இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்

Go down

தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும் Empty தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்

Post by ஆனந்தபைரவர் Sat Nov 27, 2010 3:51 pm


pakistan-flood-2010அண்மையில் எழுத்தாளர் பா.ராகவன் எழுதியுள்ள “நீரில் மிதக்கும் தேசம்” எனும் கட்டுரையில் இந்திய மனநிலை இன்னும் கற்கால மனநிலைக்கு மேலே எழவில்லை என கூறியுள்ளார். (1) ஏனென்றால் யூட்யூபில் பாகிஸ்தானிய இயற்கை அழிவு வீடியோக்களுக்குக் கீழே மனிதாபிமானமற்ற சில கமெண்ட்களை முகமறியாத சில இந்தியர்கள் எழுதியிருந்ததே காரணமாம். இதற்கு அவரது இணையத் தளத்தில் அளித்திருந்த எதிர்வினையின் சற்றே விரிவான பதிப்பு இது.

எந்த இயற்கை அழிவு விளைவிக்கும் மானுட சோகத்தையும், “உனக்கு தண்டனை கிடைச்சுருச்சு பாத்தியா?” என்று சந்தோஷிக்கும் வக்கிரம் எவரையும் தலைகுனிய வைக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. அதை நியாயப்படுத்துவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் அதனை ஏதோ சில முகம் தெரியாத வக்கிரங்களின் கோழைத்தனம் என்பதற்கு மேல் ஏதோ நாம் ஒட்டு மொத்தமாக கற்கால மனோபாவத்தை விட்டு மேலே வரவில்லை எனக் கருத வேண்டிய அவசியமில்லை.

mohan-c-lazarusஇதோ என் மேசையில் மோகன் சி லாசரஸ் (Mohan C. Lazarus) என்கிற புகழ் பெற்ற கிறிஸ்தவப் பிரசாரகர் நடத்தும் Jesus Redeems என்கிற பத்திரிகையின் பிப்ரவரி 2005-ஆம் ஆண்டு இதழ் கிடக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மோகன் சி லாசரஸ் யாரோ ஒரு முகம் தெரியாத இணைய வக்கிரம் அல்ல. முக்கியமான மதப்பிரசாரகர். இவரது கூட்டங்களில் துணை முதல் இசுடாலின் கூடக் கலந்துகொள்கிறார். அதில் பெருமைப்படுகிறார். அந்த மோகன் சி லாசரஸ், சுனாமியின் இரத்தக் காயம் ஆறுவதற்கு முன்னால் இந்த இதழில் எழுதுகிறார்: “Look at our nation The land is grieving due to the curses of sin… Instead of worshiping the God who created heaven and earth they worship demons and evil spirits as their God. Is it not humiliating to God when we worship His creations birds and animals as gods instead of the creator Himself?” கட்டுரையின் பெயர் “Tsunami Why this Disaster” (2)

அதே காலகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கைதாகி சிறையில் இருந்தார். “என்னைக் கைது செய்ததால் சுனாமி வந்தது,” என்று அவர் சொல்லவில்லை. “மக்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்கள் ஆத்ம சாந்திக்காக உபவாசம் இருக்கிறேன்” என்றார். பல எவாஞ்சலிக்கல் இணையத் தளங்கள் சுனாமியால் மகிழந்தன. “ஏசுவின் நற்செய்தியைக் கொண்டு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு” என எழுதியவர் அண்மையில் ஹெய்தியில் பேரழிவு நடந்தபோது அமெரிக்காவின் முக்கிய மதப்பிரசாரகரான பாட் ராபர்ட்ஸன். (3)

எதற்குச் சொல்கிறேன் என்றால் பா.ரா சொல்கிற மாதிரி இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுவது நம் தமிழ் சினிமா நகைச்சுவை பாணியில் சொன்னால் “கொஞ்சம் ஓவர்”. அட, இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. கோட்டு சூட்டு போட்டதால் பண்பாடடைந்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிற (அல்லது குறைந்தது நம்மில் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிற-குறிப்பாக ஈவெரா, எம்.ஆர்.ராதா, கருணாநிதி, விவேக் வகையறா போலிப்-பகுத்தறிவுகள் இந்த எண்ணத்தை எய்ட்ஸ் போலப் பரப்புகிறவர்கள்-) பலர் இந்த மனநிலையில்தான் வாழ்கிறார்கள்.

prem-chands-coffin-was-marked-as-kafirவிபத்துக்களும் இயற்கைப் பேரழிவுகளும் இறைதண்டனை என்கிற அறிவியல் அடிப்படையற்ற தவறான பார்வை ஆபிரகாமிய மதங்களின் மானுடத் தன்மையற்ற ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது. இதன் விளைவாக ஏற்படும் மானுடச் சோகங்களும் வக்கிரங்களும் சொல்லொணாதவை. உதாரணமாக கடந்த மாதம் நடந்த இஸ்லாமாபாத் விமான விபத்தில் இறந்த ஹிந்துவின் சடலம் “காஃபீர்” என எழுதப்பட்ட பெட்டியில் போட்டு வைக்கப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப் பட்டது. (4)

அதே நேரத்தில் 1997-இல் புதுடெல்லியில் நடந்த சவுதி விமான விபத்தின் போது அந்த விமானத்தில் இறந்தவர்கள் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள்; ஹஜ் யாத்திரிகர்கள். அந்த விமான விபத்தின் போது நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். இது குறித்து ஓர் இஸ்லாமியப் பத்திரிகையாளர் எழுதியுள்ள மனம் உருக்கும் ரிப்போர்ட்டைப் பாருங்கள்:

At on the spot, the only people they found to help them in this hour of grief were volunteers of the RSS. Everyone was aware that 98 per cent of those who died in the tragedy were Muslims. Despite this, not to express unreserved praise for the sincerity with which the RSS volunteers helped the grief-stricken families would be social hypocrisy. It is surprising that even weeks later not a single Muslim organisation has bothered to express even to verbally thank the RSS volunteers who struggled-day and night to help the families identify the badly charred bodies of their relatives. Relatives who went to Khedi Sanwal say that if there was anyone to help them on the spot it was the RSS activists. According to these relatives, RSS activists not only provided tea, snacks, food and transport, they even raised money to pay for shrouds, coffins and transport of the dead bodies. According to an aggrieved person from Gonda (in U.P.), some of the bodies had got so badly decomposed that even relatives were finding it difficult even to touch the bodies of their own son, brother or father. But the very RSS volunteers - who are normally deployed into any number of anti-Muslim activities - did not flinch a bit while handling the bodies to help in their identification. After that, they helped in covering the bodies with shrouds, placing them in the coffins and arranging for their transport to their respective places. To prevent the decomposition of the bodies, ice slabs had also been arranged.

கொஞ்சம் நீளமாகவே இருந்தாலும் ஹிஸ்சாம் சித்திக் என்கிற இஸ்லாமிய அறிஞர் எழுதிய கட்டுரையின் பகுதியை மேலே அளித்துள்ளேன். (5) ஓர் அரசாங்கமே தவறான இறையியலால் உந்தப்பட்டு ஒரு மானுடச் சோகத்துக்கு மத முத்திரை குத்தும் வக்கிரம் அதற்கு நேர் எதிரான ஹிந்து மன நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டால் இன்னும் தெளிவாக புரியுமல்லவா? ஆனால் பாகிஸ்தானிய அரசிடம் நாம் நேசபாவம் காட்டவேணும் என்று சொல்பவர்களூக்கு ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் மதவாதிகள்!

pa_raghavanபா.ரா சிந்து சமவெளிதான் உலகநாகரிகம் தோன்றிய இடம் என்கிறார். இதுவும் தகவல் பிழை. மொகஞ்சதாரோ மட்டுமே சிந்து சமவெளியுமல்ல அது உலகநாகரிகம் தோன்றிய இடமும் அல்ல. கிமு 3000-களில் உலகத்தின் தொன்மை நாகரிகப் படுகைகளில், பண்பாடு உச்சம் கண்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய பண்பாடுகளில் அதுவும் ஒன்று. சிந்து-சரஸ்வதி பண்பாடு என ஆய்வாளர்கள் அழைக்கும் இப்பண்பாட்டின் பல அகழ்வாராய்ச்சி மையங்கள் இன்று பாரதத்தில் சரஸ்வதி நதி ஓடிய வறண்ட நதிப்படுகை அருகே உள்ளன. அதற்காக பாகிஸ்தானிய சிந்து சமவெளிப் பண்பாட்டு மையங்கள் அழிந்து போக வேண்டுமென நான் சொல்ல மாட்டேன். ஆனால் பா.ரா மற்றொன்றைக் கவனிக்க வேண்டும். சிந்து-சரஸ்வதி பண்பாடு இன்றும் ஜீவனுள்ள பண்பாடாக ஹிந்து சமயத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பது பாரதத்தில்தான். அகழ்வாராய்ச்சி மையம் பாகிஸ்தானில் ஓர் இறந்த காட்சிப்பொருளாக, அங்கு வாழும் சமுதாயத்துக்குக் கிஞ்சித்தும் தொடர்பில்லாமல் உறைந்து போயும் இருக்கிறது; அதன் மதிப்பு உணரப்படாமல்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தும் ஈமானியக் கடமையை இஸ்லாமியப் பெருமக்கள் துறக்கவில்லை என்பதையும் அதே நேரத்தில் இந்தியத் தூதரகமும் இவர்களிடம் கடுமையாக நடக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி. (6)

இந்திய எதிர்ப்புக்குப் பெயர்போன பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிகையே (ஆகஸ்ட் 28 2010) தனது தலையங்கத்தில் இப்படி எழுதியது:

christian-and-hindus-deliberately-floodedமறுபக்கம் நிவாரண உதவிகள் வழங்குவதில் திட்டமிட்ட பாரபட்சம் காட்டப்படுகிறது என செய்திகள் வருகின்றன. வெள்ள அழிவின் போது அகமதியாக்களுக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்கிற புகார் ஏற்கனவே வந்துள்ளது. இப்போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒரு வட்டிக்கான் மிஷினரி அமைப்பு கிறிஸ்தவர்களின் பெயர்கள் கூட நிவாரண நிதி உதவி வழங்கும் ரிஜிஸ்டர்களில் எழுதப்படவில்லை என கூறுகிறது. இது நம் அரசியல் சட்டத்துக்கே விரோதமானது. சிந்திப்பகுதியில் சாதி மத வேறுபாடில்லாமல் ஹிந்துக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால் நம் அரசாங்கமோ மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்றால் நாம் எந்த அளவு கீழே சென்றுவிட்டோம்; நம் மானுடத்தை இழந்துவிட்டோம் என்பதைத்தான் அது காட்டுகிறது. (7)

ஹிந்துக்கள் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன பல ஊடகச் செய்திகள். நிவாரண உதவி என்கிற பெயரில் ஹிந்துக்களின் அகதிகள் முகாமில் பசு இறைச்சி வழங்கவும் பாகிஸ்தானிய அரசு தயங்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்களுக்காக வட்டிக்கான் இருக்கிறது குரல் கொடுக்க. ஆனால் சோனியாவின் எடுபிடியாக நடத்தப்படும் இந்திய அரசு பாகிஸ்தானிய ஹிந்து-சீக்கியர்களுக்காகக் குரல் கொடுக்குமா? அதை விடுங்கள். இத்தனை பெரிய மானுட சோகத்தின் போதும் சக-பாதிக்கப்பட்டவனை மத ரீதியாக எப்படி அடிப்பது என நினைக்கும் ஈமானியப் பண்பாட்டின் வக்கிரத்தினைப் பார்க்க, பா.ரா சொல்லும் இணைய வக்கிரங்கள் எம்மட்டு? எதற்காக வருத்தப்பட வேண்டும்? இணைய வக்கிரங்களுக்காகவா அல்லது ஓர் அரசாங்கமே வக்கிரமாக இயற்கை உபாதையால் துயரப்படும் மக்களிடம் மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்காகவா?

pakistan-flood-1பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவு மதப்பிரிவுகளுக்கு அப்பால் ஒரு ஹிந்து என்ற முறையில் எனக்குப் பெரும் மன வருத்தத்தை அளிக்கிறது. எந்தப் பெற்றோரும் புத்திர சோகத்தால் அடையும் வலி மதத்தினால் பிரித்துப் பார்க்கப்பட முடியாதது. அத்துயரை அனுபவிக்கும் பாகிஸ்தானிய சகோதர சகோதரிகளுக்கு நம் இதயம் கண்ணீர் வடிக்கிறது. நம்மால் ஆன உதவிகளை செய்ய நாம் முயலுகிறோம். ஆனால் என் நெஞ்சம் இந்த இயற்கைப் பேரழிவிலும் இஸ்லாமிய மதவெறியால் பீடிக்கப்படும் என் ஹிந்து சீக்கிய மக்களுக்காக மிகவும் பதைபதைக்கிறது. சர்வதேச மனசாட்சி மௌனிக்க பாரத அரசியல் பேடிகள் வேடிக்கை பார்க்க, எல்லைக்கு அப்பால் தனித்து விடப்பட்டு வேதனையில் துடிக்கும் கேட்பாரற்ற அந்தச் சமுதாயத்தினருக்காகப் பதைக்கிறது. இந்தப் பதைபதைப்புக்கு முன்னால் இணைய வக்கிரங்களால் ஏற்படும் எரிச்சல் ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இறுதியாக ஒரு விஷயத்தையும் சொல்லவேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் சில கடும்-மதவாதிகள் என்ன நினைக்கிறார்களாம் தெரியுமா? ஆபாசங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிய தாலிபானை விரட்டி அதனைக் கொண்டாடியதால் அதற்கு அல்லா அனுப்பிய தண்டனைதான் இந்த வெள்ளப் பேரழிவாம். (8)

அடுத்த முறை “கற்கால மனநிலை” குறித்து விசனப்படும் போது பா.ரா இந்த விஷயங்களைக் குறித்தும் பாரா முகமாக இருக்க மாட்டார் என நம்புவோம்.

நன்றி அரவிந்த நீலகண்டன் http://www.writerpara.com/paper/?p=1507http://www.writerpara.com/paper/?p=1507
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum