Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தோஷங்கள், சங்கடங்கள் தீர்க்கும் சங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்!
Page 1 of 1

பொதுவாக ராகு ஸ்தலம் என்றாலே தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள "திருநாகேஸ்வரமே நம் நினைவிற்கு வரும். இங்குள்ள ஸ்ரீநாகநாத ஸ்வாமியை ராகு பகவான் வழிபட்டதோடு, இத்தலத்தில் உள்ள தன்னையும் வழிபடு வோர்க்கு பல நலன்களையும் அருளையும் வாரி வழங்குபவராகத் திகழ்கிறார்.
இதேபோன்று திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டங்களில் சிவபெருமான் எழுந் தருளியிருக்கும் நவ கைலாயத் தலங்களில் ஒன்றான "சங்காணி' என்ற ஊரில் சிவகாமி அம்பாள் சமேத கோதபரமேஸ்வரரையும் ஸ்ரீராகு பகவான் வழிபட்டு அருள் பெற்றுள்ளார். அதனால் ஏராளமான மக்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுப் பயனடைகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ள இந்த சங்காணி என்னும் ஊர் முதன் முதலில் செங்காணி என்றே அழைக்கப் பட்டு வந்திருக்கிறது. "காணி' என்றால் நிலம். "செங்காணி' என்பது செம்மண் பொருந்திய நிலத்தையே குறிக்கிறது. இந்த ஊரில் குன்று ஒன்று இருப்ப தால் குன்றத்தூர், குன்னத்தூர் என்ற பெயர்களும் உண்டு. முற்காலத்தில் இவ்வூர் "குன்னத்தூர் கீழ்வெம்ப நாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதிமங்கலம்' என்று வழங்கப் பெற்றதை இங்குள்ள 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்த ஆலய பூஜை வழிபாடுகளுக்கென வீரபாண்டியன் என்னும் மன்னன் 4,200 பணம் நிவந்தம் கொடுத்த தும் இங்குள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்த இந்த ஆலயத்தில் கோபுரம், கொடி மரம் ஏதுமில்லை. முன்மண்டபம், அர்த்த மண்டபம், நடு மண்டபங்களுடன் மூன்று பகுதிகளாக விளங்குகிறது ஆலயம். முன்மண்டபத் தில் சிவகாமி அம்மன் தெற்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறாள். கருவறையின்மேல் விமானம் உள்ளது. கருவறையின் முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இரண்டு குரங்குகள் சேர்ந்து இருப்பது போன்ற சிற்பம் ஒன்று காணப்படுகிறது. கருவறையின் இடப்புறம் விநாயகரும் வலப்புறம் சிவபெருமானும் உள்ளனர்.
கோதபரமேஸ்வரரின் முன்பு அழகிய நந்தி ஒன்று உள்ளது. மேலும் சிவலிங்கத் திருமேனி யின் நெஞ்சில் நாகத்தின் சிற்பம் உள்ளதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு நாக நாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.
ஆலய பிராகாரத்தில் பன்னிரு கரங்களுடன் ஆறுமுக நயினார் காட்சி தருகிறார். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இந்த வனப்பு வாய்ந்த சிலையைக் காணும்போது, இந்தச் சிலை பிரதிஷ்டை செய்த பின்னரே மண்டபம் கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது.
ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ராகு பகவான் இடம் பெயரும்போது இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்கவும் புத்திர பாக் கியம் கிடைக்கவும் இத்தலத்து கோதபரமேஸ் வரரை வேண்டி ராகு பரிகாரம் செய்கின்றனர்.
இங்கு ஒரு ஆகமக் கோவிலுக்குரிய அனைத்து சந்நிதிகளும் உள்ளன. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி இந்த ஊர் வழியாகத்தான் செல்கிறது. மேலும் இங்கு சிவராத்திரி, திருவா திரை, பிரதோஷம் போன்ற விழாக்களும் நித்திய பூஜைகளும் நடைபெறுகின்றன. இத்தலத்து சிவபெருமானை பொதிய மலையில் தவம் புரிந்த அகத்தியரின் முதல் சீடரான உரோமச முனிவர் வழிபட்டு முக்தியடைந்துள்ளார்.
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை ஒருமுறை தரிசிக்கலாமே!
-விஜயலட்சுமி சுப்பிரமணியம்
நன்றி -நக்கீரன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum