Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா? - ச.நாகராஜன்
Page 1 of 1

பெண்கள் வேதம் படிக்கலாமா? காயத்ரி மந்திரம் ஓதலாமா?
கூடவே கூடாது என்று சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி பண்டிதர்கள் பலர் கூறும் போது அதே சாஸ்திரங்களை மேற்கோள் காட்டியும் பிரதானமாக உள்ள வேத இலக்கியங்களை மேற்கோள் காட்டியும் ஆணுக்குள்ள அதே உரிமை வேதத்தின் பால் பெண்களுக்கும் உள்ளது என்று பல பெரியோர்கள் கூறினர், கூறி வருகின்றனர்!
காயத்ரி பரிவாரை நிறுவியும் பல ஆயிரம் பக்கங்கள் எழுதி காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாம், ஓத வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன ஆசாரியருமான ஸ்ரீ ராம் சர்மா சாரியர் கூறுகின்ற சம்பவம் சுவையானது, பெண்களுக்கு (ஏன் ஆண்களுக்கும் கூடத்தான்) விழிப்புணர்ச்சி ஊட்ட வல்லது!
சம்பவம் இது தான்:- காசியில் உள்ள ஹிந்து விஸ்வவித்யாலயத்தில் வேத வகுப்பில் சேர எண்ணினாள் குமாரி கல்யாணி! விண்ணப்ப படிவத்தை வாங்கியோர் திகைத்தனர். பெண் வேதம் படிப்பதா? சாஸ்திர விதிகளின் படி பெண்கள் வேதம் படிக்கக்கூடாது, வேதம் ஓதக்கூடாது என்று பல்கலைக் கழக அதிகாரவட்டம் அவளிடம் தெரிவித்தது.
ஏன் படிக்கக்கூடாது என்று கேட்டாள் கல்யாணி! இதைத் தொடர்ந்து தேசமெங்கும் பெரும் சர்ச்சையே எழுந்தது! 'சர்வதேஷிக்' என்ற பத்திரிக்கை பெண்கள் வேதம் படிக்கலாம், ஓதலாம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஆதாரங்களுடன் களத்தில் இறங்கியது. 'சித்தாந்த்' என்ற பத்திரிக்கையோ சாஸ்திர பிரமாணங்களைக் காட்டி அதை வன்மையாக மறுத்தது. பரபரப்பான விவாதத்தில் பண்டிதர்களும், விழிப்புணர்ச்சி கொண்டோரும் பங்கேற்றனர். விஷயம் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிடம் சென்றது. பண்டிட் மதன் மோகன் மாளவியா ( பிறப்பு 25-12-1861 மறைவு 12-11-1946) தான் காசி பல்கலைக் கழகத்தை நிறுவியவர். சகல சாஸ்திர விற்பன்னர். அவர் தலைமையில் இதை விசாரித்து முடிவு காண ஒரு குழு நியமிக்கப்பட்டது. எல்லா சாஸ்திரங்களையும் ஆராய்ந்த குழு தன் இறுதி முடிவை 1946-ம் ஆண்டு கஸ்ட் 22ம் தேதி வெளியிட்டது. ஆண்களுக்கு உள்ளது போலவே சம பங்கு வேதமோதுவதிலும் படிப்பதிலும் பெண்களுக்கும் உண்டு என்ற தீர்ப்பைக் குழு தெரிவித்த போது கல்யாணி மட்டும் மகிழவில்லை! பாரத பெண்சக்தியே மகிழ்ந்தது!
சாஸ்திரங்களின் மொத்த உருவமான பண்டிட்ஜியே இப்படிக் கூறியபின் அதற்கு மறுப்பு வேறு ஏது? பெண்கள் காயத்ரியை ஓதலாம்.
ஸ்ரீ சத்யசாயிபாபாவை மேலை நாட்டுக் குழுவினருள் வந்த பெண்களும் ஆண்களும் கேள்வி கேட்கும் போது, 'பெண்களாகிய நாங்கள் காயத்ரி மந்திரம் ஜபிக்கலாமா' என்று பெண் பக்தை ஒருவர் கேட்ட போது அவர், 'நிச்சயமாக ஓதலாம். காயத்ரி எல்லோருக்கும் பொது' என்று பதில் கூறினார். பக்தை விடவில்லை. அப்படி ஓதினால் வரும் பலன் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறாக இருக்குமா என்று கேட்டார்'. இல்லை, ஒரே விதமாகத்தான் இருக்கும்' என்று அருளினார் பகவான் பாபா!
ஆர்ய சமாஜத்தை நிறுவிய வேத விற்பன்னர் மகரிஷி தயானந்த சரஸ்வதி ஏராளமான ஆதாரங்களை மேற்கோள் காட்டிப் பெண்கள் வேதம் ஓதலாம் என்று கூறினார். மாறாதது ஸ்ருதி (வேதம்). காலத்திற்குக் காலம் மாறுவது ஸ்மிருதி (சமுதாயத்தில் நடக்க வேண்டிய விதிகளை அமைப்பது). காலத்திற்கு ஏற்ப விதிகளை அமைக்கும் ஆச்சாரியர்கள் இப்படி விதிகளைத் தந்த பின்னர் அல்லது பழைய விதிகளின் மேல் விளக்கம் கூறிய பின்னர் கவலைப் படாமல் பாரதத்தின் பெண்சக்தி காயத்ரி சக்தியைத் தன்னுள் ஏற்றிக் கொண்டால் உலக அரங்கில் பாரதம் பழைய நிலையைச் சீக்கிரம் அடைந்து விடும்.
மெக்காலே தன் கனவைப் பற்றித் தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினான். 'நான் வகுத்த ஆங்கிலக் கல்வி அமுலாகும் பட்சத்தில் இடத்தாலும் மொழியாலும் இந்தியராக இருந்தாலும் மனதாலும், நடை உடை பாவனைகளாலும் ஆங்கில அடிவருடிகளாகும் ஒரு சமுதாயம் காலம் காலமாக உருவாகி நமக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும்' என்ற அவனது கனவை நம் பெரியவர்கள் பொடிப்பொடியாக்கி விட்டனர்.
சுக்ல யஜுர் வேத சம்ஹிதை (26-2), சனாதன தர்மத்தை நம்பும் யாரும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வேத மந்திரங்களை (அதற்கு உரிய உச்சரிப்பு மற்றும் விதி நியமங்களின் படி) ஓதலாம் என்று அறிவுறுத்துகிறது!
வால்மீகி ராமாயணத்திலும் இதே கருத்து (2-20-2) வலியுறுத்தப்படுகிறது, கோசலை அக்னிஹோத்திரம் செய்வதை வால்மீகியில் காணலாம்.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞரான பாணர் தனது காதம்பரியில் உபநிடதக் கருத்துக்கள் அடங்கிய பிரம்ம சூத்திரத்தைப் பெண்கள் கற்கலாம் என்று கூறியுள்ளார்.
ரிக்வேதத்துடன் தொடர்புகொண்டுள்ள 407 வேத ரிஷிகளில் 21 பேர் பெண்கள்!!
ஆக இப்படி ஆதி வேதகாலம் தொட்டு அரவிந்த அன்னை வரை வரலாற்று வழியே வரும் போது வேத மந்திரங்களின் மீது பெண்களுக்கு உள்ள சம உரிமை தெரிய வரும்! 107 கோடி உள்ள பாரத ஜனத்தொகையில் அனைவரும் படித்து மேம்பட்டு வருவதை உலக நாடுகள் குறிப்பாக வல்லரசுகள் கவலையுடனும் பயத்துடனும் பார்த்து வருகின்றன. தங்களைப் பின்னே தள்ளி விட்டு பலமான பாரதம் உருவாகி விடும் என்ற அந்த நாடுகளின் அச்சம் ஒரு பக்கம் இருக்க, சுவாமி விவேகானந்தர் கூறியபடி வரலாற்றின் நீண்ட சரித்திரத்தில் வன்முறையுடன் எந்த ஒரு நாடு மீதும் படை எடுக்காத ஒரே நாடு இந்தியா தான் என்பது உண்மை.
ஆகவே உலக அழகிகளான பாரதப் பெண்கள் (ஐந்து முறை உலக அழகிப்பட்டத்தை நம்மைப் போல வென்ற இன்னுமொரு நாடு வெனிசுலா மட்டுமே) உலகியல் கலைகளைப் படிப்பதுடன் கூட மந்திர சக்தியையும் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், தனது சௌந்தரிய லஹரியை உலகமெங்கும் அள்ளித் தெளிக்கும் அன்னை துர்க்கை உலக அரியணையில் உட்காரும் நாள் சீக்கிரமே வந்து சேரும்!
நன்றி: சினேகிதி
நன்றி நிலச்சாரல்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum