இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி -அன்னை

Go down

மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி -அன்னை Empty மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி -அன்னை

Post by ஆனந்தபைரவர் Thu Dec 09, 2010 12:32 am

மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி -அன்னை Peace-dove%2520small
முதலில் சாந்தி வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும். அதன்பின் முயன்று பார்க்க வேண்டும், தொடர்ந்து முயல வேண்டும்.
அதற்கான முறைகள் பல உள்ளன. இது ஒரு வழி. நன்றாக உட்கார்ந்து கொள், பின், ஆயிரம் எண்ணங்கள் எண்ணுவதை விட்டுவிட்டு "சாந்தி, சாந்தி, சாந்தி" என்று தொடர்ந்து பாடம் போடு. அமைதியையும் மோனத்தையும் பாவனை செய்து கொள். வரும் எண்ணங்களை ஏறிட்டுப் பார்க்காதே, அவைகளின் கூச்சலுக்குச் செவிகொடுக்காதே.

உனக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் ஒருவனை விலக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறாய்? அவன் சொல்லுவதைக் கேட்க மறுத்துவிடுகிறாய், முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு எதையோ பார்க்கிறாய். உனது எண்ணங்களையும் அவ்வாறே நடத்து.

மீண்டும் மீண்டும் உட்கார்ந்து சாந்தி உச்சாடனம் போட வாய்ப்புக்களை உண்டாக்கிக்கொள். உறங்கி எழுந்ததும் முதல் வேலையாக இதைச் செய். அதேப்போல் இரவில் உறங்கப் போகுமுன்னும் செய். இதனால் உனது உடல்நலம் கூட முன்னேற்றமடையும். உணவு கொள்ளச் சில நிமிடங்களுக்கு முன் இதைச் செய். உணவு நன்றாகச் செரிப்பதற்கு இது எவ்வளவு உதவி செய்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவாய்.

இதை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து செய்து வந்தால் சாந்தி வெளியிலிருந்து உனது மனத்திற்குள் வரத் தேவையிராது. நீ என்ன செய்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் உனது மனத்தில் எப்பொழுதும் சாந்தி இருக்கும். ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.

தொடக்கத்தில் இந்தச் சாந்தி மந்திரத்தை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பழகு - மிக எளிய முறையில் செய்.

நெருங்கிய நண்பனொருவனை உன்னிடம் வர எப்படிக் கூப்பிடுவாய். சும்மா ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான் தாமதம், பக்கத்தில் வந்துவிடுவான். அதைப் போலத்தான் சாந்தியை உனது நண்பனாக்கிக் கொண்டு கூப்பிட வேண்டும்.

ந‌ன்‌றி : வைகறை
(ஸ்ரீஅர‌‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)
‌பி‌ப்ரவ‌ரி, 21
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum