இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் ஸங்கம்)

Go down

ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் ஸங்கம்) Empty ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் ஸங்கம்)

Post by ஆனந்தபைரவர் Sat Nov 27, 2010 3:37 pm

ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் ஸங்கம்) Rss-republic-day-parade-1963
ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு டாக்டர்.கேஷவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் நாக்பூரில் தொடங்கப்பட்ட தேசிய கலாசார சமூக சேவை இயக்கம். தன்னுடைய 85வது ஆண்டில் மாபெரும் தேசிய சேவை இயக்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

• ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, விஸ்வ ஹிந்து பரிஷத், சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற தன்னுடைய பல கிளை அமைப்புகளின் மூலம் பலவிதமான சேவைகளை எந்த விதமான விளம்பரமும் இன்றி செய்து வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.

• நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் அடங்கிய 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஷாகாக்கள்’ (கிளை முகாம்கள்) நடத்தி நன்னடத்தையும், ஒழுக்கமும், தேசபக்தியும், சேவை மனப்பான்மையும் மிக்க மனிதர்களை உருவாக்குகிறது. ஜாதி ஒழிப்பை வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், பூரணமாக நிறைவேற்றி வருகிறது. இயக்கத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய ஜாதிப் பெயரை சொல்லிக்கொள்வதோ, உபயகப்படுத்துவதோ கிடையாது.

• சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட்து மட்டுமல்லாமல், நாடு பிரிவினையானபோது பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கலவரத்தில் மக்களுக்குப் பெரும் பாதுகாவலானக இருந்து சேவை செய்த்து ஆர்.எஸ்.எஸ்.

• 1962-ல் இந்திய-சீன போரின்போது சிறந்த சேவை செய்த்தற்காக பிரதமர் நேருவிடம் பாராட்டு பெற்றது. பின்னர் 1963-ல் பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தார். இந்திய ராணுவத்திற்கு அடுத்தபடியாக சீருடை அணிந்து அற்புதமாகப் பீடுநடை போட்டு தன் தேசபக்தியை பறைசாற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1965திலும் 1971றிலும் பாகிஸ்தானுடனான போரில்கூட பல சேவைகளைச் செய்து பாராட்டு பெற்றது.

• நாட்டின் எந்த மூலையில், எந்தவிதமான இயற்கைச் சீற்றங்கள் (வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி, பயங்கரவாதம், குண்டு வெடிப்புகள், விமான/ரயில் விபத்துக்கள் போன்றவை) ஏற்பட்டு மரணங்களும், அவலங்களும், பெருந்துன்பமும் ஏற்பட்டாலும், அங்கே உடனடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து காப்பாற்றும் மாபெரும் இயக்கம். சில முக்கிய உதாரணங்களாக 1971 ஒடிஸா புயல், 1977 ஆந்திரா புயல், 2004 சுனாமி, 2001 குஜராத் பூகம்ப்ம், 2009 பீகார் வெள்ளம், 2010 ஒடிஸா புயல் ஆகியவற்றை சொல்ல்லாம்.

• எந்த மூலையில் எந்த விபத்து ஏற்பட்டாலும் அவ்விடத்தின் மருத்துவ மனைகளில் முதலில் ஆஜராவது ஸ்வயம்சேவகர்கள்தான். மருத்துவமனைக்குத் தேவைபட்ட அளவு ரத்த தானம் செய்பவர்கள் அவர்கள்தான். சொல்லப்போனால் இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவர் எந்த ஜாதி மதத்தவர்களாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் ரத்தம் ஓடுகிறது என்றால் அது மிகையாகாது.

• சமீபத்தில் ஈழம்-4ம் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஜாதி மத பேதமின்றி மாபெரும் சேவை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களாலும் இலங்கை அரசாலும் ஏகமனதாகப் பாராட்டப் பட்டுள்ளது.

• நாடெங்கிலும் உள்ள மலைவாழ் மக்களுக்கும் வனவாசிகளுக்கும் கல்வி போதிப்பதில் முதலில் இருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசின் நலத் திட்டங்களை மலைவாழ் மக்களிடம் விரைவாகவும் சிறப்பாகவும் எடுத்துச் செல்வது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான். ”வனவாசிகளுக்குச் சிறந்த சேவை செய்யும் குறிப்பிட்ட 14 தன்னார்வ தொண்டு அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அமைப்புகள் சிறந்த முறையில் சேவை செய்கின்றன. அவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவை தான்” என்று 2006-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே (பழங்குடியினர் நலவாழ்வு அமைச்சகம்) குறிப்பிட்டுள்ளது.

• 1934-ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வர்தா முகாமுக்க்ச் சென்ற காந்திஜி, “இங்கு உள்ள சேவகர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், இங்கே ஜாதி வேற்றுமையும் தீண்டாமையும் இல்லாததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி, பின்னர், தனியாக சில ஸ்வயம்சேவகர்களிடம் விசாரணை செய்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு அடுத்தவர் ஜாதி தெரியாமல் ஒரே இடத்தில் ஒன்றாக உண்டு உறங்கி வாழ்கின்றனர் என்று உறுதி செய்து கொண்டார்.

• 1936-ல் பூனா முகாமுக்க்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், “நான் இப்போது தான் முதல் முறை ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு வருகிறேன். நீங்கள் அனைவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஜாதி வித்தியாசம் ஏதுமின்றி ஒன்றாக இயங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். முகாமில் தீண்டாமை இருக்கிறதா என்று அவர் ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்ட போது, “இங்கு தீண்டத் தகாதவர்களும் இல்லை, தீண்டத் தக்கவர்களும் இல்லை. அனைவரும் ஹிந்துக்கள்” என்று பதிலுறைத்தார் டாக்டர் ஹெட்கேவார்.

• 1975-ல் இந்திரா காந்தி அராஜகமாக நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்த போது, அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் சிறை சென்றனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ரகசியமாக இயங்கி நாட்டின் எதிர் கட்சியினர் அனைவருக்கும் பாலமாக விளங்கி மாபெரும் சேவை செய்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலநாட்டினர்.

• அது வரைக்கும் ஆர்.எஸ்.எஸ் என்றாலே முகம் சுளித்துக் கொண்டிருந்த திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1977-ல் புது தில்லியில் நடந்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். முகாமிற்குச் சென்று இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக அவர்களை கவனித்து அவர்களுடன் உரையாடிவிட்டு, பின்னர், “இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். ஜாதி வேற்றுமையை ஒழித்து, ஏழை மக்களின் கண்ணீரைத் துடைத்து, சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார்.

• 1984-ல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் நாடெங்கும் உள்ள சீக்கியர்களைக் கொன்று குவித்தபோது, பல சீக்கிய குடும்பங்களைக் காப்பாற்றி, அச்சமூகத்தினருக்குக்ப் பாதுகாப்பு அளித்தது ஆர்.எஸ்.எஸ்.

• கேரளாவின் அலுவா என்னும் பகுதியில் புனித ஜோஸஃப் சர்ச்சைச் சேர்ந்த ஃபாதர் வின்ஸெண்ட் குண்டுகுலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஒரு பி.ஹெச்.டி படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். அவர் தன்னுடைய “ஆர்.எஸ்.எஸ். - எந்து? எங்கோட்டு?” (ஆர்.எஸ்.எஸ். – என்ன? எங்கே செல்கிறது?) என்னும் ஆராய்ச்சிப் புத்தகத்தில், “ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவரின் ஒழுக்கமும், ஈடுபாடும், எளிமையான வாழ்க்கை முறையும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேராபத்துக்களின் போது அவர்கள் செய்யும் சேவைகளும் மிகவும் பாராட்ட்த் தக்கன. ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத இயக்கம் அன்று. மத்த்தின் பேரில் மக்கள் அனைவரையும் ஜாதி வித்தியாசமின்றி ஒருங்கிணைத்து சேவை செய்ய ஊக்கமளிக்கும் இயக்கம்தான்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

• ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை காங்கிரஸ் மூன்று முறை தடை செய்ய முயன்றது. காந்திஜியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி நேரு அரசங்கம் 1948-ல் இயக்கத்தைத் தடை செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு சொல்லி தடையை நீக்கியது. இந்திரா காந்தி அரசும் நெருக்கடிநிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்தது. நெருக்கடிநிலை தகர்க்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மீதிருந்த தடை நீங்கியது. மீண்டும் மூன்றாவது தடவையாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காங்கிரஸ் அரசு இயக்கத்தைத் தடை செய்ய முயன்று தோற்றுப்போனது.

நன்றி தமிழ்செல்வன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum