இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அவனுக்கு மிக நன்மையானதே நிகழும்

Go down

அவனுக்கு மிக நன்மையானதே நிகழும் Empty அவனுக்கு மிக நன்மையானதே நிகழும்

Post by ஆனந்தபைரவர் Thu Dec 09, 2010 12:28 am

அவனுக்கு மிக நன்மையானதே நிகழும் This-holiday-life-motivation
Faith...., Trust...., Confidence....

தான் செய்யப்போவதை, தான் செய்ய விரும்புவதை, தன்னால் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை; தான் அடைய விரும்பும் இந்தச் சித்தியை அடைவோம் என்னும் நம்பிக்கை.

அவனுக்கு மிக நன்மையானதே நிகழும், அதைவிட அவனுக்கு அதிக நன்மையானது நிகழ்ந்திருக்க முடியாது, ஏனெனில் இறைவனே அதை அவனுக்குச் செய்கிறான் என்னும் நம்பிக்கை.

நம்பிக்கை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, தன்னுடைய ஆத்மார்ப்பணத்தின் பின்விளைவு எதுவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

அன்னை
ஒருவனுக்கு இறைவனின் வேலையில் நம்பிக்கை இருக்கிறது, அது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது என்னும் நம்பிக்கை மட்டுமல்ல அதுவே உண்மையானது, அதுவே நடந்தாக வேண்டியது என்ற நம்பிக்கை இருக்கிறது.

என்ன நடக்கும் என்பதைப் பற்றியே கவலைப்படாமல் இறைவனது வேலைக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறான். ஆகவே, அதோடு ஒரு நிச்சயம் சேர்க்கப்படுகிறது. தன்னால் அதைச் சாதிக்க முடியும் என்னும் தன்னம்பிக்கை, அதாவது தன்னை அதற்கென்று கொடுத்துவிட்டபடியால் தான் அதில் பங்கு கொள்வோம் என்னும் நம்பிக்கை - தான் செய்யப்போவதை, தான் செய்ய விரும்புவதை, தன்னால் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை; தான் அடைய விரும்பும் இந்தச் சதியை அடைவோம் என்னும் நம்பிக்கை. முதலாவது எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, விளைவுகளைப் பற்றி நினைப்பதேயில்லை: அது தன்னை மிச்சமின்றிக் கொடுத்துவிடுகிறது, அதோடு சரி, வேறு கேள்வி கேட்பதில்லை,

Confidence சொல்கிறது: "ஆம், நான் அதில் பங்குபெறுவேன், நான் சித்தியடைய விரும்புவதை அடைவேன், நான் நிச்சயமாக இந்த வேலையில் கலந்து கொளவேன்." உண்மையிலேயே இருப்பது இறைவன் ஒருவனே என்று நம்புகிறவன் - அவன் இந்த நம்பிக்கைக்கு, இறைவனுக்கு தன்னை முற்றிலுமாகக் கொடுத்துவிடுகிறான், அவ்வளவே. அவனுக்கு இறைவன் இருக்கின்றான் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. தன்னைக் கொடுக்கிறான். அதனுடன் இந்த நம்பிக்கையுறுதியும் (trust) சேர்க்கப்படுகிறது. இறைவனுடன் அவன் கொண்டுள்ள உறவு, இறைவன் மீது அவனுக்குள்ள நம்பிக்கை காரணமாக அவனுக்கு நேர்வதெல்லாம் - அது எதுவாக இருந்தாலும் - அது தெய்வ சங்கற்பத்தின் வெளிப்பாடாக இருப்பதோடல்லாமல் (அது நன்கு தெரிந்தே) அவனுக்கு மிக நன்மையானதே நிகழும், அதைவிட அவனுக்கு அதிக நன்மையானது நிகழ்ந்திருக்க முடியாது, ஏனெனில் இறைவனே அதை அவனுக்குச் செய்கிறான் என்னும் நம்பிக்கை.

இந்த மனப்பான்மை நம்பிக்கையின் (faith) ஒரு பகுதியாக இருக்கத் தேவையில்லை, ஏனெனில் நம்பிக்கை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, தன்னுடைய ஆத்மார்ப்பணத்தின் பின்விளைவு எதுவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதில்லை - அது தன்னைக் கொடுத்துவிடுகிறது - அவ்வளவுதான்.

***

என்னுடைய கீழியல்பு முன்பு செய்த அதே முட்டாள்தனமான காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. நீர் ஒருவர்தாம் அதை மாற்ற முடியும். அதற்கு உமது நிபந்தனைகள் எவை?

அன்னை:

1. உன்னால் மாறமுடியும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

2. கீழியல்பு சொல்லும் சமாதானங்களை ஏற்காமல் மாற வேண்டும் என்று சங்கற்பிக்க வேண்டும்.

3. எத்தனை தடவைகள் விழுந்தாலும் அந்த சங்கற்பத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.

4. நீ பெறும் உதவியில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.

உன்னுடைய ஆர்வத்திலும் முயற்சியிலும் அயராதிரு, பின்னடைவுகளினால் சோர்ந்து போய்விடாதே. தொடக்கத்தில் அவ்வாறு ஏற்படவே செய்யும். அவற்றைச் சட்டை செய்யாமல் நீ தொடர்ந்து போராடினால் ஒரு நாள எதிர்ப்புகள் முறிந்துவிடும், கஷ்டங்கள் மறைந்துவிடும். என் உதவி உனக்கு எப்போதும் உண்டு, ஆனால் நீ அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் உன்னுடைய திறமைகளையே நம்பியிராமல் அதை நம்பியிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

வைகறை
(ஸ்ரீஅர‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum