோதிடரை அழைத்து "திருவான்மியூரில் நிலம் பார். அது விரைவிலாக வேண்டும்" என்று கட்டளை இட்டார்கள்.. அதன் படியே சோதிடரும் நிலம் வாங்கிப் பதிவு செய்து அணியமாக இருந்தார்கள்.

குருவாரம் (30.05.1929) காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் யாருமறியாமலேயே சுவாசத்தை உள்ளுக்கிழுத்தார்கள். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று. அந்நிலையே இந்நிலையாக

"நண்ணறிய சிவானந்த ஞானவடிவேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசமர்ந்திருந்தார்"

எனும் வாக்கிற்கேற்பச் சுவாமிகள் செவ்வேட்பரமனின் சேவடி நிழலில் சேர்ந்து, அருள் புரிந்தார்கள். பின்னர் சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமக எடுத்து வரப்பட்டு 31-5-1929 வெள்ளிக் கிழமை காலை 8.15 மணிக்கு திருவான்மியூரில் சேர்க்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டது. சுவாமிகள் அவ்வாலயத்தில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றார்கள். தண்ணருளைச் சொரிகின்றார்கள். திருவான்மியூர்க் கோலம் காணும் பேறு பெற்றோர் வாழ்வில் இடர் நீங்கி எல்லா நலம் பெறுவர் என்பது சத்தியம்.
ஸ்ரீமத்-குமருகுருதாச சுவாமிகள் திருவடிகளே சரணம்.

நன்றி பாம்பன் சுவாமிகள் இணையத்தளம்

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

 பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு-2 Empty Re: பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு-2

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:57 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 28
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum