இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கேட்டதும் கிடைக்கும் அர்த்தநாரீச்வராஷ்டகம்

Go down

கேட்டதும் கிடைக்கும் அர்த்தநாரீச்வராஷ்டகம் Empty கேட்டதும் கிடைக்கும் அர்த்தநாரீச்வராஷ்டகம்

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 3:20 pm

இறைவனை நாத்தழும்பேறத் துதிக்கும்போது அதில் இன்பம் கண்டு நாம் புத்துணர்ச்சி பெறுவது கண்கூடு. எங்கும் நிறை இறைவனுக்கு உருவம் எது? அனைத்துமே இறைவன் என்னும் ஆன்மிக ஒருமைப்பாடு உணர்ச்சி நமக்குள் இயற்கையாகப் படரும்வரை, நாம் இறைவனை ஓர் உருவமாக உணர்ந்து பக்தி யோகத்தில் ஈடுபடவேண்டியிருக்கிறது. மற்ற எந்த ஒரு யோகத்திற்கும் இறைவனுக்கு என்று ஓர் உருவம் இருக்க வேண்டிதில்லை. இறைவன் இருக்கிறான் என்னும் அசையாத நம்பிக்கையே போதும். ஆனால் பக்தி யோகத்திற்கு ஓர் உருவம் வேண்டும். அந்த உருவத்தை அன்புடன், ஆதரவுடன் அணுகும்போது பக்தியோகம் மலர்கிறது. கடவுளாக, அரசனாக, தலைவியாக, மகனாகப் பல கோணங்களிலிருந்து கடவுளைக் கண்டு களிக்க வேண்டும். பூசை செய்யவேண்டும். அலங்கரித்து அழகு பார்க்கவேண்டும். தேரில் ஏற்றி வீதி வலம் வரவேண்டும். கடவுளின் உருவத்தின் முன்னால் நின்று ஆட வேண்டும், பாட வேண்டும். காதலாகி, கசிந்து கண்ணீர் பொழியவேண்டும். இக்காரணங்களினால் பக்தனின் மனத்தாமரையில் தோன்றியுள்ள இறை உருவங்கள் எத்தனை எத்தனையோ! அவற்றில் ஒன்று இறைவனையும் இறைவியையும் ஒன்றாகக் காணும் அர்த்தநாரீசுவர சொரூபம்.

அர்த்தநாரீசுவரன் என்றதும் நம் முன்னால் முதலில் தோன்றுவது திருச்செங்கோடுதான். இருபதாம் நூற்றாண்டில் ராஜாஜி அமைத்து வளர்த்த காந்தி ஆசிரமம் நம் சுதந்திர வேள்வியிலும் பொன்னேடு பொறித்திருக்கிறது. இங்கு திருச்செங்கேட்டு மலையில், 1900 அடிகளுக்கு மேலே, அருள்புரியும் அர்த்தநாரீசுவரரின் மூல மூர்த்தி வெண்மை நிறத்தவர். உற்சவ மூர்த்தியை பாஸ்கரத்தொண்டமான் அனுபவத்தில் காண்போமே:

“செப்பு வடிவத்தில் சிறந்த வடிவம். தலையிலே சடைமுடிக்குப் பதிலாக ஓர் ‘ஆண்டாள் கொண்டை’ மற்றபடி இடப்பாகம் எல்லாம் பெண்மையும் வலப்பாகம் ஆண்மையும் நிறைந்திருக்கும். வலப்பாகத்தில் மற்ற அர்த்தநாரியில் இல்லாத விதத்தில் ஒரு கோலை மிடுக்காக ஏந்தியிருப்பார். இன்னும் இம்மூர்த்திக்கு இரண்டே திருக்கரங்கள் என்பதும் உய்த்துணரத்தக்கது.”

திருஞானசம்பந்தர் இவரைப் பாடியிருக்கிறார். மணிவாசகப் பெருமானும் பாடியிருக்கிறார். தேனாக நம் மனத்தை உருக்கும் திருவாசகத்தில் திருக்கோத்தும்பீ என்று இருபது பாடல்கள். மணிவாசகப் பெருமான் அம்மையப்பரிடம் ஒரு ராஜவண்டைத் தூதாக அனுப்புகிறார். ஒவ்வொரு பாடலுமே மனத்தை உருக்கும். மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை சிவபெருமான் திருவடிநீழலை அடையுமுன்பாக அவர் கேட்ட கடைசிப் பாடல். அவருடைய மாணவன் உத்தமதானபுரம் சாமிநாதையர் படித்த பத்தாம் பாடல்தான். இன்று படித்தாலும் அன்று திருவாவடுதுறையில் நடந்த காட்சி நம்முன் தோன்றி கண்கள் பனிக்கும்.

நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செய்வம் நயந்தது அறியாவண்ணம் எல்லாம்
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.

தேஜோமயமான சிவபெருமான் தாயின் கருணையுடன் இருக்கிறான். இறைவனின் இந்த அன்னையின் நெஞ்சை, திருக்கோத்து பீயில் உள்ள பதினெட்டாம் பாடல் கண்முன் கொண்டுவரும்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

தீந்தமிழில் நம்முன் தோன்றும் மாதொருபாகனை ஆதிசங்கரரும் கம்பீரமான வடமொழியில் துதித்திருக்கிறார். அனைவரும் படித்துமகிழ எளிய பதங்களால் இந்த அஷ்டகத்தை அமைத்திருக்கிறார். அம்மையப்பனாக ஒவ்வொரு சுலோகத்திலும் சிவபெருமானை ஆசார்யாள் காணும் காட்சி நமக்காகக் கண்டதன்றோ?
சாம்பேயகௌரார்த்தசரீரகாயை கர்பூரகௌரார்த்தசரீரகாய
தம்மில்லகாயை ச ஜடாதராய நம: சிவாயை ச நம: சிவாய

மாத்ருதேவோ பவ என்றும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் கூறப்படுவதிலெல்லாம் அன்னையை முதலில் கூறுவதுபோல், சங்கர பகவத்பாதாளும் முதலில் அன்னையைச் சொல்கிறார். அன்னை சண்பகப்பூ போன்று பொன்னிறமாக இருக்கிறாளாம். அய்யன் கற்பூரம் போல நல்ல வெளுப்பு. அன்னை தன் கூந்தலை எடுத்துக் கட்டியிருக்கிறாள். அகிலாண்டேசுவரியல்லவா? அவளுக்கு எவ்வளவு வேலை? அத்தன் அதனால் கவலையில்லாமல் ஆனந்த நடமாடுகிறான். அதனால் அவன் ஜடை விரிந்து கிடக்கிறது. இப்படி இரு உருவம், ஓருடலாக, ஓருயிராக, ப்ரகிருதியும் புருஷனுமாக நம்மைக் காக்கும் பெற்றோருக்கு வணக்கம்.

இப்பொழுதெல்லாம் ஒரு கடூரமான செய்தி காதில் விழுகிறது. பெருஞ்செலவு செய்து திருமணம் புரிந்து கொண்ட தம்பதியர் பிரிந்து விட்டதாக, விவாக ரத்துப் பெற்றுவிட்டதாக, உறவினர்கள் நண்பர்களிடையே நடக்கும் அவலம். அநேகமாக காரணம் தளுக்காக ஆங்கிலத்தில் கூறிவிடுகிறார்கள்: னீutuணீறீ வீஸீநீஷீனீஜீணீtவீதீவீறீவீtஹ்! இருவருக்கும் சரிப்படவில்லை. ஜோடிப்பொருத்தம் இல்லை என்று. அதற்காகத்தானோ என்னமோ, சிவனும் பார்வதியும் பொருத்தமேதும் இல்லாத தம்பதியராக நம்முன் காட்சி தருகிறார்கள்.

கஸ்தூரிகாகுங்குமசர்சிதாயை சிதாரஜ:புஞ்சவிசர்சிதாய
க்ருதஸ்மராயைவிக்ருதஸ்மராய நம: சிவாயை ச நம:சிவாயை

உமையை நினைக்கும்போதே கம கம என்னும் நறுமணம் நம்மைச் சூழ்கிறது. நல்ல கஸ்தூரி வாசம், மஞ்சள் சரியாகப் பதம் செய்து சொப்பை எடுக்கும்போதே நம்மைத் தாக்கிக் கிறக்கும் குங்குமத்தின் மங்களகரமான மணம். இறைவனிடம் நாம் நேரே சென்றுவிடலாம்போல ஆசை நம் மனத்தை உந்துகிறது என்பதை க்ருதஸ்மராயை என்ற பதத்தினால் சொல்லிவிட்டு, இறைவனிடம் திரும்பினால் நாம் காண்பதென்ன? சுடலைப்பொடி பூசியிருக்கிறான்! இவன் ஆசையை அழிப்பவன். காமனை எரித்தவனாயிற்றே! ஆனாலும் உமையின் உள்ளம் கவர் கள்வன். நம் உள்ளங்களையும்தான்! இப்படி நமக்கு வழிகாட்டும் ஒரு தம்பதி இருக்கும்போது நாம் ஏனோ மேலைநாட்டின் அவலங்களை இறக்குமதி செய்துகொள்கிறோம்? வாழ்க்கை என்பது இன்பத்திலும் துன்பத்திலும் இருவரும் ஒன்று சேர்ந்து, மனத்தளவில் அர்த்தநாரீசுவரனாக ஆகிவிட்டால் திருமணம் ஒரு பவித்திர பந்தமாக, சமூகத்திற்கு நன்மை பலகோடி செய்வதாக ஆகிவிடும்.

ஜணத்கவணத்கங்கணநூபுராயை பாதாப்ஜராஜத்பணிநூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய நம: சிவாயை ச நம: சிவாய

பார்வதியின் மணிச் சிலம்புகள் கண கண என்று ஒலிக்கின்றன. சிவனின் சிலம்புகள் சீறுகின்றன. அவை நல்ல பாம்புகளாயிற்றே! சக்தியின் அழகிய நீலோத்பலம் போன்ற இரு கண்களுக்கு எதிராக சிவனுக்கு இருப்பது மூன்று கண்கள். அன்னையின் திருமுகமண்டலத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமுடியிலிருந்து அசைந்தாடும் குழற்கற்றைகள் விளையாடுகின்றன. அப்பன் திருமுகத்திற்கு அலங்காரம் கழுத்தில் இருக்கும் மண்டையோடுகளாலான அட்டிகை தான்! அவள் திவ்வியமான பட்டுகளை உடுத்தியிருக்கிறாள். அவரோ திகம்பரராகத் திரிகிறார். உமையின் கூந்தல் நல்ல கறுப்பு நிறத்துடன் மின்னுகிறது. சிவனின் ஜடையோ சிவப்பாக ஒளிர்கிறது. அவள் ஆடுவது உலகினை சிருஷ்டி செய்வதற்காக; அவன் ஆடுவது உலகினை சம்ஹரிப்பதற்காக. இவர்கள் ஆடும்போது அகிலாண்டேசுவரியின் தாடங்கங்களைப் பாருங்கள். அப்பாடி, என்ன பிரகாசம்! சற்று கண்ணைத் திருப்பினால் சிவபெருமானின் காதுகளிலிருந்து தொங்கும் சர்ப்பங்கள் காட்டும் வீச்சு!

ப்ரதீப்தரக்னோஜ்வலகுண்டலாயை ஸ்புரன்மஹாபந்நகபூஷணாய
சிவான்விதாயை ச சிவான்விதாய நம: சிவாயை ச நம: சிவாய

ஆனால் என்ன? அவள் சிவான்விதை, சிவனுடன் கூடியிருக்கிறாள்; அவன் சிவான்விதா, சிவையுடன் கூடியிருக்கிறான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே என்று காட்டுகிறார்கள். திருமணமான ஒவ்வொரு தம்பதியும் இந்த அஷ்டகத்தைப் பொருளறிந்து பாடி வந்தால் அவர்களுக்கு மனமொருமித்த வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தம்பதி மாத்திரம் என்ன? யார் படித்தாலும் அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் துதியை நமக்கு பகவத்பாதாள் அருளியிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்:

ஏதத் படேதஷ்டகமிஷ்டதம் யோ பக்த்யா ஸ மான்யோ புவி தீர்க்கஜீவி
ப்ராப்நோதி சௌபாக்யமனந்தகாலம் பூயாத்ஸதா த்ஸ்ய ஸமஸ்த்தசித்தி:

பாருங்கள், பலச்ருதியில் எதிர்மறையே ஏதுமில்லை. பக்தியுடன் இந்த அர்த்தநாரீசுவர அஷ்டகத்தைப் படிப்பவர்களுக்கு அனைத்துமே கிடைக்கும். புகழ் (மான்ய), நீண்ட ஆயுள் (தீர்க்கஜீவி), என்றென்றும் சௌபாக்கியத்துடன் இருப்பார்கள். அவர்கள் எடுத்த காரியம் யாவினும் வெற்றியே (ஸமஸ்த சித்தி:) என்று ஆசார்யர் கூறியிருக்கிறார். அவர் வாக்கு நமக்கு ரக்ஷை.



ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum