Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அர்ஜுனன் அகந்தை அறுத்த அச்சுதன்
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
அர்ஜுனன் அகந்தை அறுத்த அச்சுதன்
கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பன் காண்டீபன். கண்ணன் திருவாயால் கீதோபதேசம் கேட்ட அவனிடமும் சிறிது அகந்தை தலை தூக்கியது.
அடியார்க்கு அருள்வதைக் காட்டிலும், அவர்களிடமுள்ள அகந்தையை ஒழிப் பதையே கண்ணன் சிறப்பாகக் கருதுவான். அருளுக்கு உரியவரையும் அகந்தையானது மீளா நரகத்தில் தள்ளிவிடுமே என்பது கண்ணனின் எண்ணம்.
"நான் கண்ணனுக்கு நெருங்கிய நண்பன். கண்ணனுக்கு வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் செய்கிறேன். கண்ணன் எது கேட்பினும் தருகிறேன். என் உறுப்புகளில் எதனைக் கேட்டாலும் தருவேன். ஆதலால் கண்ணனுக்கு என்னைவிட உற்றாரோ உறவினரோ யாரும் இருக்க இயலாது' என்பது அர்ச்சுனன் கொண்ட அகந்தை.
அகத்தை உணர்கின்ற தெய்வமன்றோ கண்ணன்! அர்ச்சுனன் மனநிலையை அறியாமல் போவானோ?
ஒரு நாள், ""அர்ச்சுனா! நாம் இருவரும் சற்று நேரம் உலவிவிட்டு வருவோம்'' என்று அழைத் தான் கண்ணன்.
இருவரும் சிறிது தூரம் சென்றனர். ஒரு சிறு குடிசை எதிர்ப்பட்டது. அந்த வீட்டில் கணவன்- மனைவி, மகன் ஆக மூவர் மட்டுமே இருந்தனர்.
கண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் ஓடிவந்த அவர்கள், அவன் காலில் விழுந்து வணங்கி, விரிப்பிட்டு அமரும்படி வேண்டினர்.
""இறைவா! பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்து முனிவர்களும் தேவர்களும் காண இயலாத நின் காட்சி எங்களுக்கு வலிய கிடைத்துள்ளது. எங்களிடம் உனக்குக் காணிக்கையாகத் தர விலையுயர்ந்த பொருள் ஏதொன்றும் இல்லை. உள்ளது எதுவாயினும் கேட்டுப் பெற்றுக் கொள்க!'' என்று வேண்டினான் குடும்பத் தலைவன்.
""ஐயா! உன்னிடம் விலையுயர்ந்த பொருள் ஏதும் இல்லையென்று பொய் சொல்கிறாயே! உலகமே விலைபெறக்கூடிய ஒன்று உன்னிடம் உள்ளது. அதனைக் கேட்டால் தருவாயா?'' என்றான் கண்ணன்.
""எங்களிடமா... உலகை நிகர்த்த விலையுயர்ந்த பொருளா? ஏதும் புரியவில்லையே சுவாமி. அப்படி இருந்தால் நிச்சயமாக அதைத் தருகிறோம். அப்பொருள் எது என்று கூற வேண்டும்!'' என்றான் அவன்.
""இதோ இருக்கிறானே உன் மகன்! இவன் உன்னிடம் உள்ள ஒப்பற்ற செல்வம் அல்லவா? அவனைக் கொடு'' என்றான் கண்ணன்.
""என்னிடமுள்ளவை அனைத்தும் உனக் குரியவையே. என் மகனை இப்போதே தாரை வார்த்துத் தந்துவிடுகிறேன்'' என்று கூறி, மகனை கண்ணன் முன் நிறுத்தினான்.
""ஐயா! இப்படியே உன் மகனைத் தரலாகாது. நீயும் உன் மனைவியும் சேர்ந்து உச்சியிலிருந்து சரிபாதியாக இவனை அறுத்து, வலப்பக்கப் பாதியை எனக்குத் தருதல் வேண்டும்'' என்ற கண்ணன், ""ஆனால் அறுக்கும்போது, யார் கண்களிலும் கண்ணீர் வரக்கூடாது'' என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தான்.
கணவனும் மனைவியும் ஒரு கணம்கூட தாமதம் செய்யவில்லை. உடனே ஒரு அரத்தைக் கொண்டு வந்தனர். அறுபடத் தோதாக மகன் தானாகவே அவர்கள் நடுவே வந்து அமர்ந்து கொண்டான்.
அரம் இயங்கியது; மகன் தலை அறுபட்டது. கணவனும் மனைவியும் சிறிதுகூட கலங்க வில்லை; கலங்கினால்தானே கண்ணீர் வரும்!
ஆனால், அறுபடும் மகனது இடக்கண்ணில் மட்டும் கண்ணீர் ஒழுகியது.
உடனே கண்ணன், ""நிறுத்துங்கள்... என்னிடம் வாக்கு கொடுத்ததற்கு மாறாக உங்கள் மகன் கண்ணீர் சிந்துகிறான். ஆகையால் உங்கள் காணிக்கையை ஏற்க மாட்டேன்'' என்றான்.
""இறைவா! என் மகன் முகத்தை நன்கு பார்த் தீர்களா! இடக்கண்ணிலிருந்துதான் கண்ணீர் வருகிறது. கண்ணனுக்குக் காணிக்கையாக்கும் பேறு உடலின் வலப் பகுதிக்குத்தானே கிடைத் தது! நமக்கு அப்பேறு கிட்டவில்லையே என்று இடப்பக்கம் அழுகிறது. ஆதலால் இக்காணிக் கையை ஏற்றுக் கொள்ள நீ மறுக்கலாகாது'' என்றனர் தாயும் தந்தையும்.
அவர்கள் தன்பால் கொண்டுள்ள பக்தியைக் கண்டு பரவசமான கண்ணன், ""அறுப்பதை நிறுத்துங்கள்'' என்றான். அறுப்பது நின்றது! மகன் எவ்வித ஊனமுமின்றி, ஒளிமுறுவலுடன் வந்து கண்ணன் அடியில் விழுந்து வணங்கினான்.
இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அர்ச்சுன னின் அகந்தை பறந்து விட்டது; ஊன் உண்ட வன் தவம்போல் ஒழிந்து விட்டது.
கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, ""கண்ணா! நீ எனக்குச் சாரதியாக இருந்தாய். கீதை உபதேசித்தாய்! பகைவரை அழிக்க உதவி னாய்! இழந்த நாட்டை மீட்டுக் கொடுத்தாய்! இந்த உதவிக்கெல்லாம் உயர்வான உதவியை இப்போது நீ எனக்குச் செய்துள்ளாய். மீள இயலாத அகந்தைப் படுகுழியில் விழாமல் பாதுகாத்தாய்! இனி நான் என்றும் தவறு செய்யாதவாறு தடுத்து விட்டாய்!'' என்று உளமார வணங்கினான் அர்ச்சுனன்.
நன்றி நக்கீரன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum