இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீஅன்னபூர்ணா ஸ்தோத்ரம்

Go down

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீஅன்னபூர்ணா ஸ்தோத்ரம் Empty ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீஅன்னபூர்ணா ஸ்தோத்ரம்

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 3:53 pm

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீஅன்னபூர்ணா ஸ்தோத்ரம்
பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

தொன்மையும் புனிதமும் நிறைந்த ஸ்ரீஅன்னபூரணி கோவில் கும்பாபிஷேகம் 1976ஆம் ஆண்டு சாரதாபீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரிய ஸ்வாமிகள், ஜகத்குருக்கள் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஸ்ரீபாரதீ தீர்த்த ஸ்வாமிகள் பொற்கரங்களால் நிகழ்ந்ததும், ஜகத்குருக்களின் ஆசியுடன் இந்தத் தமிழாக்கம் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

1
நித்யானந்தகரீ வராபயகரீ
ஸௌந்தர்ய ரத்னாகரீ
நிர்தூதாகில கோரபாபநிகரீ
ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ
ப்ராலேயாசல வம்சபாவனகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
சந்ததமும் ஆனந்தம் சுரந்திடுவாள்
சரணேற்று வரமளிக்கும் கரமுடையாள்
பந்தமொடு பாபவினை போக்கிடுவாள்
பனிமலையில் பரிசுத்தம் ஆக்கிடுவாள்
சிந்தனைக்கும் எட்டாத சுந்தரமாய்
சீரளிக்கும் ஈஸ்வரியாய், மந்திரமாய்
காசிபுரத்துஅரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

2
நாநாரத்ன விசித்ரபூஷணகரீ
ஹேமாம்பராடம்பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத்
வக்ஷோஜ கும்பாந்தரீ
காஷ்மீரா கருவாஸிதா ருசிகரீ
காசிபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
பத்துப்பல ரத்தினங்கள்தரித்தவளாய்
பட்டுப் பொன்னாடைஅலங் கரித்தவளாய்
முத்தாரம் ஒளிர்கின்ற வார்ப்படமாய்
மோகனமாய்த் திகழ்நல் மார்புடையாய்
எத்திக்கும் மணக்குமகில் குங்குமப்பூவாய்
எழிலுடன் விளங்கிடும் எங்களருந் தாயாய்
காசிபுரத்துஅரசி அன்னபூரணிமாதா!
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

3
யோகானந்தகரீரிபுக்ஷயகரீ
தர்மைக நிஷ்டாகரீ
சந்த்ரார்க்கானல பாஸமானலகரீ
த்ரைலோக்ய ரக்ஷாகரீ
ஸர்வைச்வர்யகரீதபபலகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ
யோகநிலை இன்பங்கள் வழங்கிடுவாள்
யுகதர்மம் நிலைபெறவே முழங்கிடுவாள்
வேகமொடு சத்ருபலம் அழித்திடுவாள்
வீரமொடு தவவலியும் கொடுத்திடுவாள்
போகமுற செல்வங்கள் பொலிந்திடுவாள்
பொன்அக்னிகதிர்மதியாய் ஜொலித்திடுவாள்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

4
கைலாஸாசல கந்தராலயகரீ
கௌரீஹ்யுமா சாங்கரீ
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீ
ஹ்யோங்கார பூஜாக்ஷரீ
மோக்ஷத்வார கபாட பாடனகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ
கயிலாய மலைக்குகை குடிகொண்டாள்
காவியத்து இளமையின் வடிவுகொண்டாள்
ஒயிலானகௌரியாய் உமையவளாய்
ஓங்கார மூலத்தில் அமைந்தவளாய்
உயிராகும் வேதசாரம் பொழிபவளாய்
ஒப்பரிய வீடுபெறும் வழிதருவாள்
காசிபுரத்து அரசிஅன்ன பூரணிமாதா
கருணை கொண்டு பிக்ஷையிடுஅம்மா!

5
த்ருச்யாத்ருச்யவிபூதிவாகநகரீ
ப்ரஹ்மாண்டபாண்டோதரீ
லீலாநாடகஸூத்ரகேலநகரீ
விக்ஞானதீபாங்குரீ
ஸ்ரீவிஸ்வேஸமன: ப்ரஸாதநகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
ஈருலகநலங்கோடி ஈர்ப்பவளாம்
ஏழுலகும் திருவயிறு சேர்த்தவளாம்
பாரகத்தை நாடகமாய் ஆட்டுவிப்பாள்
பவஞானச் சுடரொளி கூட்டுவிப்பாள்
சீருடைய சிவனார்க்கு உகந்தவளாம்
ஜெகமாளும் விஸ்வநாத மகத்துவமாம்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

6
ஆதிக்ஷாந்த ஸமஸ்தவர்ணநகரீ
சம்புப்ரியா சாங்கரீ
காஷ்மீரத்ரிபுரேஸவரீத்ரிநயனி
விஸ்வேஸ்வரீஸர்வரீ
ஸ்வர்கத்வார கவாட பாடநகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
எழுத்தின் ஆதியந்தம் ஈன்றவளாம்
இறையொடு குறைவறத் தோன்றிடுவாள்
தொழில்மூ வகைக்கும் தடமாவாள்
திரிபுரம் எரித்தவர் இடமாவாள்
செழுஞ்சுடர்பொன்னொளி நிரந்தரியாய்
சொர்க்கத்துக் கதவங்கள் திறந்திடுவாள்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

7
உர்வீஸர்வஜனேஸ்வரீ ஜயகரீ
மாதா க்ருபாஸாகரீ
வேணீ நீலஸமான குந்தலதரீ
நித்யாந்ந தானேஸ்வரீ
ஸாக்ஷாந் மோக்ஷகரீ ஸதாஸுபகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
கருணை மிகு சாகரத்தின் கோமகளாம்
காசினியில் ஜெயந்தரும் பூமகளாம்
பெருமையோடு பாலிக்கும் திருவுடையாள்
பின்னலழகு பொலிகின்ற உருவுடையாள்
கருமைநிறக் கேசமுடை இனியவளாய்
காலமெல்லாம் அன்னமிடும் தனியரசாய்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

8
தேவீஸர்வ விசித்ர ரத்னகசிதா
தாக்ஷாயணீஸுந்தரீ
வாமாஸ்வாது பயோதராப்ரியகரீ
ஸௌபாக்ய மாஹேஸ்வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதாஸுபகரீ
காசீ புராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
கனல்நின்ற செக்கர்சேர் ஜோதியாவாள்
கணவனுக்காக தக்ஷனிடம் வாதிட்டாள்
மனங்கவரும் அருள்நெஞ்சம் உடையவளாம்
மங்காத ரத்னஎழில் படைத்தவளாம்
இனமறிந்து அடியவர்க்கு பலம்தருவாள்
எப்போதும் மங்களமாய் நலம்தருவாள்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

9
சந்த்ரார்காநல கோடி கோடி ஸத்ருசீ
சந்த்ராம்சு பிம்பாதரீ
சந்த்ரார்காக்னி ஸமான குண்டலதரீ
சந்த்ரார்க வர்ணேஸ்வரீ
மாலாபுஸ்தக பாஸாங்குசதரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
காந்திமிகு குண்டலங்கள் தோரணமாய்
கதிரொளியும் மதியொளியும் பூரணமாய்
பாந்தமொடு அங்குசபாசம் கொண்டவளாய்
புத்தகமும் மாலையொடும் நின்றவளாய்
சாந்தமதிக் கதிரவனின் வண்ணமுமாய்
தம்மிடம் வந்தவர்க்குத் தண்ணமுதாய்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

10
க்ஷத்ரத்ராணகரீமஹாபயகரீ
மாதாக்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ ஸதாசிவகரீ
விஸ்வேஸ்வரீஸ்ரீதரீ
தக்ஷாக்ரந்தகரீ நிராமயகரீ
காசீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ
மாதாந்ந பூர்ணேஸ்வரீ.
பயமென்னும் பேய்தனை நசிப்பவளாய்
பக்தர்கட்கு அருள்மனம் கசிபவளாய்
ஜயமுற தக்ஷன்தலை பறித்தவளாய்
செந்திருசிவமென வரித்தவளாய்
நயமுறு உறுபிணிதீர்ப்பவளாய்
நறும் களி உளத்தினில் வளர்ப்பவளாய்
காசிபுரத்து அரசி அன்னபூரணிமாதா
கருணைகொண்டு பிக்ஷையிடு அம்மா!

11
அந்நபூர்ணே ஸதாபூர்ணே
சங்கர ப்ராணவல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹிச பார்வதீ
மாதாச பார்வதீ தேவீ
பிதா தேவோ மஹேச்வர:
பாந்தவா: சிவ பக்தாஸ்ச
ஸ்வதேசோ புவனத்ரயம்.
எங்கும் நிறை சங்கரியே
பூரணியே, பார்வதியே
தங்கும் ஞான வைராக்யமே
தந்தருள் பிக்ஷையிடம்மா
புவனேஸ்வரி அன்னையாம்
பரமேஸ்வரன் தந்தையாம்
சிவனடியார் எமக்குறவே
மூவுலகும் நம்தேசமே!



ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum