Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கந்தக் கடவுளை வணங்கிச் செல்; வெற்றி நிச்சயம்!
Page 1 of 1

கந்தக் கடவுளை வணங்கிச் செல்; வெற்றி நிச்சயம்!' என்று சித்தர் ஒருவர் மன்னரிடம் சொல்ல... அதன்படி வேலவனை வழிபட்டுப் போர்க்களம் சென்ற மன்னர், போரில் வெற்றி பெற்றார். அவர், ராஜேந்திர சோழன்! பிறகு, அவர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டினார் என்கிறது ஸ்தல வரலாறு.
கொங்கணச் சித்தர் நீண்டகாலம் தங்கி வழிபட்டதால், இந்த மலை, கொங்கண மலை என அழைக்கப்பட்டு, தற்போது 'அலவாய் மலை' எனப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது அலவாய்ப்பட்டி. இந்த ஊரில், அழகு ததும்பும் மலையில் குடியமர்ந்து, அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி.
தலத்தில், முருகப்பெருமானின் சந்நிதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு. ஒருகாலத்தில், கரடுமுரடான பாதையில் ஏறிச் சென்றுதான் ஸ்வாமி தரிசனம் பெறமுடியுமாம். பழநியில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய ஒரு பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, 'பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடு! இந்தப் பணி முடியும் வேளையில், உனக்குக் குழந்தை பிறக்கும்' என்று அருளினாராம். அதன்படி, அந்தப் பக்தர் ஓடோடி வந்து, கந்தனைத் தரிசித்து, அன்பர்களின் வசதிக்காக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்ததாகவும், அந்தப் பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வர்.
இங்கேயுள்ள சுனை நீர் வற்றவே வற்றாதாம்! இந்த நீரைப் பருகிவிட்டு முருகப்பெருமானைத் தரிசித்தால், பெண்களுக்குப் பூப்படைவதில் உள்ள சிக்கல்கள் நீங்கும்; விரைவில் பூப்பெய்துவார்கள் என்கின்றனர். கர்ப்பப்பை கோளாறுகளால் அவதிப்படும் பெண்களும் இந்த சுனைநீர் தீர்த்தத்தைப் பருகினால், குணம் பெறுவார்களாம்.
கந்தக் கடவுள் குடிகொண்டிருக்கும் மலையில் ஸ்ரீஆஞ்சநேயர், தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை!
கார்த்திகை மாத திங்கட்கிழமையில் இங்கு வந்து, வேலவனை வேண்டினால், அடுத்த கார்த்திகைக்குள் குடும்பச் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும்; பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்கின்றனர் பக்தர்கள். கந்த சஷ்டியில் விரதமிருந்து, கந்தக் கடவுளுக்கு நெய் தீபமேற்றி வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் எனச் சிலாகிக்கின்றனர் பெண்கள்.
நன்றி சக்தி விகடன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum